நிரந்தரமாகிய எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு ....

எதிர்ப்பிலே வளர்ந்து வாழ்ந்து வெற்றி மாலைகள் சூடியவர் நம் மக்கள் திலகம் . யாரெல்லாம் வசை பாடினார்களோ அவர்கள் எல்லாம் காலப்போக்கில் எம்ஜிஆரை வணங்கி வாழ்த்தியது வரலாறு . எம்ஜிஆருக்கு விளம்பரம் எம்ஜிஆர்தான் .
எத்தனையோ நடிகர்கள் வாய் அசைத்து பாடினார்கள் . அதுவும் கண்ணதாசனின் பாடலை . திரையோடு கரைந்து போய் விட்டது .

ஆனால் ...
பட்டுக்கோட்டையார்
கவியரசர்
வாலி
மூவரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் நம் மக்கள் திலகம் .

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது


அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்




அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
(கண்ணனுக்கு)


என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்


பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்


உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்



பாடல்களை சொல்லி கொண்டே போகலாம் .

உலக திரைப்பட வரலாற்றில் வாய் அசைத்து பாடிய வரிகளை நிஜ வாழ்க்கையில் நடத்தி காட்டிய ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே .

கோட்டையை பிடிக்கே போகிறேன் என்று பாடியதற்கும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று பாடியதற்கும் உள்ள வித்தியாசம் புரியாதவர்களுக்கு
கண்ணதாசனின் வரிகளின் உணர்வுகள் எங்கே புரிய போகிறது ?