Page 108 of 402 FirstFirst ... 85898106107108109110118158208 ... LastLast
Results 1,071 to 1,080 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1071
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி திரு சுந்தரபாண்டியன், தங்கள் Mobile நம்பர் அனுப்பும்படி பாசத்துடன் கேட்டு கொள்கிறேன்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1072
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    நாடோடிமன்னன்

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரியில் பங்கு பெறுவதில் ஆனந்தம் அடைகிறேன் . இன்று மிகவும் சிறப்பான தினம் . மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் மற்றும் இதயக்கனி வெளிவந்த தினம் . மறக்க முடியாத வரலாற்று வெற்றி காவியங்கள் .

    நாடோடி மன்னனை பேரறிஞர் அண்ணா அவர்கள் இதயக்கனியாக ஏற்று கொண்டார் . எங்க வீட்டு பிள்ளையாக மக்கள் ஏற்று கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டார் .

  4. Likes orodizli liked this post
  5. #1073
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரியில் நீண்ட இடைவெளிக்கு பின் வருகை புரிந்திருக்கும் புரட்சி தலைவர் பக்தர் அருமை சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்வரவு, நல்வாழ்த்துக்கள்... நம் மக்கள் திலகம் புகழ், பெருமையினை அரிய ஆவணங்களை பதிவுடுமாறு பாசத்துடன் கேட்டு கொள்கிறோம்..........

  6. #1074
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    <சென்னை - அண்ணா சாலை ''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு பொன்விழா ஆண்டு 1970 - 2020

    21.7.1970 தேவிபாரடைஸ் - துவக்க தினம் . 49 ஆண்டுகள் நிறைவு . பொன்விழா துவக்கம்
    .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் மலரும் நினைவுகள்

    1970ல் திரை உலக ரசிகர்களால் கவரப்பட்ட மிக சிறந்த குளிர்சாதன திரை அரங்கு ''தேவி பாரடைஸ் ''

    1. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் ''தேவி பாரடைஸ் அரங்கில் 29.5.1971 அன்று வெளிவந்தது, முதல் நாள் சிறப்பு காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் முன்னலையில் எம்ஜிஆர் திரை நட்சத்திரங்கள் , அரசியல் பிரபலங்கள் ஏராளமான எம்ஜிஆர் மன்றங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . முதல் முறையாக இத்திரை அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் , 125.காட்சிகள் 151 காட்சிகள் அரங்கு நிறைந்து 147 நாட்கள் ஓடி வசூலில் பிரமாண்ட சாதனை நடைபெற்றது .

    2. தீபாவளி விருந்தாக 18.10 1971 அன்று மக்கள் திலகத்தின் '' நீரும் நெருப்பும்'' திரைக்கு வந்தது . சிறப்புக்காட்சிகள் நடந்தது .9 வாரங்கள் படம் ஓடியது .

    3. பரப்பரப்பான சூழ் நிலையில் 11.5.1973 அன்று வெளிவந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''. முன்பதிவில் 7.5.1973ல் ரசிகர்களின் கூட்டமே சாட்சி .63 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 182 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .

    4. மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' 9.5.1975 வெளியானது . தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கம் நிறைந்து வசூலில் சாதனை .12 வாரங்கள் ஓடியது .

    5. மக்கள் திலகத்தின் லட்சிய படைப்பான ' பல்லாண்டு வாழ்க '' 31.10.1975ல் திரைக்குவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது .

    6. '' தேவிகலா '' அரங்கில் முதல் முறையாக எம்ஜிஆரின் '' நீதிக்கு தலை வணங்கு '' தினசரி 4 காட்சியுடன் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது

    7. எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்கு முன்னர் 5.5.1977 ல் வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . 100 வது நாள் விழா நேரத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது .


    8. தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆன பின்னர் 14.8.1977 அன்று திரைக்கு வந்த படம் ''மீனவ நண்பன் '' 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது

    9. மக்கள் திலகம் எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' 14.1.1978 திரைக்கு வந்து 50 நாட்கள் மேல் ஓடியது .


    மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா துறை விட்டு விலகிய பின்னர் அவருடைய பல படங்கள் ''தேவி பாரடைஸ் ' அரங்கில் வைகுண்ட ஏகாதசி நள்ளிரவு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது .


    எம்ஜிஆரின் நாடோடிமன்னன் , படகோட்டி , மாட்டுக்கார வேலன் படங்கள் 1977-1989 இடைப்பட்ட காலங்களில் தேவி பாரடைஸில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது .

    எம்ஜிஆரின் டிஜிட்டல் படங்கள்

    2014- 2018 கால கட்டத்தில்

    ஆயிரத்தில் ஒருவன்
    ரிக் ஷாக்காரன்
    அடிமைப்பெண்
    எங்கவீட்டுப்பிள்ளை
    நினைத்ததை முடிப்பவன்

    போன்ற படங்கள் தேவி வளாகத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .

    49 ஆண்டுகள் கடந்தாலும் தேவிபாரடைஸ் பெயரும் எம்ஜிஆர் படங்கள் திரைக்கு வந்த இனிய நாட்களும் ரசிகர்கள் கொண்டாடிய விழாக்கோலங்களும் என்றென்றும் மறக்க முடியாது .

    விரைவில் இதே அரங்கில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிட்டல் படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது .

    ''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எங்களது அன்பு கலந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறோம்
    Last edited by MGRRAAMAMOORTHI; 22nd August 2019 at 10:46 PM.

  7. #1075
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய செய்தி

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் உருவ சிலையை அடுத்த மாதம் மொரிஷியஸ் நாட்டில் திறக்க உள்ளார்கள் .
    தமிழக துணை முதல்வர் திரு .பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார் .

  8. #1076
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Anna’s views on MGR’s Movies

    One of the oft cited accolade Anna made on MGR was in 1958, during the felicitation function of MGR’s own production Nadodi Mannan. “The mango tree has many fruits. One of those fruits was shining the best. Many dreamt that whether this fruit will land in their laps. Kamarajar was anxious to have it. Me, too. That fruit landed in my lap. Now, I had placed it in my heart. That fruit is the one, who is seen nearby, M.G. Ramachandran. My heart’s fruit.” – Madiyil vizhuntathu oru kani; athanai eduthu ithayathil vaithukondaen.]

    Though this might have been true about Anna’s sentiments on MGR’s charisma and philanthropy, what did he really thought about MGR’s movies? Among the 103 movies of MGR which were released while Anna was living, what Anna sincerely felt on the quality of these movies, other than their propaganda value to the DMK party, has not been openly mentioned by MGR, in his autobiography. The original story for two MGR movies (namely Thai Magalukku Kattiya Thaali-1959, and Nallavan Vazhvan – 1961, both made in black and white) was that of Anna. In box office, both had mediocre run. Maybe for couple of prominent movies, Anna might have issued praising ‘blurbs’ in his speeches, at the solicitation of movie producers and distributors. But, what he sincerely thought on the overall quality of MGR’s creativity, Anna had remained diplomatically silent.

    If we exclude the two leading lights Sivaji Ganesan and Kannadasan, who left the DMK party by 1961, MGR was one of the three hero actors (other two being, K.R. Ramasamy and S.S. Rajendran) who promoted the DMK policies in their movies whole of 1960s. Other party activists and promoters included actor D.V. Narayanasamy, script writers Karunanidhi, Murasoli Maran, A.V.P. Asaithambi, Nanjil Manoharan, Rama Arangannal, lyricist N.M. Muthukoothan, and director duo Krishnan-Panju in the DMK camp. One could only sympathize with Anna’s ‘no open criticism’ for any movies in which his camp players had an active hand.

    After Anna’s death, though MGR was able to maintain his balance in the movie world due to his immense presence, this couldn’t be said of other two movie heroes of DMK – K.R. Ramasamy (1914-1971) and S.S. Rajendran (1928-2014). DMK activities (before it became a recognized political party in India) was financed largely from the funds contributed by these two actors in 1950s.

    As such, they served as ‘financial essentials’ to Anna. Both faltered badly after Anna’s death, and their antagonism to Karunanidhi in the party (even when Anna was alive) also was a factor in their declining status among the party’s rank and file. K.R. Ramasamy died at the age of 57; 30 months after Anna’s death. S.S. Rajendran’s situation also turned out to be pitiable. He lost his moorings after Anna’s death, and his movie career came to abrupt stop. Subsequently, his political status was restored by MGR, after he quit the DMK party.

    COURTESY - MGR REMEMBERED 53 BY SRIKANTHA

  9. Likes orodizli liked this post
  10. #1077
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை 380 வது ஆண்டு தினம் ஆகஸ்ட் 22- 29 வரை கொண்டாடப்படுகிறது ..

    சென்னை நகருக்கு பெருமைகள் சேர்த்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சாதனை பட்டியல்

    1936 முதல் 2019 இன்று வரை தொடர்ந்து 83 ஆண்டுகள் எம்ஜிஆர் பெயரும் , அவர் உருவாக்கிய திமுக மற்றும் அதிமுக இயக்கத்தின் கட்சி சின்னங்களும் நிலைத்து விட்டது .

    சினிமா மற்றும் அரசியல் இரண்டு துறைகளிலும் எம்ஜிஆர் பதித்த முத்திரைகள் ஏராளம் .
    சென்னை நகரில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆர் நடத்திய ஊர்வலங்கள் , மாநாடுகள் , முதல்வர் பதவி ஏற்பு விழாக்கள் என்றென்றும் மறக்க முடியாதவை

    சாதனைகள் தொடரும் ......

  11. #1078
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரை பற்றிய ஒரு தகவல் - 6

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அம்பாசிடர் கார் ஈரோட்டில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இவருடைய வீட்டில் வெளிர் நீல நிறத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் பராமரிக்கப்பட்டு வருகிறது. யாரும் இதில் பயணம் செய்வது இல்லை என்றாலும் புதுப்பொலிவுடன் காரை வைத்து இருக்கிறார்கள். காரின் பதிவு எண் M G R 4777 என்பதாகும்.

    இது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய கார் ஆகும். ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?
    எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருந்த சு.முத்துசாமி இதுபற்றி கூறியதாவது:-

    1986 அல்லது 87 என்று நினைக்கிறேன். ஒருநாள் நானும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வாரப்பத்திரிகையில் பெட்டி செய்தியாக ஒரு தகவல் வந்திருந்தது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் பயன்படுத்தி வரும் பியட் காருக்கு எம்.எஸ்.வி. என்று பதிவு எண் பெற்று ஓட்டி வருவது அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதைப்படித்த எம்.ஜி.ஆர். அப்படியே என்னிடம் காட்டினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் T M X 4777. என்ற கார் இருந்தது எனக்கு M G R என்று பதிவு செய்யப்பட்ட கார் வாங்கி அதில் அவர் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம். இதற்காக M.G. R என்கிற பதிவு எங்கே உள்ளது என்று விசாரித்தபோது மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக எனது உறவினரை அனுப்பி, 4777 என்ற எண் பதிவு செய்ய முடியுமா? என்று விசாரித்து பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அதே எண் கிடைத்தது.

    உடனடியாக உறவினர் பெயரில் கார் வாங்கி, அதில் M G R 4777 என்ற பதிவு எண்ணை பெற்று சென்னைக்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முன் நிறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார். அதன்பின்னர் இந்த 2 கார்களிலும் அவர் பயணம் செய்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய வீட்டில் இருந்த 3 கார்களில் ஒரு காரை ஜானகி அம்மையார் பயன்படுத்தி வந்தார். ஒரு கார் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த காரை என்னிடம் எடுத்துச்செல்லும்படி ஜானகி அம்மையார் வற்புறுத்தியதால் ஈரோடு கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர். பயணம் செய்த அந்த காரில் நாங்கள் பயணம் செய்வதில்லை. அவரது நினைவாக பராமரித்து வருகிறோம்.

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
    கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்............ Thanks...........

  12. #1079
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பேவா படப்பிடுப்பு சிம்லாவில் சில காட்சிகள் எடுக்க பட்டு அங்கு இருந்து திரும்பி கொண்டு இருந்தோம். எனக்கு குளிர் ஜுரம் போல வந்து தொண்டை கர கரத்து எச்சிலை கூட விழுங்க முடியாமல் அவதி பட்டேன்.

    வரும் வழியில் சோலன் என்ற இடத்தில் ஒரு உணவு விடுதி மலை சரிவில் கொஞ்சம் உயரத்தில் தெரிந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து மேலே ஏறி கடைக்கு போக வேண்டும்.

    என்னால் நடக்க கூட முடியவில்லை. எங்கே ஏறி போக என்று கார் பின் சீட்டில் படுத்துவிட்டேன். தொண்டை வலியில் அப்படியே அசந்து தூங்கி விட்டேன்.

    அரை தூக்கத்தில் கார் கண்ணாடியை யாரோ தட்டுவது போல் ஒரு நினைப்பில் கார் கண்ணாடியை இறக்கி பார்த்தேன். மபிளர் சுற்ற பட்ட பாத்திரத்தில் ஆவி பறக்கும் பால் வாசம் வந்தது. கையில் அதை ஏந்திய படி தென்னகத்தின் தலை சிறந்த கதாநாயகன் நின்று கொண்டு இருந்தார்.

    நான் பதறி என்ன நீங்கள் எனக்காக இப்படி கொண்டு வரலாமா? என்று அவரை கேட்க எம்ஜியார் சிரித்துக்கொண்டே கடும் வலியில் கஷ்ட படும் போது அடுத்தவர் கொண்டு வந்தால் வேண்டாம் என்று சொல்லி விட கூடும் நீங்கள் நான் கொண்டு வந்ததால் இதை நீங்கள் மறுக்க முடியாது..குடியுங்கள் என்றார்.

    நான் மறுப்பு சொல்லாமல் குடிக்க அதுவரை காத்து இருந்து காலி குடுவையுடன் எடைத்தை காலி செய்து மீண்டும் மேலே ஏறினார் எம்ஜியார்.

    என் கண்கள் என்னை அறியாமல் கலங்கின என்ன ஒரு விந்தை மனிதர் இவர் என்று யோசித்தேன் என்று சொல்கிறார் ஏ. வி.எம் சரவணன்.

    இப்போ உள்ள கதாநாயகன் எவன் எப்படியும் போகட்டும் என்று காரவனை விட்டு இறங்கமாட்டான்

    வாழ்க எம்ஜியார் புகழ் தொடரும்...நன்றி.......... Thanks..........

  13. #1080
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 23-08-2019 முதல் தொடர்ச்சியாக கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் கருத்து காவியமாம் " நீதிக்கு தலை வணங்கு" திரையீடு.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •