Page 197 of 210 FirstFirst ... 97147187195196197198199207 ... LastLast
Results 1,961 to 1,970 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1961
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [பல முறை, காயப்படுத்திய, பத்திரிக்கையாளருக்காக ...
    கண்கலங்கிய எம் ஜி ஆர்.!!.

    அவர் முற்போக்கு கட்சியின் பத்திரிகையாளர். எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து தொங்க விட்டுக்கொண்டிருந்தவர். அமைச்சர்களின் பல ஊழல்களை எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.

    செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

    அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.

    ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிலுந்து புறப்பட்ட எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

    ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள் என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.
    அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள் என்கிறார்.

    அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். அவர் மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

    நிலையை புரிந்துகொண்ட எம்ஜிஆர், வாகனத்தை கல்யாணி மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் மருத்துவர்களை அழைத்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

    அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார்.

    ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் அந்த நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

    கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக் கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார். எம்ஜிஆரும் பத்திரிகையாளருக்கு சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த சமரசமும் இருக்காது.

    தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை.

    காலம் ஓடியது. ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

    ‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

    எம்.ஜி.ஆருடன் இருந்த ‘தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார் எம்ஜிஆர்.

    மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

    ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்..........bpng

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1962
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது படங்கள் பிரமாண்டமாகவும், சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்க வேண்டும், தன்னை நம்பிய ரசிகர்களுக்கு நிறைவான படமாக இருக்கவேண்டும் என்று விரும்புவார். இதற்காக அவர் பிறமொழி படங்கள், ஹாலிவுட் படங்களை பார்த்து அதன் சாயலில் தனது படம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அப்படி அவருக்கு பிடித்த ஒரு ஹாலிவுட் படம். ஹிட்சாக் இயக்கிய நார்த் பை நார்த்வெஸ்ட். இது ஒரு ஆள்மாறாட்ட கதை. அதாவது ஒருவன் ஒரு கொலை செய்துவிட்டு அதன் மூலம் கிடைத்த பணம், சொத்துக்களை கொண்டு இன்னொருவன் பெயரில் வாழ்வான். அவனது நிஜ முகத்தை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது அந்த படத்தின் ஒன்லைன்.

    அதேபோன்ற நம் நாட்டுக்கு ஏற்றமாதிரி ஒரு கதை பண்ணுமாறு பி.ஆர்.பந்துலுவிடம் கேட்டிருந்தார் எம்.ஜி.ஆர், அப்படி உருவான படம்தான் தேடிவந்த மாப்பிள்ளை. இந்த கதை தயாரானாதும் எம்.ஜி.ஆர் வேறொரு படத்தில் பிசியாக இருந்தார். இதனால் அவரது ஒப்புதலுடன் அந்த கதையை ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் பீடி பசவன்னா என்ற பெயரில் எடுத்தார். அங்கு அது பெரிய வெற்றி பெற்றது. பின்னர்தான் தேடி வந்த மாப்பிள்ளையாக தமிழில் தயாரானது.

    இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயஸ்ரீ, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்பட பலர் நடித்திருந்தார்கள். இயக்குனர் பி.ஆர்.பந்துலு இதில் எம்.ஜி.ஆரின் அப்பாவாக நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், வெற்றி மீது வெற்றி வந்த என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும், இடமோ சுகமானது , தொட்டு காட்டவா, மாணிக்கத்தேரில் மரகத கவசம் மின்னுவதென்ன உள்பட தேனினும் இனிய பாடல்கள் இடம்பெற்ற படம். திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாள் ஓடி வசூலை குவித்த படம்.......Devi Ravichandran

  4. #1963
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1961 ன் பிளாக்பஸ்டர் "திருடாதே"யும்
    "தாய் சொல்லை தட்டாதே"யும் தான்.
    அதைப்போல் 1962 ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் தேவரின் "தாயை காத்த தனயன்"தான். "தாய் சொல்லை தட்டாதே" படத்தைக் காட்டிலும் ஒருபடி
    அதிகம் வெற்றியை பெற்ற படம்தான் "தாயை காத்த தனயன்".
    அய்யனுக்கு 1962 ல் 9 படங்கள் வந்தாலும் அதில் தேறியது "பார்த்தால் பசி தீரும்" மற்றும் "படித்தால் மட்டும் போதுமா"? மட்டும்தான். இரண்டையும் ஒரிரு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓட்டி மகிழ்ந்தனர்.

    "தாயை காத்த தனயன்" 1962 ல் மீண்டும் 8 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பிரமிக்கத் தக்க வெற்றியை பெற்றது. 1959 லிருந்து 1962 வரை பீம்சிங் ஒருவரே மூழ்கும் படகை கரை சேர்த்தவர். 63, 64 ல் அய்யனுக்கு சொல்லி கொள்ளும்படி பெரிய வெற்றி ஒன்றும் இல்லை.
    அதன்பின் ap நாகராஜனை பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் ஸ்ரீதர்,பாலாஜி என்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து அய்யனை கை கொடுத்து தூக்கி விட்டார்கள். யார் கைகொடுத்தாலும் தலைவரின் வெற்றியை நெருங்க முடியவில்லை என்ற மனக்குறைதான் அய்யனின் படங்களை ஓட்ட ஆரம்பித்த காரணம்.

    அய்யனின் படத்தின் தரமறிந்துதான் தியேட்டருக்கு மக்கள் சென்றனர். ஆனால் எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டவுடனே தியேட்டருக்கு சென்று விடுவார்கள். இதற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சியை நான் சொல்லுகிறேன்.
    சென்ற வாரம் தூத்துக்குடி சத்யாவில் "நாளை நமதே" என்ற விளம்பரம் பார்த்தவுடன் தியேட்டருக்கு சென்றேன். தியேட்டரை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டிருந்தது. நடைபாதையை மட்டும் சற்று மண்மேடாக்கி அங்கு படத்தை திரையிட்டார்கள். ஒரு மாத வெள்ளநீர் பச்சை கலரில் இருந்தது.
    உள்ளே சென்று பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டர் அருகில் சென்ற போது 'ஒரு பக்கம் பாக்குறா' என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

    என்னப்பா "நாளை நமதே" என்று போஸ்டர் ஒட்டி விட்டு "மாட்டுக்கார வேலன்" ஓடுகிறதே என்று கேட்டேன்.
    அதற்கு சைக்கிள் ஸ்டாண்டு பாதுகாவலர் "நாளை நமதே" பெட்டி வரவில்லை, அதனால் "மாட்டுக்கார வேலனை" திரையிட்டார்கள் என்றார். இதென்ன "நாளை நமதே" புதுப்படமா? பெட்டி வரவில்லை என்று சொல்கிறார்களே என்று நினைத்தேன். சுற்றிலும் எந்த விளம்பர போஸ்டர் ஏன் தியேட்டரில் கூட போஸ்டர் ஒட்டாமல் "மாட்டுக்கார வேலனை" ஒட்டுகிறார்கள்.

    படத்திற்கு கூட்டம் எப்படி என்று கேட்டேன்.
    டூ வீலர் மட்டும் மொத்தம் 100 ஐ தாண்டி வந்திருக்கிறது. மொத்தம் 150.பேர் பார்க்கிறார்கள் என்றவுடன் ஆச்சர்யமடைந்தேன். என்ன படம் என்ற கேள்வியில்லாமல் எம்ஜிஆர் படம் பார்க்க நிறைந்திருந்த கூட்டம் அது. தலைவரின் முகம் பார்த்து மலரும் தாமரை கூட்டம் அது. அதனால்தான் அந்த திரையரங்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் எம்ஜிஆர் படம் மட்டுமே திரையிட்டு சாதனை செய்தார்கள்.

    "தாயை காத்த தனயன்" சென்னையில் 112 நாட்களும் மற்ற ஊர்களில் 137 நாட்கள் வரை ஓடியது. மதுரை கல்பனாவில் 137 நாட்கள் ஓடி ரூ 239712.67 வசூலாக பெற்றது. பாடல்கள் kv மகாதேவன் இசையில் பிரமாதமாக அமைந்தது.
    'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலுக்குமுன் சிறந்த காதல் பாடலாக 'காவேரி கரையிருக்கு' பாடலை சொல்லலாம்.

    எம்ஜிஆருக்கு தேவர் படம் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது எனலாம். எம்ஜிஆரால் பட அதிபர்கள் பலனடைந்தார்கள். ஆனால் மாற்று நடிகருக்கோ படஅதிபர்களால்தான் அவர் பலனடைந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தூத்துக்குடியிலும் 50 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது..........ksr.........

  5. #1964
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி.........
    முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை
    *முன்னிட்டு* *(19/02/21 முதல் )* * * * * * * * *
    -----------------------------------------------------------------------------------------------------------------------------* * *
    ** * * *மதுரை சென்ட்ரல் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*

    கோவை சண்முகா - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி* 4 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை ,
    * * * * * * * * * * * * * * * திரு.சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ் .


    திருச்சி - பேலஸ் - நம் நாடு**- தினசரி 4 காட்சிகள்*
    கரூர் -லட்சுமி ராம் - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு. கிருஷ்ணன், திருச்சி .


    கொழிஞ்சாம்பாறை (கேரளா )- ரவிராஜாவில் - எங்க வீட்டு பிள்ளை*
    தினசரி 4 காட்சிகள்*
    தகவல் உதவி : திரு.* வி.ராஜா ., நெல்லை .*


    மேலும் சில அரங்குகளில் தலைவரின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது .
    அவை நாளை தெரியவரும் .



    * * * * * * **

  6. Likes orodizli liked this post
  7. #1965
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் கரங்களில்
    ரத்தக் கீறல்கள் !
    ___________________________

    "எம்ஜிஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்" எனும் தலைப்பில் வார இதழ் ஒன்றில், "சந்தித்தேன்- சிந்தித்தேன்" தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அந்த படைப்பு சமூக வெளியில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது.

    1980-ஆம் மே மாதத்தில் ஆற்காடு முதலி தெருவில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

    1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், 3 ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர்1980 மே மாதவாக்கில் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை சந்திப்பதில் எம்ஜிஆர் படு சுறுசுறுப்பாக இருந்த காலகட்டம் அது.

    "ஆட்சி பறி போய்விட்டது. தேர்தலைச் சந்திக்கிறோம். ஆட்சியை மீட்போமா?" என்ற கவலை இல்லாமல் எம்ஜிஆர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த காலகட்டத்தில் 'தினமலர்' செய்தியாளனாக நான் களமாடிக் கொண்டிருந்தேன்.தேர்தல் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் பொதுத் தேர்தல்.

    லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை செய்தியாளர்களாகிய நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம் நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது அவர் தந்த பதில் இதோ:

    "காரணத்தைச் சொல்லாமலேயே கலைத்து விட்டார்கள். எங்கள் ஆட்சியைக் குலைத்து விட்டார்கள். மக்கள் அளித்த ஆட்சியை மத்திய அரசு பறித்துக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல். மக்களிடமே சென்று நான், "என்ன தவறு செய்தேன்? ஏன் டிஸ்மிஸ் செய்தார்கள்?" என்று வினா வைத்து இருக்கிறேன். இனி விடையளிக்க வேண்டியவர்கள் அவர்கள் தான்.

    "என் கடமையை நான் நிறைவாக செய்து முடித்து இருக்கிறேன். தேர்தல் பிரச்சாரப் பணிகளைப் பொருத்தவரை முழுமையாக நடத்தி முடித்து விட்டேன். இனி மக்கள் என்ன தீர்ப்பு தந்தாலும் அதை ஏற்க நான் தயாராகிவிட்டேன்.

    நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்தார்கள். முண்டியடித்துக் கொண்டு நெருங்கினர்.என்னுடன் கை குலுக்கவும், பேசவும், முகத்துக்கு நேரே நின்று நோக்கவும் முனைந்தனர்.

    ஒரே நேரத்தில் பலரும் என் கைகளைத் தொட முயன்றனர். கைகுலுக்கக் கரம் நீட்டினர். நானும் இருகரங்களையும் அவர்களுக்கு வழங்கினேன். அவர்கள் ஆர்வமிகுதியால் என் கைகளை வேகமாக தொட்டு இழுக்கும் பொழுது அவர்களின் கைவிரல் நகங்களால் கீறப்பட்டு என் கைகளில் எல்லாம் ரத்தக் கீறல்கள். கைகளைப் பாருங்கள்... " -இவ்வாறு பேசியபடியே அவர் தன் கரங்களை விரித்துக் காட்டினார். அவற்றில் சின்னக் குழந்தை சிலேட்டில் கிறுக்கியது போல ரத்தக் கீற்றுகள் தென்பட்டன.

    எம்ஜிஆர் நா தழுதழுத்த குரலில் கூறினார், "என் ரத்தத்தையே மக்களுக்குத் தத்தம் அளித்து விட்டேன். இனி அவர்கள் என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்பேன்" என்று சுருக்கமாக, ஆனால் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

    "நிச்சயம் வென்று விடுவோம்" என்ற நம்பிக்கை அவரின் பேச்சில் இல்லை. நாங்களோ, "வெற்றி உங்களுக்குத்தான்" என்று உற்சாகமூட்டி விட்டு வந்தோம்.
    தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன*.

    அவர் கோட்டைக்கு மீண்டு வந்தார் வெற்றியோடு மீண்டும் வந்தார்.
    எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின் திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். அப்போது ரசிகர்களின் கூட்டம், பொது மக்களின் திரள் என ஜன சமுத்திரத்தினுள் திறந்த ஜீப்பில் பயணம் மேற்கொண்டார்.
    போலீஸ் பாதுகாப்பு போதிய அளவுக்கில்லை.

    எம்ஜிஆரின் கைகுலுக்க அக்கூட்டம் கட்டுப்பாடின்றிப் பாய்ந்தது. ஏக காலத்தில் பல பேர் எம்ஜிஆரின் கரங்களைப் பற்றினர். அவர்களிடம் ஆர்வமிகு ஆவேசம் ஆட்கொண்ட நிலையில் எம்ஜிஆரின் கரங்கள் கீறப்பட்டன. இந்நிலையோ பல முறை.

    அப்போது சென்னையில் தினமலர் பதிப்பு இல்லை. திருச்சி பதிப்பில்
    ஞான பாண்டியன் எனும் சப் எடிட்டர், பணியில் இருந்தார். அவர் அப்போதே, "தொண்டர்களின் அன்புத் தொல்லை.
    எம்ஜிஆர் கைகளில் ரத்தக்கறை"
    என்று தலைப்பிட்டு அந்துமணியின் பாராட்டைப் பெற்றார்.
    80 வயதையும் தாண்டி அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
    கடந்த ஆண்டு அவரின் இல்லம் சென்று அவருடன் உரையாடி மகிழ்வித்தேன்.
    அப்போது எடுத்த படம் இப்போது இங்கே...

    நூருல்லா ஆர். ஊடகன் 05-09-2020

    திருத்தப்பட்டது.

    Ithayakkani S Vijayan...

  8. #1966
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒவ்வொரு ஏழை தாய்மார்களின் உள்ளத்தில் மகனாகவே வாழ்ந்தார் நம் #மக்கள்திலகம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு..

    திருவண்ணாமலை பக்கத்தில் உள்ள ஊர் சர்ச்சில் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். நாம் 25 பைசா கொடுத்தால் ஒரு ஜெபம் செய்துவிட்டு பாடல் ஒன்றை போடுவார்கள்.

    ஒருநாள் மாலை நேரம், ஒரு 70 வயதான பாட்டி, ஈரமான புடவையுடன் வந்து 25 பைசா கொடுத்து,

    "எனது மகனை உடல் நலம் இல்லாமல் ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் சேர்த்து இருக்கின்றனர். அவருக்குதான் நீ ஜெபம் செய்து பாட்டு போடவேண்டும்" என்றார்.

    அங்கிருந்தவர்களுக்கு ஒரே வியப்பு..!

    "பாட்டி, நீயோ ஏழை. எப்படி உன் மகனை அமெரிக்க ஆஸ்பத்திரியில் சேர்த்தாய்" என கேட்டதற்கு...

    அந்தற்கு அவர்.. "என் மகன் என்று கூறியது எம்ஜியாரைத்தான்" என்றார்.

    "எப்படி பாட்டி அவர் உன் மகன்" என்று கேட்டபோது...

    "என் மகன் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டான். இந்த மவராசன் தான் எனக்கு மாசம் 30 ரூபாய் பென்ஷன் தருகிறார்.

    அதில் நான் 50 பைசாவிற்கு தினமும் 5 இட்லி வாங்கி சாப்பிடுவேன். மதியம் பால்வாடியில் சாப்பாடு. எம்ஜியார் குடுத்த 10 கிலோ அரிசியில் சோறு.

    வருடத்திற்கு இரண்டு புடவை. இவ்வளவும் செய்த எம்ஜியாரு என் மகன் இல்லாமல் வேற யாரு..!?"

    - என்று அந்த மூதாட்டி கூறினார்.

    எப்படி ஏழைகளின் உள்ளத்தில் அந்த மனிதர் எல்வாரு குடியிருந்தார் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாகவே உள்ளது..! Baabaa

  9. #1967
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1984-ஆம் ஆண்டு, புரட்சித் தலைவரின் அன்பிற்குரிய ஜே.சி.டி.பிரபாகரனின்
    உதவியாளர் கண்ணையாவின் திருமணம்.

    அந்த எளிய தொண்டணின் திருமணத்திற்கு தலைமையே ஏழைகளின் ஏந்தல் நமது முதல்வர் புரட்சித்தலைவர்..

    அந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய #மக்கள்திலகம்..

    “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் எனக்கு வாழ்த்த வயதில்லை என்று பிரபாகரன் பேசினார்.

    பிரபாகரனின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு வந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

    அவர்களிடம் ஒரு வேண்டுகோள். பிரபாகரனுக்கு நீங்கள் பெண் பார்க்கப் போகிறீர்களா? அல்லது, இன்றே எனது மனைவி ஜானகியை அனுப்பிப் பெண் பார்க்க வைக்கவா?

    எனக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால், அவளை நான் பிரபாகரனுக்குத் தான் கொடுப்பேன்!”

    -என்று பேசி பிரபாகரனை மட்டுமல்ல, மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ வைக்கிறார்.

    மக்கள் திலகம் பேசி முடித்த மறு ஆண்டே பிரபாகரனுக்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவரது பெற்றோர்.

    ஆனால் அந்த நேரத்தில் தான் மக்கள் திலகம் உடல் நலக் குறைவால், அமெரிக்காவுக்குச் சிகிச்சை பெறச் செல்ல நேரிடுகிறது.

    திருமணம் முடிந்து 1985, ஆகஸ்டு 25-ஆம் தேதி சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை -ஜே.சி.டி பிரபாகரன் தன் மனைவியுடன் சந்திக்கிறார்.

    சிறிது நேரம் இருவரையும் இமை கொட்டாமல் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திலகம், பிரபாகரனைப் பார்த்து மழலைப் பேச்சில்

    “திருமணப் பரிசாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.

    பிரபாகரன் பொன் கேட்பார். பொருள் கேட்பார் என்று எதிர்பார்த்த மக்கள் திலகத்திடம்,

    “நாடார்கள்-சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள்.

    மீனவர்களும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள.

    அதே போல் மதம் மாறிய வன்னிய (படையாச்சி) கிறிஸ்துவர்களையும், சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்!

    இதுவே தாங்கள் எனக்குக் கொடுக்கும் திருமணப் பரிசு” என்று ஒரு பேப்பரில் எழுதித் தருகிறார் ஜே.சி.டி. பிரபாகரன்.

    வாங்கிப் படித்த மக்கள் திலகம் மீண்டும் மழலை மொழியில்,

    “அன்னிக்கு முதன்முதலாக, உனக்காக இல்லாம, மாணவர்கள் பசிக்காக உதவி கேட்டே..!

    இன்னிக்குக் கூட திருமணப்பரிசாக உனக்காக இல்லாம, மக்களுக்காகத்தானே கேட்கறே!”

    -என்று ஆனந்தக் கண்ணீருடன் ‘ஆவன செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

    ஆகஸ்டில் உறுதி அளித்த மக்கள்திலகம், சொல்லியபடி டிசம்பரில் பிரபாகரனின் கோரிக்கையை நிறைவேற்றி அமுலாக்குகிறார்.

    இதுதான் மக்கள் திலகம். இதுதான் புரட்சித்தலைவரின் தொண்டர்கள்..

    தலைவருடன் ஜெ.சி.டி.பிரபாகரன்...

    தகவல் உதவி: பிரபாகரனின் அண்ணன் மகன் விஜய்.........

  10. #1968
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் கண்ணதானுக்கு உதவி ....

    பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ...

    ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார்.

    யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது

    அவருக்கு வேண்டிய ஒருவர்
    நம்ம மாதிரி ஆள்களுக்கு

    உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார்.

    அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார்.

    இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள்,

    அய்யய்யோ வேண்டவே, வேண்டாம்

    அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன்.

    நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல,

    இவர் சொல்கிறார்,
    மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர்,

    மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர்

    அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை

    எனவே எதையும் யோசிக்காமல்

    சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம்

    என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.

    இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன்
    அவர்கள்

    பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார்.

    அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி,

    உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.

    இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார்.

    ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க

    அவர் ரொம்பவும் தாழந்த குரலில்

    எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன்

    மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

    இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல்

    சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.

    அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து

    இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல

    அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து

    பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து

    இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார்

    என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.

    பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில்

    பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு

    உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று,

    மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார்.

    தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே ..

    நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன்.

    ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே

    நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்

    நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்....Mu

  11. #1969
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காசே கடவுள்!!
    ---------------------------
    எம்.ஜி.ஆர் பற்றிய இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!
    நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?
    டைப்பிஸ்ட் கோபு!!
    அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!
    அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!
    சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!
    1978!!
    வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-
    அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??
    அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?
    இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??
    ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?
    வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--
    நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--
    என்ன பண்ணறது கோபு? விதி வலியது??
    இதில் சிவாஜி மட்டும்--
    நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??
    ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --
    உதவி??--ம்ஹூம்!!
    எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!
    தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!
    குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--
    வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!
    டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-
    ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??
    நான் பாத்துக்கறேன்??
    வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?
    மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?
    அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?
    மறு நாள் காலை ஆபரேஷன்?--
    மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?
    கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?
    எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு மாயாஜாலம் காத்திருக்கிறது?
    ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--
    மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--
    இதயத்துக்குப் பால் வார்க்கிறார் மருத்துவர்?
    ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??
    மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!
    ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!
    தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,
    கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!
    சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!
    உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?
    பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???
    சரி!!
    எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?
    முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --
    ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?
    காசேதான் கடவுளடா??
    உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--
    மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--
    ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!
    தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!
    அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
    கீதையிலே கண்ணன்!!
    கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்
    பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???...vtr

  12. #1970
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.

    ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர்.

    அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்... ' என்று பயங்கர பரபரப்பு.

    அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.

    ‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.

    ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.

    அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.

    தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.

    அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.

    படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

    "அஞ்சு பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.

    ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.

    எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.

    'எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்' என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.

    அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.

    அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.

    அடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

    'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ' புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன்."

    -பாரதிராஜா என்கிற அல்லிநகரம்
    சின்னசாமி | சினிமா விகடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •