-
18th November 2019, 11:55 PM
#2031
Junior Member
Diamond Hubber
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடிகரின் மகன் நடிகர் யாரோ எழுதி கொடுத்ததை (சிலர் அறிக்கை என்னும் உளறல், புலம்பல் பகுதி) அப்படியே கொட்டினார் என நிகழ்ச்சி பார்த்த நண்பர் தகவல்... Thanks...
-
18th November 2019 11:55 PM
# ADS
Circuit advertisement
-
19th November 2019, 09:56 AM
#2032
Junior Member
Diamond Hubber
திரையுலக காவலர் புரட்சி நடிகர் அவர்களின் உற்ற தோழர் ஏராளமான காவியங்களில் உடன் நடித்தவருமான வில்ல நடிப்பு திலகம் அமரர் mn. நம்பியார் சாமிகள் நினைவு தினம் இன்று...
-
19th November 2019, 02:47 PM
#2033
Junior Member
Platinum Hubber
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்க நிர்வாகி* திரு.எம்.எஸ். மணியன் அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனி எம்.பி.கே. மகாலில் நேற்று மாலை (18/11/19) சிறப்பாக நடைபெற்றது .
நிகழ்ச்சியில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.எம்.ஏ. முத்து ( உடைஅலங்கார நிபுணர் ), திருநின்றவூர் எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு.கலைவாணன், உரிமைக்குரல் ஆசிரியர் திரு.ராஜு, திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ), மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
-
19th November 2019, 02:47 PM
#2034
Junior Member
Platinum Hubber
தினமலர் -19/11/19
------------------------------
பயில்வான் ரங்கநாதன் பேட்டி*
--------------------------------------------------
உங்களுக்கு* "பயில்வான் "* என்கிற பட்டத்தை எம்.ஜி.ஆர். கொடுத்தாரா ?
ஆமாம்.* ஆனால் நான் நிஜமான பயில்வான் இல்லை .மல்யுத்தம் அல்லது குத்துச்சண்டை போட்டியில் ஜெயித்தவர் களைத்தான்* பயில்வான் என்பர் .
நான் பளு தூக்கும் போட்டியில் ஆர்வமாக இருந்ததால் , என் உடல்வாகுவை பார்த்து எம்.ஜி.ஆர். என்னை பயில்வான் என அழைப்பார் ,* என்னை ரங்கநாதன் என்று அழைத்தால்* யாருக்கும் தெரியாது .* பயில்வான் ரங்கநாதன் என்றால்தான் தெரியும் .**
தமிழகத்தில், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக* கூறுகின்றனர் .அதை* , கமல், ரஜினி இருவரில் யார் நிரப்புவார் ?
சத்தியமாக யாராலும் நிரப்ப முடியாது .* எம்.ஜி.ஆர். ஒருவர்தான் கொடை வள்ளல் .என்கிற பெயரோடு சினிமாவில் , அரசியலில் வலம் வந்து வெற்றி பெற்றார் . அவர் இடத்தை சினிமாவில் கூட யாரும் இன்னும் நிரப்பவில்லை*அரசியலிலும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .* அவரை போன்ற தலைமையை யாராலும் தர முடியாது .**
உங்கள் பிட்னெஸ் ரகசியம் என்ன ?
தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியம் .* எம்.ஜி.ஆர். பக்தர் என்பதால் மது அருந்துவது இல்லை .* பசிக்கும்போது சாப்பிட வேண்டும் .* நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்க*.கூட வேண்டாம் . கெட்டது* செய்யக்கூடாது என நினைத்தால் போதும் .* நம் உடலும்,மனதும் ஆரோக்கியமாக இருக்கும் .**
-
19th November 2019, 02:58 PM
#2035
Junior Member
Platinum Hubber
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா*
-------------------------------------------------------------------------------------
மறைந்த வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று*(19/11/19) சென்னை மியூசிக் அகாடமியில் மாலை 6 மணி அளவில் சிறப்பாக நடைபெற உள்ளது .**
சிறப்பு விருந்தினராக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா , கௌரவ அழைப்பாளராக திரு.விஜயகுமார் , ஐ.பி.எஸ். (டி.ஜி.பி.) -ஓய்வு ,, ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் சிறப்பு ஆலோசகர்* ஆகியோர் கலந்து கொள்கின்றனர்* விழா ஏற்பாடுகளை நடிகர் நம்பியாரின் மகன் திரு.மோகன், மற்றும் அவரது பேரன் ஆகியோர் செய்து வருகின்றனர் .**
Last edited by puratchi nadigar mgr; 19th November 2019 at 03:03 PM.
-
19th November 2019, 03:28 PM
#2036
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sivaa
தமிழக முதலவர் எடப்பாடி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள்.
_________________________________
உன் தலைவன் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் நோய் முற்றி சிகிட்சை எடுத்து கொண்டிருந்த போது, அண்ணனை (எம.ஜ.ஆர்) காண்பதற்கு எங்கள் அய்யன் தன் மனைவி கமலா அவர்களுடன் அமரிக்காவிற்கு சென்றார்கள்.
தம்பியை (அய்யனை) பார்த்த உடன் எம்.ஜி.ஆர் அவர்களும், ஜானகி அவர்களும் கண் கலங்க நால்வரும்(அய்யனும்,கமலா அம்மை, ஜானகி அம்மை, எம்.ஜி.ஆர்) ஒன்றாக கண்ணீர் வடித்து கட்டி பிடித்து அழுது தங்களின் கரை இல்லா பாசத்தை கண்ணீராக வெளி படுத்தினார்கள்.
மருத்துவர்களின் நிற்பந்தத்தால் இவர்களின் ஓய்வில்லா கண்ணீர் அடக்கப்பட்டன. இரண்டு நாட்கள் உடன் இருந்து விட்டு அய்யனின் குடும்பம் இந்தியா திரும்பியது.
இந்தியா திரும்பிய அய்யனை எம்.ஜி.ஆர் அவர்கள் திரு. வீரப்பனுடன் மீண்டும் அவசரமாக அமெரிக்காவிற்கு அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த அழைப்பின் விவரம், ரகசியம் ஏன் என்று, என்ன என்று, எதற்க்காக என்று கால் நக்கி பதவியில் ஒட்டி கொண்டிருக்கும் எடப்பாடியே தங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்.
அழைப்பபை ஏற்று திரு.வீரப்பன் அவர்களுடன் அய்யன் செல்கின்றார்கள் மனம் கனத்துடன். இத்தனை அவசரமாக அண்ணன் என்னை அழைக்க காரணம் என்ன? விபரீதம் ஏதாவது? மனம் கனத்துடன் இருவரும் அமெரிக்கா செல்கின்றனர்.
அங்கு சென்றதும் அய்யனுக்கு மனதிற்க்கு சிரிய சமாதானம். விபரீதம் எதுவும் இல்லை என்று.
பிறகு அண்ணன்(எம்.ஜி.ஆர்) அய்யனை அழைத்ததின் அவசரம் என்ன? 4 பேரும்( எம்.ஜி.ஆர்,அய்யன், ஜானகி, வீரப்பன்) மருத்துவமனையில், அங்கிருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டு பேசப்படுகின்றது.
தம்பி கணேசா உன் சகோதரி ஜானகிக்கு எதுவும் தெரியாது. என் கட்சியில்(அ.தி.மு.க) உள்ள எவர் மீதும் எனக்கு (எம்.ஜி.ஆர்) எள் அளவும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த இயக்கத்தை (அ.தி.மு.க) தலைமை ஏற்று நீதான் வருங்காலத்தில் வழி நடத்தி செல்ல வேண்டும் என்ற அய்யனின் கை பிடித்து அண்ணன் என்ற அன்பு கலந்த அதிகாரத்துடன் வேண்டடி கொண்டார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
இதற்கான விழா (அய்யனிடம் இயக்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற விழா) சென்னையில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட வேண்டும் என்று விரப்பன் அவர்களிடம் கட்டளை இடப்படுகின்றது. இருவரும்(அய்யனும், வீரப்பனும்)முதலில் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி அம்மை, சில மருத்துவர்களுடன் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கு அய்யனை தலைமை ஏற்க சொல்லும் பிரமாண்ட விழாவிற்கு 2 தினங்கள் மட்டுமே இருந்த நிலையில் எங்கள் அய்யனின் பாச மிகு அண்ணன் (எம்.ஜி.ஆர்) இயற்கை எய்தினார்கள்.விழாவும் நடை பெறாமல் அனைத்துமே மரண ஓலத்துடன் அடங்கி விட்டது. அனைத்தும் மரண பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது.
இதற்கு சாட்சி திரு.வீரப்பன் (அ.தி.மு.க அமைச்சர்) அவர்களே.
ஏய் சசிகலாவின் கால் நக்கி எடப்பாடியே! உன் கட்சியில் எவனையும் நம்பாது எதிர் முகாமில் இருந்த எங்கள் அய்யனை மட்டுமே தங்களின் தலைவன் (எம்.ஜி.ஆர்)நம்பினார்கள். காரணம், அ.தி.மு.கவில் உள்ள நாய்கள் அனைவருமே கால் நக்கிகள் என்று அன்றே தங்களின் தலைவன் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
அதை இப்போது மனசாட்சி இன்றி தவறாமல் செய்து, ஒரு விபத்து போல் ஆட்சியில் ஒட்டி கொண்டுருக்கும் சோமாரி நீ, மாசற்ற எங்கள் அய்யனை விமர்சிக்கின்றாய். தனது கட்சியில் உள்ள அத்னைபேரும் திருட்டு நாய்கள் என்று தனது தலைவனே முடிவு செய்து, இந்த உலகில் தனது(எம்.ஜி.ஆர்)தலைவனுக்கு நம்பிக்கை உள்ள ஒரே உத்தமன் எங்கள் அய்யன் மட்டுமே.
இவைகளை நீ தெரிந்திருக்க வழி இல்லைதான். அன்று நீ உடம்பில் துணி இன்றி ஓடிய காலமாக இருக்கலாம். உலகில் உத்தமர்கள் ஒரு சிலரே தோன்றினார்கள் அதில் எங்கள் அய்யனும் ஒருவர் என்பது எவராலும் மறுக்க முடியாத சத்தியம்.
எங்கள் அய்யன் மாற்று குறையாத இறை பிறவியாம் எங்கள் அப்பச்சியிடம்(காமராஜ்) பாடம் கற்றவர். உன்னை போல் சசியிடம் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி கொள்.
ரஜனியும், கமலும் அரசியலில் வந்தால் உன் தலைவன் போல் வெற்றி பெற இயலாது என்று நீ கூறி இருந்தால் என்ன ம.......க்கு உன்னை நாங்கள் விமர்சிக்க வேண்டும். இதன் உண்மை, நீ உன் தலைவனை மறந்து என் அய்யனையே இப்போதும் உன் மனதில், நினைவில் வைத்திருக்கின்றாயோ? ஆட்சியின் அகங்காரத்தில் ஆடை இன்றி அலையாதே. உன் முடிவு வெகு விரைவில். அப்பச்சியே போற்றி. அய்யனே போற்றி.
நன்றி Selvaraj Fernandez

Originally Posted by
sivaa
நடிகர் திலகம் தனிக்கட்சியை ஏன் துவக்கினார்?
எம்ஜிஆர் இடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, எம்ஜிஆர் இன் ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசாங்கம் களைத்து விடக் கூடாது என்பதற்காக தான் வளர்த்த காங்கிரஸ் கட்சியையே எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கியது? எம்ஜிஆர் கட்சியை நம்பி அவரது மனைவியை ஆதரிப்பவர்கள் என அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜானகி ராமச்சந்திரன் முதல் மந்திரி வேட்பாளர் என பிரச்சாரம் செய்தது,
திமுக தனது கூட்டணிக்கு விரும்பி அழைத்தும் அதை நிராகரித்தது, என
மேற்கண்ட கேள்வி...
களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் முன் சொல்லப்பட்டிருக்க வேண்டும்,
அவ்வாறு மக்கள் முன் சொல்லப்பட்டிருந்தால் இப்போது தகுதியில்லாதவனெல்லாம் மைக் மு
ன் சிவாஜியை நினைத்து கருத்து சொல்ல பயந்து இருப்பான்,
இந்தச் செய்திகளை அறிந்திடாத அன்றைய சிவாஜி ரசிகர்களாவது சாந்தம் பெற்றிருப்பார்கள்,
நன்றி Sekar Parasuram
இந்த 2 செய்திகளையும் எல்லாரும் நன்றாக படிச்சுப் பாருங்கள்/
பொய்க்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சு.
அமெரிக்காவில் முதல் முறை 1984-ல் சிகிச்சை பெற்றபோதுதான் சிவாஜி கணேசன் போய் பார்த்தார். திரும்பியும் அமெரிக்கா போய் பார்க்கவில்லை. அதுவும்
புரட்சித் தலைவர் அழைத்து ஆர்.எம்.வீரப்பனயும் கூட்டிக் கொண்டு போனாராம்.
1984- தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுக தேர்தல் வியூகம் வகுப்பதில் தீவிரமா இருந்தார். புரட்சித் தலைவர் சிகிச்சை பெறும் படங்களை வீடியோக்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து ஏற்பாடு செய்து வெளியிட்டார். ஆர்.எம்.வீரப்பன் அப்போது அமெரிக்காவுக்கே போகவில்லை.
எவ்வளவு பச்ச பொய் சொல்கிறார்கள் பாருங்கள்.
மக்கள் திலகம் சொல்லித்தான் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பிச்சாராம்.
நடிகர் பிரபுவே பொய் சொல்கிறார்.
நான் 3 வருடம் கழித்து 1987-ல் இறந்துவிடுவேன். நான் இறந்த பிறகு நீ என் மனைவிக்கு அரசியலில் ஆதரவு கொடு என்று புரட்சித் தலைவர் சிவாஜி கணேசனிடம் சொன்னாரா?
ஜானகி அம்மாளுக்கு சிவாஜி கணசன் ஆதரவு தரவேண்டும் என்று புரட்சித் தலைவர் எந்த வேண்டுகோளும் வைத்ததாக ஆதாரம் இல்லை.
புரட்சித் தலைவர் அப்படி சொல்லவில்லை.
ஜானகி அம்மாவும் அப்படி சொல்லவில்லை.
அவ்வளவு ஏன் . சிவாஜி கணேசனே கடைசி வரை அப்படி சொன்னது இல்லை.
நம்பளை விடுங்கள். சிவாஜி கணேசன் அப்படி சொல்லியிருந்தால் சும்மா இருப்பார்களா? இதோ ஆதாரம் என்று குதிக்க மாட்டார்களா? கடைசி வரை சிவாஜி கணேசன் அப்படி சொல்லவே இல்லை.
ஜானகி அம்மாவுக்கு அண்ணன் எம்ஜிஆர் சொல்லித்தான் ஆதரவு கொடுத்தேன் என்று சிவாஜி கணேசன் கடைசிவரை சொல்லவே இல்லை.
அப்படி சொன்னார் என்று யாராவது சொல்ல முடியுமா?
சிவாஜி கணேசன் உள்பட சம்பந்தப்பட்ட 3 பேருமே அப்படி சொன்னது இல்லை.
அதுவும் ஜானகி அம்மாளை புரட்சித் தலைவர் எந்த அரசியல் மேடையில் ஏற்றியது இல்லை.
எனக்கு அப்புறம் ஜானகிதான் அரசியல் வாரிசு என்று சொல்லவில்லை.
அப்படி இருக்கும்போது நான் இறந்தபிறகு ஜானகி அம்மாவுக்கு அரசியலில் ஆதரவு கொடு தம்பி என்று சிவாஜி கணசேனை புரட்சித் தலைவர் எப்படி கேட்டு இருப்பார்.
பொய்ய சொன்னாலும் பொருத்தமா சொல்லணும்.
நல்லவேளை. இவர்கள் பொய்யை இவர்கள் என்னதான் கரடியா கத்தினாலும் யாரும் நம்பவில்லை. எவ்வளவுதான் கத்தினாலும் பொய் உண்மையாகாது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th November 2019, 08:50 PM
#2037
Junior Member
Diamond Hubber
இளங்கோவன், அழகிரி, இளைய திலகம் பிரபு, சமூக நலபேரவை, அண்ட புளுகன் ரவீந்திரன் துரைசாமி, ஆகாச புளுகன் மய்யம் .......இப்படி எல்லோரும் சொல்லுவது [ புரட்சித் தலைவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தான் சிவாஜி கணேசன் அவர்கள் கட்சி துவங்கினார்] இருக்கட்டும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது "சுயசரிதையில்" என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போமா:
"என்னுடன் இருந்தவர்களில் பலர் தொழில்முறை அரசியல்வாதிகள். அவர்கள் வாழ்வில் ஈடுபடுவதற்கு அவசியமாக அரசியலில் இருக்க வேண்டியிருந்தது. எனக்கு தேவையில்லை என்றாலும், அவர்களுக்காக ஒரு கட்சியைத் தொடங்க நான் நிர்பந்திக்கப்பட்டேன். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்). தேர்தலில் நின்ற 49 த. மு. மு வேட்பாளர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிவாஜியே திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரசேகரன் துரைவிடம் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று அவரே குறிப்பிடுகிறார், “நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான். இது ஒரு பெரிய ஏமாற்றம் மற்றும் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலை. ஒருவர் என்ன செய்ய முடியும்? நாம் தவறான முடிவுகளை எடுக்கும்போது, ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"
“Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.”
https://www.sangam.org/2008/11/Sivaj...n.php?uid=3155
நடிகர் திலகத்துக்கு ரீலில் தான் நடிக தெரியும் ரியலில் நடிக்க தெரியாது என்பது உண்மையா அல்லது இவரால் சொல்லுவது உண்மையா?????
நாடே வீடு என்று வாழ்ந்தவர் புரட்சித் தலைவர், வீடே நாடு என்று வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் அவர்களால் சிலர் பயன் பெற்றார்கள் என்பதை சிலர் மறுத்தாலும் ஆனால் அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக பயன்பட்டனர்என்பதை யாராலும் மறுக்க முடியாது!......... Thanks to mr.SB.,
-
20th November 2019, 03:23 PM
#2038
Junior Member
Senior Hubber

Originally Posted by
suharaam63783
இளங்கோவன், அழகிரி, இளைய திலகம் பிரபு, சமூக நலபேரவை, அண்ட புளுகன் ரவீந்திரன் துரைசாமி, ஆகாச புளுகன் மய்யம் .......இப்படி எல்லோரும் சொல்லுவது [ புரட்சித் தலைவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தான் சிவாஜி கணேசன் அவர்கள் கட்சி துவங்கினார்] இருக்கட்டும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது "சுயசரிதையில்" என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போமா:
"என்னுடன் இருந்தவர்களில் பலர் தொழில்முறை அரசியல்வாதிகள். அவர்கள் வாழ்வில் ஈடுபடுவதற்கு அவசியமாக அரசியலில் இருக்க வேண்டியிருந்தது. எனக்கு தேவையில்லை என்றாலும், அவர்களுக்காக ஒரு கட்சியைத் தொடங்க நான் நிர்பந்திக்கப்பட்டேன். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின்). தேர்தலில் நின்ற 49 த. மு. மு வேட்பாளர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிவாஜியே திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரசேகரன் துரைவிடம் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று அவரே குறிப்பிடுகிறார், “நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான். இது ஒரு பெரிய ஏமாற்றம் மற்றும் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான சூழ்நிலை. ஒருவர் என்ன செய்ய முடியும்? நாம் தவறான முடிவுகளை எடுக்கும்போது, ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்"
“Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.”
https://www.sangam.org/2008/11/Sivaj...n.php?uid=3155
நடிகர் திலகத்துக்கு ரீலில் தான் நடிக தெரியும் ரியலில் நடிக்க தெரியாது என்பது உண்மையா அல்லது இவரால் சொல்லுவது உண்மையா?????
நாடே வீடு என்று வாழ்ந்தவர் புரட்சித் தலைவர், வீடே நாடு என்று வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் அவர்களால் சிலர் பயன் பெற்றார்கள் என்பதை சிலர் மறுத்தாலும் ஆனால் அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக பயன்பட்டனர்என்பதை யாராலும் மறுக்க முடியாது!......... Thanks to mr.SB.,
நன்றி சுகாராம் அய்யா
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th November 2019, 04:56 PM
#2039
Junior Member
Platinum Hubber
சொல்லவா,,,,,,, கதை சொல்லவா* ,,,,,,,,,,திரித்த கதை சொல்லவா ,,,,,,,,,,,,,,,பொய் கதையை சொல்லவா ,,,,,,,,,,,,தலைவர்கள் மறைந்த நிலையில் கட்டு கதையை* சொல்லவா ,,,,,,,,,,,,,,
தலைவர்கள் யாவரும் உயிருடன் இல்லாத பட்சத்தில், கதை கதையாய் அளந்துவிட்டு ஆளாளுக்கு இதை சொன்னார்கள், அதை சொன்னார்கள் என்று*கதை விடுபவர்களுக்கு தகுந்த பதில் அளித்து வரும் நண்பர்கள் திரு.சுகாராம், திரு.சுந்தர பாண்டியன், திரு.மஸ்தான் சாஹிப் ஆகியோருக்கு நன்றி .
தங்கள் அபிமான நடிகருக்கு எப்படி எல்லாம் புகழ், பெருமை சேர்க்கிறார்கள்*என்பதை பார்ப்பதற்கு வினோதமாக உள்ளது . இந்த கதையை இத்தனை ஆண்டுகளாக எங்கே மறைத்து வைத்திருந்தார்களோ தெரியவில்லை. ஏனெனில்*மறைந்த தலைவர்கள் எவரும் வந்து கனவிலும் இதற்கு சம்மதமோ, பதிலோ*அளிக்க போவதில்லை என்கிற தைரியம் போலும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th November 2019, 04:57 PM
#2040
Junior Member
Platinum Hubber
குமுதம் வார இதழ்*
ஆர்.சி.சம்பத்*------------------------------------
கருணாநிதியை ஒரு நாள் மாலை நேரில் சந்தித்தேன் .* ஆற்காடு வீராசாமியும் உடனிருந்தார் .* அப்போது எம்.ஜி.ஆர். பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை அறிவித்திருந்தார் . கருணாநிதி இதுபற்றி எங்களிடம் கருத்து கேட்டார்*நான் மனதில் பட்டதை தயங்காமல் சொன்னேன் . இது பெற்றோர்களை குழந்தைகள் சம்பந்தமான பொறுப்புணர்வுலிருந்து தள்ளி , சோம்பேறிகள் ஆக்க கூடும் ,* இருப்பினும் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்கள் , தங்கள் குழந்தைகள் ஒருவேளையாவது சாப்பிடும்போது எம்.ஜி.ஆரை வாழ்த்தும்போது தவிர்க்க முடியாது என்றேன் .* *
மேலும், கலைஞரிடம் , நம்மிடம் இருக்கிற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை சத்துணவு திட்டத்திற்காக தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது காசோலை பெற்று முதல்வர்*எம்.ஜி.ஆரிடம் அந்த காசோலையை கொடுக்கலாம் .* ஒருவேளை அதை அவர் வாங்க மறுத்தால் , ஒருமுறை புயல் நிவாரண நிதிக்காக தி.மு.க. திரட்டிய*நிதியை தலைமை செயலாளராக இருந்த கார்திகேயனிடம் அவர் அதை நிராகரித்ததை பெரிய அரசியலாக்கியது போல இதையும் மக்கள் முன்னால் வைத்து* பிரச்னை ஆக்கலாம் என்று நானும் மற்றவர்களும் கூறினோம் .*
நல்ல கருத்து என்று கூறிய கலைஞர் , எங்களுக்கு விடை கொடுத்தார் .* சற்று நேரத்தில் வேறு சிலர் வந்திருந்தனர் .அவர்கள் கலைஞரிடம் , ஏதோ கூறி அவர் மனதை மாற்றிவிட்டனர் . பின்னர் கருணாநிதி அத்திட்டத்தை பற்றி எங்களிடம் கேட்கவேயில்லை .
மாறாக, கழக சார்புடைய ஏடுகளிலெல்லாம் சத்துணவு திட்டத்தை குறை கூறுவது போல் சத்துணவில் பல்லி விழுந்து பத்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் , என்று நையாண்டி செய்து எழுத ஆரம்பித்தனர் .* இதுபோன்ற செயல் தி.மு.க. வின் வெற்றிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்று அன்றே உணர்ந்தேன் .*
அப்போது நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை தி.மு.க இழந்தது .* டி.வி. முன் அமர்ந்து தேர்தல் முடிவுகளை கருணாநிதி பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் அருகில் வாய் திறவாமல் அமர்ந்திருந்தேன் .என்ன கலாநிதி இப்படி ஆகிவிட்டதே என்று என்னிடம் சொன்னபோது நான் பேசாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தேன் .* பின்னர், அவரே நீ சொன்னது சரியா போச்சு .* இத்தனைக்கும் காரணம் சாப்பாடுதானோ* என்றார் .
அரசியல் அனுபவங்கள் நூலில் - டாக்டர் கலாநிதி .**
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks