நன்றி mappi. தாங்கள் அளித்த நான்கு பாடல்களில் என் மனதை கவர்ந்தது கோயில் புறா.. படத்தின் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இந்த பாடல்களை ரி-மாஸ்டர் செய்ய வேண்டும், நம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொக்கிஷங்கள் இவை.

கொசுறு: சரிதா நமக்கு தெரிந்தவர் தான், இவருக்காக மௌன கீதங்களை எண்ணெற்ற முறை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகனும், இந்த பாடலில் நாதஸ்வரம் வாசிப்பவருமான ராஜ்பகதூர், பழைய பிரபலம் pu சின்னப்பாவின் மகன். மிகவும் வறுமை நிலையில் இருந்தவர் சில படங்களில் வில்லனாக நடித்தாலும் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. பாவம்.