-
19th January 2020, 07:48 AM
#2521
Junior Member
Diamond Hubber
1973, எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அதிமுகவைத் தொடங்கியிருந்தார். ஆனால் மக்கள் செல்வாக்கு அது எப்போதும் போல நிறைந்திருந்தது. காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.
#அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தி விட்டார்கள்.
#அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை. எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
#மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.
#கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.
#அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, எம்ஜிஆர் உருகிப்போனார்.
நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
#தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.
இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!.... Thanks.........
-
19th January 2020 07:48 AM
# ADS
Circuit advertisement
-
19th January 2020, 07:52 AM
#2522
Junior Member
Diamond Hubber
அதைவிட மிக மிக அதிசயம் எம். ஜீ.ஆர். அவர்கள் மறைந்த ஆண்டு ம். *1987* அந்த ஆண்டின் கூட்டு எண்ணும்1987=25= *7* ஆகும். தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே இவையே எண்களின் ரகசியம் அதிசயம் மனிதர்களை கொண்டுவரும் எண் 7. ஏழு கேது ஞானகாரகன் சூரியனின் நட்பு பிரகாசம் கொண்டது. அதுபோலவே பிரகாசமாக பிறந்து ஒரு இடம் வளர்ந்தது ஒரு இடம் வாழ்ந்தது ஒரு இடம் கலை பயின்றது ஒரு இடம் கலை வாழ்க்கையில்பல வாழ்ந்தது பல பல இடங்களே இவையே அதிசயங்கள்........ Thanks...
-
19th January 2020, 09:14 AM
#2523
Junior Member
Diamond Hubber
*எம்ஜிஆர்*
*சினிமா சக்சஸ் வரலாறுனா இப்படி இருக்கணும்..*
*ஒரு சினிமா வெற்றிபெறும். நூறு நாட்கள் ஓடும். அவ்வளவு ஏன், வெள்ளிவிழா கூட கொண்டாடும்.. ஆனால் 1965ல் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய ஆனந்த அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை.*
படத்தின் பிரமாண்ட வெற்றியால் மகிழ்ந்து போன படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டி எம்ஜிஆருக்கு அளித்து, அவர் திருப்பி அனுப்பிய உபரி ஒரு லட்ச ரூபாயை கொண்டு அப்போதைய சென்னை புறநகர் பகுதிகளில் சில ஏக்கர் வாங்கி இருக்கலாம்.. இன்று அந்த நிலம்எத்தனை நூறு கோடிகள் போயிருக்கும்?
எங்க வீட்டுப் பிள்ளையின் பிரமாண்ட வெற்றி பெற்ற 1965 ஆம் ஆண்டு அப்போது The Hindu பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்தது அதே பத்திரிகை..
அந்தக் கட்டுரையை மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் Kathir vel சார் தமிழாக்கம் செய்து முகநூலில் பதிவிட்டு இருந்தார்.. இதோ அந்த பதிவு..
------------------------------------------------------
எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.
வசூலில் இதுவரை கண்டிராத சாதனை படைத்த அந்த படம் இப்போது வெள்ளி விழா கொண்டாடுகிறது. ப்டத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு மழையில் நனைகிறார்கள். படத்தை வினியோகித்தவர்களும் திரையிட்டவர்களும் லாபத்தில் திளைக்கிறார்கள்.
சமீப காலங்களில் ஒரு படம் வெள்ளி விழா காண்பதே அரிதாகி விட்டது. கல்யாண பரிசு, பாவ மன்னிப்பு, பாச மலர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மட்டுமே வெள்ளி விழா கண்இருக்கின்றன. ஆனால் அந்த பெருமையும் எங்க வீட்டு பிள்ளையின் சாதனைக்கு நிகராகாது.
எப்படி என்றால், அந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு தியேட்டரில் மட்டுமே 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடின. எங்க வீட்டு பிள்ளையோ மெட்ராசில் மட்டுமே கேசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களில் வெள்ளி விழா தாண்டி சக்கைபோடு போடுகிறது. இது தவிர மதுரை, கோயமுத்தூர், திருச்சி, தஞ்சாவூர் என வேறு ஊர்களிலும் இந்த சாதனையை புரிந்திருக்கிறது.
படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இந்த மகத்தான சாதனையை நினைத்து பெருமை கொள்ளலாம். ஒட்டுமொத்த தென் இந்திய திரை உலகமே அவர்களுக்கு தலை வணங்குகிறது.
ஆச்சரியம் என்ன என்றால், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோரை காட்டிலும் எங்க வீட்டு பிள்ளை மூலமாக அதிகம் சம்பாதித்து இருப்பது நமது அரசாங்கம்தான். த்ன் இந்தியா முழுவதிலும் இருந்து இந்த ஒரு படத்தின் மூலமாக மட்டும் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் கேளிக்கை வரி எவ்வளவு தெரியுமா? 50 லட்சம்!
எங்க வீட்டு பிள்ளை படத்தின் பிரமிக்க வைக்கும் இந்த வருமானமும் லாபமும் திரைப்பட தயாரிப்பிலும் வினியோகத்திலும் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து அவர்கள் இன்னும் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய தூண்டுதலாக அமைந்துள்ளது.
மதராஸ் பட்டணத்தில் வசிக்கின்ற மொத்த ஜனங்களான 20 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் எங்க வீட்டு பிள்ளை படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அது சாதாரண சாதனை கிடையாது.
ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு மகத்தான வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்?
காரணங்களை கண்டுபிடிக்க சிரமப்பட தேவையில்லை. ஒரு தடவை பார்த்தவர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வரவழைக்கும் விதமாக படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்திருந்தது என்பது முதல் காரணம். மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர, படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கப்படும் நீதியும் இன்னொரு காரணம். தனிமனித ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் கதையம்சம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
நடுங்கும் கோழையாகவும் அட்டகாசமான ஜாலி பேர்வழியாகவும் இரண்டு வேடங்களில் வெளுத்துக் கட்டியிருக்கும் எம்ஜிஆரின் பிரமாதமான நடிப்பு வேறு எதை விடவும் முக்கியமான காரணம்.
இரண்டு முற்றிலும் வேறுபட்ட பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அற்புதமாக நடித்திருந்தாலும், கோழையான நல்லவனாக எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அபார நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் அததனை பேரின் உள்ளங்களையும் கொள்ளையடிக்கிறார்.
தேர்ந்த விமர்சகர்கள், சினிமா விற்பன்னர்கள், சராசரி ரசிகர்கள் எல்லோரும் சொக்கிப் போகிறார்கள் அவர் இரு வேடங்களிலும் வெளிப்படுத்தும் முக பாவங்களையும் உடல் அசைவுகளையும் பார்த்து. அபாரமான நடிப்புத் திறன் கொண்ட எம்ஜிஆர் இந்தப் படத்தின் மூலமாக பல தடங்களைத் தாண்டியிருக்கிறார் என்று அவர்கள் ஏகோபித்து சிலாகிக்கிறார்கள்.
எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆரின் தனிப்பட்ட வெற்றி என்றும் தாராளமாக சொல்லலாம். இதுவரை அவரே சொந்தமாக தயாரித்து இயக்கி வெளியிட்ட நாடோடி மன்னன் படம்தான் தமிழில் மிகப்பெரிய வசூலைக் குவித்த படமாக இருந்து வந்தது. எங்க வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக தனது சாதனையை அவரே முறியடித்திருக்கிறார்.
இந்த படம் இதுவரை வெளியான எந்தப் படங்களையும்விட பல வகையிலும் மேம்பட்டது. கண்ணைப் பறிக்கும் வண்ணப் படம் என்பது பிரதானமான அம்சம். காட்சி அமைப்பில் ஆகட்டும், தொழில் நுட்ப நேர்த்தியில் ஆகட்டும் இது புதிய மதிப்பீடுகளை கோரும் படம். மொத்த படப்பிடிப்பும் 45 நாட்களில் முடிந்தது புதிய சாதனை. பூஜை போட்ட இரண்டரை மாதத்தில் படம் திரைக்கு வந்து விட்டது என்பதே பிரமிக்க வைக்கும் நிகழ்வாகும். இந்தியாவில் வேறு எந்தப் படமும் இந்த சாதனையை புரிந்ததில்லை.
இது எப்படி சாத்தியமானது என்று தயாரிப்பாளர் நாகிரெட்டி, சக்கரபாணியை கேட்டால் ஒரே நபரை கைகாட்டுகிறார்கள்.
“பணத்தை முதலீடு செய்தவர்கள் நாங்கள்தான் என்றாலும், இது முழுக்க முழுக்க எம்ஜிஆர் படம். அவரே கதாநாயகன், அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு எல்லா பொறுப்புகளையும் தோளில் சுமந்தார். அவருடைய திராமைக்கும் வேகத்துக்கும் ஈடுகொடுக்க எல்லோரும் திணறிப் போனோம். ப்டத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார். ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் எம்ஜிஆர் இந்தப் படத்துக்காக உழைத்ததை பார்த்து அசந்து விட்டோம்” என்று சொன்னார்கள் இரு ஜாம்பவான்களும்.
எம்ஜிஆருக்கு நடிக்க வராது என்பதுதான் இதுவரை பொதுவான ஒரு கருத்தாக சொல்லப்பட்டது. ஜாலியாக வந்து ஆடிப்பாடி சிரித்து சண்டை போட்டு மகிழ வைக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே அவரால் ஜொலிக்க முடியும் என பலரும் நினைத்தார்கள்.
அவ்வளவு எதற்கு. நிறைய படித்த, பல மொழி படங்களை பார்த்து ரசிக்கும் திரைப்பட ரசிகர்கள் ‘நான் எம்ஜிஆர் படத்துக்கெல்லாம் போவதில்லை’ என்று கொஞ்சம் கர்வத்துடனே சொல்லுவார்கள். அவர்களுக்கெல்லாம் எங்க வீட்டு பிள்ளை மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு நடிக்க தெரியுமா என்ற கேள்வியை இனி அவர்கள் கனவிலும் கேட்க மாட்டார்கள்.
எம்ஜிஆர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. பன்முக திறமை, தொழில் ஈடுபாடு, கடின உழைப்பு, கடைநிலை தொழிலாளிகளையும் சமமாக பாவித்து பாராட்டும் நட்புணர்வு எல்லாமே அவரது வெற்றிக்கு உதவியிருப்பதை இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.
இந்த நல்ல குணங்கள் எம்ஜிஆரிடம் வெளிப்படுவது திரையில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும்தான். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரமாண்டமான ரசிகர் பட்டாளம் வாய்த்திருக்கிறது.
நன்றி Kathir Vel
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th January 2020, 10:30 AM
#2524
Junior Member
Diamond Hubber
M.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். அதிலும் கூட அவரது மனிதாபிமானமே மேலோங்கியிருக்கும்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கவும் ஆன்மிகப் பிரசங்கம் செய்யவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறை வுக்குப் பிறகு அந்தப் பணி அவரது மகளுக்கு வழங்கப்பட்டது. அறநிலை யத்துறை மூலம் அவருக்கு மாதச் சம்பளமும் உண்டு. அந்தப் பெண்மணி அவரது தாயாரைப் போல இல்லாமல், சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பயிற்சியில் சேருவோருக்கு முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் புகார்கள், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தன.
மதுரைக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றிருந்த நேரத்தில் ஒருநாள், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு மேல் உதவியாளர்களிடம் ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். அங்கு ஒரு வேலை இருக்கிறது. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். பக்தர் களுக்கு இடைஞ்சல் இருக்காது’’ என்று சொன்னார். போலீஸ் அதிகாரிகளையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார். கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததுடன், தனது வருகை யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்!
கோயிலுக்குச் சென்ற எம்.ஜி.ஆரை நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தனக்கு எந்தவித விசேஷ மரியாதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தரிசனம் முடித்து பிரசாதம் கொண்டு வந்த அர்ச்சகருக்கு பணம் கொடுத்துவிட்டு, கோயிலை சுற்றிப் பார்த்தார். நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கோயில் யானையைத் தட்டிக் கொடுத்து அதன் பராமரிப்பு, அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டறிந்தார்.
கோயில் அலுவலகத்துக்குச் சென்று அர்ச்சகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கும் பெண்மணியை தன்னை வந்து பார்க்கச் சொல்லும்படி எம்.ஜி.ஆர். கூறினார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அருகிலேயே அந்தப் பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அவ ருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார்கள் குறித்து விசாரிக்கத்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைக்கிறார் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.
பயத்தில் கோயில் அலுவலகத்துக்கு அழுதுகொண்டே வந்தார் அந்தப் பெண்மணி. அவரை எம்.ஜி.ஆர். உட்காரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து விக்கி விக்கி அழுதபடியே நின்றார். மீண்டும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி சொன்னதும் உட்கார்ந்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர். கனிவுடன், ‘‘அழாதேம்மா, தப்பு உங்கள் பேரில் தானே. உங்கள் தாயார் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாக செய்தார்? நீங்களும் அதேபோல பணியாற்றுவீர்கள் என்று நம்பித்தானே உங்களுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்? தெய்வீகமான விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் பணியில் இருக்கும் நீங்கள், அதை பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டாமா?’’ என்றார்.
அந்தப் பெண் அழுதவாறே, ‘‘இனி மேல் ஒழுங்காகப் பணியாற்றுகிறேன் ஐயா. பணியில் கவனமாக இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம்’’ என்றார். ‘‘உங்களை நம்புகிறேன். கவனமாக பணி யாற்றுங்கள். நான் அழைத்ததும் வந் ததற்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என் றார். அதன் பின்னர், அந்தப் பெண்மணி ஈடுபாட்டோடு பணி செய்தார்.
எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டே நீக்கி யிருக்கலாம். அல்லது அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம். மதுரை வந்தபோது, தானே நேரில் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்மணியை அழைத்து அறிவுரை வழங்கினார் என்றால், அதற்கு அந்தப் பெண்மணியின் குடும்பச் சூழலை அறிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்தான் காரணம்!.......... Thanks.........
-
19th January 2020, 10:34 AM
#2525
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது. புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறது ‘வந்தியத்தேவன்’ படக்குழு........... Thanks.........
-
19th January 2020, 10:36 AM
#2526
Junior Member
Diamond Hubber
-
19th January 2020, 11:26 AM
#2527
Junior Member
Diamond Hubber
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."
-
19th January 2020, 12:23 PM
#2528
Junior Member
Diamond Hubber
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் முதல்வர் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."......... Thanks.........
-
19th January 2020, 12:28 PM
#2529
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம், புரட்சிதலைவரின் திரைப்படங்களை , திரைக்காவியங்களை...டிஜிட்டல் முறையில் புதுப்பொலிவுடன் மெருகேற்றி திரையிட்டால். துக்கடா புதிய படங்கள் எல்லாம் முறியடித்து நம் தலைவர் புரட்சிதலைவர் ஒருவரே என்றும்" வசூல் சக்கரவர்த்தி". சரித்திர நாயகன், சகாப்தம் படைத்த ஏக சக்கரவர்த்தி......... Thanks.........
-
19th January 2020, 03:00 PM
#2530
Junior Member
Diamond Hubber
இங்கே தான் எம்.ஜி.ஆர்!!
------------------------------------
வரலாறு!
இது சாதனையாளர் எல்லோரையுமே உள் வாங்குகிறது!
சிலரை அழுத்தமாக அமர வைக்கிறது!
சிலரை முகமன் கூறி வரவேற்று--பின் மூலையில் உட்கார்த்தி வைக்கிறது!
சிலருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தை அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் கொடுத்து மூச்சுக்கு முப்பது தடவை அவர்கள் பெயரை முழங்குகிறது!
சரி! பதிவுக்குள் செல்வோம்!
இந்தியாவில் இன்று பசியின்றி உண்டு ருசியோடு கல்வியை மாணவ சமுதாயம் கற்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர்!!
அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரால் தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப் பட்டது!
மேற்கூறிய செய்தியை சொல்லி மகிழ்ந்திருப்பவர் ராகுல் காந்தி!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!!
சமீபத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார் ராகுல்!!
இது அரசியல் விளம்பரத்துக்கான அவரது உரை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது! அதே சமயம் அவரது தந்தை ராஜிவ் காந்தியின் எம்.ஜி.ஆர் பற்றையும் நாம் அறிவோம்!!
ஏற்கனவே திரு நரேந்திர மோடி எம்.ஜி.ஆரின் சிறப்புக்களை மக்களிடம் பகிர்ந்து மகிழ்ந்ததும்--எம்.ஜி.ஆருக்கு என்றே சில சாதனைகளை செயல்படுத்தி இருப்பதையும் நாம் அறிவோம்!
இந்த நிலையில் ---
ராகுல் காந்தியின் சமீபத்திய இந்த உரை நமக்கு சில தீர்மானமான தெளிவுகளை கொடுக்கிறது!!
1]--தனித் தமிழ் நாடு என்ற தி.மு.கவின் அன்றைய அர்த்தமற்ற கோரிக்கையை அன்று நிராகரித்த காலம்-
எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூபத்தின் வாயிலாகவே-
தமிழ் நாட்டுக்குள் இந்தியா!!--என்ற கீர்த்தியை அளித்திருக்கிறது!
2]--இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள்-
காங்கிரஸ்--பி.ஜே.பி--இரண்டின் தலைவர்களுமே எம்.ஜி.ஆரை உள் வாங்கி உரைத்திருப்பவை இதுவரை எந்த தலைவருக்கும் கிட்டாத பேறு என்பதுடன் எட்டாத பேறு என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கதே!!
3]--பள்ளிக் குழந்தைகள் பசியாற வேண்டும் என்று துடித்த விருது நகர் தந்த விருது,,காமராஜர் நினைத்தாலும்--அன்றைய நிதிப் பற்றாக்குறை அவரது லட்சியத்தை நீதிப் பற்றாக்குறை ஆக்கி,,திட்டத்தை பாதியில் நிறுத்த நேர்ந்ததை மறந்து இன்றையக் காங்கிரஸ்காரர்கள்,,சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரின் சாதனையாக பேசப் படுவதை ஏற்காத நிலையில்--
காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுலே இன்று குறிப்பிட்டிருப்பது??
காலத்தில் தோன்றி கைகளை வீசிக்
காக்கவும் தயங்காது என்ற ஆனந்தஜோதியின் அமிர்த வரிகள்!!
இப்படி இன்னும் பல்வேறு ஆச்சரிய உண்மைகளை அணு அணுவாக நமக்கு தெரிய வைக்கும் வகையில் திரு ராகுல் காந்தியின் அறிக்கை அமைந்திருக்கிறது என்ற வகையில் நாம் அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்!!
சரித்திரம்--
சிலரை முழங்கும்
சிலரை முழுங்கும்!!
வெகு சிலரின் சாதனைகளை மட்டுமே
அணு தினமும் வழங்கும்!!
அந்த வகையில்--
எங்கே எம்.ஜி.ஆர். ? என்ற கேள்விக்கு--
மீண்டும் பதிவின் தலைப்பு!! இடம் பெறுவதில் உடன்பாடு தானே உங்களுக்கு???......... Thanks...
Bookmarks