View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 343 of 347 FirstFirst ... 243293333341342343344345 ... LastLast
Results 3,421 to 3,430 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3421
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அள்ளி கொடுக்காதீங்க, கிள்ளி கொடுங்க..
    என்னால் தாங்க முடியவில்லை.
    என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பதால் ஒரே நேரத்தில்
    இத்தனை சுகமான பாடல்களை கிரகிக்க முடியவில்லை.
    ஒன்னு ஒண்னா தாங்களேன்... ஹிஹி

    அனைத்தும் அருமை..
    சாதித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே ராஜா சார் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் அப்போதெல்லாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3422
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Rajaram,

    ... LoL ...



    ... riya ... ragariya ... ragariya ... ragariya ... ragariya
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  4. #3423
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அது 1995, 96 காலகட்டம். மும்பை ஐ.ஐ.டியில் பணியாற்றிய நேரம். வாரம்தோறும் போவையில் இருந்து மாட்டுங்கா சென்று ராமர் கோயிலில் சம்ப்ரதாயத்துக்காக சாமி கும்பிட்டுவிட்டு, சவுத் இந்தியன் கன்சாரனில் சாப்பாடு முடித்து, அப்படியே தமிழ் கடைகளில் வார பத்திரிக்கைகள் மற்றும் ராஜா சாரின் ஆடியோ கேசட் ஏதாவது வாங்கி வருவது வழக்கம். அப்போது வாங்கி கேட்டு மகிழ்ந்தவை தான் அவதாரம், காலாபானி, கார்த்திக்ராஜாவின் மாணிக்கம், பாலுமஹேந்திராவின் ஆர் ஏக் பிரேம் கஹானி, ராசய்யா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எல்லாம். என் பழைய நினைவுகளை இந்த ஒரு பாடல் மூலம் நினைவு படுத்தி விட்டீர்கள்.

    அவதாரத்தில், அரிதாரத்தை பூசி கொள்ள ஆசை மாற்று தென்றல் வந்து தீண்டும் பொது பாடலும் அளவுக்கு அதிகமாய் பேசப்பட்டுவிட்டதால், சந்திரரும் சூரியரும் பாடல் அதிகம் கவனிக்கப்படாமல் போயி விட்டது. சிம்பனியை அள்ளி தூவி, ஒரு அப்பாவி நாயகனுக்காக பாடப்பட்ட பாடல். ராஜா சார் குரலை எடுத்து விட்டு, ஒரு காரோக்கியாக, இந்த பாடலின் பின்புல இசையை ஒரு ஆல்பமாகவே போடலாம்.


    மறுபடியும்.. கண்ணை மூடி கொண்டு அனுபவிக்க வேண்டிய பாடல் வரிசையில் இதுவும் ஒன்று. நன்றி நன்றி..

  5. #3424
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    அவதாரத்தில், அரிதாரத்தை பூசி கொள்ள ஆசை மாற்று தென்றல் வந்து தீண்டும் பொது பாடலும் அளவுக்கு அதிகமாய் பேசப்பட்டுவிட்டதால், சந்திரரும் சூரியரும் பாடல் அதிகம் கவனிக்கப்படாமல் போயி விட்டது.
    Unmai. Even getting the idea and materialising symphony with folk was overlooked. Raja's redention is this song is just amazing, esp., towards the end.

    Quote Originally Posted by rajaramsgi View Post
    ராஜா சார் குரலை எடுத்து விட்டு, ஒரு காரோக்கியாக
    +1. While discussing with Venkkiram (he does not connect here anymore, he has got a huge database of IR songs and he writes lovely), he informed me about his interest towards the song "Veetukku Veetukku Vaasappadi" from Kizhakku Vaasal (1990)



    I would ask him to include Chandirarum Soriyarum in his playlist, also.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  6. #3425
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja's Haunting Collection Vol. 3

    Ennulle Ennulle - Valli (1993)



    Naan Paadum Mouna Ragam - Idhaya Koil (1985)



    Thalattum Poongatru - Gopura Vasalile (1991)



    Thanga Changili - Thooral Ninnu Pochu (1982)



    Oru Kaaviyam - Aruvadai Naal (1986)

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  7. #3426
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    எண்பதுகளில் பிரபு உட்பட பலரை தூக்கி நிறுத்திய படமான அறுவடை நாளின் ஒரு காவியம், நிச்சயம் ஒரு காவியமே.. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வகை தொகை இல்லாமல் வழங்கி இருப்பார் ராஜா சார். கணீரென்று அவர் ஹிந்துஸ்தானி சாயலில் ஒரு காவியம் பாடுவதை கேட்க மனசு வலிக்கும். அறுவடை நாள் படம் பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம், எனக்கு மிகவும் பிடித்த RP விஸ்வத்தை தமிழ் சினிமா இழந்துவிட்டதை நினைவு கொள்வேன். இருந்திருந்தால் விஸ்வத்துடன் GM குமாரும், லிவிங்ஸ்டனும் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்கள்.

    இதே காலகட்டத்தில் வந்த மனதில் உறுதி வேண்டும் படத்தில் கூட இந்த ஹிந்துஸ்தானி வடிவில் கண்ணா வருவாயா பாடலை அமைத்திருப்பார். இரண்டும் ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்ததா என்று தெரியவில்லை, ஆனால் இதில் எதை நான் கேட்டாலும் மற்றொன்று நினைவில் வரும். ஒரு காவியம் பாடல் சோகம் என்றால், கண்ணா வருவாயா வேறு வகை. கதைப்படி நாயகியின் குடும்பம் தரித்திரம் நிரம்பியது. என்ன சொல்லி பாலச்சந்தர் ராஜா சாரிடம் பாடல் வாங்கினார் என்று தெரியவில்லை, கண்ணா வருவாயா அவ்வளவு ரிச். மீராவும் கண்ணனும் பாடுவது போல் அமைந்த இந்த பாடலில், உதய்பூரின் தாஜ் லேக் அரண்மனையில் பிரமாதமாக படமாக்கிருப்பார்கள். ராயல் ரகம். ஒவ்வொரு நொடியிலும் ராஜா சார் இந்த பாடலை படைக்கும் நேரத்தில் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்றே எனக்கு தோணும்.


    வெங்கிராமுக்கு என் மரியாதையை தெரியபடுத்தவும்.




  8. Likes mappi liked this post
  9. #3427
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    தூறல் நின்னு போச்சு: படமும் பாடல்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இந்த பாட்டு எனக்கு சரியா வரும்/வராது என்று தைரியமாய் தர்க்கம் செய்து தனக்கு வேண்டுவதை ராஜா சாரிடம் கேட்டு வாங்கி கொள்ளும் வித்தை தெரிந்தவர் அவர்.

    சரி, பாடலுக்கு வருவோம்.

    தங்கச்சங்கிலி பாடல் ஒரு கம்பீரமான கீரவாணி டூயட். அசோக் குமார், ராஜா சார் , வைரமுத்து மூவரும் இனைந்து பாக்கியராஜ், சுலக்ஷனாவுக்கு இந்த பாடல் மூலம் சொர்கத்தை காட்டி இருக்கிறார்கள், நமக்கும் தான்.

    வார்த்தை பிரயோகமும் , வாத்திய அணிவகுப்பும் நொடிக்கு நொடி அசர வைக்கும். பல்லவி சரணமெல்லாம் தெய்வீகம், அது பற்றி நான் பிதற்றுவதை விட. இந்த பாடலின் மூண்டு முக்கிய 30 நொடிகள் பற்றி பேசியே தீரணும்..

    பயந்த சுபாவம் உள்ள அந்த பெண், மாப்பிள்ளையின் பொய்யான மிரட்டலுக்காக பயந்து, தயங்கி தயங்கி வருகிறாள். சின்ன வயசு வேறு..சில பல உரசலுக்கு பிறகு அட்ரீனலின் ரஷ் (adrenaline rush) விறு விறுவென எட்டி பார்க்கிறது..பாடலும் தொடங்குறது..

    ஆரம்பமே ஜானகியின் குரல் ஏதோ பனிப்பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பூத்த ரோஜா போல் பிரெஷாக ஜொலிக்கிறது இல்லியா? அதை தொடர்ந்து வரும் அந்த மியூசிக்ல் ஸ்பிளாஷ் 30 நொடிகள் உயிரை கொள்ளை கொள்ளும் ... பிறகு முதல் மற்றும் இரண்டாம் இடை இசையும் அப்படியே.. முப்பது முப்பது நொடிகள் இரண்டும். அட்ரீனலின் ரஷ் பீச்சி அடிப்பதை இசையால் சொல்லி இருப்பார் ராஜா சார்.. இரண்டாவது இடை இசையில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடும். நமக்கு நரம்புகள் புடைக்கும்.

    ராஜா சார் 1982ல், தன்னுடைய 39ம் வயதில் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். தஞ்சாவூர் அருள் திரையரங்கில், 7ம் வகுப்பு மாணவனான நான் அன்றைய தேதியில் பார்த்த படம். என் மலைப்பு இன்னமும் அடங்கவே இல்லை. நன்றி MAPPI.

  10. #3428
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,924
    Post Thanks / Like
    Quote Originally Posted by SVN View Post
    Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha.

    It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's voice being used for Madhavi and TKS Kalaivanan singing for the other male lead (don't know who), while Rajni and Geeta don't lip-sync their lines



    Did singers like TKS Kalaivanan and Soolamangalam Murali (of Kazhugu's 'Kathalenum Kovil' fame) sing other songs for Rajni?
    I believe his name is Shanavas, who acted mostly in Malayalam movies!

  11. #3429
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    >>>>>> Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha. It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's voice being used for Madhavi and TKS Kalaivanan singing for the other male lead (don't know who), while Rajni and Geeta don't lip-sync their lines

    இந்த பாடலை ராஜா சார் அல்லது அட் லீஸ்ட் கிருஷ்னச்சந்திரன் , ஜெயச்சந்திரன் பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

  12. #3430
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ராகங்களின் அடிப்படையில் அமைந்த ராஜா சாரின் பாடல்களை எளிமையான தமிழில் இந்த நண்பர் பதிவு செய்துள்ளார். அவருடைய பேச்சில் எவ்வளவு ஆர்வம்.. விஷயம் தெரிந்திருப்பதால், பாடல்களில் உள்ள விஷயத்தை அவர் அனுபவித்து பேசுகிறார். நீங்களும் இதை கேட்டு சுவையுங்களேன். சில பாடல்களை சொல்லிவிட்டு இவர் சிறு குழந்தை போல் குதூகலிப்பது கவிதை.

    (மத்தியமாவதி ராகத்தில் யேசுதாஸின் அய்யப்பன் பாடல் பற்றி இவர் கொடுப்பது ஒரு முன்னுரை தான், ராஜா இசை அமைத்த பாடல் என்று அவர் சொல்லுவதாக எடுத்து கொள்ள வேண்டாம்)

    https://www.youtube.com/channel/UCnv...2qHPjymSSIbRcA

  13. Likes mappi liked this post

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 419
    Last Post: 30th July 2024, 07:35 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •