-
30th April 2020, 02:43 PM
#61
Junior Member
Diamond Hubber
தலைவா உமக்காக திரைப்படம் பார்க்க பழகினோம் , ஓடி ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தை இறுதி வரை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளலே , இறுதியிலும் உள்ள சொத்துக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அள்ளி இறைத்த இறைவா , நீர் கூட எவரையும் , எம்மதத்தையும் இழிவு படுத்தியதில்லை , உமது கலைத்துறையை பயன்படுத்தி உமது தமிழக மக்களால் வளர்ந்த சில கழிசடை நாய்கள் இன்று நெறிமுறையின்றி வாழ்வதும் அறிவுரை கூறுவதும் எம்மால் சகிக்க முடியவில்லை இறைவா............. Thanks...
-
30th April 2020 02:43 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2020, 02:47 PM
#62
Junior Member
Diamond Hubber
உங்கள்(MGR) குணம் இவர்களுக்குயில்லை...
ஆனால் உங்களைப்போல் நாடாளும் ஆசை ...எல்லா கூத்தாடிகளுக்கும் உள்ளது... அதை என்னவென்று சொல்வது?!..... Thanks...
-
30th April 2020, 02:54 PM
#63
Junior Member
Diamond Hubber
வெளிச்சப்பாடு
மருதூர்,. பாலக்காட்டை ஒட்டி கேரள எல்லையில் உள்ள அழகான கிராமம். பசுமை மஞ்சம் விரித்த நிலப்பரப்பு,
அதில் ஓர் அம்மன் ஆலயம், அதன் விழாவுக்காக வெளிச்சப் பாடு நடக்கவிருக்கிறது. வெளிச்சப்பாடு என்றால் நம் நாட்டில், தன்னைத்தானே பிழைப்புக்காக சாட்டையால் அடித்துக் கொள்வதை போல தன்னைத்தானே கத்தியால் வெட்டிக் கொள்வது.
இதற்குரிய பக்தரை மஞ்சள் உடை கட்டி மேளதாளம் முழங்க அழைக்க வருகிறார்கள்.
அம்மன் முன் நிற்கிறார். ஆக்ரோஷமாக பால கண்ணனோ குமரகுரு முருகனோ என வியக்கும் அளவுக்கு சிறுவன் ஒரு ஐந்து வயது சிறுவன் கம்பீரமாக நடந்து அம்மன் முன் போகிறான்.
அவனைவிட உயரமான வாள் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பால் மனம் மாறாத சிறுவன் தனது பிஞ்சு கரங்களினால் தூக்கி வருகிறான். அந்த கொடுமையான தோற்றமுள்ள பக்தரிடம் நீட்டுகிறான். அவர் வாங்கி தன் கண்களில் ஒற்றி அதனால் தன் மேனியை காயப்படுத்தி அந்த ரத்தத்தை எடுத்து சிறுவன் நெற்றியில் வைத்து ஆசி கூறுகிறார்.
சிறுவனும் வணங்குகிறான், மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்,
கண்ணுக்கினிய அந்த சிறுவன் யார் தெரியுமா????
பிற்காலத்தில் கோடான கோடி மக்களின் அரவணைப்பை யும் ஆரவாரத்தையும், ஆசிகளையும் பெற்ற நம் நெஞ்சுக்கு இனிய நாயகர் எம்ஜிஆர் அவர்கள்தான்,
இலங்கையில் தந்தையை பரிகொடுத்து தாய் நாடு திரும்பி மாமனின் சூழ்ச்சிக்கு ஆளாகி வறுமையின் பிடியில் அன்புத் தாயின் மடியில் இருந்த போது அந்தக் குடும்பத்தின் பெருமையே இந்த ஆலயத்துக்கு கத்தி கொடுக்கும் உரிமையில் தான் இருந்தது
அப்படி அம்மன் கத்தி கொடுத்து வளர்ந்ததால் கத்தி பிடித்து வாழ்ந்தார்
கத்தியை சுழற்றி நடித்தார் கத்தி வேந்தர் ஆனார், கத்தி பிடித்து வாழ்ந்தார்
கத்தி பிடித்து நடித்தார்
வேடத்தில் மட்டுமல்ல,,, வாழ்விலும் மன்னராகி மன்னராக திகழ்ந்தார் நமது எம்.ஜி.ஆர்.......... Thanks...
-
30th April 2020, 03:11 PM
#64
Junior Member
Diamond Hubber
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 17 வியாழன்
எம்ஜிஆர் பக்தர்களே
நமது வள்ளல் எம்ஜிஆர் அவர்கள்
,தனிமனிதனாக சினிமா உலகில் சம்பாதித்த பணத்தை
நாட்டு மக்களுக்கு எப்படியெல்லாம் கொடுத்து உதவி இருக்கிறார்
++++++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆர் அவர்கள் வறுமையோடு இருந்த காலகட்டத்திலும்
தன் அண்ணன் எம் ஜி சக்கரபாணி அவர்களுடைய குடும்பத்தையும் கூட்டுக்குடும்பமாக இருந்து வழி நடத்தினார்
எம்ஜிஆர் அவர்களுக்கு நிரந்தரமான வருமானம் வந்த பிறகு
அண்ணன் சக்கரபாணி குடும்பத்திற்கும் அவருடைய மகன்களுக்கும் நல்ல தொழிலை அமைத்துக் கொடுத்தார்
அவருடைய குழந்தைகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார்
அவர்களுடைய குடும்பம் கஷ்டமில்லாமல் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
எம்ஜிஆரின் இறந்துபோன முதல் மனைவியின் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்து அவர்களை முன்னேற்றம் செய்துள்ளார்
எம்ஜிஆரின் இறந்துபோன இரண்டாவது மனைவியின் குடும்பத்தினருக்கும் பண உதவி செய்து அவர்கள் குடும்பத்தை கஷ்டம் இல்லாமல் வாழ வைத்தார்
அடுத்து ஜானகி அம்மையாரின் அண்ணன் தம்பி குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்தார்
+++++++++++++++++++++++++++++++++
அடுத்து ராமாவரம் தோட்டத்தில் வேலைபார்த்த
சமையல்காரர்கள்
தோட்டத் தொழிலாளர்கள்
ஆடு மாடு மேய்த்த தொழிலாளர்கள்
எம்ஜிஆரின் பாதுகாப்பாளர்கள்
ஆகியோர் களுடைய வீட்டில் நடைபெறுகின்றன
அத்துனை நல்ல நிகழ்ச்சிகளுக்கும் பண உதவி செய்துள்ளார்
//////////?//////?/////////////?////////////?/?/.?
1949 ல் திமுக ஆரம்பிக்கப்பட்டது
1952 ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் சேருகிறார்
1972 ஆண்டு எம்ஜிஆர் அவர்களை கருணாநிதி அவர்கள் திமுகவில் இருந்து நீக்கினார்
இந்த 20 ஆண்டுகளில் திமுக சந்தித்த தேர்தல்கள்
1952 திமுக சந்தித்த முதல் சட்டசபை தேர்தல்
1957. திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்
1962 திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்
1967ஆம் ஆண்டு திமுக சந்தித்த சட்டசபைத் தேர்தல்
1971ஆம் ஆண்டு திமுக சந்தித்த சட்டசபை தேர்தல்
இத்தனை தேர்தலிலும் எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்
பல இடங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் எம்ஜிஆர் சென்று திமுக வேட்பாளர் களுக்காக பிரச்சாரம் செய்தார்
இப்படி எம்ஜிஆர் தமிழ் நாடு முழுவதும் திமுக வேட்பாளர் களுக்காக பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது
எம்ஜிஆருக்கு ஆரத்தி எடுக்கின்ற மக்களுக்கு
எம்ஜிஆர் தன் சொந்தப் பணத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார்
பல இடங்களில் வேட்பாளர் தனக்கு பணம் பத்தவில்லை என்று எம்ஜிஆரிடம் கேட்டு வாங்கி தேர்தல் செலவு செய்கிறார்கள்
மாநகராட்சி தேர்தல்களிலும் நகராட்சித் தேர்தலுக்கும் எம்ஜிஆர் பிரச்சாரத்திற்கு சென்றார்
அப்பொழுதும் எம்ஜிஆர் தன் கை பணத்தை தான் மக்களுக்கு கொடுத்தார்
இப்படி எல்லாம் எம்ஜிஆர் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னுடைய பணத்தை செலவழித்தார்
அந்தக் காலத்தில் திமுக நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள்
தங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரிடம் சென்று கொடுப்பார்கள்
அவர்களுக்கும் பண உதவி செய்தவர் எம்ஜிஆர்
இப்படியெல்லாம் பாடுபட்டு தன்னுடைய பணத்தை திமுகவிற்கு செலவழித்த எம்ஜிஆர் அவர்கள்
திமுகவை கைப்பற்ற முயற்சி செய்யவில்லை
கருணாநிதி அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டு தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எம்ஜிஆர் துரோகம் செய்யவில்லை
அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை கொல்லைப்புற வழியாக எம்ஜிஆர் சந்தித்து
கருணாநிதி அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்குவதற்கு எம்ஜிஆர் முயற்சி செய்யவில்லை
+++++++++++++++++++++++++++++++++(
எம்ஜிஆர் புகழ் பெறத் தொடங்கிய பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் எம்ஜிஆர் மன்றம் உருவாகியது
தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு திருமணம் காதுகுத்து போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு எம்ஜிஆரிடம் பத்திரிக்கை கொண்டுபோய் கொடுப்பார்கள்
அவர்களுக்கும் பண உதவி செய்தவர் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கின்ற தொழிலாளர்களுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு எம்ஜிஆர் தன் பணத்தை கொடுத்து உதவி செய்தார்
எம்ஜிஆர் நாடக மன்றத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் குடும்ப கஷ்டத்திற்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்தார்
சென்னையில் உள்ள அனைத்து சினிமா ஸ்டூடியோக்களில் எம்ஜிஆர் நடிப்பார்
அந்த ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலை பார்க்கின்றார் தொழிலாளி அனைவருக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்வார்
எம்ஜிஆர் படத்திற்கு கதை வசனம் எழுதுகிற அவர்களுக்கும்
எம்ஜிஆர் படத்திற்கு பாடல்
எழுதுகிற வர்களுக்கும்
எம்ஜிஆர் படத்தில் பணிபுரிந்த உதவி கேமராமேன் உதவி டைரக்டர்கள்
எம்ஜிஆர் படங்களுக்கு செட்டிங்ஸ் அமைக்கிற தொழிலாளிகளுக்கும்
அவர்கள் வீட்டில் நடக்கின்ற விசேஷங்களுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்துள்ளார்
++++++++++++++++++++++++++++++++++
அடுத்து எம்ஜிஆர் சினிமாவில் கை நிறைய சம்பாதித்த அக்காலத்தில் இருந்து எம்ஜிஆர் மரணமடையும் வரை
தமிழ் நாட்டில் நடக்கின்ற தீவிபத்து வெள்ளம்
பஸ் விபத்து ரயில் விபத்து
இதைப்போல் தமிழ்நாட்டு மக்களுக்கு சோதனை வருகின்ற காலகட்டத்தில் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தன் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்
++++++++++++++++++++++++++++++++++
அடுத்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார்
அண்ணா திமுகவை ஆரம்பித்து அந்த கட்சி ஆட்சிக்கு வரும்வரை
அண்ணா திமுகவில் உள்ள கட்சித் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் எம்ஜிஆர் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்
++++++++++++++++++++++++++++++++++
இதைத்தவிர இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்பட்ட போரின்போது நிதி கொடுத்துள்ளார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தபோது நிதி கொடுத்துள்ளார்
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த வறட்சி நிவாரண நிதி வெள்ள நிவாரண நிதி
இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு எம்ஜிஆர் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்
++++++++++++++++++++++++++++++++++
,அடுத்து எம்ஜிஆர் அவர்கள் சினிமா உலகில் புகழ் பெறத் தொடங்கிய காலத்திலிருந்து
அவர் மரணம் அடையும் வரை
தமிழ்நாட்டில்இருந்து வெளி வருகின்ற அனைத்து தினசரி பத்திரிக்கைகள் வாரப் பத்திரிக்கைகள் மாதப் பத்திரிகைகள் பணிபுரிகின்ற தொழிலாளி கள்வீட்டில் நடைபெறுகிற அனைத்து விசேஷங்களுக்கும் எம்ஜிஆர் பண உதவி செய்துள்ளார்
தமிழ்நாட்டில் இருந்து வெளி வருகிறான் அனைத்து சினிமா பத்திரிக்கையில்
பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு
அவர்கள் பத்திரிக்கை கொடுக்கும் போது அவர்களுக்கும் பண உதவி செய்துள்ளார்
++++++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆர் என்ற ஒரு மனிதன் சம்பாதித்த பணத்தை
இத்தனை வகையில்
நல்ல காரியங்களுக்காக எம்ஜிஆர் தர்மம் செய்து உள்ளார்
எம்ஜிஆர் செய்த தர்மம்தான்
எம் ஜி ஆருக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருந்தது
எம்ஜிஆரின் எதிரிகள் தோல்விமேல்தோல்வி அடைவார்கள்
எம்ஜிஆர் அவர்களுக்காக எம்ஜிஆரின் குடும்ப. ஜோதிடர் வித்வான் லட்சுமணன் அவர்கள்
நான் ஆணையிட்டால் என்ற சினிமா படத்தில் ஒரு பாடல் எழுதினார்
+++++++++++++++++++++++++++++++++
ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் கிளிகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
அந்தக் கருணையை நாங்கள் பாராட்ட
++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பாடல் எவ்வளவு பொருத்தமான பாடல்
இப்படி எல்லாம் எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான்
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது
இப்படி எல்லாம் எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான் இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது
அண்ணா திமுகவிற்கு சினிமாமார்க்கெட் இழந்த கழுதைகள் வந்து மாலை மரியாதை பெற்றுக்கொள்கிறார்கள்
பிறகு எம்ஜிஆருக்கு துரோகம் செய்கிறார்கள்
ஆனால் அந்தக் கழுதைகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது
இந்த மாதிரி எம்ஜிஆர் தர்மம் செய்ததை போல் அந்த கழுதைகள் யாருக்காவது தர்மம் செய்து இருக்கிறார்களா
எந்த நடிகராவது எந்த நடிகையாவது எம்ஜிஆரை போல் சினிமா உலகில் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி இருந்தால் உடனடியாக அவருடைய ரசிகர்கள் அதைஒரு பதிவாக வெளியிடவும்
எம்ஜிஆருக்கு துரோகம் செய்த
தெருப்பொறுக்கி கழுதை கள்
ஊழல் வழக்கில் விசாரணை கமிஷனில் சிக்கி சீரழிந்து
நல்ல சாவு சாக மாட்டார்கள் ....... Thanks PM.,
-
30th April 2020, 05:40 PM
#65
Junior Member
Diamond Hubber
[MGR முதல்வரான பின் பாராளுமன்ற தேர்தல் க.இராசாராம் , எனது தந்தை OKR
மற்றும் நிர்வாகிகள் கள்ளகுறிச்சி சென்று
வரவேற்று சேலம் அழைத்து வருகின்றனர்.
ஏற்கனவேபெத்தநாயக்கன் பாளைய-கழக பிரமுகர் MGR இங்கு பேசவேண்டும் என அடம்பிடித்தார்.
கழக நிர்வாகிகள் பொது கூட்டம் அதிகம் உள்ளது நேரமில்லை என விளக்கி சமாதனபடுத்தினர். MGR கார் பெத்தநாயக்கன் பாளையம் வரும்
போது கழக பிரமுகர் திடிரென ரோட்டில் பாய்ந்து கையசைக்க ஒரு நொடி பொழுதில்
எல்லா கார்களும் பிரேக் பிடித்து நிறுத்தினர்.
இதை யாருமே எதிர்பார்கவில்லை.
அதிகாரிகள் ஓடி சென்று முதல்வரிடம் சென்று நடந்ததை கூறினர். MGR காரைவிட்டு வெளியே வந்து மக்களை நோக்கி கையசைத்துவிட்டு காரில் அமர்ந்தவர், குறுக்கே வந்த பிரமுகரை ஜுப்பில் ஏற்றி வாருங்கள் உத்தரவிட்டார்.
சிறிது தூரம் வந்தவுடன் எல்லா காரையும்
நிறுத்த சொல்லிவிட்டு குறுக்கே வந்தவரை அழைத்துவர சொன்னார்.
இதுவரை அடக்கிவைத்த கடுங் கோபத்துடன் திடிரென குறுக்கே வந்தாயே பிரேக் அடிக்கவில்லை எனில் உன் உயிருக்கு அல்லவா ஆபத்தாயிருக்கும் என கோபத்தோடு நாளு அறைவிட்டு போ என
என்று கூறிவிட்டு சட்டென காரில் அமந்து புறப்பட்டார்.சேலம் வந்தவுடன் வந்தவர் நிர்வாகிகளை அழைத்து தான் அடித்தவரை பற்றி விசாரித்தார்.
அவர்கள் தலைவரே அவன் உங்கள் தீவிர ரசிகன் அ.தி.மு.க ஆரம்பித்தவுடன் அப்
பகுதி பொது மக்களையும் நம் கட்சியில்
சேர்த்துள்ளான்.ஏதோ ஆர்வகோளாரால் ஏதோ செய்துவிட்டான் என்றனர்.
MGR - சரி நான் பேசி முடிப்பதற்குள்
விருந்தினர் மாளிகைக்கு அழைத்துவாருங்கள் என்றார்.
MGR அவர்கள் அறைக்கு வந்தவுடன்
அடிபட்டவர் அழைத்துவரப்பட்டார்.என்ன ஆகபோகிறதோ என அவரும், மற்றவர்களும்
பயந்து நிற்க,்MGR ரோ அவரை கண்டவுடன் இழுத்து அனைத்து வாஞ்சையுடன் கன்னத்தை தடவி கொடுத்து வலிக்குதாப்பா என கேட்டதுதான் தாமதம்.
அவர் தேம்பி , தேம்பி அழுதபடி தலைவரின்
கையைபிடித்து அவர்கன்னத்திலேயே அறைந்து கொண்டு தவறு செய்த என்னை அடி தலைவா உனக்கு தான் உரிமை உள்ளது என்றார்.
MGR கண் கலங்கி உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் எனக்கு எவ்வளவு மனக்கஷ்டம் என கூறி அவரை அணைத்து
ஆறுதல் சொல்லி ஊருக்கு அனுப்பிவைத்தார். ஒரு தொண்டனின் உயிருக்கு ஆபத்து எனும் போது அடித்த கரமும் அவன் உணர்வுக்கு ஆறுதலாக நினைத்து அனைத்த கரங்களும்
என் புரட்சி வாத்தியார் கரங்களே!!!]......... Thanks...
-
30th April 2020, 05:46 PM
#66
Junior Member
Diamond Hubber
"கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!"
நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 4
பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது.
அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.
முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும் விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார்.
உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர்.
எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.
பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?
வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று.
“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!
'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைபடத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். பெற்ற மகத்தான (முதலிடம்) வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர்.
பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.
ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து அவரது காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.
தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.
ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.
இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன.
ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள்.
இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின் முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.
விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.
"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.
அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."
காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.
மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன.
இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர்.
கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம் கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...
தொடரும் ...
Posted : M.G.Nagarajan
30 April 2020 3:42 PM
Thanks for :
Published : Naveenan
Vikatan News
யாழ் இணையம்........ Thanks...
-
30th April 2020, 05:52 PM
#67
Junior Member
Diamond Hubber
#தலைவரின்_இதயக்கனி...
[ 22 - 08 - 1975 ]
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்...
காலத்தால் அழிக்க முடியாத பாடல்...
இதயதெய்வம் புரட்சித்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்ப்பதில் என்றென்றும் மிஞ்சி நிற்கும் பாடல்...
சென்னை சத்யம் தியேட்டர் முதல்...
நாகர்கோவில் பயோனியர் முத்து தியேட்டர் வரை திரையிட்ட திரையரங்கம் முழுவதும் திருவிழா கோலம்தான்...
தலைவரின் அறிமுகக் காட்சி பேரறிஞர் அண்ணாவின் இதயத்திலிருந்து தலைவர் தோன்றுவது போல் இருக்கும்.
இதற்காகவே தலைவர் பக்தர்கள் வெள்ளித்திரையில் தலைவர் தோன்றும்போது ரோஜா மலர்களையும் கற்பூரம் மெழுகுவர்த்தி ஏந்தியும் வரவேற்பார்கள்.
உணர்ச்சிமிக்க தலைவர் தொண்டர்களின் ஆரவாரத்தை தியேட்டர் அதிபர்கள் கட்டுப்படுத்த படாத பாடு பட்டு விடுவார்கள்.
இப்பாடலில் வரும் ஆரம்ப தொகையறா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலாகும்...
இதன் ஒளிப்பதிவு தலைக்காவிரி தொடங்கி பிலிகுண்டு, ஒக்கேனக்கல், மேட்டூர், குளித்தலை, முக்கொம்பு, கொள்ளிடம், திருச்சி கல்லணை, தஞ்சாவூர் என்று காவிரி ஆறு கடைசியாக கலக்கும் இடம் வரை சென்றுள்ளது...
தலைவரின் சத்யா தோட்டத் தொழிலாளர்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தலைவரின் புகழுக்கு மேலும் மேலும் மகுடம் சேர்ப்பது போல் ஜொலிக்கிறது.
எங்கள் நாகர்கோவிலில் பயோனியர் முத்து திரையரங்கில் இதயக்கனி ரிலீசான அன்று அனைவருக்கும் ஆப்பிள் பழம் மாவட்ட தலைமை மன்றத்தால் வழங்கப்பட்டது பசுமையான நினைவுகள்...
ஒரு சுவாரஸ்யமான தகவல்...
படம் வெளியான மாதம் ஆவணி மாதம் என்பதால் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்...
ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நாகர்கோவில் நகரத்திற்கு வரும் குடும்பத்தினர் மதியம், மாலைக் காட்சிகளில் மூன்று வாரமும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி சென்றவர்கள் கடைசியில் இரவு 10.30 மணிக்காட்சி பார்த்து பஸ் கிடைக்காமல் விடிந்த பிறகு ஊர் திரும்பி வந்த மறக்க முடியாத நிகழ்வுகள் ஏராளம்...
நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகேதான் பயோனியர் முத்து திரையரங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்...
நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற பாடலை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
தலைவர் நம் அருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டு விடுகிறது...
45 ஆண்டுகள் கடந்தாலும் இன்று ரிலீசானது போன்ற தோற்றம்...
💐 வளர்க புரட்சித்தலைவர் புகழ் 💐
#இதயதெய்வம்........ Thanks...
-
30th April 2020, 06:05 PM
#68
Junior Member
Diamond Hubber
காசே கடவுள்!!
---------------------------
எம்.ஜி.ஆர் பற்றிய இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!
நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?
டைப்பிஸ்ட் கோபு!!
அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!
அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!
சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!
1978!!
வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-
அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??
அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?
இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??
ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?
வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--
நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--
என்ன பண்ணறது கோபு? விதி வலியது??
இதில் சிவாஜி மட்டும்--
நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??
ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --
உதவி??--ம்ஹூம்!!
எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!
தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!
குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--
வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!
டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-
ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??
நான் பாத்துக்கறேன்??
வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?
மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?
அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?
மறு நாள் காலை ஆபரேஷன்?--
மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?
கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?
எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு மாயாஜாலம் காத்திருக்கிறது?
ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--
மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--
இதயத்துக்குப் பால் வார்க்கிறார் மருத்துவர்?
ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??
மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!
ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!
தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,
கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!
சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!
உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?
பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???
சரி!!
எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?
முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --
ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?
காசேதான் கடவுளடா??
உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--
மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--
ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!
தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!
அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!!
கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்
பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???...... Thanks..."அன்பே வா" படத்தில் கோபு ஒரு காட்சியில் வருவார்...
-
30th April 2020, 06:07 PM
#69
Junior Member
Diamond Hubber
[எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.]......... Thanks...
-
30th April 2020, 07:21 PM
#70
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் , 7மணிநேர சாதனை உண்ணாவிரதம்...!!!
**********************************
(ஜூனியர் விகடன்: 16.2.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் முடிந்தது.
செய்தி :
"உழைக்கும் குரல்" தளம்
க.பழனி
நன்றி🙏
Last edited by ravichandrran; 30th April 2020 at 07:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks