Page 79 of 400 FirstFirst ... 2969777879808189129179 ... LastLast
Results 781 to 790 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #781
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    murali srinivasan



    குங்குமம் - Small Recap
    02.08.1963 அன்று வெளியாகி இன்று (02.08.2017) 54 வருடங்களை கடந்து போகும் குங்குமம் பற்றியும் அதை சிறு வயதில் பார்த்தது அதன் பிறகு மறு வெளியீட்டில் பார்த்தது பற்றியும் ஒரு சின்ன recap.
    குங்குமம் மோகன் ஆர்ட்ஸ் மோகன் தயாரித்த படம். பாசமலர் என்ற காவியத்திற்கு பிறகு ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த படம். பாசமலர் படத்தை M .R சந்தானத்துடன் இணைந்து தயாரித்த மோகன் இந்தப் படத்தை தனியாக தயாரித்தார். பாச மலர் யூனிட் முற்றிலுமாக மாறியது. நடிகர் திலகம் தவிர அனைத்து கலைஞர்களும் ஏன் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட மாறி விட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும்.
    குங்குமம் முதல் வெளியீட்டில் மதுரையில் பரமேஸ்வரி திரையரங்கில் வெளியானது. பொதுவாகவே ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியாகும் அரங்கம். அதுவும் அன்றைய காலகட்டத்தில் நகரை விட்டு சற்றே தள்ளி அமைந்திருக்கின்றது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த அரங்கம் கூட.[அந்த படம் வெளியாகி பத்து வருடத்துக்குள் அந்த ஏரியா பக்கா டவுன் ஆகிப் போனது வேறு விஷயம். வெகு சிறிய வயதில் தாய் மற்றும் உறவினர்களுடன் படம் பார்த்தது ஒரு சின்ன தீற்றலாய் நினைவு அடுக்குகளில். குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பாடல் காட்சி மட்டும் நினைவில் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன.
    1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். நான் வாழ வைப்பேன் மாலை 5.30க்கே House full. அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் தியேட்டருக்கு போய் கூட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம். நல்ல கூட்டம். பிறகு அலங்காருக்கு போகிறோம்.[இரவு திரும்பி வரும்போது இமயம் அன்றைய மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்ற செய்தி கிடைத்தது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [அல்லது மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த ஏரியாவிலிருந்து குங்குமம் பார்க்க வந்த நண்பன் அங்கேயும் நல்ல கூட்டம் என்கிறான். எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலங்கார போவதற்கு முன் அங்கேயும் போய் பார்த்தோம். 198-வது நாள் என்று நம்பவே முடியவில்லை. அங்கேயும் ஹவுஸ்புல் போர்டு விழுந்தது என்பதை அலங்காருக்கு தாமதமாக வந்த ஒருவர் சொன்னார். அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் படத்திற்கும் நடந்தது.
    படத்தின்ப கதை பற்றி இன்ன பிற விவரங்களை பற்றி அண்மையில் ஓரிரண்டு பதிவுகளில் எழுதிய காரணத்தினால் படத்திற்கு உள்ளே செல்ல போவதில்லை. பாடல்களை பற்றி மட்டும் அதற்கு அன்று கிடைத்த வரவேற்பு பற்றி மட்டும் சொல்கிறேன். டைட்டில் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். 1962 மார்ச் தொடங்கி 3 மாதங்கள் நடிகர் திலகம் அமெரிக்க நாட்டின் அழைப்பையேற்று கலாச்சார தூதுவராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த படத்தின் டைட்டில் ஓடும்போது அதற்கு பின்னணியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
    பூந்தோட்ட காவல்காரா முதல் பாடல். முதலில் விஜயகுமாரி பாடும்போது அமைதியாகயிருந்த அரங்கம் முறைப்பெண்ணை தேடி நாயகன் தோட்டத்தில் நுழைந்து பருத்திக்காட்டில் என்று ஆரம்பிக்கும்போது இங்கே ஆரம்பித்தது அலப்பறை. அதிலும் ஒரு நடை நடப்பார் நடிகர் திலகம். அரங்கம் அதிர ஆரவார ஓசைகள்
    படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன என்று சொன்னேன். அதிலும் தூங்காத கண்ணின்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு நெருக்கமான பாடலாக மாறிப்போனது. இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். ஒருவர் பாட ஒருவர் பதில் சொல்ல என்ற முறையில் அமைந்த பாடல். பாடல் காட்சியின்போது உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 38 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.
    சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல் அடுத்த அலப்பறை. மேடையில் தடுமாறும் சாரதாவிற்கு கைகொடுக்க (குரல் கொடுக்க?) நடிகர் திலகம் இருக்கையிலிருந்து எழுந்து போவதில் தொடங்கிய கைதட்டல் மென்மேலும் பெரிதானது. அதிலும் நடிகர் திலகம் ஸ்வரப்ரஸ்தாரங்களை ஆலாபனை செய்யும்போது தியேட்டருக்குள்ளே கோடையிடி. சின்ன வயதில் பார்த்தது நினைவில் இல்லாததனால் இந்தக் காட்சியை பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
    கடைசியில் வந்த பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?
    திரை மூடிய சிலை நான்
    துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்
    என்ற வரிகளுக்கும்
    நானே எனக்கு பகையானேன்
    என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
    தேனே உனக்கு புரியாது அந்த
    தெய்வம் வராமல் விளங்காது
    போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!
    கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்
    மயக்கம் எனது தாயகம்
    மௌனம் எனது தாய்மொழி
    பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
    இந்த படத்திற்கு மாமாவின் இசை ஒரு மிகப் பெரிய பலம். இந்தப் படம் மட்டுமல்ல. அந்த 1963-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம், குலமகள் ராதை, குங்குமம் மற்றும் அன்னை இல்லம் போன்ற மாமா இசையமைத்த நடிகர் திலகத்தின் அனைத்து படங்களிலும் மாமா மகாதேவன் தூள் கிளப்பியிருப்பார். இந்த 1963 படங்களை பற்றி சொல்லும்போது ஒரு சுவையான விஷயம் நினைவிற்கு வருகிறது. சற்று கவனித்து பார்த்தோமென்றால் குங்குமமும் சரி, அன்னை இல்லமும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்பு கொண்ட படங்களாகவே இருக்கும். (கதையின் முக்கிய முடிச்சு செய்யாத கொலையை செய்ததாக பழி சாட்டப்பட்டும் தந்தை பாத்திரம்) அதிலும் நடிகர் திலகம், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா ஆகியோர் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். இதில் மற்றொரு சுவாரஸ்யம் பாச மலர் படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்தபோது மோகன் ஆர்ட்ஸ் மோகனும் எம்.ஆர். சந்தானமும் சேர்ந்து தயாரித்தனர். அவர்கள் இருவரும் பிரிந்து தனியாக படம் தயாரித்தபோது மோகன் குங்குமத்தை எடுக்கிறார். சந்தானம் அன்னை இல்லத்தை எடுக்கிறார். பிரிந்தாலும் ஒரே மாதிரி கதையை எடுத்தார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே! ஆனால் அன்னை இல்லம் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்தது. குங்குமமோ சென்சார் புண்ணியத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
    இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் தூங்காத கண்ணின்று ஒன்று பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!
    பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி!
    அன்புடன்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #782
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    bala krishnan

    35 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    சரியாக வருடம் ஞாபகம் இல்லை குங்குமம் படம் ரீரிலீஸ் செய்து மூன்று வாரங்கள் ஓடியது
    அது அப்போது பெரிய சாதனையாகப் பேசப்பட்டது.
    அதே போல்தான் இருவர் உள்ளம் படமும் கோவையில் மூன்று வாரங்கள் ஓடியது.
    அப்போதைய காலகட்டத்தில் ரீரிலீஸ் படங்கள் ஒருவாரம் மட்டுமே ஓடும்.
    தலைவரின் சாதனைகள் எண்ணிலிடங்காதது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #783
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    சிவாஜி மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் - திருநாவுக்கரசர்










    நடிகர் சிவாஜி கணேசன் சிலையை, சென்னை கடற்கரை சாலையிலேயே மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை போன்று, சிவாஜி கணேசனுக்கும், மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நீதிமன்ற உத்தரவி*ன் அடிப்படையில் சிவாஜி சிலையை மாற்றியமைக்கும்போது, சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவில் அமைக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


    புதிய தலைமுறை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #784
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like




    Sundar Rajan

    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    30.07.2017 ஞாயிறு தந்தி டிவியில் கமல் அவர்கள் பங்குபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
    கமல் பங்குபெறும் எந்த நிகழ்ச்...சியானாலும் அவசியம் பார்த்து விடுவேன். ஏனென்றால், அதில் நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசி விடுவார். ஆனால் இது அவர் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் நமது தலைவரைப் பற்றி பேசமாட்டார் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
    எனது பையன் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, கமல் அவர்கள் இரண்டு முறை சிவாஜியைப் பற்றி பேசினார், என்று கூறியவுடன் யூ டியூப்பில் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
    அதில் இரண்டு முறை நமது தலைவரைப் பற்றி கமல் அவர்கள் பேசினார்.
    என்னை மிரட்டினால் நான் யார் காலிலும் விழமாட்டேன், எனக்கு மூத்தவர்களிடம் நான் காலில் விழுவேன். சிவாஜி, எம்.ஜி.ஆர் மேலும் மூத்தவர்கள் காலில் நான் விழுந்து வணங்கியிருக்கிறேன் என்று சொன்னார். இதில் அவர் முதலில் சொன்னது நமது நடிகர்திலகத்தை தான்.
    அதே போல் படிக்காமல் உலக அளவில் பெயர் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அதற்கும் நமது தலைவர் சிவாஜி அவர்களைத் தான் உதாரணப்படுத்தினார்.
    அதிலும் அவர் சிவாஜி என்ற வார்த்தையை சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருந்ததைப் பார்த்தேன்.
    அன்பு இதயங்களே,
    நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் யார் பேசினாலும் சரி, அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
    சென்னையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று ஒரு வார்த்தையை தாங்கள் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கமல் சார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #785
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Gopalakrishnan Sundararaman



    நடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.
    இந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.
    அன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.
    ... தங்க சுரங்கம்- jamebond படம்.
    சிவந்த மண் - Action படம் .
    காவல் தெய்வம்- ரியலிச படம்.
    தெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.
    திருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.
    நிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .
    அஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.
    கிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.
    அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.
    தங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.
    குருதட்சிணை - பத்மினி,ஜெயலலிதா.
    தெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.
    திருடன்- கே.ஆர்.விஜயா.
    நிறைகுடம்- வாணிஸ்ரீ.
    சிவந்த மண் -காஞ்சனா.
    7 இயக்குனர்களுடன் பணியாற்றினார்.
    ஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.
    ராமண்ணா- தங்க சுரங்கம்.
    ஏ.பீ.நாகராஜன்- குருதட்சினை.
    டி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)
    முக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)
    கே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)
    ஸ்ரீதர் - சிவந்த மண் .
    7 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.
    அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.
    தங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)
    குருதட்சினை- புகழேந்தி(ஒரே படம்),கே.வீ.மகாதேவன்.(மேற்பார்வை)
    காவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)
    அஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)
    நிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #786
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    படுபாவிகளா!

    கலைமகளின் விலையில்லாக் கலைமகன்
    தமிழர்களின் தலைமகன் சிலையை
    நிலையில்லாமல் செய்து விட்டீர்களேடா
    நிர்மூலம் ஆக்கி விட்டீர்களேடா

    சிவன் சொத்து குலநாசமடா
    சிவனாகவே எங்களுடன் வாழ்ந்த
    சிம்மத்தின் சிலையில் கைவைத்து விட்டீர்களேடா
    விவரம் புரியாமல் விளையாடி விட்டீர்களேடா

    மெரினா மங்கையை விதவையாகி விட்டீர்களேடா
    என்னடா லாபம் கண்டீர்கள்?
    தேன் கூட்டில் கை வைத்து விட்டீர்களேடா
    தேள் கொடுக்கோடு விளையாடி விட்டீர்களேடா

    என்னடா பாவம் செய்தான் அவன்!
    என்னடா பாவம் செய்தோம் நாங்கள்
    எத்துணை கெளரவம் வாய்ந்தவனின்
    சிலையில் கை வைத்து விட்டீர்களேடா

    அவன் உயிருடன் இருந்தபோதுதான் மதிக்கவில்லை
    சிலையாய் நின்ற பின்னும் மிதித்து விட்டீர்களேடா
    இனிமேல்தாண்டா உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும்
    ஊதப் போகிறது சாவின் சங்கு

    அனுபவிப்பீர்களடா அனுபவிப்பீர்கள்
    எழுதி வைத்துக் கொள்ளுங்களடா எத்தர்களே
    எண்ணி மூன்றே மாதத்திற்குள் பூண்டோடு
    அழிந்து போகிறீர்களா இல்லையா பாருங்களடா

    அன்னை பவானி முன் என் தெய்வம் கர்ஜித்ததே
    அது போலவே சாபமிடுகிறேனடா
    அழியட்டும் உங்கள் கோட்டைகள்
    இடியட்டும் உங்கள் வீட்டு மதிற்சுவர்கள்

    சிலை தொட்ட கைகள் புழு பூக்குமடா
    குஷ்டம் பிடிக்குமடா புற்று அண்டுமடா
    மண்ணாகிப் போவீர்களடா எங்கள்
    மனம் நொந்த சாபமடா

    யாரை நம்பி நான் பொறந்தேன்
    இது எங்கள் தெய்வம் சொன்னதடா
    அதையேதானாடா சொல்கிறோம் நாங்களுமடா
    எங்கள் காலம் வெல்லுமடா

    பணியில் இருந்த போது செய்தி கேட்டு
    பதறிப் போனோமடா துடித்து வெந்தோமடா
    ஆனால் துவளவில்லையடா உங்கள்
    துன்பம் காணாமல் போக மாட்டோமடா

    லட்சம் ரசிகர்களடா இனி கோடியாகுமடா
    உங்கள் ஆட்சியை மாற்றுமடா
    உங்கள் அகந்தையை அழிக்குமடா
    உங்கள் முகத்திரையைக் கிழிக்குமடா

    தமிழனைத் தலை குனிய வைக்கும்
    தரம் கெட்ட தமிழர்களே
    நீங்கள் தமிழ்த் தாய் வயிற்றில் தான் பிறந்தீர்களா
    தமிழ்ப் பால் குடித்துத்தான் வளர்ந்தீர்களா

    இதுவரை உங்கள் ராஜ்ஜியமடா
    இனி எங்கள் ராஜ்ஜியமடா
    நீங்கள் இனி படப் போகும் பாட்டை
    இப்போதே இனிக்க கற்பனையாய் தெரியுதடா

    அழிந்தீர்களடா ஒழிந்தீர்களடா கை வைத்த
    பாவம் இந்நொடி முதல் ஆரம்பமடா
    எங்கள் ஆட்டமும் இந்நொடி முதல் ஆரம்பமடா
    கடவுள் ஒருவன் இருக்கிறானடா

    எங்கள் கணேசன் வடிவில்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes sivaa liked this post
  9. #787
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது இவ்வளவு அவசர அவசரமாக தமிழ் சமுதாயத்தின் அடையாள சின்னம் சிவாஜி சிலையை அதுவும் கலைஞர் அவர்கள் நிறுவிநார் என்ற ஒரே காரணத்துக்காக சிலையை எடுத்திருக்கிறார்கள் -சிலையை எடுக்க வேண்டும் என்று கூறியதாலேயே உங்கள் கட்சியின் தலைவரை இழந்தீர்கள் இருந்தும் மறக்காமல் சிலையை அகற்றி உள்ளீர்கள் - அரசியல் வரலாற்றில் குற்றவாளி முதல்வர் என்ற சாதனை படைத்த ஒரே கட்சி mgr அவர்கள் ஆரம்பித்த அதிமுக இன்று இளைய சமுதாயத்தால் எவ்வளவு தூற்றுதலுக்கு ஆளாகி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது உலகம் அறியும் --சிவாஜி சிலையை அகற்றியதால் உங்கள் கட்சியின் இறுதி காலம் இன்னும் சில நாட்கள் தான் என்பதை உலகம் உணர்த்தும் வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில் தமிழன் தமிழனை கேவலப்படுத்திய துக்க நாள் 03.08.2017 எங்களுக்கு எந்த அரசியல் வாதியும் காசு கொடுக்க வேண்டாம் --எந்த கட்சியும் கொள்ளை அடித்த காசை கொடுத்து பின்னால் வரவேண்டாம் -ஆள் பலம் பண பலமின்றி ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சிவாஜி அவர்களின் புகழை தன உழைப்பால் வந்த பணத்தால் விண்ணுயர பரப்பி கொண்டே இருப்பான்

  10. Likes sivaa liked this post
  11. #788
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes sivaa liked this post
  13. #789
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan


    நாய்..நரிக்கெல்லாம்.. சிலை இருக்கும்.. இம் மண்ணில்!’ - சிவாஜி சிலையும் சேரனின் கவிதைச் சீற்றமும்!


    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரம் எல்லா திசைகளிலும் ஒருவித அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அரசும் நடிகர் சங்கமும் சிலை விவகாரத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. சிவாஜிக்கு நேர்ந்த இந்த அவமதிப்பை வெளிப்படுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் முடங்கிக்கிடக்க, சிவாஜி ரசிகர் மன்றங்கள், சிவாஜி சமூக நலப்பேரவை ஆகிய அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.

    இதனிடையே மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜிசிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து இயக்குநர் சேரன் காட்டமாக ஓர் கவிதையை எழுதியுள்ளார். தம் நண்பர்களுக்கும் நெருங்கிய வட்டத்துக்கும் அனுப்பிவைத்துள்ள அந்தக் கவிதை சிலை அரசியலை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். தமிழக மக்களால் பேசியும் பேசப்படாமலும் விடப்பட்ட ஷோபன்பாபுவையும் அவர் தன் கவிதையில் விட்டுவைக்கவில்லை.
    அந்தப்பாடல் இதோ...

    நாய்..நரிக்கெல்லாம்..
    சிலை இருக்கும்..
    இம் மண்ணில்..
    எம் காவிய நாயகனுக்கு
    சிலை இருக்கக் கூடாதா..?
    கடற்கரை முழுக்க
    ஊழல் கறைப் பட்டோர்
    கல்லறைகளாய் கிடக்க..
    இம் மண்ணின்
    வைர மகனுக்கு
    எம் மண்ணில்
    சிலை இருக்கக்
    கூடாதா..
    சோபன்பாபுக்கு சிலை..
    வீரம் பேசி கலை
    வளர்த்த எம்
    திரைத் திலகத்திற்கு
    சிலை இருக்கக் கூடாதா..

    காறித் துப்பக்கூட
    வெறுப்பாக இருக்கிறது..
    உள்ளுக்குள் சினமேறி
    நெருப்பாக கொதிக்கிறது...


    கவிதையோடு மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் நேற்று பல விரக்தியான பதிவுகளை இட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிலை அகற்றப்பட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை கறுப்பு நாள் என வர்ணித்துள்ள சேரனின் இன்னொரு ட்வீட்டில், “தமிழ்நாட்டுல கைய நீட்டிக்கிட்டு தப்பா வழிகாமிச்சவுங்க சிலை நூறுஇருக்கு இதுல சிவாஜி சிலைமட்டும் இடஞ்சலாம்?” என கொதித்திருக்கிறார். முன்னதாக கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட சிவாஜி நினைவுதினமான 21-ம் தேதி சிவாஜி பற்றிய 5 மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் சிறப்பு வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார். சிவாஜியின் நடிப்பு ஆளுமையை சிறப்பாகக்கூறும் இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டது.




    இந்தப் பாடலை உருவாக்க 4 மாதங்கள் ஆனதாக குறிப்பிடும் சேரன், வீடியோவுக்கான ஒவ்வொரு ஷாட்களையும் தேடித்தேடி எடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவனமாக பார்ப்பவர்களுக்கு அது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
    நடிகர்கள் சிவகுமார், மனோபாலா , YGM , MS பாஸ்கர், , விக்ரம்பிரபு, ஜெயப்ரகாஷ் இயக்குநர்கள் ரவிகுமார் சார், உதயகுமார், பிரபுசாலமன் மீரா கதிரவன் ஆகியோர் வீடியோவைப் பார்த்துவிட்டு உடனடியாக சேரனைத்தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.

    “வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடான மனிதர்களுள் ஒரேமுகமாய் வாழ்ந்துகாட்டியவர் நடிகர்திலகம். அவர் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமையே” என வீடியோவை வெளியிடுவதற்கு முன் சேரன் தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை அகற்றத்துக்கு காட்டமான கவிதை எழுதும் அளவுக்குச் சென்ற சேரனின் சிவாஜிப்பற்று எத்தகையது என்பது கவிதையைப் பார்க்கும்போது தெரிகிறது.

    சிவாஜி குறித்து சேரன் வெளியிட்டுள்ள வீடியோ...


  14. Likes sivaa liked this post
  15. #790
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் சிலை
    வைப்பதற்கு முன்னரான செய்தி
    மீள் பதிவு

    Sukumar Shan

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரைச் சாலையில் சிலை வைக்கப்படும்’ _ என்று முதல்வர் கலைஞர் ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த போதே, சிவாஜி ரசிகர்களும் திரை உலகினரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.
    இந்நிலையில், ஜூன் 25_ம் தேதியன்று சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘பராசக்தி படம் வெளியானபோது இருந்த சிவாஜி மாதிரி, இளமையும் அழகும் நிறைந்த சிவாஜியின் உருவத்தைச் சிலையாக வைக்க வேண்டும்’ என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். இறுதியில் கலைஞர் பேசும்போது, இதை ஏற்க இயலாததைக் குறிப்பிட்டார். ‘‘பெரியார் என்றால், முதிர்ந்த வயதில் தாடி, தடியுடன் இருந்தால்தான் அடையாளம் தெரியும். சாக்ரடீஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம், அவரது இறுதிக்கால உருவம்தான். என் படத்தையே எனது இளமைக்கால உருவம் போல வரைந்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. எனவே, சிவாஜி மறையும் காலத்தில் இருந்ததுபோல, அவருக்குச் சிலை வைப்பதுதான் சரி. அப்படித்தான் சிலையும் தயாராகி வருகிறது?’’ என்றார் கலைஞர்.
    கூடவே, ‘‘அந்தச் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த இடத்திலா? என்று எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது’’ என்று சொல்லி, இடத்தையும் சொல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகினரின் ஆர்வத்தையும் அவ்விழாவில் தூண்டிவிட்டு விட்டார் கலைஞர்.
    ‘அந்த இடமா....? இந்த இடமா?’ என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நமக்கும் ஆர்வம் மேலிட விசாரித்தோம்.
    சிலை வைப்பது என்று அறிவிப்பு வெளியானவுடன், சிவாஜி குடும்பத்தினர் கலைஞரைச் சந்தித்து நன்றி சொல்லப் போயிருக்கிறார்கள். ‘‘எங்கள் குடும்பத்தின் சார்பில் தனிப்பட்ட முறையில் நன்றி’’ என்று ராம்குமாரும் பிரபும் சொல்லும்போதே இடைமறித்த கலைஞர், ‘‘எனக்கு எதற்கு நன்றி? நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது? அவருடன் நான் கொண்டிருந்த நட்புதான் உங்களுக்குத் தெரியுமே...’’ என்று சொல்லி உடைந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
    இதைப் பார்த்து சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி என்று எல்லோருமே கண்ணீர் வடிக்க, அந்தச் சந்திப்பே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து முடிந்திருக்கிறது.
    அதன் பிறகுதான் சிலையை எப்படி, எங்கே அமைப்பது என்று கலைஞர் தன் மனதுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சமீபத்தில் தன் சொந்த ஊரான திருக்குவளை போனபோது, பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலையை, தான் பயணம் செய்த வேனை நிறுத்திப் பார்த்தார் கலைஞர்.
    தான் இறந்த பிறகு இந்த ‘போஸில்’தான் சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜியே தன் குடும்பத்தினரிடம் சொல்லி, ஒரு ஸ்டில்லைக் கொடுத்திருந்தார். அந்த போட்டோவில் உள்ளபடியே செய்த சிலைதான், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள சிலை. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், அதேபோல் சென்னையிலும் அமைக்க முடிவெடுத்தார்.
    அதன்பிறகுதான் இடம் பற்றிய கேள்வி எழுந்தது. கடற்கரைச் சாலையிலேயே பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் கலைஞரே ஆசைப்பட்டு, ஓர் இடத்தை முடிவு செய்து, முதலில் சிவாஜி குடும்பத்தினரிடம் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணத்தைக் கேட்டிருக்கிறார். அவர்களும் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் அடைந்து ‘முழு திருப்தி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
    இதுபற்றி நாம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவிடம் பேசினோம்.
    ‘‘சிவாஜி சாருக்கு சிலை வைக்க எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசே வைப்பது அவரை அங்கீகரித்து, கௌரவப்படுத்துவது மாதிரி உள்ளது. இது பெரியப்பா (கலைஞர்), அப்பா மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. எங்கள் இரு குடும்பத்தின் உறவு நீண்ட கால வரலாறு கொண்டது. குறிப்பாக, அப்பாவுக்கும் பெரியப்பாவுக்குமான உறவு பற்றி நாடறியும். அதனால்தான் நாங்கள் நன்றி சொல்ல அவரைச் சந்தித்தபோதுகூட, ‘சிலை வைப்பது என் கடமை’ என்று சொன்ன பெரியப்பா, ‘‘இப்போதும் டி.வி.யில் கணேசனைப் பார்க்கும்போது, திரையிலேயே அவர் கன்னத்தைக் கிள்ளத் தோன்றுகிறது’’ என்று சொல்லி, கண்ணீர் வடித்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக, சிலை வைப்பதையே பெருமையாக நினைத்தோம். ஒரு முக்கியமான இடத்தில் அதை நிறுவ முடிவு செய்திருப்பது, எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார் பிரபு. ‘‘எந்த இடம் என்பதை அரசே அறிவிப்பதுதான் முறை. நான் சொல்வது சரியல்ல’’ என்று மறுத்த பிரபு, கடைசிவரை இடத்தைச் சொல்லவேயில்லை. எனினும், செய்தித்துறை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்ததன் பலனாக இடத்தை அடையாளம் காட்டினார் ஓர் அதிகாரி. கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக, ராதாகிருஷ்ணன் சாலையும் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடம்தான் தன் நண்பனுக்காக கலைஞர் தேர்வு செய்துள்ள இடம். அந்த இடத்தில், ரோட்டின் மையத்திலேயே இந்தியக் குடியரசின் பொன்விழா நினைவாக ஒரு அசோகர் ஸ்தூபி இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள மணிக்கூண்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சிலையை வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில், ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி சிலையை வைக்க தற்போது ஏற்பாடாகியிருக்கிறது. ஆனாலும் இடம் பற்றிய சர்ச்சையைத் தவிர்க்க, இப்போதைக்கு இடத்தை வெளியே சொல்லவேண்டாம் என்று கலைஞரே, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடமும், சிவாஜி குடும்பத்தினரிடமும் கேட்டுக்கொண்டாராம்.
    பாண்டிச்சேரியில் உள்ள சிலையைச் செய்த ஸ்தபதி மணி நாகப்பாதான் இந்தச் சிலையையும் செய்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதால், அவரது உதவியாளர், ஸ்தபதி ரவிதான் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்.
    ‘‘சிவாஜி விருப்பப்பட்ட போஸில்தான் பாண்டிச்சேரியில் சிலையைச் செய்தோம். இந்தச் சிலையும் அதே மாதிரிதான். 750 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் சிலை தயாராகி வருகிறது. நடிகர்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து என்.எஸ்.கே. மற்றும் சிவாஜிக்குத்தான் சிலை உள்ளது. ஒரு மகா கலைஞனின் சிலையை வடிக்கும் பொறுப்பை, ஒரு பெருமையாகவே உணர்கிறேன்’’ என்கிறார் ஸ்தபதி ரவி.
    மிக விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது இந்தச் சிலை. இடத்தைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கலைஞர் அந்த விழாவில் விவரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
    நாராயணி
    Philosopher
    நாராயணி
    Active Members
    0
    1,550 posts
    Posted 30 Jun 2006
    mayoori said:
    முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
    ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
    அன்று நடந்தது ஆவி துடித்தது
    இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •