-
17th December 2020, 02:10 PM
#1481
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே வா டிஜிட்டல் வெளியீடு அரங்குகள் தொடர்ச்சி........ ( 18/10/20 வெள்ளி முதல் )
------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை*- சினிப்பொலிஸ் ,பி.எஸ்.ஆர். மால், ஓ.எம்.ஆர் .* துரைப்பாக்கம்* * * தினசரி மாலை 6.15 மணி*
* * * * * * * * * * ஐநாக்ஸ் , மெரினா*மால்,* ஓ.எம்.ஆர். -தினசரி பிற்பகல் 3.15 மணி*
* * * * * * * * * * *பி.வி.ஆர்.- எஸ்.கே..எல்.எஸ்.காலக்சி மால், ரெட்*ஹில்ஸ்*
* * * * * * * * * * *தினசரி* மாலை 6.30 மணி*
* * * * * * * * * * *எஸ்கேப் -எக்ஸ்பிரஸ் மால், ராயப்பேட்டை*
* * * * * * * * * * *தினசரி பிற்பகல் 12.15 மணி*
* * * * * * * * * * பலாஸோ*,விஜயா*போரம் மால், வடபழனி ,
* * * * * * * * * *தினசரி மாலை 6 மணி*
* * * * * * * * * *பரங்கிமலை*ஜோதி -தினசரி பிற்பகல் 2.30 மணி /இரவு 10 மணி*
* * * * * * * * * லக்ஸ்*சினிமாஸ் - தினசரி இரவு 7.10 மணி*
* * * * * * * * *பி.வி.ஆர். ,அம்பா*மால், நெல்சன் மாணிக்கம் சாலை*
* * * * * * * * *தினசரி பிற்பகல் 3.10 மணி*
* * * * * * * * *சத்யம்*சினிமாஸ் -தினசரி பிற்பகல் 3 மணி*
* * * * * * * * உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ் -தினசரி பிற்பகல் 3 மணி /மாலை 6.30மணி*
* * * * * * * * *
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2020 02:10 PM
# ADS
Circuit advertisement
-
17th December 2020, 04:18 PM
#1482
Junior Member
Platinum Hubber
தென் மாவட்டங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பே வா டிஜிட்டல் வெளியீடு தொடர்ச்சி ...............(18/12/20 முதல் )
------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி -கே.எஸ்.பி.எஸ். கணபதி*
கோவில்பட்டி -லட்சுமி*
நாகர்கோவில் - வள்ளி*
தென்காசி*- பி.எஸ்.எஸ். காம்ப்ளக்ஸ்*
ஆலங்குளம்*- டி.பி.வி. காம்ப்ளக்ஸ்*
சங்கரன் கோவில்*- கீதாலயா*
சுரண்டை*- கவிதா*
சாத்தான்குளம் - லட்சுமி*
புளியம்பட்டி - மீனாட்சி*
அம்பாசமுத்திரம் - பாலாஜி*
தகவல் உதவி :நெல்லை திரு.வி.ராஜா .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2020, 04:35 PM
#1483
Junior Member
Platinum Hubber
மாலை மலர் - 16/12/20
---------------------------------------
எம்.ஜி.ஆர். வேடம் குறித்து*நடிகர்*அரவிந்த்சாமி நெகிழ்ச்சி .
------------------------------------------------------------------------------------------------
*இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி , பாலிவுட் நடிகை கங்கனா* ரனாவத் , சமுத்திரக்கனி, பூர்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி.* ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை கூறும் படமாக*தலைவி படம் அமைந்துள்ளதால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் .
இந்தப்படத்திற்காக புரட்சி தலைவரின் அழகையும், வசீகரத்தையும் முடிந்த அளவிற்கு நெருக்கமாக என்னிடம் அந்த* * *வித்தையை* கடைசி முறையாக கொண்டு வரும் ரஷீத் சாருக்கு எனது நன்றி என* நடிகர் அரவிந்த்சாமி**தெரிவித்துள்ளார் .**
Last edited by puratchi nadigar mgr; 17th December 2020 at 04:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2020, 04:51 PM
#1484
Junior Member
Platinum Hubber
துக்ளக் வார இதழ் - 23/12/20
----------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாட்டு பாடிய மத்திய பிரதேச முதல்வர்*
சிவராஜ் சிங் சவுகான்*
----------------------------------------------------------------------------------------------------------
பா. ஜ.க.வின்* தமிழக தலைவர் திரு. முருகன் 6/11/20;ல்* திருத்தணியில் துவக்கிய வேல் யாத்திரை* 07/12/20ல் திருச்செந்தூரில் நிறைவடைந்தது . யாத்திரையின் நிறைவு விழா திருச்செந்தூரில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது ..
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விழாவிற்கு தமிழர்கள் பாணியில்*வேஷ்டி, சட்டை துண்டுடன் , வந்தார் .* தமிழில் வணக்கம் சொல்லி பேச்சை துவக்கிய அவர் , மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படகோட்டி பட பாடலை பாடி அசத்தினார் . கொடுத்ததெல்லாம் கொடுத்தான் , அவன் யாருக்காக கொடுத்தான் ,ஒருத்தருக்கா கொடுத்தான் , இல்லை ஊருக்காக கொடுத்தான் .என்று அவர் பாடியதும் , கூட்டத்தில் பலத்த கைதட்டல்கள் விழுந்தனவாம்
Last edited by puratchi nadigar mgr; 17th December 2020 at 04:54 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th December 2020, 09:37 AM
#1485
Junior Member
Diamond Hubber
அஇஅதிமுக., செய்யத் தவறியதை.. கையில் எடுத்த ரஜினி, கமல், பாஜக.
சென்னை: அதிமுக செய்யாததை, பாஜக, கமல், ரஜினி என வேற்று கட்சிக்காரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆம்.. "எம்ஜிஆர் அரசியலை" கையில் எடுத்துள்ளனர் இவர்கள் எல்லாரும்..!
தமிழக அரசியல் வரலாற்றிலேயே கரீஷ்மா என்று சொல்வார்களே, அது எக்கச்சக்கமாக கொட்டி கிடந்தது எம்ஜிஆரிடம்தான்.. எம்ஜிஆருக்கு பிறகு இப்படி ஒரு வசீகர தலைவரை இந்த தமிழ்நாடு பார்த்ததில்லை.(இனிமேலும் பார்க்க, முடியாத இயலாத சூழ்நிலை)
கொள்கைகள், திட்டங்கள், அதிரடிகள் இருந்தாலும், எம்ஜிஆரை கடைசிவரை மக்கள் மனசில் நிறைந்திருக்க காரணம் அவரது தோற்றம்தான்!
தன் பிம்பத்திற்கு மவுசு இருக்கிறது என்று எம்ஜிஆருக்கு அன்றே தெரிந்தாலும், அதற்காக அரசியலை அசால்ட்டாக அவர் நடத்தவில்லை.. கணக்கு போட்டுதான் தன் வெற்றியை ஒவ்வொரு முறையும் நிரூபித்தார்.. சொல்லி சொல்லியே எதிர்க்கட்சிகளை திணறடித்தார்.. 10 வருட ஆட்சி காலத்தில் எத்தனையோ விமர்சனங்களை எம்ஜிஆர் சுமந்தாலும் அத்தனையையும் முறியடித்துவிட்டுதான் எம்ஜிஆர் ஓய்ந்தார்!
ஆளுமை
அதனால்தானோ என்னவோ, எம்ஜிஆரின் ஆளுமை, அவரது சிறப்புகள், தொடர்ந்து 3 முறை பெற்ற மகத்தான வெற்றி போன்றவைகளை முன்னிறுத்தியே, அவருக்கு பின் வருபவர்கள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.. இதில் ஜெயலலிதா முதல் வெற்றியை பெற்று, எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துக்கு பிறகு, அம்மா என்ற மூன்றெழுத்தில் நிலைகொண்டுவிட்டார்.
மூன்றெழுத்து
அதற்காக கமல், ரஜினி, பாஜக போன்ற மூன்றெழுத்துக்களும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சத்தியமாக யாருமே எதிர்பார்க்கவில்லை.. விஜயகாந்த்தை கூட, நடிக்கும்போதே கறுப்பு எம்ஜிஆர் என்று சொன்னார்கள்.. இதற்கு காரணம் நடிப்பு இல்லை, விஜயகாந்தின் மனசுதான்.. அந்த வள்ளல்குணம்தான்.. அதனால்தான், எம்ஜிஆர் போலவே விஜயகாந்தும் நல்லாட்சி என்று மக்கள் நினைத்து, மாஸ் வெற்றியை ஆரம்ப காலங்களில் தந்தனர்.
கமல்
இப்போது தேர்தல் நெருங்கி வருகிறது.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மதுரையை இரண்டாம் தலைநகராக்கும் எம்ஜிஆரின் ஆசை, தனது ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று சொல்லி உள்ளார்.. தனது திட்டத்துக்கும் நாளை நமதே என்று பெயர் வைத்திருக்கிறார்.. சின்ன வயசில் நாளை நமதே படத்தில் கமல் நடிக்க வேண்டி இருந்ததாம்.. ஆனால், அது முடியாமல் போகவும், கட்சிக்குள்ளாவது இந்த பெயர் இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டு வைத்துள்ளார். "நான் அவர் மடியில் வளர்ந்தவன்... நினைவிருக்கட்டும்" என்று ட்வீட் போட்டு அதிமுக, அமமுக தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தி விட்டுள்ளார்.
ரஜினி
ரஜினியும் எம்ஜிஆரை விட்டுவைக்கவில்லை.. "அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி... அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்.. இன்னைக்கு நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவே அவர்தான் முக்கிய காரணம்.. அவர் சிபாரிசு செய்துதான் என் கல்யாணம் நடந்தது" என்று ஒரு விழாவில் பேசியிருந்ததை அதிமுக சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையேதான் லீலா பேலஸ் ஓட்டலிலும் சொன்னார்.
பாஜக
இவர்களாவது பரவாயில்லை, எம்ஜிஆருடன் ஏதோ ஒரு தொடர்பில் இருந்தவர்கள், சினிமாவில் பயணித்தவர்கள்.. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பாஜக இதில் நுழைந்து, எம்ஜிஆரை தன் பக்கம் வாரிக் கொண்டது, மொத்த தமிழ்நாட்டிற்குமே ஆச்சரியத்தை தந்தது.. ஆச்சரியம் என்று சொல்வதைவிட, திருவள்ளுவர் முதல் பாரதியார் வரை விட்டுவைக்காத பாஜக, எம்ஜிஆரை மட்டும் ஏன் சொந்தம் கொண்டாடியது என்ற குழப்பம்தான் அதிகமாக இருந்தது. வேல் யாத்திரை கொடியில் எம்ஜிஆர் இருந்ததுதான் ஹைலைட்!
சந்தேகம்
நியாயப்படி பார்த்தால், இதையெல்லாம் அதிமுகதான் செய்ய வேண்டும்.. இந்த 4 வருடகாலமாக, "மாண்புமிகு அம்மாவின் ஆட்சி..." என்று சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், எம்ஜிஆர் பெயரை அவ்வளவாக உச்சரிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.. ஒருவேளை இவர்கள் உச்சரிக்க தவறியதால், மற்றவர்கள் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி கொள்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.
மறக்க முடியவில்லை
தங்கள் அதிமுக நிகழ்ச்சிகளில், ஒருசில அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தவிர எம்ஜிஆரை பற்றி பேசுவதும், நினைவுகூர்வதும் குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.. ஆனால் மற்றவர்கள் எம்ஜிஆரிடம் நெருங்கினால், அதை மட்டும் அதிமுகவால் ஜீரணிக்கவும் முடியவில்லை.. உண்மையிலேயே எம்ஜிஆர் யாருக்கு சொந்தம்? தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மறக்கடிக்கப்பட்டு விடுவாரா? என்று சொல்ல தெரியவில்லை.. ஆனால் இறந்து 33 வருஷமாகியும் எம்ஜிஆர் பளிச்சென ஜொலித்து கொண்டே இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது!!
கட்டுரை-Hema Vandhana-நன்றி..........
-
18th December 2020, 09:38 AM
#1486
Junior Member
Diamond Hubber
அகில உலக அரசியல் பொது வாழ்வில் தன் வியர்வை சிந்தி பசி பட்டினி கிடந்து நினைத்த இடத்தை திரை உலகில் அடைந்த பிறகும்..
சின்ன நடிகர் ஆக வந்து பின் புரட்சிநடிகர் ஆக உருவெடுத்து....தான் சார்ந்த தொழிலில் இருக்கும் போது தான் ரத்த கண்ணீர் விட்டு உழைத்து சம்பாதித்த பொன் பொருளை அடுத்தவருக்கு கொடுக்கும் போது முகம் வாடாமல் சிரித்து கொண்டே வழங்கிய ஒரே ஒப்பற்ற வள்ளல்.
திரையுலகம் உச்சம் தொட்டு பொது வாழ்வு அரசியலில் பலர் உச்சம் தொட காரணம் ஆக இருந்து...
நானே எல்லாம் என்று ஒரு இடத்தில் கூட தன் பெருமை பேசாமல்
முதுகில் குத்திய ஒருவரை வீழ்த்த வேண்டும் நீங்கள் என்று தமிழ்நாடே ஆணையிட.... அதன் பின் அரியணை தான் ஏறி அதற்கு பின்னும் பலரை அரியணை ஏற்றி..
தான் மறையும் நாட்கள் முன்பே தான் சம்பாதித்த சொத்துக்களின் பெரும் பகுதியை இந்த நாட்டு மக்களுக்கு என்று எழுதி வைத்த தலைவர் பொது வாழ்வில் எவரும் எங்கும் உண்டா என்று ஊர் எங்கும் நாடெங்கும் உலகெங்கும் தேடியும் ஒருவரும் இல்லை.
அவரை போல நாங்களும் வருவோம் என்று சொல்லும் அனைவருக்கும் ஒரே விண்ணப்பம்.
அவரை போல நீங்கள் உழைத்து சம்பாதித்த பெரும் சொத்துக்களை அவரை போல கண் காது உடல் குறை பாடு உள்ளவர்கள் முன்னேற்றத்துக்கு எழுதி வைத்து விட்டு வருவீர்களா?.
பாவிகள் பலர் வாழும் இந்த உலகில் பாவம் நீங்கள் அவர் பெயரை சொல்வதில் மகிழ்ச்சியே எங்களுக்கு....
உங்களை நோக்கி எங்கள் எதிர்வினை என்றும் இல்லை .உங்களுக்கு ஒரு சின்ன யோசனை மட்டுமே...
சின்ன குழந்தை போல மனம் எங்கள் தலைவருக்கு...படமே சாட்சி..ஒரு தொப்பியை ஒரு கடையில் பார்த்து ரசித்து வாங்கி உடனே தலையில் போட்டு கொண்டு நடந்து வரும் இளகிய மனம் கொண்ட எங்கள் எம்ஜிஆர் போல ஒருவர்
இந்த உலகில் மீண்டும் அவரை போல ஒருவர் தோன்றுவது அரிது அரிது..
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன் நன்றி..நன்றி..தொடரும்
படத்தில் தலைவர் அள்ளி அள்ளி கொடுப்பதை என்றும் தடுக்காத ராமன் தேடிய ஜானகி ...அவர்கள்....nm...
-
18th December 2020, 09:39 AM
#1487
Junior Member
Diamond Hubber
" மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.
ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.
ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.
அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."
##கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!..........gdr...
-
18th December 2020, 09:41 AM
#1488
Junior Member
Diamond Hubber
உ...த்தமன். பதிவு 2
-----------------------------------
இந்த தொடர், டைரி எழுதும் பழக்கம் இல்லாததால், முழுக்க முழுக்க என் ஞாபக சக்தியின் அடிப்படையில் எழுதுவதால் ஒரு சில தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காரனேஷன் தியேட்டரில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுகிறதென்றால் அது மிகுந்த ஆச்சர்யமான விஷயம். ஆனால் ஜோஸப் தியேட்டர் அப்படி அல்ல. கொஞ்சம் பெரிய படங்களை வெளியிடுவார்கள். ஆனால் அய்யன் படத்தை நன்றாக ஓட்டுவார்கள் என்பதால் கைஸ்களுக்கு ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். ஏதாவது அய்யன் படம் ஜோஸப்பில் வெளியானால் படம் ஓரளவு ஓடினால் போதும்,கைஸ்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடும்.
பின்னர் எளிதில் 50 நாட்களை கடத்தி விடுவார்கள். ஆனால் 50 வது நாளிலேயே கடைசி போட்டு விடுவார்கள். தியேட்டரிலேயே காபி, டீ ஸ்டால் என்று ஒன்று இருக்கும். அதை காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் தினசரி வாடகையை தியேட்டர் காரர்களுக்கு கட்ட வேண்டியதிருக்கும். அதனால் தியேட்டரில் குறைந்த பட்சம் 200 பேராவது இருந்தால்தான் ஸ்டால் நடத்த முடியும். அப்படியும் அய்யனின் 1964 ல் வெளியான அய்யனின் சொந்த கலர் படம் ஒன்றை 50 நாட்கள் ஓட்ட முயன்றனர்.
அன்றைய கால கட்டத்தில் தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள் போட்டாலும் ஒரே வாரத்தில் அதாவது 10 அல்லது 11 வது நாளோடு மாட்னி காட்சியை ரத்து செய்து விட்டு தினசரி 2 ஞாயிறு 3 காட்சிகள் ஆக்கி விடுவார்கள். அய்யனின் படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இரவு 10 மணி காட்சிக்கு ஆட்கள் வருவது மிகவும் சிரமமான விஷயம். அந்த படத்திற்கு 3வது வாரத்திலிருந்து இரவுக்காட்சிக்கு 50 பேர்களுக்கும் குறைவாக வருகை இருந்ததால் ஸ்டால் நடத்துபவருக்கு கட்டுபடியாகவில்லை. அவர் ஸ்டாலை அடைத்து விட்டு சென்று விட்டார்.
அதை பேப்பரில். பெட்டி செய்தியாக போட்டு விட்டார்கள்.
ஜோஸப் தியேட்டரில் பீடா கடை அடைப்பு என்ற தலைப்பில் செய்தியை போட்டு விட்டு படத்தின் பெயரை குறிப்பிடவில்லை. எங்கள் ஊரில் இரவுக் காட்சிக்கு வருபவர்களில் ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் மிகவும் சொற்பமாகவும்தான் வருவார்கள். அதிலும் ஆண்கள் வேலைக்கு போய் விட்டு இரவுக் காட்சி சினிமாவுக்கு செல்பவர்களே அதிகம். பொதுவாக எம்ஜிஆர் படம் ஒன்றுதான் இரவுக் காட்சி ஓரளவு நிறைந்து காணப்படும்.
ம கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் ரசிகர்கள் அங்கே உள்ள பீடா கடையில் ஏதாவது வாங்கி விட்டு என்னண்ணே படம் எப்படி போகுது என்று கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
அதனால் எம்ஜிஆர் படம் போட்டால் 2 வது காட்சிக்கு எப்படியாவது கூட்டம் வந்து விடும் என்பதால் ஸ்டால் உரிமையாளர்கள் அதையே விரும்புவார்கள். அதனால் அடிக்கடி வரும் எம்ஜிஆர் ரசிகர்கள் ஸ்டால் நடத்துபவரிடம் நட்பாக பழகுவார்கள்.
அவர்கள் மூலமாக அடுத்த படம் என்ன? எப்போது வெளியாகும் என்பதையும் தெரிந்து வெளியே சொல்வார்கள். ஜோஸப் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய படமென்றால் அது எம்ஜிஆரின் "மாட்டுக்கார வேலன்"தான். "எங்க மாமா" முதல் வெளியீட்டில் வெளிவரவில்லை.
"வேலனின்" ஆவேசத்தை கண்டு பதுங்கிய"மாமா" 2 மாதம் கழித்தே பாலகிருஷ்ணாவில் திரைக்கு வந்ததுடன் 15 நாளில் வேறு ஊருக்கு தூக்கி வீசப்பட்டார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் அலாவுதீன் கில்ஜி குத்திட்டீயில் சிக்கிய மங்கோலிய மன்னனின் தலை மாதிரி வி.சி.அய்யனின் படங்கள் புரட்சி நடிகரின் படங்களோடு மோதி முதலை இழந்ததுதான் மிச்சம். வெள்ளம் வருகிறது தெரிந்து எவனாவது வெள்ளாமை வைப்பானா? இந்த புறமுதுகு காயங்கள் புரையோடிய வைராக்யமாக மாறி "உ....த்தமனி"ன்
களப்பணிக்கு வித்திட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..
"மாட்டுக்கார வேலன்" இங்கு 76 நாட்கள் ஓடியது. இறுதி வரை தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகளாக ஓடியது ஒரு மிகப் பெரும் ஆச்சர்யமே. 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை திடீரென்று காவல்துறை உதவியுடன் தூக்கி விட்டு அடுத்து ஒரு பழைய படத்தை திரையிட்டார்கள். முதல் நாளும் இறுதி நாளும் காவல்துறை உதவியுடன் ஓடிய ஒரே படம் "மாட்டுக்கார வேலன்தா"ன். ஆனால் "மாட்டுக்கார வேலன்" கடைசி நாளன்று ஹவுஸ்புல் அளவுக்கு கூட்டம் இருந்தது. மறுநாள் திரையிட்ட படத்துக்கு மிகவும் சொற்பமாகவே கூட்டம் வந்தது குறிப்பிடத்தக்கது..
தொடர்ந்து பேசுகிறேன்...........ksr.........
-
18th December 2020, 09:42 AM
#1489
Junior Member
Diamond Hubber
எம்ஜியாரை நெருங்க முடியாமல் திணறும் தமிழ் ஹீரோக்கள்..!! தலைவர் மறைந்தாலும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை..!!

மக்கள் திலகம் , புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் நடிப்பில், மக்கள் புகழில் அவரை மிஞ்சும் அளவிற்கு இன்னும் தமிழித்திரையில் கதாநாயகர்கள் உருவாகவில்லை என்ற நிலையே உள்ளது. எம்ஜிஆர் நடித்து பெயர் வாங்கிய தலைப்புகளை தங்கள் படத்திற்கு வைப்பதில் இளம் கதாநாயகர்களிடேயை கடும் போட்டி நிலவுவதே இதற்கு காரணம்.
அசுரன் படத்தை முடித்த கையோடு இயக்குனர் சுப்புராஜ்ஜின் மற்றொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதி லண்டனில் படமாக்கப்பட இருக்கிறது. அப் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. எம்ஜிஆர், லதா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பெரும் சாதனை நிகழ்த்திய பெருமை இப்படத்திற்கு உண்டு. இந்த படத்தின் தலைப்பை பெறும் முயற்ச்சியில் தனுஷ் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே. எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், என்ற பெயர்களில் படங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் எங்கள் வீட்டுப் பிள்ளை என்ற பெயரை நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது எனவே இடையில் படத்தின் பெயரை நம்ம வீட்டு பிள்ளை என்று அவர்கள் பெயர்மாற்றிவிட்டனர். 
இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் தலைப்பை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அது குறித்து கூறிய தயாரிப்பாளர் சாய் நாகராஜ், எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை டிஜட்டலில் புதிப்பித்து வருகிறோம் விரைவில் படம் புதுப்பொலிவுடன் திரைக்கு வர உள்ளது என்றார். படத்தின் உரிமை தன்னிடத்தில் உள்ளது அதை யாருக்கும் எப்போதும் தரமாட்டேன் என்று அவர் காராரக கூறியுள்ளார் இந்த நிலையில் தனுஷ் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற தலைப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னதான் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் மக்களின் இதயங்களை வென்ற எம்ஜிஆரின் பெயரைச் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டும் அளவில்தான் தமிழ்த் திரை ஹீரோக்கள் உள்ளனர். எம்ஜிஆர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் உச்சத்தை நெருங்க கதாநாயகர்கள் இன்னும் பிறக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது....dev...
-
18th December 2020, 09:43 AM
#1490
Junior Member
Diamond Hubber
உ.சு.வா. படம் பற்றி... அன்றைய தி.மு.க. அரசு சிவகாசியில் போஸ்டர்கள் அடிக்க கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் ஒரு உழைப்பாளி தந்த ஐடியா தான் ஸ்டிக்கர் மூலமாக விளம்பரங்கள் செய்யலாம் என்பது.. அந்த ஸ்டிக்கரில் தான் நமது புரட்சி தலைவர் மஞ்சள் நிற ஆடையுடன் ஒரு தொப்பி போட்டுக் கொண்டு தனது வலது கையினைத் தூக்கிக் கொண்டு கொடுத்த போஸ் பிரிண்ட் ஆகியிருந்தது.. அதேபோல் படத்தின் பிரிண்ட்கள் மும்பையில் தான் போடப்பட்டது. அதை விமானத்தில் கொண்டு வருவதாக செய்திகள் பரப்பிவிட்டு சாதாரணமாக ரயில் மூலமாக தமிழகம் வந்தது. தி.மு.க. குண்டாஸ் விமானம் மூலமாக வந்த படப்பெட்டியில் உள்ள ஃபிலிம் ரோல்களை இடை மறித்து எரித்தது ஒரு கேவலமான சரித்திரம். நமது புரட்சித்தலைவர் அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையில் இவ்வாறு கூறியிருந்தார். அதாவது ' இந்த படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனங்கள் வரட்டும்.. எனக்கு கவலையில்லை.. ஆனால் 50 பைசா கட்டணத்தில் என் நாட்டு மக்கள் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளைப் பார்க்கும்போதும் அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி ஒன்றே போதும் எனக் கூறியதுதான் அவரது உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது...Dvn...
Bookmarks