-
11th February 2021, 11:05 AM
#1911
Junior Member
Diamond Hubber
1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில் உருவாக்கி ஏற்றி பெருமைப்பட்டவர்களும் தொண்டர்கள்தான்.
திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று தந்து இரட்டை இலைச் சின்னத்தை வெற்றி சின்னமாக்கியவர்களும் அ.தி.மு.க.தொண்டர்கள்தான்.
இதை மனதில் வைத்தோ என்னவோ எம்.ஜி.ஆர். ஒரு கூட்டத்தில் மேடையிலிருந்த தலைவர்களை கைநீட்டி சுட்டிக்காட்டி; இவர்களைவிட எதிரில் இருக்கும் தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம் என்று வெளிப்படையாகச் சொன்னார்.
தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பாரபட்சமில்லாமல் முழுக்க நம்பிக்கையுடன் தன்னை உயர்த்திய தொண்டர்களுக்கு அவர் எப்பொழுதுமே முதல் மரியாதை கொடுத்து வந்தார்.
கடைசிக் காலக் கட்டத்தில் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மாநாட்டில் கூட தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற கவனத்தோடு அவர் பேசிய பேச்சு சர்ச்சையை உருவாக்கியது என்றாலும், அந்தளவுக்குத் தொண்டர்கள்மேல் பரிவுடன் இருந்தார் மக்கள் திலகம்.
அதே மாநாட்டில் அவருக்கு வெள்ளிச் செங்கோலை வழங்கியதும்கூட கழகத்தின் முன்னணி தொண்டர் ஒருவர்தான்.
இந்தளவுக்கு தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை....
-
11th February 2021 11:05 AM
# ADS
Circuit advertisement
-
11th February 2021, 11:06 AM
#1912
Junior Member
Diamond Hubber
#தமிழ்_என்னை_வளர்த்தது- #எம்ஜிஆர்.
ஒவ்வொருவருக்கும் அவரது தாயின் மொழியே அவருக்கும் உரிமையான மொழியாகும். எனது தாய் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் பேசிய மொழி மலையாளம். அப்படியானால் நான் பேசவேண்டிய மொழியும் அந்த மலையாள மொழியாகத்தான் இருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை ஒரு விசித்திரமான நிலைமை. எனது காதுகள் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றபோது கேட்ட ஒலி தமிழின் ஒலி ஆகும். என் கண்கள் முதன் முதலில் பார்க்கவும், படிக்கவும் வாய்த்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே.
என்னை சுற்றியிருந்த பழக்க வழக்கங்கள் எனக்கு சொன்னவை எல்லாம் தமிழ் பண்பாட்டின் நிழல் ஆட்டங்களைத் தான். பண்பாட்டு தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இப்படி எங்கு பார்த்தாலும், கேட்டாலும், படித்தாலும், பேசினாலும் தமிழ்தான். வாழும் முறையில் கூட தமிழ், தமிழ் என்ற நிலைமைக்குள், வட்டத்துக்குள், முட்டைக்குள் குஞ்சாக இருந்தேன்.
வெளியில் வந்த பிறகும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருக்கிற நிலையில் தான் வளர்ந்தேன். இத்தகைய சூழலில் நான் எப்படி வளர்ந்து இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளத்தான் வேண்டுமா?
நான் தமிழ் பாடல்களை கேட்டு மனம் பூரித்து அந்த கவிதை நயத்தை பற்றி திறனாய்வு செய்து மகிழ்வேன். ஆனால் மலையாள மொழியில் பாண்டித்தியம் (புலமை) இல்லை.
("எம்.ஜி.ஆர். எழுத்தும், பேச்சும்" என்ற நூலில் குமாரவேல்)
கோவை எம்.எஸ்.சேகர் எழுதி #இதயக்கனி பிப்ரவரி 2021 இதழில்
இடம் பெற்றது.............vrh
-
11th February 2021, 11:06 AM
#1913
Junior Member
Diamond Hubber
M.g.r.தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்!
1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசு மாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!
‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.
இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.
புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.
தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.
கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப் பட்டதுதான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
தமிழறிஞர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!
தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.
உலகில் உள்ள எத்தனை மொழி களுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.
அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. தேவநேயப் பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!
அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!...vrh
-
11th February 2021, 11:07 AM
#1914
Junior Member
Diamond Hubber
கண்ணதாசனின் கருத்து
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
Advertisement
report this ad
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.
செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.
1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.
பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.
கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.
இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.
ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.
மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.
இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!
வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.
ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.
காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.
(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)
இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.
இப்படக் கதை செல்லும்.
பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.
மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.
சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.
தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.
இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.
அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.
படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!
வாருங்கள்!
(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)
நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}
இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….
நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!
சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.
நரசப்பன்: அரசே!
சொக்கன்: போவாயாக.
(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)
பொம்மண்ணன்: மன்னா!
சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.
பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.
சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.
{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}
இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.
ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!
பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.
திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!
வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!
அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?
‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!
திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!
வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!
பார்த்தீர்களா! படித்தீர்களா?
நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!
இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?
இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.
மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே....dvr
-
11th February 2021, 11:08 AM
#1915
Junior Member
Diamond Hubber
#இதுதான் #மாஸ்
பல வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்...
"கொழும்புவில் உள்ள ஆங்கிலப்படம் மட்டுமே காட்டப்படும் அரங்கில் ஒரு பிரபலமான ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது...
இடைவேளையில் ஒரு படத்தின் ட்ரைலர் காட்டப்படுகிறது...
திரையில் தெரிவது.. #ஸ்கூட்டரின் #ஆக்சிலேட்டரை #முறுக்கும் #ஒரு #கரம் #மட்டுமே...
அந்த சில நொடிக் காட்சிக்காக...
அப்போதே ரசிகர்களின் #கரஒலியும், #விசிலும் காதைக் கிழித்தன...
காட்டப்பட்ட பொற்கரம் வாத்தியாருடையது..(இதிலென்ன ஆச்சரியம்ங்கறீங்களா ???)
வாத்தியார் சீனுக்கு கரகோஷங்கள் ஒன்றும் புதிதில்ல. இருப்பினும்,
இதில் வியப்பென்னவென்றால், கரகோஷம் எழுப்பிய அனைவருமே "#சிங்களர்கள்..."!!!...bsm...
-
11th February 2021, 08:33 PM
#1916
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*
ஒளிபரப்பாகிய பட்டியல்* (11/01/21* முதல்* 20/01/21* வரை )
----------------------------------------------------------------------------------------------------------------------------------
11/01/21 -சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*
* * * * * * * ராஜ் -பிற்பகல் 1.30 மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*
* * * * * * *பாலிமர் -பிற்பகல் 2 மணி -சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * பெப்பேர்ஸ் -பிற்பகல் 2.30மணி- தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * முரசு டிவி -பிற்பகல் 3.30 மணி -கொடுத்து வைத்தவள்*
12/01/21-ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - மதுரை வீரன்*
* * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - திருடாதே*
* * * * * சன் லைப் - மாலை 4 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - ஆனந்த ஜோதி*
13/01/21- சன் லைஃ - காலை 11 மணி - நல்ல நேரம்*
* * * * * * * ராஜ் டிவி - பிற்பகல்* .1.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * பெப்பெர்ஸ் -பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * *சன்* லைப்-* மாலை 4 மணி - சந்திரோதயம்*
* * * * * * புது யுகம் - இரவு 7 மணி - என் கடமை*
15/01/21- சன் லைப் - காலை 11 மணி -நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * முரசு -மதியம் 12மணி/இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * *மீனாட்சி - மதியம் 12 மணி -விவசாயி*
* * * * * * *மீனாட்சி - இரவு 9 மணி - வேட்டைக்காரன்*
16/01/21-பாலிமர் - இரவு 11 மணி -நீதிக்கு பின் பாசம்*
17/01/21- ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -ஒரு தாய் மக்கள்*
* * * * * * * *ஜெயா மூவிஸ் -காலை 10 மணி - பணம் படைத்தவன்*
* * * * * * * சன் லைப் -காலை 11 மணி - என் கடமை*
* * * * * * * மெகா டிவி - மதியம் 12 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * * மீனாட்சி -மதியம் 12 மணி -நல்ல நேரம்*
* * * * * * *டி. திரை எஸ்.சி.வி.-பிற்பகல் 12.30 மணி -எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 2.30 மணி -உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * *மெகா 24-பிற்பகல் 2.30 மணி -வேட்டைக்காரன்*
* * * * * *ஜெயா மூவிஸ் -மாலை 4மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * * மெகா 24 -மாலை 6 மணி - நல்ல நேரம்*
* * * * * * டி.டி.வி. - மாலை 6 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி- இதய வீணை*
* * * * *புது யுகம் டிவி- இரவு 7 மணி -* நல்ல நேரம்**
* * * * * டி.திரை எஸ்.சி.வி.-இரவு 8 மணி - அடிமைப்பெண்*
* * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி -* குமரிக்கோட்டம்*
* * * * * *பாலிமர் -இரவு 11 மணி - ராமன் தேடிய சீதை*
18/01/21-சன்* *லைப்- காலை 11 மணி - எங்கள் தங்கம்*
* * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - என் அண்ணன்*
* * * * * * வஸந்த் - இரவு 7.30மணி - படகோட்டி*
* * * * * * மூன் டிவி - இரவு* 8 மணி - வேட்டைக்காரன்*
19/01/21- ராஜ் டிவி -பிற்பகல் 1.30மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * *புது யுகம் - இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*
20/01/21-சன் லைப்- காலை 11 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*
* * * * * * வசந்த் டிவி -இரவு 7.30 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * *பாலிமர் - இரவு 77 மணி - தாய் சொல்லை தட்டாதே**
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2021, 08:52 PM
#1917
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
ஒளிபரப்பான*பட்டியல் 9 21/01/21 முதல் 31/01/21 வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------------
21/01/21-சன் லைப் - காலை 11 மணி - கண்ணன் என் காதலன்*
* * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - நாடோடி மன்னன்*
* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நவரத்தினம்*
* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*
22/01/21-சன் லைப்- காலை 11 மணி - என் அண்ணன்*
* * * * * * *முரசு -மதியம் 12மணி /இரவு 7மணி-தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * *மெகா டிவி -பிற்பகல் 1.30 மணி - படகோட்டி*
* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * *மெகா 24-பிற்பகல் 2.30 மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * சன் லைப்- மாலை 4 மணி - புதிய பூமி*
23/01/21-மீனாட்சி - பிற்பகல் 1 மணி -வேட்டைக்காரன்*
25/01/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * சன் லைப்- காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * பாலிமர் டிவி- இரவு 11 மணி - நவரத்தினம்*
26/01/21- சன்* லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
27/01/21-சன் லைப்- காலை 11 மணி -தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * *முரசு -மதியம் 12மணி/இரவு 7மணி- பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -கலங்கரை விளக்கம்*
* * * * * * மெகா 24-பிற்பகல் 2.30மணி -தாயை காத்த தனயன்*
* * * * * *புது யுகம் -பிற்பகல் 2 மணி* - ராமன் தேடிய சீதை*
28/01/21-வேந்தர் டிவி -காலை 10 மணி -தனிப்பிறவி*
* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - பெரிய இடத்து பெண்*
* * * * * * மீனாட்சி - இரவு 9 மணி -தலைவன்*
* * * * * * மெகா 24- இரவு 9 மணி - காலத்தை வென்றவன்*
29/01/21-சன் லைப் - காலை 11 மணி -தெய்வத்தாய்*
* * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30மணி - ரகசிய போலீஸ் 115*
* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - காவல் காரன்*
* * * * * * பாலிமர் - இரவு 11 மணி - புதிய பூமி*
30/01/21-மெகா டிவி -அதிகாலை 1 மணி - படகோட்டி*
* * * * * * * முரசு -மதியம் 12 மணி / இரவு 7 மணி - தொழிலாளி*
* * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி - காலத்தை வென்றவன்*
31/01/21-சன் லைப்- காலை 11 மணி - கணவன்*
* * * * * * * மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - தேர் திருவிழா** * * * * * * * * * * * **
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th February 2021, 08:09 AM
#1918
Junior Member
Diamond Hubber
#ந*ம்நாடு திரைப்ப*ட* ஷூட்டிங்கில் எம்ஜிஆரின் ட்ரீட்மெண்ட்..
விஜயா வாஹினியில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு 'வாங்கய்யா வாத்யாரய்யா வரவேற்க வந்தோமய்யா ஏழைகள் உங்களை நம்பி எதிர்ப்பார்த்து நின்றோமய்யா' என்ற பாடல் காட்சிசயை 'நம்நாடு' படத்திற்காகப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். செல்வி ஜெயலலிதா. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் கலந்த நடனக் கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். டைரக்டர் ஜம்பு பாடல் காட்சியை பரபரப்புடன் படமாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை விஜயா இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் சார்பில் நாகிரெட்டியாரும், சக்கரபாணியும் தயாரித்தனர்.
இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுத்து முடித்ததும் மதியவேளை படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. அனைவரும் சாப்பிடப் போனார்கள். எம்.ஜி.ஆர்.சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தியாகராய நகரில் உள்ள தனது ஆற்காடு சாலை அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அன்றும் அப்பபடியே போய்விட்டார். மதிய உணவு முடிந்ததும் அனைவரையும் மேனேஜர் படப்பிடிப்புக்கு வரச் சொன்னார். எல்லோரும் பாடல் காட்சியில் நடனமாடுவதற்கு ரெடியனார்கள்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய எம்ஜிஆர் நடனக் கலைஞர் ஒருவரிடம் 'சாப்பிட்டு விட்டீர்களா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியிருந்தது. நடனக் கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட நடனக் காட்சியையும் படமாக்க தொடங்கினார்கள். நடனக் காட்சியை எடுத்து முடித்ததும் இறுதியாக குளோசப் காட்சியையும் எடுக்கத் தயாரனார்கள்.
அடுத்து எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சியை எடுப்பதற்காக டைரக்டர் ஜம்பு எம்.ஜி.ஆரை அழைத்து வரச் சொன்னார். படப்படிப்பில் இருந்த படம் சம்பந்தபட்ட புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர். இருக்கும் அறைக்கு ஒடிப் போய் பார்த்தார். அறை மூடப்பட்டிருந்தது கதவைத் தட்டினார். கதவு திறந்தது உள்ளிருந்து வேறு யாரோ ஒருவர் வெளியே வந்தார். புரொடக்ஷன் மேனேஜர் எம்.ஜி.ஆர்.உள்ள இருக்கிறாரா என்று மெதுவான குரலில் கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றார் உள்ளே எம்.ஜி.ஆர்.இல்லை. உள்ளே இருந்தவரும் 'அவர் இங்கு வரவேயில்லையே', என்றார்.
புரொடக்ஷன் மேனேஜருக்கு டென்ஷன் ஆரம்பித்தது. இப்பதானே காரில் வந்து இறங்கினார். நானே பார்த்தேனே.. எங்கு போயிருப்பார்? தேடிக் கொண்டே வெளியேவந்தார்.
அவரது காரும் அங்கு இல்லை. நேரடியாக டைக்ரடர் ஜம்புவிடம் வந்தார். 'சின்னவர் அந்த அறையில் இல்லை. அவர் ரூமுக்கும் வரவில்லையாம்,' என்று விபரம் சொன்னார் மேனேஜர்.
அதற்கு டைரக்டர் ஜம்பு, 'அவர் கார் வந்ததை நான் பார்த்தேன். காரிலிருந்து இறங்கி யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக்கிட்டிருந்தார். திடீர்னு எங்கு போயிருப்பார்?' என்று ஸ்டுடியோ முழுவதும் போய் தேடினார்கள். எங்கும் இல்லை. அதற்குள் அவர்களுக்கு தகவல் வந்தது, எம்.ஜி.ஆர். தனது ஆற்காடு சாலையிலுள்ள அலுவலகத்திற்கு சென்றுவிட்டார் என்று. படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
என்ன பிரச்சனை? எதற்காக எம்.ஜி.ஆர். திரும்பி போனர்? அதுக்காக இருக்குமோ? இதுக்காக இருக்குமோ? என்றுஅனுமானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் படப்பிடிப்பு குழுவினர்.
படப்பிடிப்பு நடத்துகொண்டிருந்த விஜயா வாஹினி ஸ்டுடியோ முழுவதும் பரபரப்பாகியது. அதற்குள் டைரக்டர் ஜம்பு, மேனேஜரைக் கூப்பிட்டு ஒரு யோசனை சொன்னார். 'எம்.ஜி.ஆர். இங்கு வந்த போது யாரோ ஒரு டான்ஸரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்து வா' என்றார்.
புரொடக்ஷன் மேனேஜர் அவரது உதவியாளர்களும் ஓடிப் போய் தேடினார்கள். இறுதியாக செட்டுக்குள் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்த அந்த டான்சரை அடையாளம் கண்டு அழைத்து வந்தார்கள்.
டைரக்டர் ஜம்பு அவரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் மெல்ல விசாரித்தார்.
டான்ச*ரிட*ம் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்தாரா?"
"ஆமாம்... என்னிடம் தான் பேசிக்கொண்டிருந்தார்" என்று பவ்யமாக சொன்னார் அந்த டான்ஸ் கலைஞர். "உங்களிடம் சின்னவர் என்ன கேட்டார்... நீங்கள்அவரிடம் என்ன பதில் சொன்னீங்க?"
அதற்கு டான்ஸ் கலைஞர், "சாப்பிட்டாச்சான்னு கேட்டார்... சாப்பிட்டோம்னு சொன்னோம். என்ன சாப்பிட்டீங்கன்னு திரும்பக் கேட்டார். நான் புளியோதரை, தயிர் சாதம் பொட்டலம் கட்டிக் குடுத்தாங்க... அதைத்தான் சாப்பிட்டோம்னு சொன்னேன். அதுக்கப்புறம் அவர் என்னை எதுவுமே கேட்கவேயில்லை காரில் ஏறி வெளியே போய்விட்டார்," என்று டான்ஸர் சொல்லி முடித்ததும் புரொடக்ஷன் மேனேஜருக்கு எதனால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பது புரிந்துவிட்டது.
டைரக்டர் ஜம்புவும் எங்கே தவறு நடத்திருக்கு என்பதைப் புரிந்துக் கொண்டார்.
டைக்ரடர் ஜம்பு, புரொடக்ஷன் மேனேஜரும் சேர்ந்து ஆற்காடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆர்.அலுவலகத்திற்கு போனார்கள்.
எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினார்கள். புரொடக்ஷன் மேனேஜர்தான் பேசினார்.
"இந்த தப்புக்கு நான்தான் காரணம். மேனேஜ்மெண்டுக்கு இதுப் பற்றி எதுவும் தெரியாது லஞ்ச் பிரேக்குக்கு அப்புறம் சீக்கிரம் படப்பிடிப்பு தொடங்கணும், நிறைய டான்சர்கள் இருந்ததால் பொட்டலம் சாப்பாடு கொடுத்துட்டா சீக்கிரமா சாப்பிட்டு வந்துடுவாங்கனு நான் அப்படி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன். இனி அப்படி ஒரு தவறு நடக்காது மன்னிச்சிடுங்க," என்று மேனேஜர் பேசி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆரின் கார் ஆற்காடு சாலையிலிருந்து கிளம்பியது.
அதன்பிறகு 'நம்நாடு' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து எந்த விதமான காலதாமதமும் இல்லாமல் நடந்தது. இந்தப்பாடல் காட்சி எடுத்து முடியும் வரைஎம்.ஜி.ஆர்.அங்கேயே சக கலைஞர்களுடன் இணைந்து சாப்பிட்டார். தனக்கு என்ன உணவோ, அதுதான் படக்குழுவினர் அனைவருக்கும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
அவரது கோபத்திற்குக் காரணம் புரொடக்ஷன் மேனேஜர் கம்பெனி சார்பில் நல்ல சாப்பாடு போடாமல், பொட்டலம் சாப்பாடு கொடுத்ததுதான். அதுவும் மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாமல், மேனேஜர் எடுத்த முடிவினால் வந்த விபரீதம்தான் இது.
எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு என்றால் அனைவருக்கும் நல்ல சாப்பாடுதான் போடுவார்கள். அது எந்தக் கம்பெனி படமாக இருந்தாலும். இது அவரது படத்தில் நடித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். எம்.ஜி.ஆரிடம் ஒரு குணம் உண்டு... தன்னுடைய படத்தில் நடிப்பவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்ததா? சம்பளத்தை முழுமையாக கொடுத்து விட்டார்களா? என்பதில் அதிக கவனம் எடுத்து கொள்வார்.
இன்று வரையிலும் அவரது பேரும், புகழும் நிலைத்து நிற்பதற்கு அவரது இந்த குணமும், நல்ல மனமும்தான் காரணம்.
இந்தப் படத்திற்கு ஜம்பு டைரக்டரான பின்னணியில் ஒரு செய்தி உண்டு. 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை குறுகிய காலத்தில் எடுத்தார்கள். அந்தப் படத்தை 14.1.1965 பொங்கல் பண்டிகை நாளில் வெளியிடுவதற்காக தீவிரமாக ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் படம் சீக்கிரமாக வெளியே வருமா என்று சந்தேகம் இருந்தது. அப்பொழுது ஜம்பு அந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளுக்கு உடனிருந்து படம் சீக்கிரமாக வெளியே வருவதற்கு உதவிகள் செய்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் 'நம்நாடு' படத்தை இயக்குகின்ற வாய்ப்பை ஜம்புவுக்குக் கொடுத்தார்...........rms
-
12th February 2021, 08:10 AM
#1919
Junior Member
Diamond Hubber
க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும் க*ட்சிக்கு த*ம் ஆத*ர*வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத*லே தேர*டி திட*லில் கூட ஆர*ம்பித்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் அவ்வ*ளவு ப*ஸ் வ*ச*தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க*ளில் உள்ள மக்களெல்லாம் க*ட்டுச்சோற்றை க*ட்டிக்கொண்டு கால்ந*டையாக*வும், மாட்டு வ*ண்டியிலும், குதிரை வ*ண்டியிலும் வ*ந்து மக்கள் தேர*டியில் இட*ம் பிடிக்க* ஆர*ம்பித்து விட்டார்க*ள். 2 கிலோமீட்ட*ர் தூர*த்திற்கு மக்கள் வெள்ளம் ம*தியமே அலை மோதிய*து.
இனிமேல் அவ்வ*ளவு கூட்ட*த்தை க*லைக்க*வும் முடியாது. க*லைத்தாலும் நிலைமை விப*ரீத*மாகிவிடும் என்று மேலிட*த்திற்கு தெரிவித்துவிட்டு க*லெக்ட*ர் கூட்ட*த்திற்கு ஒருவ*ழியாக அன்று மதிய*ம் அனுமதி அளித்துவிட்டார்.
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட*த்திலோ எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மருத்துவ*ர்க*ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த*டுத்துவிட்ட*ன*ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க*வ*னித்துக் கொண்டார். நேர*மோ சென்று கொண்டிருந்த*து.
கூட்ட*த்திற்கு போகும்வ*ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க*ட்ட* ஒரு கூட்ட*மும், அவ*ர் முக*த்தில் திராவ*க*த்தை வீச ஒரு கூட்ட*மும் த*யாராக இருப்ப*தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த*க*வ*ல் கிடைத்த*து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட*ல்நிலை ச*ரியில்லாத*தால் பொதுக்கூட்ட*ம் ர*த்து என்ற செய்தியும் வ*ர* மக்கள் கொதித்து போயின*ர். ப*லர் ர*க*ளையில் ஈடுப*ட்ட*ன*ர்.
நிலைமையின் விப*ரீத*த்தை உணர்ந்த மன்றத்த*லைவ*ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற*ப்ப*ட்டார். வ*ழியில் காரை மறித்து ப*லர் என்னைய்யா! வாத்தியார் வ*ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த*ன*ர். க*ண்டிப்பாக வ*ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட*த்திற்கு சென்றார் பாலாஜி.
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய*டைந்தார். ஒருப*க்க*ம் எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மறுபுற*ம் அவ*ரை கொல்ல* காத்திருக்கும் கூட்ட*ம். க*வ*லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த*லைவ*ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட*ம் வாத*ம் செய்தார்.
உட*னே பாலாஜி, த*லைவ*ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட*த்திற்கு வ*ர*வில்லையென்றால் அந்த மாமர*த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட*, எம்ஜிஆர் மருத்துவ*ர்க*ள், ஜானகி அம்மையாரையும் ச*மாதான*ப்ப*டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப*லவ*ழியில் சுற்றி வ*ந்து காஞ்சிபுர*ம் வ*ந்த*டைந்தது. ஏற்கெனவே திட்ட*மிட்ட*ப*டி எம்ஜிஆரை வ*ய*ல்வெளி வ*ழியே 1/2 கி.மீ ந*ட*த்தியே கூட்டி வ*ந்த*ன*ர். மேடையின் பின்புற*ம் இருந்த ப*ள்ளிவாச*ல் காம்ப*வுண்ட் கேட் வ*ழியே எம்ஜிஆர் வ*ந்து திடீரென மேடையில் தோன்றிய*தும் ம*க்க*ள் ஆர*வார*த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச*ந்தோஷ*த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட*த்திற்கு த*லைமையேற்க செய்தார். க*ட்சி ஆரம்பித்து ஒருவார*மே ஆகியிருந்த* நிலையில் எம்ஜிஆர் க*ருப்பு சிவ*ப்பு க*ரைவேட்டியையே க*ட்டியிருந்தார். தோளில் க*ருப்பு சிவ*ப்பு பார்ட*ரில் துண்டும் இருந்த*து. ப*க்க*த்து க*ட்டிட*த்தில் திராவ*க*ம் வீச காத்திருந்த கும்ப*ல், இவ்வ*ளவு ப*ர*ப*ர*ப்பான கூட்ட*த்தில் திராவ*க*த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த*ப்புவ*து எளித*ல்ல என்று முடிவு செய்து இட*த்தை காலி செய்த*ன*ர்.
த*லைவ*ர்மீது மக்கள் க*ருப்பு மற்றும் சிவ*ப்பு துண்டுக*ளை கீழேயிருந்து வீசின*ர். அனைத்தையும் லாவ*க*மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக*த்தையும் பார்த்த* மக்களின் கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும் விண்ணை பிளந்த*து.
இது திமுக கூட்ட*மா அல்ல*து அண்ணா திமுக கூட்ட*மா என விய*க்கும*ளவிற்கு மேடையில் க*ருப்பு சிவ*ப்பு துண்டுக*ள் குவிந்து கிட*ந்த*து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க*தை முடிந்த*து என ஆட்சியாளர்க*ளுக்கு உரைத்த*து.
இந்த* ஆர*வார* ச*ந்தோஷத்தில் த*லைவ*ரின் காய்ச்ச*ல் ப*ற*ந்தோடிய*து. மாறாக த*லைவ*ரின் வ*ளர்ச்சியை பிடிக்காத க*ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த*மிழ*க அர*சிய*ல் க*ட்சித் த*லைவ*ர்க*ளுக்கு காய்ச்ச*ல் தொற்றிக் கொண்ட*து.
எவ்வித* குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என*து ர*த்த*த்தின் ர*த்த*மான உட*ன்பிற*ப்புக*ளே! என ஆர*ம்பித்து, நான் க*ணக்கு கேட்ட*து த*வ*றா? என்ற கேள்வியுட*ன் திமுக வ*ளர்ச்சிக்கு த*ன்னுடைய ப*ங்கு, என சுமார் இர*ண்டு மணி நேர*ம் (இர*வு 10 மணிமுத*ல் 12 மணிவ*ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின*ச*ரிக*ளிலும், எம்ஜிஆர் த*லைப்பு செய்தி ஆனார்.........vrh
-
12th February 2021, 08:11 AM
#1920
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவர் நடித்த, இயக்கிய திரைப்படங்கள் தொகுப்பு.
1930 களில் வெளிவந்த திரைப்படங்கள்.
1. 1936 சதிலீலாவதி . தயாரிப்பு மனோரமா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் ஆய்வாளர் ரெங்கைய நாயுடு. இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன். எம்ஜிஆர் அவர்கள் நடித்த முதல் திரைப்படம், சிறு வேடம்.
2. 1936 இரு சகோதரர்கள். தயாரிப்பு பரமேஸ்வரி சௌண்ட் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளம் முஸ்லிம் இளைஞன் இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன். சிறு வேடம்
3. 1938. தட்சயக்ஞம். தயாரிப்பு மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்.கதாபாத்திரம் விஷ்ணு. இயக்கம் ராஜா சந்திரசேகர். புராணப்படம்
4. 1938 வீர ஜெகதீஸ். தயாரிப்பு வி. எஸ். டாக்கீஸ் கதாபாத்திரம் பையன். இயக்கம் டி. பி. கைலாசம், ஆர். பிரகாஷ்
5. 1939 மாயா மச்சீந்திரா. தயாரிப்பு மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ். கதாபாத்திரம் சூரியகேது . இயக்கம் ராஜா சந்திரசேகர்.
6. 1939 பிரகலாதா. தயாரிப்பு சலீம் சங்கர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் இந்திரன். இயக்கம் பி. என். ராவ். புராணப்படம்
1940 களில் வெளிவந்த படங்கள்.
7. 1941 வேதவதி (சீதா ஜனனம்). தயாரிப்பு சியாமளா பிக்சர்ஸ் .கதாபாத்திரம் இந்திரஜித். இயக்கம் டி. ஆர். ரகுநாத்.
8. 1941 அசோக் குமார் . தயாரிப்பு முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனி. கதாபாத்திரம் தளபதி மகேந்திரன். இயக்கம் ராஜா சந்திரசேகர் . எம். கே. தியாகராஜ பாகவதருடன் நடித்த முதல் படம்
9. 1942 தமிழறியும் பெருமாள். தயாரிப்பு உமா பிக்சர்ஸ். கதாபாத்திரம் சந்தானம். இயக்கம் டி. ஆர். ரகுநாத்.
10. 1943 தாசிப் பெண் (ஜோதிமலர்). தயாரிப்பு புவனேஸ்வரி பிக்சர்ஸ். கௌரவ நடிகர். இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன் .
11. 1944 ஹரிச்சந்திரா. தயாரிப்பு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஃபிலிம் கம்பெனி. கதாபாத்திரம் ஒரு அமைச்சர். இயக்கம் கே. பி. நாகபூஷணம். எம்ஜிஆர் பி. யு. சின்னப்பா வுடன் நடித்த முதல் திரைப்படம்
12 . 1945. சாலிவாகனன். தயாரிப்பு பாஸ்கர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் விக்ரமாதித்யன். இயக்கம் பி. என். ராவ். எம்ஜிஆர் வில்லனாக நடித்தார்
13. 1945 மீரா. தயாரிப்பு சந்திரப்பிரபா சினிடோன். கதாபாத்திரம் தளபதி ஜெயமல் இயக்கம் எல்லிஸ் ஆர். டங்கன் .
14. 1946 ஸ்ரீ முருகன். தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் பரமசிவன். இயக்கம் எம். சோமசுந்தரம். வி. எஸ். நாராயண். புராணப்படம். சிவ - பார்வதி நடனத்தில் சிவன் வேடத்தில் நடனமாடினார்.
ஜூபிடர் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
15. 1947 ராஜகுமாரி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் மோகன். இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி. (எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம்)
16. 1947 பைத்தியக்காரன். தயாரிப்பு என். எஸ். கே. ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் மூர்த்தி இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு (இரண்டாவது கதாநாயகன்)
17. 1948 அபிமன்யு. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் அர்ச்சுனன். இயக்கம் எம். சோமசுந்தரம் ஏ. காசிலிங்கம்.
18. 1948 ராஜ முக்தி. தயாரிப்பு நரேந்திர பிக்சர்ஸ். கதாபாத்திரம் மகேந்திரவர்மன். இயக்கம் ராஜா சந்திரசேகர். வி. என். ஜானகி, பி. பானுமதி இருவரும் இந்தப் படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
19. 1948 மோகினி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ்.கதாபாத்திரம் தளபதி விஜயகுமார் லங்கா சத்தியம் இரண்டாவது கதாநாயகன்.
வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம். டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
20. 1949 ரத்னகுமார் . தயாரிப்பு முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனி.கதாபாத்திரம் பாலதேவன். இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு பி. பானுமதி கதாநாயகியாக நடித்த முதல் படம்.
அவர் பி. யு..சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தார். எம். ஜி. ஆர். துணை நடிகர்.
1950 களில் வெளிவந்த படங்கள்.
21. 1950 மருதநாட்டு இளவரசி. தயாரிப்பு ஜி. கோவிந்தன் அன் கோ. கதாபாத்திரம் காண்டீபன் ஏ. காசிலிங்கம். (ராஜகுமாரிக்குப் பின்னர்.தனிக் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம்.)
22. 1950 மந்திரி குமாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் தளபதி வீரமோகன். எல்லிஸ் ஆர். டங்கன். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
23. 1951 மர்மயோகி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் கரிகாலன். இயக்கம் கே. ராம்நாத்.
24 . 1951 ஏக்தா ராஜா. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் கரிகாலன். இயக்கம் கே. ராம்நாத். (மர்மயோகி இந்திப் பதிப்பு)
25. 1951 சர்வாதிகாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் பிரதாப் வீரன். இயக்கம் டி. ஆர். சுந்தரம்.
26. 1951 சர்வாதிகாரி. தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். கதாபாத்திரம் பிரதாப் வீரன். இயக்கம் டி. ஆர். சுந்தரம். சர்வாதிகாரி (தெலுங்கு பதிப்பு)
27. 1952 அந்தமான் கைதி. தயாரிப்பு ராதாகிருஷ்ணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் நடராஜ் . இயக்கம் வி. கிருஷ்ணன். (இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்னணி)
28. 1952 குமாரி தயாரிப்பு ஆர். பத்மநாபன் -ராஜேஸ்வரி.கதாபாத்திரம் விஜயன் . இயக்கம் ஆர். பத்மநாபன் . கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். திரைப்படம்.
29. 1952 என் தங்கை . தயாரிப்பு அசோகா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் ராஜேந்திரன். இயக்கம் சி. ஹெச் நாராயணமூர்த்தி.
எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் முதல் திரைப்படம்
30. 1953 நாம் . தயாரிப்பு ஜூபிடர், மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் குமரன். இயக்கம் ஏ. காசிலிங்கம். எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, கருணாநிதி, பி எஸ் வீரப்பா கூட்டு தயாரிப்பு.
31. 1953 ஜெனோவா . தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் சிப்ரெக்கா. இயக்கம் எஃப். நாகூர்.முதல் மலையாள திரைப்படம்
32. 1953 ஜெனோவா . தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் சிப்ரெக்கா. இயக்கம் எஃப். நாகூர். மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பு
33. 1954 பணக்காரி தயாரிப்பு உமா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் ஆபீசர் சௌந்தர். இயக்கம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்.
34. 1954 மலைக்கள்ளன். தயாரிப்பு பட்சிராஜா ஸ்டூடியோஸ். கதாபாத்திரம் மலைக்கள்ளன் , அப்துல் ரஹீம் &
குமாரதேவன். இயக்கம் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
35. 1954 கூண்டுக்கிளி. தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ்.கதாபாத்திரம் தங்கராஜ். இயக்கம் டி. ஆர். ராமண்ணா. சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே திரைப்படம்.
36. 1955 குலேபகாவலி. தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் தாசன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம்
37. 1956. அலிபாபாவும் நாற்பது திருடர்களும். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் கதாபாத்திரம் அலிபாபா. இயக்கம் டி. ஆர். சுந்தரம். முதல் முழுநீள தமிழ் வண்ணப் படம் (கேவா கலர்)
38. 1956 மதுரை வீரன். தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ்.கதாபாத்திரம் வீரன். இயக்கம் டி. யோகானந்த். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் இரண்டாவது திரைப்படம்
39. 1956 தாய்க்குப்பின் தாரம். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் முத்தையன் இயக்கம் எம். ஏ. திருமுகம். தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
40 . 1957 சக்கரவர்த்தித் திருமகள். தயாரிப்பு உமா பிக்சர்ஸ். கதாபாத்திரம் உதயசூரியன்.இயக்கம் ப. நீலகண்டன்.
ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
41. 1957 ராஜ ராஜன். தயாரிப்பு நீலா புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் இளவரசன் ராஜராஜன். இயக்கம் டி. ஆர். சுந்தரம்
42. 1957 புதுமைப்பித்தன் . தயாரிப்பு சிவகாமி பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் ஜீவகன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
43. 1957 மகாதேவி. தயாரிப்பு ஸ்ரீ கணேஷ் மூவிடோன். கதாபாத்திரம் தளபதி வல்லபன் இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்ணி .
44. 1958 நாடோடி மன்னன். தயாரிப்பு
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் மார்த்தாண்டன் & வீராங்கன். எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம்
இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம்
பி. சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
45. 1959 தாய் மகளுக்குக் கட்டிய தாலி தயாரிப்பு கல்பனா கலா மந்திர். கதாபாத்திரம் கனகு . இயக்கம் ஆர். ஆர். சந்திரன். ஜமுனாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம். அறிஞர் அண்ணா கதை, வசனம்.
1960 -களில் வெளிவந்த படங்கள்.
46. 1960 பாக்தாத் திருடன். தயாரிப்பு சதர்ன் மூவீஸ். கதாபாத்திரம் முகம்மது அலி. இயக்கம் டி. பி. சுந்தரம். வைஜயந்தி மாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்.
47. 1960 ராஜா தேசிங்கு. தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ். கதாபாத்திரம் தேசிங்கு ராஜன் & முகமதுகான். இயக்கம் டி. ஆர். ரகுநாத். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம். எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம்
48. 1960. மன்னாதி மன்னன். தயாரிப்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ். கதாபாத்திரம் இளவரசன் மணிவண்ணன் . இயக்கம் எம். நடேசன்
49. 1961 அரசிளங்குமரி . தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். கதாபாத்திரம் அறிவழகன். இயக்கம் ஏ. எஸ். ஏ. சாமி
50. 1961 திருடாதே. தயாரிப்பு ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் பாலு. இயக்கம் ப. நீலகண்டன்.
51. 1961 சபாஷ் மாப்பிளே. தயாரிப்பு ராகவன் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் வாசு இயக்கம் எஸ். ராகவன் .
52. 1961 நல்லவன் வாழ்வான். தயாரிப்பு அரசு பிக்சர்ஸ். கதாபாத்திரம் முத்து. இயக்கம் ப. நீலகண்டன். அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதினார்
53. 1961 தாய் சொல்லைத் தட்டாதே. தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் போலீஸ் ஆஃபீசர் ராஜு. இயக்கம் எம். ஏ. திருமுகம்
54. 1962 ராணி சம்யுக்தா. தயாரிப்பு சரஸ்வதி பிக்சர்ஸ். கதாபாத்திரம் பிரிதிவிராஜன். இயக்கம் டி. யோகானந்த்.
55. 1962. மாடப்புறா. தயாரிப்பு பி. வி. என். புரொடக்சன்ஸ்.கதாபாத்திரம் ராமு . இயக்கம் எஸ். ஏ. சுப்பாராமன்
56. 1962 தாயைக்காத்த தனயன் . தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வேட்டைக்காரன் சேகர். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
57. 1962 குடும்பத் தலைவன். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் வாசு. இயக்கம் எம். ஏ. திருமுகம் .
58. 1962. பாசம். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ்.கதாபாத்திரம் கோபி. இயக்கம் டி. ஆர். ராமண்ணா. எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம்
59. 1962 விக்ரமாதித்தன். தயாரிப்பு பாரத் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் ராஜா விக்ரமாதித்தன். இயக்கம் டி. ஆர். ரகுநாத்
என். எஸ். ராமதாஸ் .
60. 1963 பணத்தோட்டம். தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் செல்வம். இயக்கம் கே. சங்கர். கே. சங்கர் இயக்கத்தில் நடித்த முதல் படம். சரவணா ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடித்த முதல் படம்.
61. 1963 கொடுத்து வைத்தவள். ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் முருகன். கதாபாத்திரம் கட்டிட ஒப்பந்தக்காரர் செல்வம். இயக்கம் ப. நீலகண்டன் .
62. 1963 தர்மம் தலைகாக்கும். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் டாக்டர் சந்திரன். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
63. 1963 கலை அரசி. தயாரிப்பு சரோடி பிரதர்ஸ். கதாபாத்திரம் மோகன்
வேற்றுக்கோள் கோமாளி. இயக்கம் ஏ. காசிலிங்கம்.
64. 1963 பெரிய இடத்துப் பெண். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் அழகப்பன்/முருகப்பன். இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
65. 1963 ஆனந்த ஜோதி . தயாரிப்பு ஹரிஹரன் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் பள்ளி ஆசிரியர் ஆனந்த். இயக்கம் வி. என். ரெட்டி. தேவிகாவுடன் நடித்த ஒரே திரைப்படம்
66. 1963 நீதிக்குப்பின் பாசம். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வழக்கறிஞர் கோபால். இயக்கம் எம். ஏ. திருமுகம்.
67. 1963 காஞ்சித்தலைவன் . தயாரிப்பு மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் நரசிம்ம பல்லவன். இயக்கம் ஏ. காசிலிங்கம் .
68. 1963 பரிசு. தயாரிப்பு கௌரி பிக்சர்ஸ் கதாபாத்திரம் இரகசிய போலீஸ் வேணு இயக்கம் டி. யோகானந்த் .
69. 1964. வேட்டைக்காரன். தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் பாபு. இயக்கம் எம். ஏ. திருமுகம்.
70 . 1964 என் கடமை. தயாரிப்பு நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் . கதாபாத்திரம்போலீஸ் ஆபீசர் நாதன் . இயக்கம் எம். நடேசன்
71. 1964 பணக்கார குடும்பம். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் நல்ல தம்பி. இயக்கம் டி. ஆர். ராமண்ணா
72. 1964 தெய்வத்தாய். தயாரிப்பு சத்யா மூவீஸ். கதாபாத்திரம் சிபிஐ அதிகாரி மாறன். இயக்கம் பி. மாதவன் .
73. 1964 தொழிலாளி. தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் தொழிலாளி ராஜு. இயக்கம்எம். ஏ. திருமுகம்
74. 1964 படகோட்டி. தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் மீனவர் மாணிக்கம். இயக்கம் டி. பிரகாஷ் ராவ். எம்ஜிஆர் நடித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண திரைப்படம்.
75 . 1964 தாயின் மடியில். தயாரிப்பு அன்னை ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் ஜாக்கி ராஜா. இயக்கம் ஏ. சுப்பா ராவ்.
76. 1965 எங்க வீட்டுப் பிள்ளை. தயாரிப்பு விஜயா கம்பைன்ஸ். கதாபாத்திரம் ராமு (ராமன்), இளங்கோ (லட்சுமணன்). இயக்கம் சாணக்யா. எம்ஜிஆர் இரட்டை வேடங்களில்.
77 . 1965 பணம் படைத்தவன். தயாரிப்பு ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் ராஜா. இயக்கம் டி. ஆர். ராமண்ணா.
78. 1965 ஆயிரத்தில் ஒருவன். தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் மருத்துவர் மணிமாறன். இயக்கம் பி. ஆர். பந்துலு. ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம்
79. 1965 கலங்கரை விளக்கம். தயாரிப்பு சரவணா ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் வழக்கறிஞர் ரவி. இயக்கம் கே. சங்கர்.
80. 1965. கன்னித்தாய் தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் கேப்டன் சரவணன் இயக்கம் எம். ஏ. திருமுகம்.
81. 1965 தாழம்பூ. தயாரிப்பு ஸ்ரீ பாலமுருகன் ஃபிலிம்ஸ் .கதாபாத்திரம் துரை (பட்டதாரி). இயக்கம் என். எஸ். ராமதாஸ்
82 . 1965 ஆசை முகம். தயாரிப்பு மோகன் புரொடக்சன்ஸ்.கதாபாத்திரம் மனோகர், வஜ்ரவேலு . இயக்கம் பி. புல்லையா
83. 1966 அன்பே வா. தயாரிப்பு ஏவி. எம். புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் பாலு/முதலாளி ஜே. பி. இயக்கம் ஏ. சி. திருலோகச்சந்தர்
84. 1966 நான் ஆணையிட்டால் தயாரிப்பு சத்யா மூவீஸ். கதாபாத்திரம் பாஷா அல்லது பாண்டியன். இயக்கம் சாணக்யா .
85. 1966 முகராசி தயாரிப்பு தேவர் பிலிம்ஸ். கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி ராமு. இயக்கம் எம். ஏ. திருமுகம்.
ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
86 . 1966 நாடோடி. தயாரிப்பு பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் தியாகு. இயக்கம் பி. ஆர். பந்துலு
87. 1966 சந்திரோதயம். தயாரிப்பு - சரவணா ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் பத்திரிகையாளர் சந்திரன். இயக்கம் கே. சங்கர்.
88. 1966 தாலி பாக்கியம். தயாரிப்பு வரலட்சுமி பிக்சர்ஸ். கதாபாத்திரம் - முருகன் இயக்கம் - கே. பி. நாகபூஷணம் ( இயக்குனர் நடிகை கண்ணாம்பாளின் கணவர் )
89. 1966 தனிப் பிறவி. தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - இரும்புத் தொழிலாளி முத்தையா. இயக்கம் எம். ஏ. திருமுகம்
90. 1966 பறக்கும் பாவை . தயாரிப்பு - ஆர். ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ஜீவா, டாக்சி ஓட்டுநர் . இயக்கம் டி. ஆர். ராமண்ணா
91. 1966 பெற்றால்தான் பிள்ளையா. தயாரிப்பு ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ஆனந்தன் (அனாதை). இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு
எம். ஆர். ராதாவுடன் சேர்ந்து நடித்த இருபத்தைந்தாவதும் இறுதியுமான திரைப்படம்
92 . 1967 தாய்க்குத் தலைமகன். தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - மருது. இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
இத்திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் (12. சனவரி 1967) எம். ஜி. ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார்.
93. 1967 அரச கட்டளை . தயாரிப்பு - சத்தியராஜா பிக்சர்ஸ். கதாபாத்திரம் - விஜயன். இயக்கம் -எம். ஜி. சக்ரபாணி.
எம். ஜி. ஆரோடு பி. சரோஜாதேவி நடித்த கடைசித் திரைப்படம்
94 . 1967 காவல்காரன். தயாரிப்பு - சத்யா மூவீஸ். கதாபாத்திரம் - மணி (ஓட்டுநர்). இயக்கம் ப. நீலகண்டன் .
95. 1967 விவசாயி. தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ்.கதாபாத்திரம் - முத்தையா . இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
96. 1968 ரகசிய போலீஸ் 115. தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ். கதாபாத்திரம் - ராமு, இயக்கம் - பி. ஆர். பந்துலு .
97. 1968 தேர்த் திருவிழா தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - சரவணன்
இயக்கம் - எம். ஏ. திருமுகம் .
98 . 1968 குடியிருந்த கோயில். தயாரிப்பு - சரவணா ஸ்க்ரீன்ஸ் .கதாபாத்திரம் - ஆனந்த் & பாபு. இயக்கம் - கே. சங்கர்.
99. 1968 கண்ணன் என் காதலன். தயாரிப்பு - சத்யா மூவீஸ் . கதாபாத்திரம் -"பியானோ" கண்ணன். இயக்கம் - ப. நீலகண்டன் .
100. 1968 ஒளி விளக்கு. தயாரிப்பு - ஜெமினி ஸ்டூடியோஸ் . கதாபாத்திரம் - முத்து. இயக்கம் - சாணக்யா. ஜெமினி நிறுவனத்தில் நடித்த ஒரே திரைப்படம்.
101 . 1968 கணவன். தயாரிப்பு - வள்ளி ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - வேலையா. இயக்கம் -ப. நீலகண்டன் .
102. 1968 புதிய பூமி. தயாரிப்பு - ஜே. ஆர். மூவீஸ். கதாபாத்திரம் -டாக்டர் கதிரவன். இயக்கம் - சாணக்யா.
103. 1968 காதல் வாகனம் . தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம்- சுந்தரம். இயக்கம் எம். ஏ. திருமுகம் .
104. 1969 அடிமைப் பெண். தயாரிப்பு -
எம். ஜி. ஆர். பிக்சர்ஸ். கதாபாத்திரம் - வேங்கைமலை அரசன் (தந்தை),
இளவரசன் வேங்கையன் (மகன்) இயக்கம் - கே. சங்கர். எம்ஜிஆர் சொந்த தயாரிப்பு.
105 . 1969 நம் நாடு. தயாரிப்பு - விஜயா இன்டர்நேஷனல்.கதாபாத்திரம்- துரை . இயக்கம் - சி. பி. ஜம்புலிங்கம்
1970 களில் நடித்த படங்கள்
106 . 1970 மாட்டுக்கார வேலன் தயாரிப்பு - ஜெயந்தி ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - வேலன் & ரகுநாத். இயக்கம் -ப. நீலகண்டன். இரட்டை வேடம்
107. 1970 என் அண்ணன். தயாரிப்பு - வீனஸ் பிக்சர்ஸ். கதாபாத்திரம் -ரெங்கன். இயக்கம் - ப. நீலகண்டன்
108. 1970 தலைவன். தாமஸ் பிக்சர்ஸ். கதாபாத்திரம் - இரகசிய போலீஸ் இளங்கோ. இயக்கம் - பி. ஏ. தாமஸ் & சிங்கமுத்து
109. 1970 தேடிவந்த மாப்பிள்ளை. தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ் கதாபாத்திரம் - சங்கர் . இயக்கம் -பி. ஆர். பந்துலு .
110. 1970 எங்கள் தங்கம் தயாரிப்பு - மேகலா பிக்சர்ஸ். கதாபாத்திரம் - தங்கம் இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு
111. 1971 குமரிக்கோட்டம் தயாரிப்பு - கே. சி. ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - கோபால். இயக்கம் ப. நீலகண்டன் .
112. 1971 ரிக்*ஷாக்காரன் தயாரிப்பு - சத்யா மூவீஸ் கதாபாத்திரம் - செல்வம் . இயக்கம் - எம். கிருஷ்ணன் நாயர். சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது
113. 1971 நீரும் நெருப்பும். தயாரிப்பு - நியூ மணி ஜே சினி புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் இளவரசன் மணிவண்ணன் & இளவரசன் கரிகாலன். இயக்கம் - ப. நீலகண்டன். இரட்டை வேடம்.
114 . 1971 ஒரு தாய் மக்கள். தயாரிப்பு - நாஞ்சில் புரொடக்சன்ஸ். கதாபாத்திரம் - கண்ணன். இயக்கம் - ப. நீலகண்டன் .
115 . 1972 சங்கே முழங்கு தயாரிப்பு - வள்ளி ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் -முருகன். இயக்கம் - ப. நீலகண்டன் . லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம்
116. 1972 நல்ல நேரம் தயாரிப்பு - தேவர் ஃபிலிம்ஸ். கதாபாத்திரம் - ராஜு. இயக்கம் - எம். ஏ. திருமுகம் . தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் நடித்த இறுதி திரைப்படம்
117. 1972 ராமன் தேடிய சீதை தயாரிப்பு - ஜெயந்தி ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - கோடீஸ்வரர் எஸ். ஜே. ராமன் . இயக்கம் - ப. நீலகண்டன்
118 . 1972 நான் ஏன் பிறந்தேன் தயாரிப்பு - காமாட்சி ஏஜென்சீஸ் கதாபாத்திரம் - கண்ணன். இயக்கம் -எம். கிருஷ்ணன் நாயர்
119. 1972 அன்னமிட்ட கை தயாரிப்பு - ராமச்சந்திரா புரொடக்சன்ஸ். கதாபத்திரம் - துரைராஜ். இயக்கம் -எம். கிருஷ்ணன் நாயர் எம்ஜிஆர் நடித்த கடைசி கருப்பு-வெள்ளை திரைப்படம்
120. 1972 இதய வீணை தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - சௌந்தரம் இயக்கம் - கிருஷ்ணன்-பஞ்சு . திமுக உறுப்பினராக இறுதி திரைப்படம்
121 . 1973 உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கதாபாத்திரம் - விஞ்ஞானி முருகன் &
ராஜு. எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்
122. 1973 பட்டிக்காட்டு பொன்னையா தயாரிப்பு - வசந்த் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - பொன்னையா & முத்தையா இயக்கம் - பி. எஸ். ரெங்கா. ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம்
123 . 1974 நேற்று இன்று நாளை தயாரிப்பு - அமல்ராஜ் ஃபிலிம்ஸ் (அசோகன்) கதாபாத்திரம் - மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும்
குமார். இயக்கம் - ப. நீலகண்டன் .
124 . 1974 உரிமைக்குரல் தயாரிப்பு - சித்ராலயா ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - கோபிநாத் (கோபி) இயக்கம் - சி. வி. ஸ்ரீதர் ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம்
125 . 1974 சிரித்து வாழ வேண்டும் தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான். இயக்கம் - எஸ். எஸ். பாலன்.
126 . 1975 நினைத்ததை முடிப்பவன் தயாரிப்பு - ஓரியன்டல் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - சௌந்தரம் (பாடகன்) மற்றும்
ரஞ்சித் குமார் (வியாபாரி) இயக்கம் - ப. நீலகண்டன் . எஸ். ஏ. அசோகனுடன் நடித்த 59 ஆவதும் இறுதியுமான திரைப்படம்
127. 1975 நாளை நமதே தயாரிப்பு - கஜேந்திரா ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - சங்கர் மற்றும் விஜயகுமார் இயக்கம் - கே. எஸ். சேதுமாதவன்
128. 1975 இதயக்கனி தயாரிப்பு - சத்யா மூவீஸ் கதாபாத்திரம் - போலீஸ் அதிகாரி மோகன் இயக்கம் - ஏ. ஜெகந்நாதன்
ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
129 . 1975 பல்லாண்டு வாழ்க தயாரிப்பு - உதயம் புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - ராஜன் (சின்னையா - உதவி சிறை அதிகாரி) இயக்கம் - கே. சங்கர்.
130 . 1976 நீதிக்குத் தலைவணங்கு தயாரிப்பு - ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - விஜய் இயக்கம் ப. நீலகண்டன்
131. 1976 உழைக்கும் கரங்கள் தயாரிப்பு - கே சீ ஃபிலிம்ஸ் கதாபாத்திரம் - ரெங்கன் இயக்கம் - கே. சங்கர். புரட்சித் தலைவர் 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ முருகன் திரைப்படத்தில் ஆடியபின் இத்திரைப்படத்தில் பரமசிவனாக நடனம் ஆடினார்.
132 1976 ஊருக்கு உழைப்பவன் தயாரிப்பு - வீனஸ் பிக்சர்ஸ் கதாபாத்திரம் - போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா இயக்கம் - எம். கிருஷ்ணன் நாயர்
133. 1977 இன்றுபோல் என்றும் வாழ்க தயாரிப்பு - சுப்பு புரொடக்சன்ஸ் கதாபாத்திரம் - விவசாயி முருகன் இயக்கம் - கே. சங்கர். ராதா சலூஜாவுடன் நடித்த இரண்டாவதும் இறுதியுமான திரைப்படம்
134. 1977 நவரத்தினம் தயாரிப்பு- சி. என். வி. மூவீஸ் கதாபாத்திரம் - கோடீஸ்வரர் தங்கம் இயக்கம் - ஏ. பி. நாகராஜன்
சிறப்பு 9 கதா நாயகிகளுடன் நடித்தார்.
135 . 1977 மீனவ நண்பன் தயாரிப்பு- முத்து எண்டர்பிரைசஸ் குமரன் இயக்கம்-ஸ்ரீதர் .
136 . 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தயாரிப்பு-சோலேஸ்வர் கம்பைன்ஸ் கதாப்பாத்திரம்-பைந்தழிழ் குமரன் அல்லது இளவரசன் சுந்தர பாண்டியன் இயக்கம்-எம்ஜிஆர் & கே. சங்கர்
1990 களில் வெளிவந்த படங்கள்
137 1990 அவசர போலீஸ் 100 சுதா சினி மூவீஸ்.கதாபாத்திரம் ராஜு. கே. பாக்யராஜ் முடிக்கப்படாத அண்ணா நீ என் தெய்வம் என்ற எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் இத் திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது. எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
138 1991 நல்லதை நாடு கேட்கும் ஜேப்பியார் பிக்சர்ஸ்..........vrh
Bookmarks