-
7th October 2019, 02:46 AM
#1481
Junior Member
Diamond Hubber
புரட்சிதலைவர் தன் நண்பர் சாண்டோ சின்னப்பதேவர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கோவைக்கு வருகிறார். அலங்கார் ஹோட்டலில் தங்குகிறார். ஸ்டாண்ஸ் மில் திருமண மண்டபத்தில் கல்யாணம்.
அலங்கார் ஹோட்டல் மற்றும் திருமண நிகழ்வில் வாத்தியாரை காண வரலாறு காணாத கூட்டம் . விழா முடிந்து நம் தலைவர் கூட வந்த மதியழகன் உடன் டாட்ஜ் காரில் சென்னக்கு விரைகிறார்.
அவிநாசி சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த நம் காரை தொடர்ந்து ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருகிறது. இதை அறிந்து கொண்ட நம் வாத்தியார் கருத்தம்பட்டி அருகே காரை நிறுத்தி சொல்ல கார் ஓட்டி கதிரவன், முத்துஅண்ணன், மாணிக்கம் யாருக்கும் புரியும் அவர் செயல்கள்.
அம்பாசிடர் கார் அருகில் வந்து நிற்க இறங்கிய மூன்று பேர்கள் நம் மன்னன் கார் நோக்கி வர காரின் கருப்பு நிற கண்ணாடியை தலைவர் இறக்க வந்த மூவரும் வணங்க ஏன் இப்படி உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க உங்களை காலை முதல் அங்கும் இங்கும் கோவையில் அலைந்து பக்கத்தில் பார்க்க முடியவில்ல அதான் இப்படி என்று சொல்ல உங்க பேர் என்ன தலைவர் கேட்க ஒருவர் வாசுதேவன், அடுத்தவர் ஜெகந்நாதன், மூன்றாம் நபர் சிவகுமார் என்று சொல்ல.
அந்த சிவகுமார் யார் என்றால் மாதம்பட்டி சிவகுமார் என்று அறிய பட்ட தயாரிப்பாளர் பின்னாட்களில் அவர் நடிகர் சத்தியராஜ் அவர்களில் சகலை என்பது கூடுதல் தகவல் உங்கள் பார்வைக்கு.
உடன் இருந்த மதியழகன் அப்போ நீ வக்கீல் துரை ராஜ் குடும்பமா என்று கேட்க ஆம் என்று பதில் வந்தது.
சரி கவனமாக திரும்பி போங்கள் என்று வாத்தியார் சொல்ல அண்ணா உங்கள் கையெழுத்து வேணும் என்று அவர் கேட்க சரி குடு தாளை என்று சொன்னவுடன் தாளை குடுக்கும் சாக்கில் மன்னன் கையை ஒரு காதலி வருடுவது போல சிவகுமார் வருட சும்மா தடவு இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை என்று சொல்லி ஒரே பேப்பரை மூன்றாக கிழித்து கையொப்பம் போட்டு கொடுக்கிறார் பொன்மனம்.
ஏதோ சொத்து பத்திரம் தன் கைகளுக்கு வந்தது போல மகிழ்வில் மூவரும் புறப்பட பாத்து பத்திரம் என்று தலைவன் வழி அனுப்ப அது தான் எம்ஜியார்
நிகழ்வின் தொடர்ச்சி.
1977 மக்கள் திலகம் தனி கட்சி கண்ட பின் கோவை மாவட்ட எம்ஜியார் மன்ற தலைவர் மருதாசலம் தேர்தல் பொறுப்பை கவனிக்க வேட்பாளர் பட்டியலை சிபாரிசு செய்து நம் வாத்தியாருக்கு அனுப்பிய பின் இருநாள் கழித்து மாதம்பட்டி சிவகுமார் இல்ல கதவை இரவு 10 மணிக்கு மருதாசலம் தட்ட அவருக்கு தான் கொண்டு வந்து இருந்த மாலையை அவர் கழுத்தில் இவர் போட என்ன அண்ணா இப்படி என்று சிவகுமார் கேட்க
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நீங்க என்று தலைவர் சொல்லி விட்டார் என்று அவர் சொல்ல... ஐய்யோ நான் அவரின் பக்தன் அரசியல் சரிப்பட்டு வருமா தெரியவில்ல என்று சொல்ல
நல்லவன் வேண்டும் நம் கட்சியில் நிற்க வேண்டும் வெற்றி தோல்வி அப்புறம் என்று தலைவர் சொன்னார் என்று சொல்ல... அண்ணா வேண்டாம் நீங்க தான் அதுக்கு தகுதியானவர் என்று சொல்லி அந்த மன்றம் கண்ட வீரர் மருதாசலம் தேர்தலில் நிற்க வேண்டிய உதவிகளை செய்து வெற்றி பெறுகிறார் மருதாசலம்.
எப்படி பட்ட உண்மை தொண்டர்கள் அப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் தொடரும்
பின்னாளில் அந்த மாதம் பட்டி சிவகுமார் சொல்கிறார்
என் வீட்டில் பூஜை அறையில் வைக்க பட்டுள்ள நம் வாத்தியார் படத்துக்கு நான் பூவோ போட்டோ வைப்பது இல்லை என என்றால் எம்ஜியார் இறந்து விட்டார் என்று நான் நம்பவில்லை என்கிறார் அவர்............ Thanks..........
-
7th October 2019 02:46 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2019, 03:02 AM
#1482
Junior Member
Diamond Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN
சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.
இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?
103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.
அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?
மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.
அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.
அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.
நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.
உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.
அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?
காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.
தோழர் சுபா., அவர்களே... மாற்று முகாம் நண்பருக்கு... தகுந்த முறையில் நியாயமான கருத்துருக்களை தெரிய, அறிய படுத்தியுள்ளீர்... நன்றி... ஆனாலும் " சந்திரோதயம்" கருத்து காவியத்தில் மக்கள் திலகம் சொல்லுவது போல " என் எதிரி கூட எனக்கு சமமில்லனா அத அலட்சிய படுத்துறன்வ" என்றும் சாகா வரம் பெற்ற வசனமே நினைவில் நிற்கின்றது... இவர்களெல்லாம் எதையும் ஒத்து கொள்ளாமலேயே வாழ்ந்து எதைதான் கொண்டு செல்ல போகிறார்களோ?!
-
7th October 2019, 03:19 AM
#1483
Junior Member
Diamond Hubber
"நாடோடி மன்னன்" எந்த காலங்களிலும் வாழும் காவிய சிகரம் பல காட்சிகள் வண்ணமாக்கப்பட்டு, இன்னும் பல விதங்களில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வடிவாக்கம்( பெரும் பொருள் செலவில்)........ வருகின்ற 2020ம் ஆண்டு மத்தியில் திரையிட ஏற்பாடுகள் செய்ய உத்தேசிக்க பட்டுள்ளது என்ற இனிய விபரங்கள்... விநியோகஸ்தர்கள் குழுவிடமிருந்து பகிர்ந்து கொள்கிறோம் பாச தோழர்களே.........
-
7th October 2019, 04:37 AM
#1484
-
7th October 2019, 02:03 PM
#1485
Junior Member
Diamond Hubber
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் "நாடோடி மன்னன் " சென்னை அகஸ்தியா 70 MM இல்
புதிய,,. அரிய, அபார , அசுர வசூல் சாதனை ...........
2019ம் ஆண்டில் இதுவரையில் வெளியான அனைத்து பழைய படங்களையும் முறியடித்து சாதனை ...
மக்கள் தலைவரின் ",நாடோடி மன்னன் ," வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.1 லட்சம் மேல் வசூல் ஆகியுள்ளது .ஒரு வார வசூலாக ரூ.1.50லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் வசூலாக வாய்ப்புள்ளதாக அரங்க மேலாளர் தெரிவித்துள்ளார் என்று தகவல் .ஞாயிறு (6/10/19)அன்று இரண்டு காட்சிகளில் மட்டும் சுமார் 900 நபர்கள் சென்னை அகஸ்தியாவில் படம் பார்த்ததாக நண்பர்கள் தகவல்............ Thanks...........
-
7th October 2019, 02:08 PM
#1486
Junior Member
Diamond Hubber
அன்றும், இன்றும், என்றும், ஒரே ஏக போக வசூல் சக்கரவர்த்தி ... மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,தான்......... என்பது மீண்டும், மீண்டும்... நிரூபணம்..........எப்பொழுதும் வாழ்க... வளர்க ... புரட்சி நடிகர்... அவர்தம் புகழ், பெருமை, பெருமிதம்......... Thanks.........
-
7th October 2019, 11:26 PM
#1487
Junior Member
Diamond Hubber
என்ன இது?!... மறுபடியும் புலம்பலும், அங்காலாய்ப்பா? மன நோயாளியாகவே மாறிவிட்ட.... ரொம்ப முத்தி போய்விட்டதுனு சொல்ற அளவில் தானே இருக்கிறது... நம் மன்னர் மன்னன் தான் தம்முடைய வெற்றிகள், ஆளுமைகள் கொண்டு இன்றும் அந்த அப்பாவி 'பிள்ளைங்க' குரூப்ப புலம்ப உடுருக்கார்...பாருங்கள்... அவுங்க படத்தை அப்போதே ஓடாமல் நிறுத்தி, மிரட்டல் விட்டாங்கன்னு மன அழுத்தம், மன உளைச்சல், மன நிலை பாதிப்பு கண்டுள்ள இந்த ஜென்மங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதை விட்டு வேறு என்ன செய்ய?!.........
-
7th October 2019, 11:27 PM
#1488
Junior Member
Diamond Hubber
அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் அருமை பெருமைகளை ஒருசேர விளக்கி மிகவும் சிறப்பானதொரு உரையை வழங்கியுள்ளீர்கள். இளம் தலைமுறையினர் தமிழகத்தின் தன்னிகரற்ற, தன்னலமற்ற இரு மாபெரும் மக்கள் தலைவர்களை அறிந்து கொள்ளும் வண்ணம் மிகவும் யதார்த்தமாக விளக்கியுள்ளீர்கள். அதே நேரத்தில் மிகவும் பொருத்தமான புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் உரையினூடே காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அவை அண்ணனின் உரைக்கு கூடுதல் வலு மட்டுமின்றி ஒரு சுவாரசியத்தையும் தருகின்றன. இக்காணொளியை பதிவிட்டு அனைவரும் அண்ணா, எம்ஜிஆரின் அருமை, பெருமைகள் மட்டுமின்றி இருவருக்கிடையேயான குரு சிஷ்யன் உறவு, அவர்கள் இருவரின் பாசப் பிணைப்பு மற்றும், தான் என்கிற அகங்காரமோ கர்வமோ துளியுமின்றி அவர்கள் ஒருவரையொருவர் மதித்து நடந்த விதம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளும் விதத்தில் தொகுக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பைத் தருகின்றது. ✌.......... Thanks...
-
7th October 2019, 11:28 PM
#1489
Junior Member
Diamond Hubber
......... MGR TV... Thanks...
-
8th October 2019, 10:32 AM
#1490
Junior Member
Diamond Hubber
புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் நடித்து எட்டாவது திரைப்படமாக வெளிவந்த மாபெரும் வெற்றி காவியம் அசோக் குமார். மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன், ஏழிசை வேந்தர் எம் கே தியாகராஜ பாகவதர், டிவி குமுதினி, கண்ணாம்பா, வி நாகையா, கலைவாணர் என் எஸ் கே- டி ஏ மதுரம், மகாதேவன், ரங்கசாமி, ரஞ்சன் மற்றும் பலர் நடித்த உண்மையாக நடந்த சரித்திர காவியம் 'அசோக் குமார்'. அக்டோபர் 7,1941 இல் வெளியாகி வெள்ளி விழாவை கடந்து ஓடிய தலைசிறந்த திரைப்படம். 78 ஆண்டுகளை கடந்து நேற்றோடு பிறந்தநாள் காணும் இத்திரைப்படத்தை போற்றுவோம்! கண்டு களிப்போம். இதில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சிறப்பு வாய்ந்தது. பாகவதர் நடித்திருக்கும் பாடல் காட்சி எல்லாம் சொந்த குரலில் பாடியிருப்பார் (எல்லா திரைப்படங்களில்). தட்சசீலம் நிர்வாகி எம் ஜி ராமச்சந்திரன் (மகேந்திரன்) பாகவதருக்கு உயிர் நண்பராக, உதவ கூடியவராக சிறப்பாக நடித்திருப்பார். பாகவதரின் புனிதமான இயற்கையான நடிப்பு போற்றக் கூடியது. மற்றவர்களும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பாகவதருக்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கல். வாழ்க இறைவன் எம்ஜிஆர் புகழ்!........... Thanks...
Bookmarks