Page 73 of 400 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #721
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like



    Sivaji Dhasan Sivaji Dhasan









    Sivaji Kumar ·

    Sabaash my son Vaira Bharathi

    இல்லாத
    கதையில் ...
    தெரியாத
    நடிப்பை ......
    இனி யார் நடித்தால்
    என்ன சிவாஜி !

    கடவுள் பூமிக்கு வந்து
    நடிக்க ஆசைப் பட்டான்
    உன் உடம்பு கொண்டான்

    பூமியே கடவுளைப் போல்
    நடிக்க ஆசைப்பட்டதும்
    உன்னை எடுத்துக் கொண்டான்

    பட்டினி கிடந்து நீ கற்ற கலை
    பசியைத் தீர்க்கிறது

    வயற்றில் ஈர துணி கட்டி
    நீ ஏறிய மேடை
    இதய தாகம் சேர்க்கிறது

    உதட்டில் உள்ளத்தைப் பேசியவனே
    உலகம் தெரியாது உனக்கு

    நடிப்பென்றால்
    உலகத்திற்கு உன்னைத் தவிற
    யாரையும் தெரியாது

    அரங்கிலும் ...
    அறையிலும் ...
    உள்ளதை ப் பேசியவனே
    உனக்கு
    நடிக்கத் தெரியாது

    விளம்பரம் இல்லாமல்
    நீ செய்த உதவி
    உன் இடது கைக்கு க் கூட தெரியாது

    உன்னை உருவாக்கியவரிடம்
    நீ காட்டிய நன்றி
    அவர் மகனும்
    அவருக்கு காட்டி இருக்க வாய்ப்பில்லை

    உறவுகளிடம்
    நீ காட்டிய கரிசனை
    சுயநல பட்சிகளுக்கு
    தெரிந்திருக்க சாத்தியமில்லை

    ஒரே நாளில்
    மூன்று படத்தில் நடிப்பாயே...
    இப்போதெல்லாம்
    ஒரு படம் எடுத்து
    ரிலீஸ் ஆகவே
    மூன்று வருடம் ஆகிறது

    நேரம் கூட
    உன்னைப் பார்த்து தான்
    நேரம் தவறாமையைக் கற்றது

    ஒவ்வொரு படத்திற்கும்
    ஒவ்வொரு முகம்

    ஒவ்வொரு உடைக்கும்
    ஒவ்வொரு நடை

    ஒவ்வொரு உணர்ச்சிக்கும்
    ஒவ்வொரு அசைவு

    ஒவ்வொரு குணத்திற்கும்
    ஒவ்வொரு குரல்

    ஒவ்வொரு துயரத்திற்கும்
    ஒவ்வொரு அழுகை

    ஒவ்வொரு மகிழ்விற்கும்
    ஒவ்வொரு சிரிப்பு

    நடிப்பு என்ற ஒன்றே
    உன்னைப் பார்த்த பிறகு தான்
    தன்னை நடிப்பென்று
    ஒப்புக் கொண்டது

    உன்
    சரித்திர புராண இதிகாச
    குடும்ப பாத்திரங்கள்
    யாருக்கும் வராத
    தெய்வ சூத்திரங்கள்
    "ஓவர் ஆக்ட்டிங்'காம் "
    நீ நடிப்பது ...
    விமர்சன கொசுக்கள்
    உன் மீது
    சொல்பவர்களுக்கு
    சொல்
    இந்த காலத்து திரை நடிப்பு
    எருமை மாட்டின் மேல்
    மழை என்று ...

    அன்பு பாசம் அறியா
    இணைய தள யுகம்
    உருக வேண்டிய
    பாச மலர் பார்த்து
    சிரிக்கும் ...
    வெறுமை சேகரித்து
    தனியாய் வாழப் போகும்
    இவர்களுக்கு
    ஆறுதலாய் வர போவது
    உன் பாடல்களே

    பொழுது போக்கிற்கு பழகி
    பொழுது விடிய பிரியும்
    பொய் உறவுகளுக்கு
    அன்பு .. பாசம் ...
    அரவணைப்பு .. காதல்
    நட்பு ... பகிர்வு ...
    கருணை .. சிருங்காரம் ..
    கம்பீரம் ... தமிழ் மொழி
    இவை எலாம் தொலையாமல்
    இனி வாழ போவது
    உன் படங்களில் மட்டுமே

    அரசியல் தெரியாதவனே ...
    மக்கள் மூளையற்றவர்கள்

    கண்ணாடிக் கற்கள் என்று
    வீசி எறிந்தனர்
    வைரங்களை ...
    மேலே போய்
    விண்மீன் கள் ஆ நீர்
    காமராஜரும் ...
    நீயும் ...

    தயாரிப்பாளரே
    நடிகராகும்
    கருங் காலத்திற்கு முன்

    தமிழை
    கீ போர்ட் வைத்து நசுக்கி
    காயடிக்கும் முன்

    உச்சரிப்பு
    நச்சரிப்பு ஆவதற்கு முன்

    காட்சித் தொகுப்பே
    கதை என ஆவதற்கு முன்

    வாராத போதே
    போதும் என
    நடிப்பை
    நெட்டி முறிப்பதற்கு முன்

    பேசும் வசனமே
    பாடல் வரி என ஆவதற்கு முன்

    தொழில் நுட்ப சாத்தன்
    ஊதிய சங்கில்
    காது ஜவ்வு கிழிந்து
    அறுந்து தொங்குவதற்கு முன் ...

    பாடி லாங்குவேஜ் போய்
    வெறும்
    உள் பாடிகளும் ..
    வெளி பாடிகளும்
    நடமாடி வருவதற்கு முன் !

    மணமாய்ப் போய் சேர்ந்தீர்
    மகிழ்ச்சி !

    வானமாய்
    இவர்கள் அடிக்கும் கூத்தை
    அடி வயிறு குலுங்க சிரித்து
    தலையில் அடித்து
    ரசித்து இரும் ..

    யாரும் பின்பற்ற முடியா
    தத்துவமாய் வாழும்
    வாழ்க !

    இப்படிக்கு
    கடைசி ரசிகன்
    வைர��பாரதி

    நிறைந்தவரின் நினைவு நாள் இன்று !����
    ��July 21st
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like








    Sundar Rajan




    மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளையொட்டி மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்க...ள்.






    திமுக, ஜனதாதளம், காங்கிரஸ், பிஜேபி, நாம்தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சி கலைபிரிவை சார்ந்தவர்கள்,
    சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை, நகர் மாவட்ட சிவாஜி மன்றம், புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம், சிவாஜி சமூகநலப்பேரவை
    மேலும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    விஎன்சிடி வள்ளியப்பன் அவர்கள், இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சதீஷ் சிவலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #723
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நூல் நோக்கு: பொதுவாழ்வில் சிவாஜி




    சிவாஜி கணேசன்! பன்முகத் தன்மையுடன் தன்னை வெள்ளித்திரையில் வெளிப்படுத்திய கலைஞன்! பொதுவெளியில் அவர் தன் ஆளுமையை எவ்விதம் பதிவுசெய்துள்ளார், அவரது அரசியல் பங்களிப்புகளின் பின்னால் இருந்த அவரது மனம் சார்ந்த நியாயங்கள் என்ன என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    1963-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்தபோது தனது சொந்த நகைகளுடன் சேர்த்து, தமிழகமெங்கும் வசூலித்த பெரும் பணத்தைப் போர்நிதியாக வழங்கியது; திருத்தணியை மீட்கம.பொ.சி நடத்திய போராட்டங்களுக்கு நிதி வழங்கியது எனக் கடந்த கால நிஜங்கள் இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. சிவாஜியின் ஈகைப் பண்பின்மீது அமில மழை பொழிபவர்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும்.





    தொடர்புடையவை



    இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முழுவதும் சிவாஜியின் திரையுலகக் கொடி பறந்தது. 2-வது பாகத்தில், திராவிடம் முதல் தேசியம் வரையில் சிவாஜியின் அரசியல் சார்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து வெளியேறியது, காமராஜருடனான நட்பு, எம்ஜிஆருடனான உறவு, சிவாஜி மன்றம் என்கிற அமைப்பின் பின்னால் இருந்துகொண்டு ஆற்றிய சமூகத் தொண்டு என சிவாஜி ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது இந்தப் புத்தகம்.
    - மானா

    the hindu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #724
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Nanjil Inba Mgs

    · 12 mins ·






    அன்பான நண்பர்களே
    அய்யன் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த அரசியல் சம்பவத்தை மையபடுத்தி நான் எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை பாகம் இரண்டு என்ற நூலை குறித்து இன்று தி ஹிந்து தமிழ் நாளிதழில் விமர்சனம் வந்துள்ளது
    மிக்க மகிழ்ச்சி எனக்குள் ...நான் எழுதிய நூலை குறித்து என் நண்பர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்வார்கள் என்று காது இருந்தேன் ..பாவம் அவர்களுக்கு வேலை பளு ..சிவாஜி அய்யாவை குறித்த ஆவணம் இந்த நூல் என ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டது என் எழுத்...துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன் ..
    அய்யன் சிவாஜியை குறித்து தலைவன் இருக்கிறான் என்ற நூலை எழுதிய போது என்ன காங்கிரஸ்ஸை நீங்கள் விமர்சனம் செய்து உள்ளீர்கள் என்று பலர் என் மீது சொல் அம்பு எய்தார்கள்
    உண்மையை சொல்லும் போது விமர்சனங்களை கண்டு அஞ்சுவது மடமை என்பது என் எண்ணம் ..
    கலை மகள் சிவாஜி ஆளுமை என்ற நூலை நான் எழுதிய போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்பீது கோபம் கொண்டார்கள் ..காலம் அவர்களுக்கு உண்மையை உணர்த்தி உள்ளது ..இன்று என் எழுத்தை ரசிக்கும் மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டார்கள் ..
    இந்த நூலில் அய்யன் சிவாஜியின் உண்மையான வாழ்வியல் நடைமுறையைத்தான் நான் எழுதி உள்ளேன் .சிவாஜி என்றால் அவரை நடிகன் என்று பார்க்கும் என் சிவாஜி தோழன் அவரை தலைவன் என்று பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் ...பாவம் இன்றும் அவன் சிவாஜியை நடிகனாகத்தான் பார்க்கிறான் ...
    இந்த நூலில் ,கருணாநிதியை ,காங்கிரஸ் தலைவர்களை இன்பா தாக்கி எழுதி உள்ளான் என்று சிலர் என்னை விமர்ச்சித்தார்கள் .சிவாஜி என்பவர் தமிழர் .அவரின் உண்மையான உழைப்பை மறைத்த அரசியலை நான் சாடுவது தவறு என்றால் அதற்கு நான் பயப்படும் ஆள் அல்ல ..
    பல மிரட்டல்கள் பல பேரின் தொலைபேசி தொலைக்கள்....இத்தனையும் தாங்கினேன் எனில் சிவாஜி எங்கள் தமிழ் இனத்தின் தேசியம் ...

    இன்பா

















    நூல் நோக்கு: பொதுவாழ்வில் சிவாஜி
    இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முழுவதும் சிவாஜியின் திரையுலகக் கொடி பறந்தது. 2-வது பாகத்தில், திராவிடம் முதல் தேசியம் வரையில் சிவாஜியின் அரசியல் சார்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது.
    tamil.thehindu.com
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #725
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் நினைவு நாள்

    முகம் நடிக்கும்
    சில நடிகருக்கு
    நகமும் நடிக்கும்
    உன் ஒருவனுக்கே....

    அகம் துடிக்கும்
    அனல் வெடிக்கும்
    ஜகம் மயக்கும்
    ஜனம் வியக்கும்

    நடிப்பின் நாயகன்...
    நடிப்பவர் எவரும்
    படித்திட உன்தடம்
    வடித்தவன் நீ ஒருவனே.....

    இதுதான் தமிழின்
    எதுகை மோனை என உன்
    மது வாய் முழக்கும்
    மதுவாய் தமிழை

    இமயமாய் இருந்தாலும்
    இதமான பனியாய்
    இருந்தவன்...

    இன மானம் இதுவென
    இன்னுயிர் தமிழருக்கு
    இயல்பால் காட்டிய
    அருந் தவன்

    இன்னொரு நடிகன்
    பின்னொரு நாளில்
    உன்னைப் போல
    உலகினில் வந்தாலும்
    உனக்கிணை ஆவதில்லை
    உயிர்வினை ஆள்வதில்லை...

    சிம்மக் குரலால்
    எம்மை நிமிர்த்திய
    உம்மை நினைக்கிறோம்
    உண்மைத் தமிழராய்....

    கவிக்கிறுக்கன் முத்துமணி
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Harrietlgy liked this post
  8. #726
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan,

    எளியவர்களுக்கும் இறையுணர்வு ஊட்டிய சிவாஜி கணேசன்... பக்திப் பாடல்கள், காட்சிகள்! #SivajiGanesan


    சிவாஜி கணேசன்... உச்சரிக்கும்போதே தனி மரியாதையை ஏற்படுத்தும் பெயர். நடிப்புக்கு இலக்கணம்... இந்திய சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை... நடிப்புக்கலையில் சமுத்திரம்... கலைத்துறை என்றென்றும் ஜொலித்து மின்னும் நட்சத்திரம்... எவரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தவர்... என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் சிவாஜி கணேசன். குழந்தை நட்சத்திரம் முதல் சூப்பர் ஸ்டார் வரை 'சிவாஜி கணேசன்தான் எங்கள் ஆதர்சம்' எனச் சொல்லும் ஒப்பற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.




    சிவாஜி, விநாயகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்திகொண்டவர். திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சை மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்கும் யானையைப் பரிசாக வழங்கியவர். இவர் வெள்ளித்திரையில் கால்பதிப்பதற்கு முன்னர் நடித்தது நாடகத்தில். திரைத்துறைக்கு வந்த பிறகும்கூட, அவ்வப்போது நாடகத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் நடித்த முதல் நாடகம் `ராமாயணம்.’ அப்போதே அவரின் உயிர்ப்புள்ள நடிப்புத் திறனை வெகுவாகப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் தந்தைப் பெரியார்.

    தெலுங்கில் ஒன்பது படங்களிலும், இந்தியில் இரண்டு படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும், 270 தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். இது தவிர, கௌரவத் தோற்றத்தில் 19 படங்களில் நடித்திருக்கிறார். இவரின் பல படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்று சொல்லும் அளவுக்குப் பெயர் பெற்றவை.

    இவரின் முதல் படமான 'பராசக்தி' 1952-ம் ஆண்டில் வெளியானது. ஆனாலும், இவர் பக்திப் படங்களில் பாதம் பதிக்க ஆறு வருடங்கள் ஆனது. 1958-ம் ஆண்டுதான் முதன்முதலில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நடித்தார் சிவாஜி.




    செவாலியே பட்டம் பெற்றவர். கலைமாமணி விருது, பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதாசாகேப் பால்கே விருது... எனப் பல விருதுகளை தனது நடிப்பால் தன்வசம் ஆக்கியவர் என்று சொல்வதைவிட, இவரின் நடிப்புக்கு மயங்கி அந்த விருதுகள் இவரிடம் வந்து சேர்ந்தன என்று சொல்லலாம். இப்போது சிவாஜி கணேசன் பெயரிலேயே பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவாஜி நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் பக்திப் படங்கள் தனித்துவமானவை. அப்பர், சுந்தரர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆன்மிகப் பெரியவர்களை பாமரர்களும் அறியும்படி செய்தது அவர் நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்கழி மாத காலை நேரங்களில், சிவாஜி நடித்த `திருவிளையாடல்’, `சரஸ்வதி சபதம்’ ஒலிச் சித்திரங்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கம்பீரமான குரல் தூய தமிழை உச்சரிக்கும் அழகே அலாதியானது. அந்தச் சந்தர்ப்பத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவை பக்திப் படங்களே!

    நடிகர் திலகம் நடித்த பக்திப்படங்களின் சில பாடல்களும் காட்சிகளும் இங்கே...



    * திருவிளையாடல்

    1965-ம் ஆண்டு வெளியானது. சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் 'சிவாஜி - நாகேஷ் (புலவர் - தருமி)' காம்பினேஷன் சீன் இன்றும் அனைவரின் ஆல்டைம் ஃபேவரைட். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியிடம், ``இந்தக் காட்சியில் உங்களைவிட நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். எனவே, இதை படத்திலிருந்து நீக்கிவிடலாம்’’ என்று கூறினாராம். ``வேண்டாம்! அதுதான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் பரிசு’’ என்று கூறினாராம் சிவாஜி. இதைத்தான் பேசிய எல்லா மேடைகளிலும் சொல்லத் தவறியதில்லை நடிகர் நாகேஷ்.



    * கந்தன் கருணை

    1967-ம் ஆண்டில் வெளியானது. `வீரபாகு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற இவரின் ஸ்டைலிஷான நடை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது..



    * சரஸ்வதி சபதம்

    இரட்டை வேடம். வித்யாபதி, நாரதர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். `அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற பாடல் என்றும் மறக்க முடியாத இனிய கீதம்.



    * திருவருட் செல்வர்

    1967-ம் ஆண்டில் வெளியானது. திருநாவுக்கரசர் (அப்பர்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, காஞ்சி பெரியவா சிவாஜி கணேசனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.




    * திருமால் பெருமை

    1968-ம் ஆண்டில் வெளியானது. பெரியாழ்வார் கதாபாத்திரத்தில் நடித்து இவர் பாடியதாக வரும் 'ஹரி ஹரி கோகுல ரமணா...' பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்.



    சம்பூர்ண ராமாயணம்

    1958-ம் ஆண்டில் வெளியானது. பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ராமாராவ் கலக்கியிருப்பார். ஆனாலும், பரதனாக பட்டையைக் கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன். 'பரதனை நேரில் கண்டது போலவே இருந்தது' என்று அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ராஜகோபாலாச்சாரி பாராட்டியிருந்தார்.



    * ஶ்ரீவள்ளி

    1961-ம் ஆண்டில் வெளியானது. முருகப் பெருமான் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருந்திப் போயிருந்தார் சிவாஜி.



    * கர்ணன்

    1964-ம் ஆண்டில் வெளியானது. கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமாயணத்தில் பரதனாக பட்டையைக் கிளப்பியிருந்தவர், மகாபாரதத்தில் கர்ணனாகக் கலக்கியிருப்பார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' என்ற கர்ணனின் மரணக் காட்சியில் வரும் பாடல் சிவாஜியின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல்.


  9. #727
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    பரணி வணக்கம்
    எனது தனிமடல் பாருங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #728
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    வள்ளல் குணத்தை நடிகர்களுக்கு

    எல்லாம் அறிமுகப்படுத்திய ,


    பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்

    தேவையறிந்து கொடுத்த கொடை வள்ளல்,


    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்


    6 வது திரைக்காவியம் அன்பு


    வெளியான நாள் இன்று.

    அன்பு 24 யூலை 1953.
    Last edited by sivaa; 24th July 2017 at 06:42 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #729
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    ( பம்மலாரின் முன்னைய பதிவுகளில் இருந்து)

    நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #730
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
    மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார்.
    அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.


    .................................................


    தேவை அறிந்து உதவி செய்யும் மனம்
    இவர் கூடவே பிறந்தது
    பட உலகில் நுழைந்தவருடமே இவருக்கு முன்னதாக
    படஉலகில் நுழைந்து உழைத்தவர்களுக்கெல்லாம்
    முன்மாதிரியாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்
    Last edited by sivaa; 25th July 2017 at 02:53 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •