-
8th November 2019, 10:17 PM
#1961
Junior Member
Diamond Hubber
#ஜனவாி_17
அதுவரை யாருக்கும் தெரியாமல்
இருந்த #புரட்சித்தலைவா்_எம்ஜிஆர்
பிறந்த நாள் பொது மக்களுக்குத்
தெரிந்தது எப்படி?
சென்னை 'யானைக்கவுனி' (எலிபண்ட்
கேட்) பகுதியில் எம்.ஜி.ஆர். வசித்து வந்த
அந்தக் காலத்தில் , அருகில் இருந்த
ஸ்ரீமுருகன் டாக்கீஸ் கால்நடையாகவே
சென்று படம் பார்க்கும் வழக்கத்தைக்
கொண்டிருந்தார் .
அப்பொழுது அவர் நாடக நடிகர் என்ற
முறையிலும் , பரமசிவ முதலியார்
தியேட்டர் உரிமையாளர் என்னும்
முறையிலும் ஒருவருக்கொருவர்
அறிமுகமாகி , நாளடைவில் அது
நட்பாகக் கனிந்தது .
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில்
நடித்துப் புகழ் பெற்று வசதியான
நிலைக்கு வந்த பிறகும்கூட அவருக்கும்
முதலியாருக்கும் இடையிலிருந்த அந்தப்
பழைய நட்பும் பாசமும் கொஞ்சம் கூட
குறையாமல் வளர்ந்து பெருகிக்
கொண்டே வந்தது .
வயது வளர வளர – வசதிகள் பெருகப்
பெருக , இருவருடைய நட்பும், தாம்புக்
கயிறுபோல இறுகி முறுக்கேறியது .
ஏனென்றால் , அது தூய , உண்மையான
நட்பு !
எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன
பிறகு 1978 ஜனவரி மாதம் 17 ஆம் தேதி
‘தினத்தந்தி’ நாளிதழில் முதலியார் ஒரு
விளம்பரம் கொடுத்தார் .
அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள்
விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப
நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன்
வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும்
வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று
குறிப்பிட்டு இருந்தார் .
அதைப்பார்த்த எம்.ஜி.ஆர்.,
முதலியாரை தொலைபேசி வாயிலாக
அழைத்து ,
‘‘என் பிறந்த நாள் உங்களைத்தவிர
யாருக்குமே தெரியாது . இதுவரைக்கும்
யார்கிட்டேயும் நான் சொன்னதும்
கிடையாது., சொல்றதும் இல்லை .
அப்படி இருக்கும்போது இன்னிக்கு
நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில்
போட்டிங்க ?’’ என்று அன்புடன் கடிந்து
கொண்டார் .
அதற்கு முதலியார், ‘‘ இப்போ
நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர்
இல்லே . இந்தத் தமிழ்நாட்டின்
முதலமைச்சர் .
இதுவரைக்கும் இல்லேன்னாலும்,
இப்போவாவது – இனிமேலாவது
உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா
மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான்
தினத்தந்தியிலே போட்டேன் ’’ என்றார் .
புரட்சித் தலைவரால் பதில் ஏதும்
பேச முடியவில்லை . அதற்குப் பிறகுதான்
தலைவா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்
ஜனவரி 17 என்பது அவருடைய
அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும்
மற்றும் அரசியல் , திரை உலக
நண்பர்களுக்குமே தெரிய வந்தது .
அதனைத் தொடர்ந்து , ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி 17 , எம்.ஜி.ஆர். பிறந்த
நாளில் முதலியாரின் வாழ்த்துச் செய்தி
தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து
கொண்டிருந்தது .
புரட்சித் தலைவா் , மறைந்த
அடுத்த நாள் பரமசிவ முதலியார் பிறந்த
நாள் . ஆமாம். 25.12.1924–ல் முதலியார்
பிறந்தார்.
எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சரான
பின்னர் அவருக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கூறி , எந்த ‘‘தினத்தந்தி’’யில்
எந்த முதலியார் விளம்பரம் செய்து வந்தாரோ – அதே ‘‘தினத்தந்தி’’யில்
அதே முதலியார் எம்.ஜி.ஆர். இறந்த
நாளான தனது பிறந்த நாளில் இப்படி
விளம்பரம் செய்தாா் .
‘‘எனது ஆரூயிர் குடும்ப நண்பர்
எம்.ஜி.ஆர். மறைந்த இந்த நாளில்
(டிசம்பர் 24) அவருடைய ஆன்மா சாந்தி
அடைய இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் .
– இப்படிக்கு, வி.எம்.பரமசிவ முதலியார்,
மிராசுதார் , சுரோத்தியம்தாரர் ,
உரிமையாளர் ஸ்ரீமுருகன் டாக்கீஸ் , சென்னை–1’’.
நேசமும் பாசமும் ஒன்று கலந்த
இந்த நினைவாஞ்சலிச் செய்தி
2005–ஆம் ஆண்டு வரையிலும் நாள்
தவறாமல் ‘தினத்தந்தி’யில் வந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு அது
வரவில்லை. ஏனென்றால் முந்தின
ஆண்டோடு அது முடிந்து போய் விட்டது.
காரணம் 27.8.2006–ல் தனது 81–வது
வயதில் வி.எம்.பரமசிவ முதலியார்
காலமானார் .......... Thanks.........
.
-
8th November 2019 10:17 PM
# ADS
Circuit advertisement
-
8th November 2019, 10:22 PM
#1962
Junior Member
Diamond Hubber
-
8th November 2019, 11:06 PM
#1963
Junior Member
Platinum Hubber
சஷ்டியப்த பூர்த்தி விழா செய்தி .
--------------------------------------------------
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு.குணசேகரன்* இன்று (08/11/19) சஷ்டியப்த பூர்த்தி விழாவை சென்னை மேற்கு மாம்பலம் ஆர்யா கவடா* சாலையில் உள்ள கௌரி மினி ஹாலில் சிறப்பாக*கொண்டாடினார் .**
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் போன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
திரு.குணசேகரன், திருமதி சுகுணாதேவி தம்பதியர் இன்று போல் எல்லா வளமும்,நலமும் , பெற்று பல்லாண்டு காலம்* நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* வாழ்க* என வாழ்த்துவோமாக .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2019, 06:02 AM
#1964
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th November 2019, 10:20 AM
#1965
Junior Member
Diamond Hubber
டியர் ஜேம்ஸ் ...........
உங்கள் ஆதங்கம் புரிகிறது .எம் ஜி.ஆர்., திரை உலகில் நிகழ்த்திய சாதனைகளை அனைவரும் அறிவார்கள் .பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ யார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான் என்பது விநியோகஸ்தர்களுக்கும் நன்கு தெரியும் . நேற்றைய தலைமுறை மக்களுக்கும் எம்ஜிஆர் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை அறிவார்கள் . ஆனால் குறிப்பிட்ட சில சிவாஜி கணேசனின் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் தோல்வி களை மறைக்க எம்ஜிஆர் படங்களை பற்றி தவறான தகவலை இணைய தளத்திலும் , முக நூலிலும் , சில குழுக்களிலும் பதிவிட்டு அற்ப மகிழ்ச்சி கொள்கிறார்கள் .
இதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் . சிவாஜியின் வெற்றி தோல்வி புள்ளி விவரங்கள் அனைவரும் அறிந்ததே .
உங்கள் கவனத்தை சற்று மாற்றி கொண்டு எம்ஜிஆரின் நடிப்பாற்றல் பற்றிய பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளவும் . உங்களுக்கு பிடித்த நடிப்பு காட்சிகள் , சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகளை பற்றி பதிவிடவும் .பொன்னான நேரத்தை எம்.ஜி.ஆர் ., நினைவுகளுடன் நாம் பயணிப்போம் ..............(ஒரு ரசிக நண்பர் இன்னொரு ரசிக தோழருக்கு கூறிய விளக்கம்)......... Thanks.........
-
9th November 2019, 10:27 AM
#1966
Junior Member
Diamond Hubber
மதுரையில் பொங்கலுக்கு டிக்கெட் மொத்தமாக வாங்கி கிழிக்க ஒரு கும்பலே கும்பலாக காத்து கிடக்கிறது என மதுரை திரைப்பட விநியோகஸ்தர்கள் தெருவில் கோரஸ் ஆக கேட்கிறது... நண்பர்கள் தகவல்...
-
9th November 2019, 10:59 PM
#1967
Junior Member
Platinum Hubber
நாளை ஞாயிறு* முதல் (10/11/19) விருதுநகர் , அல்லம்பட்டி , ஸ்ரீராம் அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .
-
10th November 2019, 02:03 PM
#1968
Junior Member
Diamond Hubber
-
10th November 2019, 02:04 PM
#1969
Junior Member
Diamond Hubber
-
10th November 2019, 02:05 PM
#1970
Junior Member
Diamond Hubber
Bookmarks