-
14th May 2020, 08:49 PM
#251
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பற்றியத் தமிழ் நூல்கள்...!!!
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 -
செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 -
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 -
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011
எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, Es Rajat - 2007
வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்......
-
14th May 2020 08:49 PM
# ADS
Circuit advertisement
-
16th May 2020, 08:48 AM
#252
Junior Member
Diamond Hubber
விவரம் தெரியாத குழந்தை முன்னால் பல தலைவர்களின் படங்களை போட்டு பாருங்கள்....
அந்த குழந்தை சிரித்து கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகைப்படத்தை மட்டுமே தன் கையில் எடுக்கும்.
அத்துணை வசீகர சக்தி உலக தலைவர்களில் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றார் மறைந்த பிரபல உளவியல் பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன்...
சத்தியமான உண்மை...
வாழ்க எம்ஜியார் புகழ். நன்றி.........
-
16th May 2020, 08:36 PM
#253
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*திரு.துரை பாரதி* 12/05/20* *அன்று*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடிப்பதற்கு , ராமாவரம் தோட்டத்தில் , தன்*வீட்டு மொட்டை மாடியில் கால்களில் ஸ்கெட்டிங்* சக்கரங்களை கட்டிக் கொண்டு பயிற்சி எடுத்துள்ளார் . தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதன் விளைவாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரால் திறமையாக ஸ்டண்ட் நடிகர்களுடன் சண்டை போடுவதற்கு ஏதுவாக இருந்தது .* மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் பின்னணி இசையில் அந்த சண்டை காட்சி மிக பிரமாண்டமாக அமைந்தது*
பொதுவாக எம்.ஜி.ஆர். தன் எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சிகளில் மிகுந்த*ஆர்வத்துடன் நடிப்பது வழக்கம் . நீரும் நெருப்பும் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தன் உடைகளை தன் வாளால் சண்டையிட்டு கிழித்து எறியும் போது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர் .* காவல்காரன் படத்தின் ஆரம்பத்தில் பிரபல வில்லன் நடிகர் மனோகருடன் மோதும் குத்து சண்டை காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு , உயிர் பிழைத்தபின் இந்த காட்சிகளில் அசல் குத்து சண்டை வீரர் சண்டையிடுவது போல் நடித்து பாராட்டை பெற்றார் .* காவல்காரன் படத்தின் இடையில் வரும் மற்றொரு சண்டை காட்சியின்போது வில்லன் நடிகர் கே. கண்ணனை தாக்கும்போது குறி தவறி, கை மர பீரோவை உடைத்துக் கொண்டு உள்ளே போகும் . உடனே அந்த வலது* கையை மீட்டெடுத்து* கையில் உள்ள கடிகாரம் ஓடுகிறதா என்று காதருகில் வைத்து பார்ப்பார் சில வினாடிகள் .* அந்த காட்சியை பலத்த ஆரவாரத்துடன் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர் , இப்படி சண்டை காட்சிகளில் கூட* தன் ரசிகர்கள் பாராட்டும் வகையில் கலை நுணுக்கம், புதிய அணுகுமுறையோடு அமைத்திருப்பார் .தான் மட்டுமில்லாமல், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிரிகளை சந்திக்கும் வகையில் சண்டை காட்சிகளில்* நடிப்பதற்கு பயிற்சி அளித்திருப்பார் .* நடிகைகளும் சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது பல படங்களில் நிரூபிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். காட்சிகளை அமைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் .
மருத நாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி*எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை கற்று கொடுக்கும் காட்சி உண்டு. அடிமை பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ,தண்ணீரில் எல்லாவித சண்டை கலைகளை கற்றுக் கொடுத்து எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்கிற நுணுக்கங்களை ஜெயலலிதா*சொல்லி கொடுக்கும் காட்சி ரசிக்க தகுந்த வகையில் அமைந்தது .முகராசி படத்தில் ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். கம்பு சண்டை, சிலம்பம் ஆகியன கற்று கொடுக்கும் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
பறக்கும் பாவை படத்தில் புலியை விரட்டி சென்று கூண்டில் அடைக்கும் காட்சி*அந்த காலத்தில் பரபரப்பான காட்சியாக பேசப்பட்டது . பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் தன்னுடைய நேரடி பார்வையில் இயக்குனர் அனுமதியோடு படம் ஆக்கப்படுவதைத்தான் பெரிதும் விரும்புவார் .* யாருக்கும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் .* படகோட்டி படத்தில்*படகு போட்டி நடைபெறும் சமயம் , தான் ஒரு படகிலும் , நடிகர் அசோகன் ஒரு படகிலும்* நின்றவாறு சண்டையிடும் காட்சிகள்* சுவாரசியமாக இருக்கும் .மீனவ நண்பன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரும் , நம்பியாரும்*மோட்டார் படகுகளில் செல்லும்போது , புயல், காற்று, மழை சூழ்ந்த நிலையில்*சண்டையிடும் காட்சிகள்,யதார்த்தமாக** நன்றாக அமைந்தன . இந்த காட்சி எம்.ஜி.ஆர். தேர்தலில் வெற்றி பெற்று* முதல்வராகும் முன்பு எடுக்கப்பட்டது .
பொதுவாக சண்டை காட்சிகளில் நடிக்கும்போது அதிகம் வன்முறை மிகுந்த காட்சிகள் அமைவதை தவிர்ப்பார். சண்டையிடும்,போது , ஆயுதங்களால் எதிரிகளுக்கு பலத்த காயம் ஏற்படக் கூடாது, ஊனம் அடைந்து விடக் கூடாது .அடிபட்டு அடுத்த காட்சிகளிலோ , அடுத்த படத்திலோ நடிக்க முடியாமல் போய் வீடாக கூடாது ,அது மட்டுமின்றி , அவர்களின் குடும்பம் இதனால் பாதிப்பு அடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் . ஒருவேளை ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் , தனது சொந்த செலவில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து , படப்பிடிப்பின் செட் கலையாமல் இருக்க வைத்து*அவர்கள் குணமான பின்பு மீண்டும் அதே காட்சியில் நடிக்க வைப்பார் .*இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள்/காட்சிகள்* விவரம் :
1.ஸ்கேட்டிங் சண்டை காட்சி - உலகம் சுற்றும் வாலிபன்*
2.நடிகர் ஆனந்தனுடன் மோதும் காட்சி - நீரும் நெருப்பும்*
3.ஜெயலலிதாவுடன் சண்டை காட்சி* - முகராசி*
4.வீரப்பாவுடன் மோதும் காட்சி* - மகாதேவி*
5.ஜெயலலிதாவுடன் சண்டை காட்சி - அடிமைப்பெண்*
6.புலியுடன் மோதும் காட்சி* - பறக்கும் பாவை*
7.சர்க்கஸ் கூடாரத்தில் சண்டை காட்சி - பறக்கும் பாவை*
8.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - பல்லாண்டு வாழ்க .
-
16th May 2020, 10:10 PM
#254
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பான*விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
13/05/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி* -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * எம்.எம்.டிவி -பிற்பகல் 2 மணி* *- பறக்கும் பாவை*
* * * * * * * *கிங்* டிவி* *- இரவு* 9 மணி* -* *நீரும் நெருப்பும்*
* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி -சங்கே முழங்கு*
14/05/20* -மெகா டிவி* - மதியம் 12 மணி* - சந்திரோதயம்*
* * * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 1.30 மணி* - வேட்டைக்காரன்*
15/05/20-சன் லைப்* - காலை* 11 மணி* - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * *புது யுகம் டிவி - இரவு 7 மணி* -தேர் திருவிழா*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி -நீரும் நெருப்பும்*
16/05/20 -வசந்த் டிவி* - காலை 9.30 மணி - அன்னமிட்ட கை*
* * * * * * * மீனாட்சி* டிவி* - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*
* * * * * * * பூட்டோ டிவி* -* பிற்பகல் 2 மணி* - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு* 11 மணி* * - புதிய பூமி*
-
17th May 2020, 08:13 AM
#255
Junior Member
Diamond Hubber
வரும் வாரம் சன் லைப் சேனலில் பகல் 11 மணிக்கு மக்கள் திலகத்தின் ஒளிபரப்பாக உள்ள காவியங்கள் :
18 -05- 2020 திங்கட்கிழமை: "கண்ணன் என் காதலன்"
21-05-2020 புதன்கிழமை "புதிய பூமி"
23-05-2020 வெள்ளிக்கிழமை - "அரசிளங் குமரி" ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழுங்கள்.........
-
17th May 2020, 06:21 PM
#256
Junior Member
Veteran Hubber
ரசிகர் மன்றம்
முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th May 2020, 08:51 AM
#257
Junior Member
Diamond Hubber
மூத்த சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி... எவராலும் நெருங்க முடியாத இறைவன் கொடுத்த பேரற்புதம் கொண்ட மக்கள் திலகம் பல்வேறு வகையான புகழ் பக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு புரட்சி நடிகர், புரட்சி தலைவர் அவர்களுக்கு நம்மால் இயன்ற சேவையாற்றுவோம்...........
-
18th May 2020, 06:03 PM
#258
Junior Member
Platinum Hubber
தினமலர் -18/05/20
----------------------------------
மறக்க முடியுமா*-மதுரையை மீட்ட சுந்தர*பாண்டியன்*
-----------------------------------------------------------------------------------
வெளியான நாள் :14/01/1978
நடிப்பு : எம்.ஜி.ஆர். லதா, பத்மப்ரியா, பி.எஸ். வீரப்பா, எம்.என்.நம்பியார், வி.எஸ். ராகவன், சகஸ்ரநாமம், தேங்காய் ஸ்ரீநிவாசன், இசரிவேலன், மற்றும் பலர்*
இசை:எம்.எஸ். விஸ்வநாதன்* * இயக்கம் : எம்.ஜி.ஆர்.*
தயாரிப்பு : சோளீஸ்வர* கம்பைன்ஸ்*
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, சிவகுமார் என இளம் குதிரைகள் பாய்ந்தோடிய காலத்தில் தமிழக அரசியலில் அ .தி.மு.க. புயல் மையம் கொண்டிருந்த சூழலில், எம்.ஜி.ஆர். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை உருவாக்கினார் .
மூன்றாம் ராஜராஜ* சோழனிடம் இருந்து , மதுரையை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீட்ட வரலாற்றை மையப்படுத்தி* எழுத்தாளர் அகிலன் எழுதிய கயல்விழி என்ற புதினத்தின் அடிப்படையில் உருவானது , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .*
இப்படத்தை பி.ஆர். பந்துலு இயக்கி முடிப்பதற்கு முன், மரணமடைந்தார் .அதனால் இயக்குனர் பணியையும் எம்.ஜி.ஆர். ஏற்றார் .
படத்தில் இடம் பெற்ற* பிரமாண்ட போர்க்காட்சி, ஜெய்ப்பூரில் படம்மாக்கப்பட்டது அதற்காக, ஒரே நேரத்தில் , வெவ்வேறு கோணங்களில் , ஒன்பது கேமிராக்கள்*பயன்படுத்தப்பட்டன .* எம்.ஜி.ஆர். தொழில்நுட்பத்திலும் , தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது, இந்த படப்பிடிப்பு ஒரு சான்று .
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும்போதே , அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் வென்று* அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றது ..* முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்க வேண்டிய நிலை. இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி ஏற்பு விழாவை 10* நாட்கள் தள்ளி வைத்து இரவு பகலாக நடித்து படத்தை முடித்தார் .**
எம்.ஜி.ஆர். முதல்வராகி, ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்த படம் வெளியானது .மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன .* சண்டை காட்சிகள் குறிப்பாக வீரப்பா, நம்பியார் ,ஜஸ்டின் ஆகியோருடன் மோதும் காட்சிகள் பரபரப்பாக , சுறுசுறுப்பாக இருந்தன . மைசூர் அரண்மனை காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் .* எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .**
எம்.ஜி.ஆர். முதல்வரான பின் , வெளியான படம் என்பதோடு, அவர் கடைசியாக நடித்து இயக்கிய படம் என்பதாலும், மறக்க முடியாத படமாக திகழ்கிறது*மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th May 2020, 09:59 PM
#259
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*14/05/20 அன்று*வெளியான*தகவல்கள்*- தொகுப்பாளர் திரு.துரை பாரதி .
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பே வா* காதல் காவியத்தில் , கனவு பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பட்டி தொட்டியெல்லாம் அந்த காலத்தில் பிரபலமான பாடல். இசை மேடைகளில், இன்னிசை கச்சேரிகளில் அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு உணர்ச்சி பெருக்கோடு, உற்சாக வெள்ளத்தோடு டி.எம்.எஸ்./பி.சுசீலா இருவரும் பாடியிருப்பார்கள் .எம்.ஜி.ஆர். சரோஜாதேவி இருவரின் அழகு, கவர்ச்சி, வசீகரம் , அபிநயம் எல்லாம் ஒருங்கிணைந்து அந்த பாடல் காட்சிக்கு மெருகேற்றியது .காலத்தால் அழியாத காவிய காதல் பாடல் .* இந்த காட்சி படமாக்கப்படும்போது சாரட் வண்டியில் எம்.ஜி.ஆரும் , சரோஜாதேவியும் அமர்ந்து நடித்திருப்பார்கள்.* முதல் நாள் குதிரை வரவில்லை. இரண்டாம்நாள் தான் வந்தது. எனவே முதல் நாள் காட்சியில் இருவரும் சாரட் வண்டியில் வருவது போலும், பின்னர் குதிரையை தனியாக காண்பித்து பாடலை எடிட் செய்தார்கள்.* பாடல் நன்றாக அமைந்தது குறித்தும், பாடலின் பிரம்மாண்டம் , காட்சியில் உள்ள ரொமான்ஸ் , அபிநயம் ஆகியவற்றால்** ஏவி.எம்.நிறுவனத்தார்* பெரு*மகிழ்ச்சி அடைந்தனர்*
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை முதன் முதலாக எம்.ஜி.ஆரை வைத்து இயக்குனர் பி.ஆர். பந்துலு தயாரிக்க, முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக ஜெயலலிதா நடித்தார் . இந்த படத்தில் வரும் பாடல்கள்,*நம்பியாருடன் எம்.ஜி.ஆர். மோதும் வாள் சண்டை காட்சிகள், குறிப்பாக வசன ஆசிரியர் ஆர்.கே.சண்முகம் அவர்களின் வசனம் மிக சிறப்பாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டது . தமிழ் திரையுலகின் முதல் கடற் கொள்ளையர் பற்றிய பிரம்மாண்ட* திரைப்படம் .அரபிக் கடலோரம் உள்ள கார்வார் தீவு அருகில் சுமார் 2 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது .இதில் வரும் கவிஞர் வாலியின் நாணமோ இன்னும் நாணமோஎன்கிற முதலிரவு காட்சியின்* காதல் பாடல், காதல் கனிரசம் சொட்டும் வகையில் தத்துவங்களுடன்* கூடிய ரசனைமிக்க ரொமான்ஸ் பாடலாக*வடிவமைக்கப்பட்டது .இந்த பாடலும் இன்னிசை நிகழ்ச்சிகளில் இந்த காலத்திலும் தவறாமல் இடம் பெறும் பாடலாக திகழ்கிறது .
நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் விவரம் :
1.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே*வா*
2.ஒரு பெண்ணை பார்த்து - தெய்வத்தாய்*
3.நாணமோ*இன்னும் நாணமோ*- ஆயிரத்தில் ஒருவன்*
4.நினைத்தேன் வந்தாய்*நூறு வயது* - காவல்காரன்*
5.ஒரே முறைதான்*உன்னோடு* பேசி பார்ப்பேன்*-தனிப்பிறவி*
6.நல்லது கண்ணே*கனவு*கனிந்தது*-ராமன் தேடிய சீதை*.**
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2020, 08:32 AM
#260
Junior Member
Diamond Hubber
சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?
- எம்.ஜி.ஆர் சொன்ன விளக்கம்
https://www.thaaii.com/?p=37617
“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணித்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்”
- நடிகர் சிவகுமார் நடித்த ‘ரோஜாப்பூ ரவிக்கைக்காரி’ பட வெளியீட்டு விழாவில் பேசியபோது, இப்படிச் சொன்னவர் தமிழக முதல்வரான ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்.
அதே விழாவில் இன்னொன்றையும் சொன்னார் எம்.ஜி.ஆர்.
“சிவகுமாரை நல்ல மனிதர் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. எல்லோரும் மனிதர்கள் தான். ஆனால் நல்லதைச் செய்து, மக்கள் அதைப் புரிந்து கொள்ளுமாறு, அது தெளிவாக விளக்கப்படும்போது தான் அந்த மனிதரை ‘நல்ல மனிதர்’ என்று நாம் குறிப்பிடுகின்றோம்.
தான் சம்பாதித்த பொருளை வேண்டாத விஷயத்துக்குச் செலவழித்து விரயமாக்காமல், அதைச் சேர்த்து வைப்பதில் ஓரளவுக்கு அக்கறை காட்டி, உதவி செய்வதிலும் நல்ல தன்மையைக் காட்டி இங்கே 25,000 ரூபாயைப் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதன் வட்டியிலிருந்து உதவி செய்ய, உருவாக்கித் தந்திருக்கின்ற அந்த நல்ல உள்ளத்தை அவர் பெற்றிருக்கும்போது, நல்ல மனிதர் என்று சொல்லாமலே அந்த அடைமொழி அவருக்குச் சொந்தமாகி விடுகிறது.”
எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26 ஆம் தேதி) அன்று – வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.
“ 25,000 ரூபாயில் ஒரு டிரஸ்ட் அமைத்து பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் திட்டத்தை எனது தாயார் முன்னிலையில் திரு.எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.
சிறுவயதில் திரைப்படங்களும், நாடகமும் பார்க்க வாய்ப்பின்றி வளர்ந்த நான், 14 வருடங்களில் 100 படங்களில் நடித்துள்ளேன்.
பள்ளிக்கூட வசதி, குடி தண்ணீர் வசதி எதுவுமே இல்லாத சிறு கிராமத்தில் பிறந்து எஸ்.எஸ்.எல்.சி படித்துத் தேறிய முதல் மாணவன் நான். ஏதோ ஒரு வெறியில் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓவியக்கலை பயின்று முதல் மாணவனாகத் தேறினேன்.
கத்துக்குட்டியாக நடிப்புலகில் நுழைந்த எனக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர்கள் திரு.எம்.ஜி.ஆரும், திரு.சிவாஜியும்.
அவர்களின் வாழ்க்கைப் பாதையும், கலையுலகச் சாதனைகளுமே எனக்குப் பாடப் புத்தகங்கள்” என்று விழாவில் நன்றி தெரிவித்துப் பேசினேன்.”
கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிற நடிகர் சிவகுமார் தன்னுடைய பெயரில் அறக்கட்டளையைத் துவக்கியது 1979 ஆம் ஆண்டில்.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுவரை அந்த அறக்கட்டளையால் நிதியுதவி கிடைக்கப் பெற்றவர்களில் பலர் கிராமப்புறம் சார்ந்தவர்கள்.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். ஆரம்பத்தில் கொடுத்த தொகையைத் தற்போது விரிவுபடுத்தியிருக்கிறார் சிவகுமார்.
முதலில் +2 தேர்வில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தவர், தற்போது ஐயாயிரம் ருபாய் வரை முதலில் வந்து பத்து மாணவ, மாணவியிருக்குப் பகிர்ந்து அளிக்கிறார்.
அவருடைய வழியில் மகன் சூர்யா “அகரம் ஃபவுண்டேஷன்” தொண்டு நிறுவனத்தைத் துவக்கியவர், தான் சம்பாதிப்பதில் கணிசமான தொகையை திறமையும், கல்வி கற்கும் வேட்கையும் இருந்தும், ஏழ்மையினால் தவிக்கும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து உதவி வருகிறார்.
இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயர்கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் கற்க வழிகாட்டி வருகிறார். அவருடன் தன்னார்வலர்களைக் கொண்ட குழுவும் சேவையுள்ளத்துடன் உதவி வருகிறது.
அகரம் துவக்கப்பட்ட பதினான்கு ஆண்டுகளில் அந்த அமைப்பினால் பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம். இலங்கை அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி உதவி செய்கிறார்கள்.
‘நமது பள்ளி’ சிறப்புத் திட்டம் மூலம் தமிழகம் முழுக்க இருக்கும் சுமார் நானூறு அரசுப் பள்ளிகளைச் சீரமைத்து, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் செய்து கொண்டிருக்கிறது அகரம் அமைப்பு.
இன்னொரு மகனான கார்த்தி ‘விதை’, ‘வழிகாட்டிகள்’ என்ற அமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவுகிறார்.
தமிழ் வழியில் படித்த மூவாயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இவர்கள் உதவுகிறார்கள். கல்வியை முடித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்கிறார்கள்.
இப்படி 1300 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ‘சிகரம்’ என்ற திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சியையும் அளித்து மாணவர்களை எந்தப் பணிக்கும் ஏற்றவர்களாக உயர்த்தியிருக்கிறார்கள்.
அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று 50 பேர் வரை அரசுப் பணிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
‘இணை’ என்ற திட்டத்தின் மூலம் கல்விக்கான மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ என்ற திட்டத்தைத் துவக்கி வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.
அரசின் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என்று சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருங்கிணைப்பினால் தான் இந்தத் திட்டங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்றாலும், இதற்கான துவக்க ‘விதை’ நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட பண்பும், சமூக அக்கறையும் தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி தொடர்பான விழாவில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார் சிவகுமார்.
“ஒழுக்கம் மற்றும் கல்வி இரண்டும் இருந்தால், எங்கிருந்தாலும் ஜெயித்து விடலாம்.
தமிழக மக்கள் கடவுள். அந்த மக்களுக்கு நாம் ஏதாவது பண்ணனும் இல்லையா? ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும்போது, அது பலருக்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளையைத் துவக்கினேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் போல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.”
அவருடைய கனவு மெய்ப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய குடும்பத்தினர் மூலம் மேலும் விரிந்து வேர் விட்டுக் கிளை பரப்பியிருக்கிறது. திறமையும், படிக்கும் வேகமுள்ளவர்களுக்குக் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று கல்வியை ஏழ்மையானவர்களுக்கு அளிப்பதைப் பற்றிச் சொல்லியிருப்பார் பாரதி.
அந்த மகாகவியின் வரிகளை விட, மூத்த நடிகரும், பேச்சாளருமான சிவகுமாரின் செயல்பாட்டை உணர்ந்து, வேறென்ன மேன்மையான சொல் சொல்லிவிட முடியும்?
“பத்து மாதம் என்னைத் தாங்கிப் பெற்று வளர்த்து ஆளாக்கி வளர்த்த தெய்வம் என்னோடு இருப்பதைத் தவிரப் பெரிது வேறொன்றுமில்லை என்று கருதும் சிவகுமார் என்றுமே மகிழ்வோடு இருப்பார். என்றுமே மன நிறைவோடு வாழ்வார்.
என்றுமே புகழுக்குச் சொந்தக்காரராக இருப்பார்” என்று அன்று சிவகுமாருக்கு முன்னால், மக்கள் திலகம் வாழ்த்தியதை விட, வேறு எந்த விதத்தில் உயர்வாக வாழ்த்திவிட முடியும்?...
Bookmarks