-
12th December 2019, 12:32 PM
#2181
Junior Member
Diamond Hubber
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!..........
ப*ழ*ம்பெரும் ந*டிகை சவுக்கார் ஜான*கியின் 88வ*து (12/12/1931) பிற*ந்த* தின*ம் இன்று.
இவ*ர் மக்கள் திலகத்துட*ன்" ப*ணம் ப*டைத்த*வ*ன்", "தாய்க்குத் த*லைமகன்", "ஒளிவிளக்கு", "பெற்றால்தான் பிள்ளையா", ஆகிய ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். "ஒளிவிளக்கு" ப*ட*த்தில் ந*டித்த*த*ற்கு சிற*ந்த* ந*டிகை ப*ட்ட*மும் பெற்றுள்ளார். அப்ப*ட*த்தை ப*ற்றிய ஒரு சிற*ப்பு க*ட்டுரை...
மக்கள் திலகம் ந*டித்த 100 வ*து வெற்றிப்ப*டைப்பு "ஒளி விளக்கு". 1968ல் வெளியாகி (20-09-1968) 100 நாட்க*ளுக்கு மேல் ஓடி, இப்போதும், எப்போதும் திரையிட்டாலும் ச*லிப்பு த*ட்டாத* அர*ங்கு நிறைந்த* காட்சிக*ளுட*ன் ஓடும் ப*ட*ம்.
இப்ப*ட*ம் 1966ல் ஹிந்தியில் வெளியான "பூல் அவ*ர் ப*த*ர்" (பூவும், பாறையும்) ப*ட*ம் த*ர்மேந்திராவிற்கு முத*ல் வெள்ளி விழா ப*ட*ம். இவ*ர் எம்ஜிஆரின் வேட*த்தை ஏற்றிருந்தார். மீனாகுமாரிக்கு ச*வுகார் ஜான*கி வேட*ம், ஷசிக*லா- ஜெய*லலிதா, மத*ன்பூரி-அசோக*ன், ஓ.பி.ரெஹ*லான் (சோவின் பாத்திர*ம்- மற்றும் இப்ப*ட*த்தின் க*தாசிரிய*ரும் இவ*ரே). இசைய*மைப்பு ர*வி.
ஒளிவிளக்கு ப*ட*த்தை ஜெமினி ஸ்டூடியோ அதிப*ர் வாச*ன் த*மிழில் த*யாரிக்க முடிவு செய்து எம்ஜிஆரை அணுகினார். எம்ஜிஆர் அவ*ர்க*ள் நீண்ட யோச*னைக்குப்பின் சில திருத்த*ங்க*ள் செய்வ*த*ற்கு அனுமதித்த*வுட*ன் ஒத்துக் கொண்டார்.
எம்ஜிஆர் செய்த* திருத்த*ங்க*ள் ஒளிவிளக்கு ப*ட*த்தையும், ப*ட*த்தின் கேர*க்ட*ர்க*ள், விறுவிறுப்பு இவ*ற்றை இன்னமும் அதிக*ப்ப*டுத்தின. அவ*ற்றை காண்போமா!
1. த*ர்மேந்திரா சிறுவ*னாக இருக்கும்போதே பிக் பாக்கெட் அடிக்கும் திருட*னாக*வும், திருட்டு தொழிலை விரும்பி செய்ப*வ*ராக*வும் வ*ருவார். மற்றும் புகை, குடிப்ப*ழ*க்க*ம் தாராளம்.
எம்ஜிஆர் இப்ப*ட*த்தில் சிறுவ*னாக இருக்கும்போது ப*சிக்கு க*டையொன்றில் ரொட்டியை திருடி மாட்டிக்கொள்வார். பின்ன*ர் திருட*னாக மாறிய*த*ற்கு ப்ளாஷ் பேக் காட்சி உண்டு. ருக்மணி பேங்க்கில் அசோக*ன், ஜெய*லலிதா மற்றும் த*ன் கூட்டாளியுட*ன் கொள்ளை அடிக்கும்போது அதை த*டுத்து ப*ணத்தை மீட்பார். அப்போது ப*ணப்பையுட*ன் எம்ஜிஆர் போலீஸிட*ம் மாட்டிக்கொண்டு த*ண்ட*னையும் பெறுவார். பின்ன*ர் வெளிவ*ந்த*தும் இன்ஸ்பெக்ட*ரிட*ம் உண்மை குற்ற*வாளிக*ளை காட்டுகிறேன் என்று கிளப்பிற்கு கூட்டிச்செல்வார். அந்த* முய*ற்சி தோல்விய*டைய பின் ஜெய*லலிதா த*ங்கியுள்ள அறைக்கே சென்று அவ*ரிட*ம் விசாரிப்பார். அப்போது ந*ட*க்கும் ச*ண்டையில் கொலைப்ப*ழி ஜெய*லலிதா மீது விழ அவ*ரைக் காப்பாற்ற அசோக*ன் சொல்ப*டி திருட்டு தொழில் செய்வார். பின் ஒருக*ட்ட*த்தில் ஜெய*லலிதாவையும் அந்த பொய்யாக ந*ட*ந்த* கொலைக்கான ஆதார*த்தை அசோக*னிடமிருந்து மீட்டு கொடுத்துவிட்டு செல்வார். மொத்த*மாக சுமார் 40 நிமிட*ங்க*ள் ந*டைபெறும் இக்காட்சி இந்தியில் கிடையாது.
2. எம்ஜிஆரை, ஜெய*லலிதா அசோக*னின் தூண்டுத*லால் ஒரு காட்சியில் குடிக்க* வைத்துவிடுவார். அதை த*வ*று என்று ர*சிக*ர்க*ள் உண*ரும்வ*ண்ண*ம் "தைரிய*மாகச் சொல் நீ மனிதன்தானா?" என்ற பாடல்மூலம் கூறுவார். இப்பாட*லும் இந்தியில் இல்லை.
3. க*ள்ளபார்ட் ந*ட*ராஜ*ன் எம்ஜிஆரை ரோட்டில் பார்த்துவிட்டு போலீசுட*ன் துர*த்தி வ*ருவார். அப்போது ஜெய*லலிதாவுட*ன் சேர்ந்து எம்ஜிஆர் ஓடி குற*வ*ர்க*ள் கூட்ட*த்தின் உத*வியுட*ன் த*ப்புவார். நாங்க புதுசா க*ட்டிக்கிட்ட சோடிதானுங்க என்ற* பாட*லும் சூப்ப*ராக இருக்கும்.
இந்தியில் இதே காட்சி ந*கைச்சுவை ந*டிக*ர் ரெஹ்லான் (பிக்பாக்கெட் வேட*த்தில் சோ) வைத்திய*ரிட*ம் த*ப்பி ஓடி த*ன் காத*லியுட*ன் மாறுவேட*மிட்டு பாடி ஆடுவ*துபோல் வ*ரும்.
4. கிளைமேக்ஸ் ச*ண்டையில் கிளப் டான்ச*ராக வ*ரும் ஷசிக*லா (ஜெய*லலிதா) மத*ன்பூரியால் கொல்லப்ப*டுகிறார். அவ*ர் போலிசால் சுட*ப்ப*ட்டு இற*க்கிறார். மீனாகுமாரியை (ச*வுகார் ஜான*கி) த*ர்மேந்திரா மண*ந்து கொள்கிறார்.
த*மிழில் ச*வுகார் ஜான*கி உயிர் துற*க்கிறார். எம்ஜிஆரும் ஜெ.வும் ஒன்று சேர்வார்க*ள்.
இப்ப*ட*த்தில் ச*வுகார்ஜான*கிக்கு 1968ஆம் ஆண்டின் சிற*ந்த* ந*டிகை விருது த*மிழ*க அர*சால் வ*ழ*ங்க*ப்ப*ட்ட*து.
" ஓளிவிளக்கு", ப*ட*மான*து 1979ல் மலையாள மொழியில் "புதிய வெளிச்ச*ம்" என்ற பெய*ரில் வெளியாகி வெற்றி பெற்ற*து. எம்ஜிஆரின் வேட*த்தை ஜெய*ன் அவ*ர்க*ளும், ச*வுகாரின் வேட*ம் ஸ்ரீவித்யாவும், ஜெய*லலிதாவின் வேட*த்தை ஜெய*பார*தியும் ஏற்று ந*டித்த*ன*ர்........... Thanks.........
-
12th December 2019 12:32 PM
# ADS
Circuit advertisement
-
12th December 2019, 12:33 PM
#2182
Junior Member
Platinum Hubber
கோவை டிலைட்டில் நாளை வெள்ளி முதல்* (13/12/19)* புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த தேவரின் "விவசாயி " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : கோவை நண்பர் திரு.கமலக்கண்ணன்*
-
12th December 2019, 01:27 PM
#2183
Junior Member
Platinum Hubber
மதுரை சென்ட்ரல் சினிமாவில்* நாளை வெள்ளி முதல் (13/12/2019) முன்னாள் தமிழக முதல்வரும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அன்பு மனைவியுமான* திருமதி*வி.என். ஜானகி நடித்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது ,
தகவல்* உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
12th December 2019, 05:50 PM
#2184
Junior Member
Platinum Hubber
குமுதம் வார இதழ் -18/12/19
வாலிப வாலி நூலில் கவிஞர் வாலி.
---------------------------------------------
எம்.ஜி.ஆர். முதன் முறையாக நாகிரெட்டி தயாரிப்பில் ஆக்ட் பண்ண படம்தான் எங்க வீட்டு பிள்ளை.* அந்த படத்துக்கு பாட்டு எழுத எம்.ஜி.ஆர். சொல்லி நாகிரெட்டியின் பி.ஏ. ராதாகிருஷ்ணன்* என்னை தேடி வந்தார் ..அந்த படத்துல*நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்கிற பாடல் மிக பிரபலம் ஆனது .
ஆனா , முதல்ல நான் எழுதினது நான் அரசன் என்றால் , என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் .என்றுதான் ரிக்கார்ட் பண்ணினோம் . இந்த பாட்டை நாகிரெட்டி கேட்டுவிட்டு இது ரொம்ப அரசியல்தனமா இருக்குன்னார் .அப்போ காங்கிரஸ் கவர்ன்மென்ட் நடந்துட்டு இருந்தது . அப்போ நாகிரெட்டியோட நண்பர் ஒருத்தர் சென்சார் ஆபீஸ்ல இருந்தாரு.* வேணும்னா அவர்கிட்ட முதல்லே போட்டுக் காட்டிடலாம்னு சொன்னார் .நாங்களும் அவர்கிட்ட* அந்த முழு பாடலை போட்டுக் காண்பித்தோம் .* அவர் அந்த பாட்டில் இருந்து பத்து வரிகளை நீக்கிவிட்டார் .
உடனே நாகிரெட்டி என்னை கூப்பிட்டு பாட்டை மாத்தணும்னு சொன்னார்.உடனே, நான் எம்.ஜி.ஆர். கிட்ட போய்* அந்த சென்சார் ஆபீசர் பத்து வரிகளை இந்த பாட்டில் இருந்து நீக்க சொல்கிறார் , என்ன பண்ணலாம்னு* கேட்டேன்.* அதுக்கு எம்.ஜி.ஆர். அந்த பாட்டை படித்து பார்த்துவிட்டு , நானா இருந்தா இந்த பிள்ளையார் சுழியை தவிர எல்லா வரிகளையும் நீக்கி இருப்பேன்னு சொன்னார் .* வேறு பாட்டும் எழுத சொன்னார் .* அப்போ பேரறிஞர் அண்ணா ஓர் மீட்டிங்கில் பேசின ஒரு வசனம் என் ஞாபகத்திற்கு வந்தது ,* நான் ஆணையிட்டால், தமிழ்நாட்டில் எந்த ரயிலும் ஓடாது ன்னு* பேசுவார்.* அந்த வார்த்தையை நான் எடுத்துக் கொண்டேன்* *இப்படி நான் எழுதின வரிகளை மாற்றித்தான் அந்த பாடல் வெளியாகி* பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து மிக பிரபலம் ஆனது .
-
13th December 2019, 02:36 PM
#2185
Junior Member
Diamond Hubber
MGR .,ன் "உலகம் சுற்றும் வாலிபன் ",திரைப்படம்(திரைக்காவியம்) கருணாநிதியின் குள்ளநரித்தனத்தையும் தாண்டி எப்படி ரிலீஸ் ஆனது தெரியுங்களா?..........
அந்த படத்தை MGR தனது டைரக்*ஷனில், தனது தயாரிப்பில், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுத்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்?
ஆனால் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி இந்த படத்தின் கதை அமைப்பை உரிய ஆட்கள் மூலம் மோப்பம் பிடித்து, இந்த படம் வெளியானால் MGR இன்னும் சுலபமாக முதல்வராகி விடுவார், என்று கணக்கிட்டு இந்த படம் வெளிவராமல் தடுக்க அனைத்து உத்திகளையும் தயாராக வைத்து இருந்தார்.
இந்த விசயம் படத்தின் financial ஐ கவனிக்கும் இராம வீரப்பன் மூலம் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜப்பானில் இருக்கும் MGR அறிகிறார்.
சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று, படத்தின் எடிட்டர் குழுவை நேரே பம்பாய்க்கு வரச்சொல்லி, படச்சுருள்களும் நேரே அங்கு கொண்டுசெல்லப்பட்டு அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
தியேட்டர் ஓனர்கள் கருணாநிதியின் மிரட்டலையும் மீறி நாங்கள் வெளியிடுகிறோம் தலைவா என்று 1.05.1973. தொழிலாளர் தினத்தன்று வெளியிட தேதி முடிவாகிறது.ஆனால் ரகசியம் காக்கப்படுகிறது MGR வேண்டுகோளின்படி.
இப்பொழுது தான் ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வை MGR செய்கிறார்.இந்த படத்தில் பணியாற்றாத கவிஞர் வேதாவை மும்பைக்கு அழைத்து, சூழ்நிலையை விளக்கி அவரே ஒரு சில வாக்கியங்களை ( நீதிக்கு இது ஒரு போரட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்,...நமை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் போன்ற வரிகளை)சொல்லி, ஒரு பாடல் எழுதுங்கள் என்கிறார்.
இதனிடையே இராம வீரப்பன் மூலம் M.S.விஸ்வநாதனையும், சீர்காழி கோவிந்தராஜனையும், மும்பைக்கு வரவழைத்து இந்த பாடலுக்கு இசை போடச்சொல்கிறார்.MSV க்கு சொல்லியா தரணும்.ஒரு சரித்திர பாடல் உருவாகிறது.
எடிட்டர் உமாநாத் இந்த பாடலை எங்கு எப்படி இணைப்பது என்று குழம்புகிறார்.அதையும் எம்.ஜி.ஆரே தீர்த்து, எடுத்தவுடனே எழுத்து ரீல் ஓடாம கொஞ்சம் படத்தை ஓட விட்டு பிறகு இணைக்கிறார்.
படம் பார்த்தவங்களுக்கும், இப்பொழுது பார்க்க நினைப்பவர்களுக்கும் புரியும். இந்த பாட்டு படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தெரியும்,ஒரே ஒரு போட்டோவின்மீது தான் மொத்த பாடலும் நகரும்....அந்த பாடல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று ஆரம்பிப்பதாக இருந்தது, அதையும் நமது என்பதை நீக்கி #வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடவைக்கிறார்.
இந்த விசயம் கருணாநிதிக்கு தெரியாமல் காக்கப்படுகிறது.
தி.மு.க.வினரை அந்த அந்த தியேட்டர் முன்பு நிறுத்தி மே 1 அன்று படம் திரையிடப்படாமல் பார்த்து கொள்ளும் வேலைகள் கன கச்சிதமாக கருணாநிதியால் ஏற்பாடாகிறது.
இந்த விசயமும் மும்பைக்கு போகிறது.ஏற்கெனவே பெரிய சைசில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியதின் மேல் சிறிய அளவு போஸ்ட்டரை 11.5.1973 அன்று ரிலீஸ் என்று ஒட்டச்சொல்கிறார்.படப்பெட்டிகளுடன் சென்னை வருகிறார் M.G.R.
கருணாநிதி வழக்கல்போல் அன்றைய தேதியில் தன் கட்சிக்காரர்களை என்ன செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளுடன் அங்கங்கு செல்ல பணிக்கிறார். 10 ம் தேதி இரவு படப்பெட்டிகள் அனைத்து ஊர்களுக்கும் போய் சேர்ந்தன.
சென்னை மவுண்ட் ரோடு தேவி பாரடைஸும் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்று. தியேட்டரின் வெளி வாசலில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆவலோடு கூடி எப்பொழுது விடியும் என்று காத்து இருக்கிறார்கள். தி.மு.க.வினரும் அப்படியே கூடுகிறார்கள் ரகளை செய்து ரிலீஸை தடுக்க.
அலங்கார் தியேட்டரும் அதே மவுண்ட் ரோடில் 5 அல்லது 6 பில்டிங் தள்ளி உள்ளது.இந்த தியேட்டரில் வேறுபடம் ஓடிக்கொண்டிருக்கிறது,ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை, இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கட் எடுத்து உள்ளே போனவர்களுக்கு எடுத்த எடுப்பிலே வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று படம் ஆரம்பிக்கிறது.படம் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை? பிறகு தான் புரிந்தது நாம் பார்ப்பது நாளை ரிலீசாக வேண்டிய உலகம் சுற்றும் வாலிபன் படம் என்று!!! ஆச்சர்யம் அதிசயம் மக்கள் ஆரவாரம் வெளியே தெரியவரும்போது நடந்த கூத்தை எழுதி மாளாது...
11.05.1973 அன்று குறிப்பிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டு சிறந்த படம்,சிறந்த டைரக்*ஷன்,சிறந்த தயாரிப்பு என 3 விருதுகளை வாங்கியது.(கருணாநிதி அலங்கார் தியேட்டர் ஓனர், மேதா,சீர்காழி இவர்களை எப்படி பழிவாங்கினார் என்பதை தனிப்பதிவாகவே எழுதலாம்.அது இப்ப வேண்டாம்)
சென்னை தேவி பாரடைஸ்....182 நாட்கள்
சென்னை அகஸ்தியா.............176 நாட்கள்
மதுரை மீனாட்சி........................217 நாட்கள்
திருச்சி பேலஸ்..........................203 நாட்கள்
கோவை ராஜா...........................150 நாட்கள்
கொழும்பு கேப்பிடல்............................203 நாட்கள்...தமிழ்நாடு 20, பெங்களூர் (கர்நாடகா) 3, ஸ்ரீலங்கா 2 மொத்தத்தில் 25 திரையரங்குகளில் 100 நாட்கள்...
என ஓடி சரித்திரம் படைத்தது.
கருணாநிதியின் சூழ்ச்சியை வீழ்த்தி எப்படி தனது படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார் என்பதற்காக மட்டும் நான் இந்த பதிவை போடவில்லை.கருணாநிதியின் நிஜ முகம் இது தான் என்பதை காட்டத்தான் போட்டேன்.
காரணம் அன்று அடையார் கேன்சர் ஆஸ்பிடலில் அண்ணா இறந்தவுடன் யார் முதல்வர் என்ற சர்ச்சையின் போது, எம்.ஜி.ஆரிடம் சென்று, என்னை ஆதரிப்பதாக நீங்கள் ஒருவர் சொன்னால்போதும், மற்றவர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று வேண்டிய கருணாநிதி தான்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தனது எதேச்திகாரத்தனத்தை எம்ஜி.ஆர். எதிர்க்கிறார் என்றவுடன், நன்றி மறந்து எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதோடு அவரை அனைத்து விதத்திலும் அழிக்க முயன்றார்.
அனைத்தையும் தரையில் அடிக்கப்பட்ட பந்து போலவும்,நீரில் அமுக்கப்பட்ட பந்து போலவும்,சுவரில் மோதப்பட்ட பந்து போலவும் எதிர்கொண்டு எழுச்சி கண்டார் என்பதையும் நாடறிந்ததே. அதனால் தான் தலைமுறை கடந்து இன்றும் சரித்திர நாயகனாக மக்கள் மனதில் வாழ்கிறார்...நன்றி.(நண்பரின் பதிவில் இருந்து...)............ Thanks.........
-
13th December 2019, 02:39 PM
#2186
Junior Member
Diamond Hubber
-
13th December 2019, 02:39 PM
#2187
Junior Member
Diamond Hubber
-
13th December 2019, 09:30 PM
#2188
Junior Member
Diamond Hubber
-
13th December 2019, 09:31 PM
#2189
Junior Member
Diamond Hubber
-
13th December 2019, 09:32 PM
#2190
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks