-
10th June 2017, 07:54 AM
#11
Junior Member
Devoted Hubber
திரைஉலகிலும் அரசியல் உலகிலும் புரட்சித் தலைவர் பெற்ற வெற்றிகளை யாரும் நினைத்துப்பார்க்க முடியாது. எதிரிகள் என்னதான் வெறிநாயாக ஓலமிட்டாலும் புரட்சித் தலைவரின் புகழை யாரும் அசைக்க முடியாது.
இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் புரட்சித் தலைவர் படங்களே மறுவெளியீட்டு படங்களில் அதிகமாக ஓடுகின்றன. தொலைக்காட்சிகளில் அவரது படங்கள் மீண்டும் மீண்டும் திரையிடப்படுகின்றன. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் நன்றாக கல்லா கட்டுகின்றனர். இன்றும் பட உலகத்தினரை புரட்சித் தலைவர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
புரட்சித் தலைவர் வெறும் சினிமா நடிகர் மட்டுமே அல்ல. மக்களின் மனம் கவர்ந்த செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். அதனால்தான் அவரை மூன்று முறை முதல்வராக்கி மக்கள் அழகு பார்த்தனர். 9-6-1980 புரட்சித் தலைவர் 2 வது முறையாக முதல்வராக பதவியேற்ற நாள்.
நன்றி தேவசேனாபதி ராஜராஜன் முகநூல்
-
10th June 2017 07:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks