Page 296 of 402 FirstFirst ... 196246286294295296297298306346396 ... LastLast
Results 2,951 to 2,960 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2951
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னிந்திய திரைப்படயுலகில்... முதன் முறையாக ரூபாய் ஒரு கோடி கணக்கான வசூல் புரட்சி செய்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்கள் தான் " வசூல் சக்கரவர்த்தி" பட்டத்தை திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மீடியேட்டர்கள் சார்பாக சூட்டினார்கள்... அது மட்டுமல்ல ரசிகர்கள், ரசிகைகள், பொதுமக்கள் எம்.ஜி.ஆர்., அவர்களை " வாத்தியார்" என பாசத்துடன் அழைக்க துவங்கியதும் இந்த " மதுரை வீரன்", காவியத்தின் இணையில்லாத பிரம்மாண்டமான வெற்றியை ருசித்ததற்கு பின்னர் தான்......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2952
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2953
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2954
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிப் பட்டுக்கோட்டையார் புகழ்வது...

    ⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

    கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம் இந்தக் கருத்துக்கு நாடோடி மன்னன் சாட்சி கடலலைபோல் திரண்டுவந்தகூட்டம் சாட்சி

    ஆகாவென் ரார்த்தெழுந்த குரல்கள் சாட்சி அரங்கத்தை யதிரவைத்தகரங்கள் சாட்சி காட்சிக்கும் நடிப்பிற்கும் கதைக்கும் உண்மைக் கருத்துக்கும் கணக்கில்லா கண்கள் சாட்சி

    பாட்டுக்கும் பண்ணுக்கும் செவிகள் சாட்சி பட்ட பாட்டுக்கும் கூட்டுக்கும் வெற்றி சாட்சி எம்.ஜி.ஆர். துணிவுக்கு செலவே சாட்சி என்றார்க்கு இன்று புகழ் வரவே சாட்சி

    படம் பெற்ற பெருமைக்கு பலபேர் சாட்சி பயன்கூற வெற்றிவிழா மேடை சாட்சி எண்ணரிய சாட்சிகளுக்கிடையில் நானும் இதயத்தை திறந்தொன்று சொல்கின்றேன்.

    திருந்து திருந்தெனத்தானும் நடந்து காட்டும் சிறப்பாலே எம்.ஜி.ஆர். சிறப்பு பெற்றார் பொருந்தாத கூற்றுகளைப் பொய்யென் றோதும் புதுமையினால் எம்.ஜி.ஆர். புதுமையானார்

    அவர் வாழ்க! கலை வளர்க! வென்று வாழ்த்தி ஆரம்பக் கருத்தினையே இங்கும் சொல்வேன்: கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம்.

  6. Likes orodizli liked this post
  7. #2955
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட டியூன்களை நிராகரித்த எம்.ஜி.ஆர்.,

    -சித்ரா லட்சுமணன்

    இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனை ஒரு நாள் டெலிபோனில் அழைத்த எம்.ஜி.ஆர் “என்னோட பல படங்களுக்கு நீ இசையமைச்சி இருந்தாலும் எம். ஜி. ஆர் பிக்சர்சுக்கு நீ இதுவரையில் ஒரு படம் கூட பண்ணலையே. இப்போ ஒரு மியூசிக்கல் படத்தை ஜப்பான்,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படமாக்கலாம் என்று இருக்கிறேன். நீதான் அந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்” என்றார். மகிழ்ச்சியோடு அந்த வாய்ப்பை ஏற்றக் கொண்டார் விஸ்வநாதன். அப்போது அந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.
    அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு “தினத்தந்தி” பத்திரிகை யில் ஒரு செய்தி வெளியானது.

    எம் ஜி ஆர் “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற பெயரில் வெளிநாடுகளில் ஒரு படத்தை உருவாக்கப் போவதாகவும் அந்தப் படத்திற்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்கள் ஏவி. எம் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்தச் செய்தியைப் படித்தவுடன் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட குழப்பத் திற்கு அளவேயில்லை.
    வீட்டில் இருந்த தனக்கு போன் போட்டு “நான் வெளிநாட்டில் ஒரு படம் தயாரிக்கப் போகிறேன். அதற்கு நீதான் இசையமைக்க வேண்டும்” என்று கூறிவிட்டு இப்போது அதே படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்களை எம். ஜி. ஆர் பதிவு செய்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி விஸ்வநாதனின் மண்டையைக் குடைந்தது.

    ஆனாலும் தனக்கு வரவேண்டிய வாய்ப்பு பறி போய்விட்டதே என்று விஸ்வநாதன் எந்த கலக்கமும் அடையவில்லை. அதே போன்று “ என்னை ஏன் மாற்றினீர்கள்?” என்று எம். ஜி. ஆரைத் தொடர்பு கொண்டு கேட்கவுமில்லை. வழக்கம்போல தனது வேளைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் அவர்

    அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் ஒரு பாடல் ஒலிப்பதிவில் எம்.எஸ். விஸ்வநாதன் இருந்த போது எம். ஜி. ஆரிடம் இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது..
    “விசு. உன் மனசிலே என்ன நினைச்சிக்கிட்டிருக்கே ? இந்தப் பக்கமே உன்னைக் காணோம்?. அது மட்டுமில்லாமல் ஒரு போன் கூட உன்கிட்ட இருந்து வரலே. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கு நீதான் மியூசிக் போடணும்னு எவ்வளவு நாளுக்கு முன்னாலே உங்கிட்ட சொன்னேன். அதை அப்படியே மறந்திட்டியா? என் கம்பெனின்னா நீ ஏன் எப்பவும் இப்படி பொறுப்பில்லாம இருக்கே” என்றார் எம். ஜி. ஆர்.

    அவர் பேசப்பேச “தினத்தந்தி” பத்திரிகையில் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப் பற்றிய செய்தியைப் படித்தபோது ஏற்பட்ட குழப்பத்தை விட அதிகமான குழப்பம் விஸ்வநாதனுக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு தெளிவுக்கு வந்த விஸ்வநாதன்,”அண்ணே நீங்க என்னை எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, எவ்வளவு திட்டினாலும் சரி,.என்னால அந்த படத்துக்கு இசையமைக்க முடியாது. என்னை மன்னிச்சிக்கங்க”என்றார்

    “விசு, என்ன பேசறோம்னு புரிஞ்சிதான் பேசறியா ?” என்று எம் ஜி ஆர் கேட்டபோது“குன்னக்குடியை வைச்சி நீங்க படத்தை ஆரம்பிச்ச செய்தியையும், உங்க படத்துக்காக அவர் நான்கு பாடல்களை பதிவு செய்திருக்கிற செய்தியையும் “தினத்தந்தி” பேப்பர்ல பார்த்தேன். அவரை வைச்சி ஆரம்பிச்ச படத்தை அவரை வச்சி முடிக்கிறதுதான் சரியாக இருக்கும். நான் இப்படி சொல்றதினால நீங்க கோவிச்சிக்கிட்டு எனக்கு இனிமே படமே கொடுக்கலேனா கூட பரவாயில்லை. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு மட்டும் என்னால் இசையமைக்க முடியாது” என்று திட்டவட்டமாக பதில் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் விஸ்வநாதன்

    அவர் போனை வைத்த கொஞ்ச நேரத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்த எம். ஜி. ஆரின் சத்யா ஸ்டு டியோ நிர்வாகி குஞ்சப்பன், நடிகர் நாகேஷ் ஆகிய இருவரும் “உங்களை எ
    ம் ஜி ஆர் கையோடு அழைத்துக் கொண்டு சொன்னார் “ என்றார்கள்.

    எம்.ஜி.ஆருடன் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை சந்திக்க விஸ்வநாதன் மறுத்ததே இல்லை.ஆகவே சட்டையை மாட்டிக் கொண்டு அவர்களுடன் உடனே கிளம்பினார்.
    அப்போது எம். ஜி. ஆர் “பட்டிக்காட்டு பொன்னையா” படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவர் அருகே சென்ற விஸ்வநாதன் எம் ஜி ஆர் பேசுவதற்கு இடமே கொடுக்கவில்லை.
    “நீங்க கூப்பிட்டு அனுப்பினால் என்னால் வராம இருக்க முடியுமா ? அதனாலதான் வந்தேன். தயவு செய்து நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் நான் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கிற ஒரு மியூசிக் டைரக்டர். அவ்வளவுதான். ஆனால் குன்னக்குடி வைத்தியனாதன் ஒரு சங்கீத மேதை. அவரை சினிமாவில் முன்னுக்கு கொண்டு வர்றதுன்னா, அது உங்களாலதான் முறையும். என்கிட்டே வேலை வாங்கற மாதிரி நீங்க குன்னக்குடியிடமும் வேலை வாங்கினா நிச்சயம் அவர் பெரிய மியூசிக் டைரக்டரா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க விருப்பப்பட்டா எனக்கு வேற படம் கொடுங்க. நான் நிச்சயமாக வேலை செய்கிறேன்.ஆனா இந்தப்படம் வேண்டாம் “என்று எம்.ஜி.ஆரிடம் மளமளவென்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
    இனி விஸ்வநாதனோடு பேசிப் பயனில்லை என்பதை புரிந்துகொண்ட எம். ஜி. ஆர், விஸ்வநாதனின் அம்மாவுக்கு போன் போட்டார். விஸ்வநாதனின் தாயிடம் அடிக்கடி போனிலே பேசக்கூடியவர் அவர்.

    “உங்க பிள்ளை என்ன பண்றார் பாருங்கம்மா?” என்று எம்.ஜி.ஆர் விஸ்வநாதனின் தாயாரிடம் கூறியபோது “விசு எங்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். அதனால இந்த ஒரு படத்தில் மட்டும் அவனை விட்டு விடுங்களேன்” என்றார் விஸ்வநாதனின் தாயார்.
    ஒரு வாரம் கழிந்தது.

    “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் பூஜையில் கலந்து கொள்ளும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து எம் எஸ் விஸ்வநாதனுக்கு அழைப்பு வந்தது.
    அது பூஜைக்கான அழைப்பு அல்ல தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரியாமல் அந்த பூஜைக்குப் போனார் விஸ்வநாதன்.
    தொடக்க விழாவிலே பங்கேற்க குன்னக்குடி வைத்தியநாதனும் வந்தி ருந்தார்.அவருக்கு தனது வாழ்த்துக்களை விஸ்வநாதன் தெரிவிக்க அவரது கையைப் பிடித்துக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் விஸ்வநாதனின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக”அண்ணா இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைச்சிக் கொடுங்க அண்ணா.நம்ம ரெண்டு பேர்ல யார் வேலை செஞ்சா என்ன?அது மட்டுமில்லாமல் இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர் எனக்கு என்ன சம்பளம் பேசினாரோ அந்தப் பணம் மொத்தத்தையும் கொடுத்துட்டார். அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தர்றதாகவும் சொல்லியிருக்கார். அதனால நீங்க இந்த படத்தைப் பண்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லே. இன்னும் சரியாகச் சொன்னா நீங்க பண்ணாதான் எனக்கு சந்தோஷம்” என்றார்
    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும்,குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல ஒரு நமட்டு சிரிப்புடன் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் எம். ஜி. ஆர்.

    குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வருத்தம் ஏதுமில்லை என்பதை ஒரு முறைக்கு நூறுமுறை உறுதி செய்து கொண்ட பிறகு “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் விஸ்வநாதன்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜி.ஆர் ஆரம்பித்தபோது முழுக் கதையும் தயாராகவில்லை. ஆகவே பாடல் இடம் பெறவிருக்கின்ற காட்சிகளையும் அந்தப் பாடல் காட்சிகளைப் படமாக்கப் போகின்ற இடங்களையும் பற்றி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சொல்லிவிட்டு அதற்கேற்ப அவரை டியூன் போடச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
    எம்ஜிஆர் பிக்சர்சில் தான் பணியாற்றும் முதல் படம் என்பது தவிர வெளிநாடுகளில் படமாக்கப்படப் போகின்ற படம் என்பதால் மிகுந்த உற்சாகத்தோடு அந்தப் படத்துக்கு வேலை செய்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனால் என்ன காரணத்தாலோ அவர் போட்ட எந்த மெட்டும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.

    அவருக்குப் பிடிக்கவில்லையே என்பதற்காக நாள் முழுவதும் உட்கார்ந்து வேறு டியூனை விஸ்வநாதன் போட்டுக் காட்டியபோது “இதுக்கு நேற்று போட்ட டியூனே பரவாயில்லை” என்றார் எம். ஜி. ஆர்.
    அப்படி எம்.ஜி.ஆர் தன்னுடைய பாடல்களைக் கடுமையாக விமர்சித்த போதிலும் அதையெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாமல் புதிதாக ஒரு டியூன் போட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப்பாடலைப் பதிவு செய்தார்.
    அந்தப் பாடலைக் கேட்ட அத்தனை பெரும் விஸ்வநாதனைப் பாராட்டினார்கள்.
    அந்தப் பாடலைக் கேட்டால் எம். ஜி. ஆர் நிச்சயம் அசந்து போவார் என்று நினைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் எம்ஜிஆருக்கு அந்தப பாடலைப் போட்டுக் காட்டிவிட்டு அவரது பாராட்டுகளுக்காக காத்துக் கொண்டிருந்தபோது பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போய்விட்டார்

    தான் முதலில் இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதால் எம் ஜி ஆர் தன்னை பழி வாங்குகிறாரோ என்ற எண்ணம் கூட ஓரு கட்டத்தில் விஸ்வநாதனுக்கு வந்தது.
    அப்படி ஒரு எண்ணம் எழுந்ததற்குப் பிறகும் அவர் எப்படி அந்த படத்தில் தொடர்ந்து பணியாற்றினார்
    \\\2///
    எம்.ஜி.ஆர் தந்த பணத்தை வாங்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்

    -சித்ரா லட்சுமணன்

    இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது வாழ்க்கையில் அதிகமாக மனம் தளர்ந்தது "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு இசையமைத்தபோதுதான்.கஷ்டப்பட்டு ஒரு டியூனைப் போட்டு அதை எம்.ஜி.ஆரிடம் அவர் வாசித்துக் காட்டினால் "இந்த டியூன் நன்றாகவே இல்லையே.இது வேண்டாம்"என்பாராம் எம். ஜி. ஆர்.அடுத்து "கொஞ்சம் பொறுங்கள் இன்னொரு டியூன் போடுகிறேன் " என்று விஸ்வநாதன் சொன்னால் "பரவாயில்லை விடு.இந்த டியூனே இருக்கட்டும் " என்று எம் ஜி ஆரிடமிருந்து பதில் வருமாம்.

    பக்கத்தில் இருப்பவர்கள் "பாட்டு நல்லாத்தானே அண்ணே இருக்கு. எதனால உங்களுக்குப் பிடிக்கலே" என்று அவரிடம் கேட்டால் உடனே அவர்களோடு வாக்கு வாதம் செய்யத் தொடங்கிவிடுவாராம் .

    “எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அவரை எப்படி திருப்திப் படுத்தறது அப்படீன்னும் புரியலே.ஆனா என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னால முடிஞ்ச அளவுக்கு மாத்தி மாத்தி பல டியூன்களைப் போட்டு பத்து நாட்களில் பதினைந்து பாடல்களை ரிக்கார்ட் செய்து கொடுத்தேன். ஆனால் அந்தப் பாடல்களில் ஒரு பாட்டைக்கூட எம். ஜி. ஆர் பாராட்டவில்லை” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக் கிறார் விஸ்வநாதன்

    "உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்கான மொத்த பாடல்களையும் பதிவு செய்து முடித்துவிட்டு கே.பாலாஜியின் புதிய படத்துக்காக அவருடைய அலுவலகத்தில் பாடல் கம்போசிங்கில் விஸ்வநாதன் இருந்தபோது கையில் ஒரு போனுடன் அவசரம் அவசரமாக கம்போசிங் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ஒடி வந்தார் பாலாஜி.
    “அண்ணே உங்களுக்குத்தான் போன். எம். ஜி. ஆர் பேசறார்” என்றபடி போனை விசுவநாதன் கையில் கொடுத்தார்அவர்.

    “உலகம் சுற்றும் வாலிபன்" பட ஷூட்டிங்கிற்காக நாளைக்கு எல்லோரும் சிங்கப்பூர் போகப் போறோம். படத்துக்கு பாட்டு எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்ட நீ அதுக்குப் பணம் வாங்கலேன்னா எப்படி?உடனே கிளம்பி வா”என்றார் எம். ஜி. ஆர்.
    “மன்னிக்கணும் அண்ணே. எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்.ஏன்னா நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு டியூன் போட்டும் அதிலே ஒரு பாட்டு கூட உங்களுக்குப் பிடிக்கலே. அதனால உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு.அதனால எனக்கு பணம் எதுவும் வேணாம் அண்ணே” என்றார் விஸ்வநாதன்.

    அடுத்து “மரியாதையா நீ இப்போ கிளம்பி இங்கே வர்றியா இல்லே நான் அங்கே வரட்டுமா?”என்று கேட்டார் எம். ஜி. ஆர்.

    பாலாஜி உட்பட அந்த கம்போசிங்கில் இருந்த அனைவரும் "உடனே கிளம்பிப்போய் எம். ஜி. ஆரைப் பார்த்துவிட்டு வாங்க இந்த கம்போசிங்கை நாளைக்குக் கூட வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லவே அரை மனதோடு தியாகராயநகர் ஆற்காடு சாலையிலிருந்த எம் ஜி ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்குக் கிளம்பினார் விஸ்வநாதன்'
    அவர் சென்றபோது அந்த அலுவலகம் கல்யாண வீடு மாதிரி இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" பட விநியோகஸ்தர்கள், நடிகர் நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் என்று எல்லோரும் அங்கே கூடியிருந்தனர்.

    அந்த அலுவலகத்துக்குள் எம்.எஸ்.விஸ்வநாதன் அடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் சார்பில் ஒரு ஆளுயர மாலை அவருக்கு அணிவிக்கப் பட்டது

    அடுத்து விஸ்வநாதனுக்கு அருகில் வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர் “இவங்க எல்லோரும் விசு சார் அடுத்த படத்துக்கு மியூசிக் ஏதாவது ஸ்டாக் வைத்திருக்கிறாரா இல்லே இந்தப் படத்திலேயே தன்னுடைய எல்லாத் திறமைகளையும் கொட்டித் தீர்த்துட்டாரான்னு என்கிட்டே கேட்கறாங்க விசு. எல்லா பாட்டுக்களும் அவ்வளவு நல்லா இருக்காம். இவங்க எல்லோரும் சொல்றாங்க”என்று சொல்லிவிட்டு ஒரு பை நிறைய நோட்டுக் கட்டுகளைப் போட்டு விஸ்வநாதன் கைகளில் கொடுத்த போது “என்னை மன்னிச்சிக்கங்க. இந்தப் பணம் எனக்கு வேண்டாம்”என்றார் விஸ்வநாதன்.

    "ஏன்?" என்று எம். ஜி. ஆர் தனது பார்வையாலேயே கேட்டபோது இப்போது கூட "பாட்டுக்கள் நல்லா வந்திருக்குன்னு விநியோகஸ்தர்கள் எல்லோரும் சொல்றாங்க அப்படீன்னுதானே நீங்க சொன்னீங்க. அப்படீ ன்னா இன்னும் கூட உங்களுக்கு நான் போட்ட பாட்டுக்கள் பிடிக்க லேன்னுதானே அர்த்தம்? அப்படியிருக்கும்போது எனக்கு இந்தப் பணம் எதற்கு?"என்றார் விஸ்வநாதன்
    அவர் அப்படி சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர் "எல்லா பாட்டுமே ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கு விசு. நான் வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பாட்டையும் நல்லா இல்லேன்னு சொன்னேன். அப்போதுதான் அடுத்த பாட்டுக்கு இன்னும் கூடுதல் கவனத்தோடு அக்கறை எடுத்துக் கொண்டு நீ இசையமைப்பாய் என்ற என்னுடைய சுயநலம்தான் அதற்குக் காரணம்"என்றார்.

    "அங்கேதான் நீங்க தப்பு பண்றீங்க.ஒவ்வொரு பாட்டையும் நீங்க அப்பவே ரசித்து பராட்டியிருந்தீங்கன்னா.நான் அடுத்தடுத்து இன்னும் நல்ல டியூனா போட்டிருப்பேன்"என்று விஸ்வநாதன் அவருக்கு பதில் சொன்ன போது "அதுதான் தம்பி நல்ல கலைஞனோட குணம்"என்று சொல்லி அவரை தட்டிக் கொடுத்தார் எம். ஜி. ஆர்.
    எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த பத்னைந்து பாடல்களில் இருந்து பத்து பாடல்களைத் தேர்ந்தெடுத்த எம். ஜி. ஆர் அந்தப் பாடல்களைச் சுற்றி சம்பவங்களைப் பின்னித்தான் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதையை அமைத்திருந்தார்.

    அந்தப்படத்தை வெளியிட எம். ஜி. ஆர் திட்டமிட்ட போது எம். ஜி. ஆர் திமுகவிலிருந்து வெளியே வந்து விட்டிருந்ததால் பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேர்ந்தது."உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்றபோது திட்டமிட்டு பல முறை மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட்டது. எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று தெரியாது என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே செலவழித்த எம்.எஸ்.விஸ்வநாதன் எப்போதெல்லாம் கரண்ட் வருகிறதோ அப்போதெல்லாம் பின்னணி இசையை பதிவு செய்தார். அந்தப் படத்திற்காக விஸ்வநாதன் கடுமையாக உழைத்ததைப் பார்த்து எம். ஜி. ஆர். அசந்து போனார். விஸ்வநாதனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பல முறை மன வருத்தங்கள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பல முறை எம். ஜி. ஆர் விஸ்வநாதனை திட்டியிருக்கிறார்.அப்படி பல முறை அவர் திட்டியிருந்தாலும் விஸ்வநாதனை வேறு யாராவது திட்டினால் எம். ஜி. ஆர் எப்போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்.

    1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பாக “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார்.அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை. அந்தப் படத்துக்கான ஒரு பாடல் பதிவின்போது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பகல் பன்னிரண்டு மணிக்கு வந்த எம்.ஜி.ஆர் பதிவாக இருந்த பாட்டைக் கேட்டார்.அந்தப் பாடல் வரிகள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை ஆகவே பாடல் வரிகள் மொத்தத்தையும் மாற்றச்சொன்ன அவர் இசையி லும் சில மாற்றங்களைச் சொன்னனார்.அவர் அப்படிச் சொன்னதும் "கொஞ்சம் டைம் கொடுங்க அண்ணே எல்லாத்தையும் மாத்திட்டு உங்களுக்கு வாசித்துக் காட்டு கிறேன்" என்றார் விஸ்வநாதன்.
    "என்ன விசு காமெடியா பேசறே, இப்போதே மணி பன்னிரண்டு ஆகிறது.இன்னும் சிறிது நேரத்தில லஞ்ச் பிரேக் விடணும்.அதனால இப்பவே டியூன் எல்லாம் போட வேண்டாம். முதல்ல போய் சாப்பிடு.நேரத்துக்கு சாப்பிட்டாதான் உடம்பு நல்லாயிருக்கும் உடம்பு நல்லாயிருந்தாதான் உழைக்க முடியும்.லஞ்ச பிரேக் முடிஞ்சதும் நான் சொன்னபடி ட்யூனை மாத்திப் போட்டு வை. நான் வந்து கேட்கிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினர் எம் ஜி ஆர்

    அவர் அப்படி சொல்லிவிட்டுக் கிளம்பியதும் விஸ்வநாதனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. புதிதாக ஒரு மெட்டு போடுவதில் அவருக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. பத்து நிமிஷத்தில் போட்டு விடுவார் ஆனால் அன்று அவர் தவித்த தவிப்பிற்கு வேறு காரணமிருந்தது.
    "இணைந்த கைகள்' பாடலை முடித்து விட்டு மதியம் ஸ்ரீதர் இயக்கியிருந்த "சிவந்த மண்" படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவர் போகவேண்டும்.அந்தப் படத்தின் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அக்கறையில் அந்தப் படத்தின் கதாநாயகனான சிவாஜி தினமும் ரிக்கார்டிங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார்.

    இங்கே உணவு இடைவேளை முடிந்து பாடலை கம்போசிங் செய்து அதற்குப் பிறகு ரிக்கார்டிங்கை முடித்துவிட்டு அங்கே செல்வது என்றால் நிச்சயமாக மாலை ஆறு மணி ஆகிவிடும்.அதுவரை சிவாஜியையும் ஸ்ரீதரையும் காத்திருக்க வைத்தால் நிச்சயம் அவர்களோடு தனக்குள்ள உறவு அடியோடு முறிந்துவிடும் என்று பயம் விஸ்வநாதனுக்குள் இருந்தது.
    ஆனால் அதை எம். ஜி. ஆரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது அவரது தவிப்பைப் பார்த்த இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காரில் ஏறப் போன எம். ஜி. ஆரிடம் விஸ்வநாதன் நிலையைப் பற்றி முழுவதுமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டவுடன் காரில் ஏறப்போன எம். ஜி. ஆர் காரை விட்டு இறங்கி ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வந்தார்

    "என்ன பிரச்னை உனக்கு? "சிவந்த மண்" படத்தோட ரி ரிக்கார்டிங்குக்கு நேரத்துக்குப் போகலேன்னா ஸ்ரீதர் உன்னை கோபித்துக் கொள்வார். என்பதுதானே" என்று லேசாக சிரித்தபடியே அவரிடம் கேட்ட எம்.ஜி.ஆர் "நீ அந்த ரிக்கார்டிங்குக்க்கு போறதுக்கு முன்னாலே இந்த பாட்டில என்னென்ன மாற்றம் செய்யலாம்னு நினைக்கிறியோ அதை எல்லாம் உன்னுடைய உதவியாளரான கோவர்த்தன்கிட்ட சொல்லிட்டு போ. நான் சாப்பிட்டுவிட்டு வந்து அவரை வச்சிக்கிட்டு ரிக்கார்டிங்கை பார்த்துக்கறேன். சரியா?"என்று சொல்லி விட்டு "என்ன பண்றது விசு. நீ ரொம்ப பிசியான ஒரு மியுசிக் டைரக்டர்.அதனால நீ சிவாஜி படத்துக்கு போய் வேலையைப் பாரு. நான் இங்கே உன்னுடைய அசிஸ்டண்டா இருந்துகிட்டு மத்த வேலையைப் பார்க்கிறேன்" என்று அவரை கிண்டல் செய்தார்.
    அவர் அப்படிச் சொன்னவுடன் விஸ்வநாதன் கண் கலங்கி விட்டார் உடனே அவரை அருகில் அழைத்த எம். ஜி.ஆர் “நாம்ப எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் விசு. உன்னை என்ன சொல்லவும் எனக்கு உரிமை உண்டு.அதனாலே நான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவேன். ஆனா வேறு யாரும் உன்னைத் திட்ட நான் காரணமாக இருக்க மாட்டேன். அதனால சாப்பிட்டு முடித்துவிட்டு நீ அந்த ரிக்கார்டிங்குக்கு போய்விடு என்றார்.

    விஸ்வநாதனின் பாடல்களை எம்ஜிஆர் பல முறை விமர்சித்த போதிலும் அவரிடமிருந்து விஸ்வநாதன் விலகாமல் இருந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர் அவர் மீது காட்டிய இந்த அதீத அன்புதான்......... Thanks.........

  8. #2956
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் தேவர் கூட்டணி 3 வது வெற்றி படம் "தாயைக் காத்த தனயன் ",வெளியான நாள் 13.04.1962.
    திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் கண்ணதாசன் அத்தனை பாடல்களும் இன்றும் இனிமையாக உள்ளது....... Thanks...

  9. #2957
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பிளாசா, பாரத், மகாலட்சுமி, மதுரை கல்பனா , திருச்சி பேலஸ், சேலம் பேலஸ் 100 நாள் ஓடியது. பற்பல ஊர்களில் 50 நாட்கள் கடந்து 1962 ம் ஆண்டின் பிரம்மாண்ட வெற்றி காவியமாம்
    எம்.ஜி.ஆர்., தேவர் சிலம்பு சண்டை இதுவரை திரைவரிசையில் காணாத அற்புதம்...... Thanks...

  10. #2958
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுவதைக் கண்டார். தொடர்ந்து இரு நாட்கள் அதைக் கவனித்தார். நேரம் சரிப்படுத்தப்படாமல் தவறான நேரத்தையே காண்பித்துக் கொண்டிருந்தது.

    மூன்றாம் நாள் முதல்வர் நேராக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து காரருகே ஓடி வந்தனர்...

    அப்போது புரட்சித்தலைவர், 'மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில நாட்களாக தவறான நேரம் காட்டுவதை சுட்டிக்காண்பித்தார்.

    மேலும், "வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி தவறு நடந்தால் எப்படி? உடனே நேரத்தை சரிசெய்யுங்கள்..."

    தான் செல்லும் வழியில் காணும் சிறுதவறைக்கூட கண்டுபிடித்து கண்ணியமாகத் திருத்தும் கடமை உணர்வு எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது.

    இந்த விஷயத்தை தனது உதவியாளர் மூலம் போனில் சொல்லியிருக்கலாம்...!!!
    ஏன் செய்யவில்லை...???

    தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையும் மறந்து தன்னை ஒரு சராசரி பிரஜையாகவும், காணும் தவறை சுட்டுவது ஒரு பிரஜையின் தலையாய கடமை என்றும் கருதியதன் நிகழ்வு தான் இது...

    இதுபோல இனி ஒரு அவதார புருஷர் நமக்கு கிடைப்பாரா ???

  11. #2959
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    13.4.2020

    At 11 am

    Sunlife tv

    ராமன் தேடிய சீதை
    Last edited by ravichandrran; 12th April 2020 at 10:31 PM.

  12. #2960
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய காலை வணக்கத்துடன்....

    மக்கள் கவிஞர் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" அவர்களின் பிறந்ததினம்.....

    1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்... 13ஆம் நாளன்று பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29ஆம் வயதிலேயே பாடல் வரிகள் மூலம் கம்யூனிஸ்ட் கொள்கை கூறி புரட்சி ஏற்படுத்தினார்....

    1977ஆம் ஆண்டு "புரட்சி தலைவர்" முதல்வராக பொறுப்பேற்ற பொழுது "நான் இன்று முதல்வராக பதவி ஏற்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் முக்கியமானது மறைந்த புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் என்று கூறனால் அது மிகையாகாது.

    ஆகையால் நான் அமரும் இந்த முதல்வர் நாற்காலியில் ஒரு கால் திரு. மக்கள் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடையது என்று கூறினார்..

    அவர் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....

    "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
    உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
    காலம் தரும் பயிற்சி
    உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
    தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி"...

    --- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •