-
26th April 2019, 11:01 PM
#3211
Junior Member
Platinum Hubber
-
26th April 2019 11:01 PM
# ADS
Circuit advertisement
-
26th April 2019, 11:04 PM
#3212
Junior Member
Platinum Hubber
-
27th April 2019, 12:00 AM
#3213
Junior Member
Diamond Hubber
மாறுவேட ஒப்பனையில் அவருக்கு நிகர் அவரே! - விக்ரம் புகழாரம்!
பாலாவின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "சேது". அதற்கு சில வாரங்களுக்குப்பின் 1999- டிசம்பர் 24-க்காக விஜய் டிவியில் எம்.ஜி.ஆர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தயாரித்தேன், விளம்பரதாரர் நிகழ்ச்சியாக. அதில் சாய்ராம் கல்லூரி தலைவர் திரு.லியோ முத்து அவர்கள், தான் சிவாஜி ரசிகராக இருந்து எம்ஜிஆரை விரும்பியது எப்படி என்பது பற்றிச் சொன்னார். இதில் வேறு சிலரது பேட்டிகளும் இடம் பெற்றன. அதில் ஒன்று நடிகர் விக்ரம் பேட்டி. நண்பர் மேஜர்தாசனின் ஏற்பாட்டில், வீட்டிலிருந்து வெளியே புறப்பட்ட சமயத்தில் நடிகர் விக்ரமை அவரது கார் முன்பாக நிறுத்தி பேச வைத்தோம்.
அவர் சொன்ன ஒரே விஷயம் எம்ஜிஆரது மாறுவேடங்கள் பற்றி. "எத்தனையோ நடிகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் மாறுவேடமிட்டு நடிப்பதில் எம்.ஜி.ஆரை போல் யாருமில்லை என்பேன். எந்தப் படத்தில் மாறுவேடமிட்டு நடித்தாலும், அந்த ஒப்பனை சிறப்பும் நடிப்பும் வியப்பாக இருக்கும். எப்படி இவரால் இதற்கு திட்டமிட முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன். விடை காண முடியாது. அப்படி ஒரு ஈடுபாடு அவரிடம் உண்டு" என்றார் விக்ரம்.
Ithayakkani S Vijayan with Giri Kripa Sankar,
Plato Rajagopalan and Major Dasan.............. Thanks wa.,
-
27th April 2019, 12:01 AM
#3214
Junior Member
Diamond Hubber
"அன்பே வா" படப்பிடிப்பு சிம்லாவில்...
திரு ஏ வி எம் சரவணன் தலைவர் பற்றிய மிக முக்கிய நிகழ்வை பகிர்கிறார்...
சிம்லாவில் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு. அது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்கள். அந்த 5 நாட்களும் தினமும் மாலை படப்பிடிப்பு முடிந்தபிறகு ஏதேனும் நிகழச்சியை வைத்துக் கொண்டிருந்தார்.
முக்கியமான நிகழ்ச்சியாக அங்கே போர்முனையில் எல்லைப்பகுதியில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் இந்திய ஜவான்களை போய்ப்பார்க்கும் நிகழ்ச்சி...
பயங்கரக்குளிர்...! அப்படி மருத்துவமுகாமிற்கு சென்றபோது அங்கே மக்கள்திலகத்தைப்பார்த்த சில தமிழ்நாட்டு ஜவான்கள் ஆனந்தஅதிர்ச்சியில் மிகவும் நெகிழ்ந்தனர். நமது ராணுவ வீரர்களுக்கஆக சிம்லாவில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் மக்கள்திலகமும், சரோஜாதேவியும் கலந்துகொண்டு பேசினர். அப்போது...
திடீரென...
"நீங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ அதற்கு சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக இந்த உயரிய பணிக்கு வழங்குகிறேன் " என்ற அறிவிப்பை யாருமே எதிர்பார்க்காமல் வெளியிட்டார்.... ஒட்டுமொத்த ராணுவ வீரர்களும் அப்படியே உறைந்தே விட்டனர்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த நேரத்தில் அவரிடம் அவ்வளவு பெரியதொகை இல்லை. அதனால் என்னிடம் (AVM சரவணன்) அவரது சம்பளத்தில் அந்த தொகையை அட்வான்சாக வாங்கி அந்தப்பணத்தை அந்த நிதிக்கு கொடுத்தார்.
இப்படிப்பட்ட மாமனிதரை நான் (AVM சரவணன்) என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததே இல்லை...
இப்படி ஒவ்வொரு மனிதின் வாழ்க்கையிலும் ஒன்றோடொன்றாக கலந்து பின்னிப்பிணைந்தவர் நம் பொன்மனச்செம்மல் அவர்கள்.......... Thanks wa.,
-
27th April 2019, 11:07 PM
#3215
Junior Member
Diamond Hubber
#கருத்துள்ள #பாடல், எந்த கால கட்டத்திற்கும் பொருந்தும்... பொருத்தமான பாடல்...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே.........என்றும் நிலைத்து நிற்கும் மக்கள் திலகம் உச்ச புகழ்...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
-
27th April 2019, 11:12 PM
#3216
Junior Member
Diamond Hubber
நாளை மாலை மதுரை- சென்ட்ரல் dts "குடியிருந்த கோயில்", காவியம் காண கூடும், தானாய் சேர்ந்த கூட்டம், சேரும் கூட்டம், ரசிக்க ரெடியாக புறப்படுங்கள்...
-
28th April 2019, 10:42 PM
#3217
Junior Member
Diamond Hubber
27-4-019 அன்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் 102 -வது பிறந்ததநாள் விழாவும்
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கத்தின் 15-ம் ஆண்டுவிழாவும் தி.நகரிலுள்ள இன்போஸிஸ் ஹாலில் நடை பெற்றது .
திரு சைதையார் அவர்கள்திரு ஜசரி கணேஷ் அவர்கள் திரு லியாகத் அலி கான் அவர்கள் திரு குமார் ராஜேந்திரன் அவர்கள் திரு ஆதவன் அவர்கள் திரு ஓம் பொடியார் அவர்கள் கலந்து இந்த விழாவை சிறப்பித்தனர்
இறுதியில் ராஜாவின் கானத்தில் அரங்கம் இசை மழையால் நனைந்தது
விழாவை அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கத்தின் தலைவர் லைன் திருராஜன் சீனிவாசன் அவர்களும்
கெளரவதலைவர் லைன் திரு மணிலால் அவர்களும் விழாவை சிறப்பாக நடத்தினர் திரு மணிலால் அவர்கள் தலைமைப் பண்புக்கு எடுத்து காட்டாக விளக்கினார்
விழாவில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
எந்த சோதனை காலங்களிலும் துணை நிற்கும் கலைவேந்தன் எம் ஜி ஆர் பக்தர்கள் அறக்கட்டளைக்கும் என் மனமார்ந்த நன்றி ! நன்றி ! நன்றி !
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............. Thanks wa.,
.
-
28th April 2019, 10:44 PM
#3218
Junior Member
Diamond Hubber
இதுதான் ராஜவிஸ்வாசம், ஆம் புரட்சி தலைவரின் நிழல்போல் 40 வருடமாக உடன் இருந்து கண்ணை இமை காப்பதுபோல் காத்து நின்றவர் தலைவரின் மெய்க்காப்பாளர் அய்யா திரு. K.p.ராமகிருஷ்ணன் அவர்கள், அவர் தலைவரை பற்றி எழுதிய " எம்ஜிஆர் ஒரு சகாப்தம் "
" மனிதப்புனிதர் எம்ஜிஆர் " ஆகிய புத்தகங்கள் எழுதி, அதன் வரும் வருமானத்தை (ராயல்டி) முதியோர் இல்லத்திற்கு கிடைக்கும்படி செய்திருக்கிறார், வள்ளலோடு வாழ்ந்தவரல்லவா...
அதே குணம், வாழ்த்துக்கள் அய்யா......... Thanks wa.,
-
28th April 2019, 10:48 PM
#3219
Junior Member
Diamond Hubber
மதுரைமாநகரில் மீனாட்சியம்மன் சுந்தரேசர் சுவாமிகள் தினசரி நகர் உலா பட்டாபிஷேகம் திருக்கல்யாணம் திருத்தேர் அழகர்கோயில் மலையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பலபேர்களின் மண்டகப்படியில் அமர்ந்து பல அவதாரங்கள் எடுத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பக்தர்களைமகிழ்வித்த சித்திரை திருவிழா இனிதேமுடிந்தது இடையில் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாடாளுமன்ற தேர்தலும்வந்துபோனது தற்போது மதுரையில் தங்கத்தலைவன் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி ஆரம்பம் பேனர் போஸ்ட்டர் மாலைகள். கற்பூர ஆராதனையென்று ஒருவாரம் புரட்சித்தலைவரின் அருளால் ரசிகர்கள் எங்கள் கொண்டாட்டம்தான் வெற்றி வாகைசூடும் மகிழ்ச்சியில் மதுரை பக்தர்கள்......... Thanks wa.,
-
29th April 2019, 04:52 PM
#3220
Junior Member
Diamond Hubber
விழாத் துளிகள் !
___________________
திரு சைதையார் அவர்கள் பேசும் பொழது வடவூனூரில் உள்ள மக்கள் திலகத்தின் வீட்டை சீரமைத்தது கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ட்ரல் ஸ்டேஷன் இவைகளுக்கு பெயர்வர தன் செயல்பாடுகள் குறித்து புள்ளி விவரத்துடனும் ஆதாரமாகவும் ஆணித்தரமாகவும் விளக்கினார்.
மேலும் இனி மக்கள் திலகத்தின் புகழக்கு தான் செய்யப் போகின்ற திட்டங்களையும் விவரித்தார் .
நான் மிக மிக முக்கியமானவர் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தேன் மக்கள் திலகம் அரசியலில் கடைபிடித்த நேர்மை ஏழைகள் மீது அவர் கொண்ட அக்கறை நேரில் கண்டதை அவரிடம் விவரித்தேன் அப்படியா
நான் காமராஜ் அவர்கள் கக்கன்அவர்களைத்தான் அரசியலில் தூய்மையானவர்கள் என்று நினைத்திருந்தேன் என்றார் ஏன் இதை இங்கே சொல்கின்றேன் என்றால் மாபெரும் மனிதநேயர் நான் அவரிம் கண்ட தூய்மையான எண்ணங்களை அவரின் செயல்பாடுகள்
இன்னும் மக்கள் முழமையாக அறியவில்லையோ என்று சந்தேகிக்கிறேன்
உங்களிடமிருந்தோ , என்னிடமிருந்தோ மக்கள் திலகத்தை யாரும் பறிக்க முடியாது அவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்
உங்கள் செயல்பாடுகளை மாற்றுங்கள் என்று குறிப்பிட்டார் .
திரு சைதையார் அவர்களின் இந்த தொலைநோக்கு பார்வைதான் அவர் சிகரம் தொட காரணம் என்று உணர்ந்தேன் !
ஜயா , சைதையார் அவர்களுக்கு
நன்றி ! நன்றி ! நன்றி !
அனைத்துலக எம் ஜி ஆர் பொது நலச்சங்கம் !............... Thanks wa.,
Bookmarks