Page 148 of 402 FirstFirst ... 4898138146147148149150158198248 ... LastLast
Results 1,471 to 1,480 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1471
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1472
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1473
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    சென்னை அகஸ்தியா
    Last edited by ravichandrran; 7th October 2019 at 01:14 AM.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1474
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Coimbatore shanmugam theatre

    Thanks to mr. Samuvel
    Last edited by ravichandrran; 7th October 2019 at 01:17 AM.

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1475
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #1476
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #1477
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்கள் ஜெமினி கணேசன், சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத்து படம் பண்ணுவீங்களா” என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேட்கிறார். ”ஆம்” என்று உறுதியாக சொல்கிறார் பந்துலு.

    பெரும்பாலும் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து படத்தை இயக்குவது வழக்கம். எனவே, “அப்படியானால் எனக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுங்க” என்று எம்ஜிஆர் வாய்விட்டு கேட்கிறார். “அய்யய்யோ, இப்ப பணம் கொண்டு வரலையே” என்று பதறுகிறார் பந்துலு. “பரவாயில்லை. இருப்பதை கொடுங்க” என்று சிரிக்கிறார் எம்ஜிஆர். ஜிப்பாவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று துலாவி பார்க்கிறார் பந்துலு. உள்ளே இருந்த 101 ரூபாய்யை எம்ஜிஆருக்கு அட்வான்சாக கொடுக்கிறார். அப்புறம், காலத்தால் அழியாத ஆயிரத்தில்ஒருவன் உருவாகியது. 1965ல் படம் வெளிவந்தது. எம்ஜிஆர்-ஜெயலலிதா நடிப்பு கூட்டணியில் முதலில் உருவான படம் அதுதான்.

    அந்த காலத்தில் திருச்சி ஏரியாவுக்கு மட்டும் ஒரே ஆண்டில் 5 மடங்கு லாபத்தை கொடுக்கிறது ஆயிரத்தில் ஒருவன். மற்ற ஏரியாகளுக்கு எவ்வளவு லாபம் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ்சினிமாவின் பக்கா கமர்ஷியல் படங்களில் ஒன்றாக ஆயிரத்தில் ஒருவன் இன்றும் பேசப்படுகிறது. 1974ல் பந்துலு மறைகிறார். 1987ல் எம்ஜிஆர் விண்ணுலகம் செல்கிறார்.

    சமீபத்தில் பந்துலு மகளும், பிரபல ஒளிப்பதிவாளருமான விஜயலட்சுமி எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டில் ஒரு படப்பிடிப்பை நடத்துகிறார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் எம்ஜிஆரின் உறவினர்கள் ஒரு கவரை கொடுக்கிறார்கள். அதில் ஆயிரத்தில் ஒருவன் என்று எண்ணிலும், எழுத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் 20 ரூபாய் நோட்டுகள் ஐந்தும், ஒரு 1 ரூபாய் நோட்டும் இருக்கிறது. விஜயலட்சுமிக்கு புரியவில்லை. “உங்க அப்பா ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆருக்கு கொடுத்த அட்வான்ஸ் இது. இந்த பணத்தை செலவழிக்காமல் வீட்டு லாக்கரில் வைத்து இருந்தார் எம்ஜிஆர். பிற்காலத்தில் அதை நாங்கள் கண்டுபிடித்தோம். உங்க அப்பா கொடுத்த பணம். உங்களுக்கே இது சொந்தம்” என்று அந்த பணத்தை கொடுக்கிறார்கள் விஜயலட்சுமியிடம் கொடுக்கிறார்கள் எம்ஜிஆரின் உறவினர்கள். கண் கலங்குகிறார் விஜயலட்சுமி. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆர் வாங்கிய அட்வான்ஸ் பணம் ரூ 101தான் இது….

    காலத்தால் அழியாமல், கரையாமல் இன்னமும் இந்த நோட்டுகள் அப்படியேஇன்னமும் விஜயலட்சுமிவசம் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் விழாவில் இந்த தகவலை சொல்லி, இந்த 101ரூபாய்யை காண்பித்தார் பந்துலு மகள் விஜயலட்சுமி........... Thanks.........

  13. #1478
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் வளர பாடுப்பட்டவர் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். தஞ்சையில் தமிழுக்காக பல்கலைகழகம் அமைத்தவர். ராஜராஜசோழனுக்கு 1984 விழா எடுத்தவர். அப்படிப்பட்ட தஞ்சை பெரியக் கோயிலில் தமிழ் கல்வெட்டுக்கள் எடுக்கப்படுகிறதே நம் (எம்.ஜி.ஆர்) தலைவரின் சார்பில் ஏதேனும் செய்ய நாம் ஒன்றுக் கூடி பேசலாம் என்ன சொல்கிறீர்கள். தமிழ் நண்பர்களே......... Thanks...

  14. #1479
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

    தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

    அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

    சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
    "இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

    ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
    டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

    அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
    இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
    புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
    பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !............ Thanks.........

  15. #1480
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் மக்கள்திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு கார்வார் என்ற ஊரில் கப்பலில் நடந்து கொண்டு இருந்தது.

    படப்பிடிப்பை பார்க்க நம் சிங்கம் வளர்த்த சீமானை பார்க்க கரை ஓரத்தில் கனிம சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டம் தங்கள் வேலைகளை விட்டு கூடி விட்டனர்.

    வேலைக்கு வாருங்கள் போதும் போதும் என்று அவர்கள் சூப்பர்வைசர் பலமுறை கூப்பிட்டும் அசையவில்லை கூட்டம்.

    மறுநாள் அவர்கள் சம்பளம் பிடித்தம் செய்ய படுகிறது. ஆனாலும் கூட்டம் குறையவில்லை.மக்கள்திலகத்தை அருகில் பார்க்கும் வாய்ப்பு அவர்களை அப்படி செய்ய தூண்டியது.

    விஷயம் நம் மன்னன் காதுகளுக்கு போக அன்று மதியம் அந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சேர்த்து படகுழுவினரருடன் உணவு தயார் செய்யப்படுகிறது.

    மதிய உணவை உண்டு முடித்து அவர்கள் அனைவரையும் தனித்தனியா வரவழைத்து கை குலுக்கி வேலை நேரத்தில் நீங்க உங்கள் வேலைக்கு போகணும் இங்க நான் வந்த வேலை எனக்கு நடக்கணும் நான் சொல்வது சரிதானே என்று கேட்ட பின் அனைவரும் மகுடிக்கு கட்டு படும் நாகம் போல பணிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.

    தனித்தனியே கை குலுக்கும் போது ஒவ்வொருவர் கையிலும் சுருட்டி மடிக்க பட்ட ரூபாய்களை பார்த்ததை விட பொன்மனசெம்மல் தங்கள் கைகளை தொட்டு குலுக்கிய மகிழ்ச்சியே அதிகம் அவர்களுக்கு..

    அதிசியமனிதர் வரலாறு தொடரும் நன்றி..வாழ்க எம்ஜியார் புகழ்.

    பின்குறிப்பு.

    இந்த படப்பிடிப்பின் போது தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் ஆக நடந்து கொண்டு இருந்த நேரம்...பின்னாள்களில் கருநாகம் இந்தி எதிர்ப்பில் இல்லாமல் காதல் காட்சிகளில் மூழ்கி கிடந்த எம்ஜியார் என்று பேசியது கொடுமையிலும் கொடுமை.............. Thanks............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •