-
27th February 2021, 07:45 AM
#2021
Junior Member
Diamond Hubber
கே.எஸ்.பதிவு.தலைவரின் அதிர்ஷ்ட எண் 7. 1.கார் எண் TNX 4777 add 25 i.e 2+5=7. அடுத்து பிறந்த வருடம் 1917 17 ம் தேதி ஜனவரி மாதம். 2.இலங்கையில் கண்டியில் பிறந்தார்.3.1920ல் தாய் சத்யா அம்மையார் தனது குழந்தைகளுடன் கும்பகோணம் வந்தார். 3.1924 ல் தனது 7 வயதில் நாடகக் கம்பெனியில் எம்ஜிஆர் சேர்ந்தார். 4 1936 ல் அவரது முதல் படம் சதிலீலாவதி படம்வெளியானது. 5.1947 ல் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி 6.1953 ல் அண்ணாவால் கவரப்பட்டு திமுகவில் முறைப்படி இணைந்தார்.7. 1958 ல் நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். 8. 1959ல் நாடகத்தில் நடித்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வெற்றிகரமாக மீண்டார்.9. சட்ட மேலவை உறுப்பினர் ஆனார்.10.துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிழைத்து மறுபிறவி எடுத்தார். அப்போது பரங்கிமலைத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி. 11.1969 ல் சொந்தமாக தயாரித்து நடித்த அடிமைப்பெண் படம் வெளியானது.12.1971 ல் பரங்கிமலைத் தொகுதியில் மீண்டும் வெற்றி. 13.1972 ல் ரிக்சாக்காரன் படம் நடித்ததற்காக பாரத் பட்டம் கிடைத்தது. 14.1972 ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.அதிமுக வைத் தொடங்கினார். 15. 1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் பிரம்மாண்ட வெற்றி. 16. 1973 ல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி 17.1977 ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 18 இடங்களில் வெற்றி. 18. 1977 ல் அதிமுக ஆட்சி எம்ஜிஆர் முதல்வரானார். 19. 1978 ல் கடைசிபடமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வெளியானது. 20.1980 ல் தமிழக அரசு கலைக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி மீண்டும் முதல்வரானார். 21. 1982 ல் உலகம் புகழும் சத்துணவு திட்டம் அமல்படுத்துதல். 22.1984 ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 23.தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். 24. 1985 ல் தமிழகம் திரும்பி மீண்டும் 3 வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.25.1987 ல் டிசம்பர் 24 ல் புகழுடல் அடைந்தார்....GDR
-
27th February 2021 07:45 AM
# ADS
Circuit advertisement
-
27th February 2021, 07:48 AM
#2022
Junior Member
Diamond Hubber
நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்!
By ஸ்ரீதர் சுவாமிநாதன்
Published: 01 Mar, 19 11:34 amModified: 01 Mar, 19 11:34 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.
எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது.
கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.
எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில், மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்.
அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!
ஆஸ்தான வில்லன்
‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.
நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.
அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை
‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.
நகைச்சுவை மன்னர்!
நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி,வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்கள்.
அந்த அளவுக்கு அவர் நகைச்சுவை மன்னர்! எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..
nambiyar-7jpg
படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.
‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது.எம்.ஜி.ஆர். என்ன லேசா?.. ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.
எப்படிப்பட்ட துரோகம்!
எம்.ஜி.ஆர். முதல்வரானபின், திரையுலகை விட்டு விலகி, முதல் அமைச்சர் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து நம்பியாரின் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியானது. ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று பேட்டியில் கூறியிருந்தார் நம்பியார்! அந்த வார இதழின் போஸ்டரிலும் இந்த தலைப்பு.
எங்கும் ஒரே பரபரப்பு. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது குறை கூறியிருக்கிறாரா என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கடைசியில், அந்தப் பேட்டியில் நகைச்சுவை ததும்ப நம்பியார் கூறியது இதுதான்:
‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தான் மட்டும் இளைஞராகவே நடித்து, திரையுலகில் என்னை வயதானவனாகத் தவிக்க விட்டு எம்.ஜி.ஆர். அரசியலுக்குப் போய்விட்டார். எம்.ஜி.ஆர்.எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!’’
1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நேரம். சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் பலருக்கு குருசாமியாக நம்பியார் இருந்தார். மாலை அணிந்துவிட்டால் விரதத்தை முறிக்க மாட்டார்.
அதனால், மறைந்த தனது நண்பரை இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை. தகவல் அறிந்து நம்பியார் மூர்ச்சையானார். மயக்கம் தெளிந்து எழுந்து, ‘‘ஏற்கெனவே அரசியலுக்குப் போனதன் மூலம் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர். என்னை விட்டுப் பிரிந்தார். இப்போது வாழ்க்கையிலும் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாரே..’’ என்று நண்பரின் பிரிவைத் தாங்காமல் கலங்கிய நம்பியாருக்கு ஆறுதல் கூறமுடியாமல் சுற்றி இருந்தவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
சபரிமலை சென்று வந்த பிறகு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று நம்பியார் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாய் நம்பியாரின் கன்னங்களில் உருண்டது கண்ணீர்.
தொடர்புக்கு: sridhar.s@thehindutamil.co.in
-
27th February 2021, 07:03 PM
#2023
Junior Member
Platinum Hubber
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி
___26/2/21 முதல்_______
திருச்சி- முருகன்- குடியிருந்த கோயில்
தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி திரு. கிருஷ்ணன் திருச்சி.
நெல்லை மேலப்பாளையம்
அலங் கார் சினிமாஸ்
அடிமைப்பெண்
தினசரி மாலை காட்சி
மட்டும்
26/2/21 முதல் 28/2/21 வரை- கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும்
தகவல் உதவி. திரு. வி. ராஜா, நெல்லை.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th February 2021, 03:18 PM
#2024
Junior Member
Diamond Hubber
"அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர்.
#எம்ஜிஆர் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் அது.
அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து.
அப்போது எம்.ஜி.ஆர்-தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை.
எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை.
அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.
ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.
எதிர்முனையிலிருந்து ஒரு குரல்...
”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்… ஆசிரியர் இருக்கிறாரா?”
அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு...
”இன்னும் வரலை சார்….”
”நீங்க யார் பேசறது?”
”நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”
“சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,
”ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.
“இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.”
-என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.
ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!
சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.
விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.
முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார்.
ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார்.
அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
”ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.
”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”
#எம்ஜியார் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
“அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”
“நீங்க யார் பேசறது?”
”நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”
“உங்க பேரு என்ன?”
“லச்சுமி”
“எந்த ஊரு?”
“தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “
“இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”
“மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”
“அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”
“உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”
“ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”
“சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”
“ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”
“உனக்கு அய்யாவைப் புடிக்குமா? அம்மாவப் புடிக்குமா?”
“ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”
“எப்ப ஊருக்குப் போகப்போற?”
“எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”
“சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”
“உங்க பேரு என்ன சொன்னீங்க?”
“எம்.ஜி..ராமச்சந்திரன்”
“மறுபடி சொல்லுங்க….”
“எம்.ஜி.ராமச்சந்திரன்”
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள்.
அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை.
எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.
ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்து விட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான்...
சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!"
-கல்யாண்குமார் | தாய் இதழ் உதவி ஆசிரியர்...
-
28th February 2021, 03:19 PM
#2025
Junior Member
Diamond Hubber
1972-ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த '#நல்ல_நேரம்' திரைப்படம்.
இதில் சிறுவனாக இருக்கும் தன் மகன் ராஜூவை அழைத்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் காரில் போவார் கோடீஸ்வரரும், எஸ்டேட் முதலாளியுமான அவனின் தந்தை. போகிற வழியில் காரை குறுக்கிடும் ஒரு காட்டு யானை. அதை நோக்கி துப்பாக்கி எடுத்து சுடுவார் ராஜுவின் தந்தை. உடனே அதை தட்டிவிடுவான் காரில் உள்ள ராஜு. அதில் உயிர்தப்பி ஓடி விடும் யானை. அதற்கு 'ஏன்டா இப்படி செஞ்சே?' என வினவுவார் ராஜுவின் தந்தை.
அதற்கு சிறுவன் சொல்லுவான்: 'அந்த யானைதான் நம்மள ஒண்ணும் செய்யலையே. அப்புறம் எதுக்கு சுடணும். அது தப்புப்பா!' என்பான். இளகின மனதுடைய மகனை தட்டிக் கொடுக்கும் தந்தை, 'என்னடா நீ பத்து வயசுலயே புத்தனாயிட்டே?' என்றபடி காரை கிளப்புவார். போகிற வழியில் குறுக்கே ஒரு மாடு வந்து விடும். அதில் நிலை தடுமாறி கார் மரத்தின் மீது விபத்துக்குள்ளாகி விடும்.
ராஜு ரத்த வெள்ளத்துடன் தூக்கி எறியப்படுவான். ராஜுவின் தந்தையோ காருக்குள்ளேயே மயங்கிக் கிடப்பார். மயக்கம் தெளிந்து மகனை தேடி அலைவார். அழுவார். அரற்றுவார். பையன் எங்கே என்றே தெரியாது. எஸ்டேட்டில் ஒரே மகனை பறிகொடுத்த துயரம் தாளாது நோய்வாய்ப்பட்டு கிடப்பார். ஆட்களை விட்டு மூலைக்கு மூலை தேடியும் மகன் கிடைக்கவே மாட்டான்.
விபத்து நடந்த வேளையில் வேறொரு பக்கம் காட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் கிடக்கும் ராஜுவை நோக்கி சிறுத்தை ஒன்று வரும். அது சிறுவனை கவ்விச் செல்வதை தூரத்தில் இருந்து ஏற்கெனவே இந்த சிறுவன் ராஜுவால் துப்பாக்கி குண்டிலிருந்து காப்பாற்றப்பட்ட காட்டு யானை கவனித்து விடும். அந்த சிறுத்தையை துரத்திச் சென்று தாக்கும். சிறுத்தையின் வாலைச்சுற்றி வீசும். அங்கே சிறுத்தைக்கும், யானைக்கும் பெரிய சண்டையே நடக்கும். இறுதியில் சிறுத்தை தோற்று ஓடும். யானை இந்த சிறுவனை துதிக்கையால் தூக்கிக் கொண்டு ஆற்றோரம் படுக்க வைத்து தண்ணீரை உறிஞ்சி சிறுவன் மீது பீய்ச்சி அடிக்கும். சிறுவன் மயக்கம் தெளிந்து எழுவான்.
இந்த யானை தன் கூட்டத்தை பிளிறி அழைத்து சிறுவனை அழைத்துச் செல்லும். வீட்டில் உயிர் போகக்கிடக்கும் அப்பாவிடம் தன்னை காப்பாற்றிய யானைகளையும் அழைத்துச் செல்வான் சிறுவன் ராஜு. மரணத்தருவாயில் தன் மகனைப் பார்த்த தந்தை தன் மகனைக் காப்பாற்றிய யானைகளுக்கு நன்றி சொல்வார்.
'எந்த இடத்திலும் உன்னைக் காப்பாற்றிய இந்த யானைகளை கைவிட்டுவிடாதே. இவை வெறும் யானைகள் இல்லையப்பா. நான் எப்பவும் கும்பிடற விநாயகப் பெருமான். எப்பவும் உன் கூடவே வச்சுக்க. அவை உன்னைக் காப்பாற்றும்!' என்று சொல்லி உயிரை விடுவார். அது முதலே இந்த நான்கு யானைகளும் ராஜுவுடனே இருக்கும். அவனுக்கு அத்தனையும் வீட்டுத் தோழனாகி விடும். அவை நீர் இறைப்பதென்ன? சிறுவனை தூக்கிக் கொண்டு செல்வதென்ன?
பிறகுதான் டைட்டில் கார்டு தொடங்கும். சிறுவன் எம்ஜிஆராக பெரியவனாகி விடுவார். அப்புறம் என்ன? காதல், வில்லன், கடன், பணமிழப்பு, ஊடல், பிரச்சினை. 'ஆகட்டும்டா தம்பி ராஜா. நடராஜா. மெதுவா தள்ளய்யா. பதமா தள்ளய்யா!', 'டிக், டிக் மனதுக்கு தாளம்!', 'ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!' என கொஞ்சும் பாடல்கள். 'என்னை வேண்ணா விலை பேசுங்க. என் தோழனை விலை பேசாதீங்க!', 'உன் தும்பிக்கையும், என் நம்பிக்கையும் நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும்!' என எம்ஜிஆர் வீசும் பஞ்ச் வசனங்கள்.
கடைசியில் ராமு என்கிற யானை தன் அன்பையும், பாசத்தையும் நிரூபிக்க தன் உயிரையே விடும். வில்லன் மேஜர் சுந்தரராஜன் கதாநாயகன் எம்ஜிஆரையும், அவர் குழந்தையையும் சுட முயற்சிக்கும்போது குறுக்கே வந்து நின்று குண்டுகளை தான் வாங்கிக் கொள்ளும். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ராமுவைப் பார்த்து மனம் திருந்தி கதறுவார் கே.ஆர்.விஜயா; 'அது தெய்வமாகி, என்னை மிருகமாக்கிடுச்சு!'.......ks...
-
28th February 2021, 03:21 PM
#2026
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் சகாப்தம் தான் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வு நிகழ்வாடலை கண்டு அதை தனது திரைப்படங்கள் மூலமாக சொன்னவர்.அந்த தகவல் கடைசிமட்ட பகுதிக்கும் மக்களுக்கும் சென்றடைந்தது.அப்படி ஒரு கருத்தை பணக்காரக்குடும்பம் எனும் படத்தில் "ஒன்று எங்கள் ஜாதியே ! ஒன்று எங்கள் நீதியே !! உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே !!!"
ஆனால் இன்று தான் முதல்வர் பதவி அடையவேண்டும் என்ற ஒரே சுயநல நோக்கில் வாக்குறுதிகளை எம்.ஜி.ஆர் கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யலாமா.ஜாதிப்பெயரில் கட்சிகள் பல.ஜாதிக்கு மட்டுமே செயல்படுகிறார்கள்.ஒரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு என்றால் பாவப்பட்ட பல இனங்கள் தமிழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே.அவர்கள் வோட்டு வேண்டாமா ? இன்றைய கிராமங்கள் பல சுதந்திரம் வாங்கிய காலங்களுக்கு முன்பிருந்து ஆரம்ப நடு நிலை உயர்நிலை பள்ளிகளை தனியார் பெயரில் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தால் இட ஒதுக்கீடு என்றால் அதே கிராமத்து அடுத்த வீட்டு மாணவனை எங்கே கொண்டு தள்ளுவது.சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்று சொல்லுவார்கள்.கடன் வாங்கியவர்கள் கடன் ரத்து என்றால் கடன் வாங்காத அதே இன மனிதனுக்கு குச்சி மிட்டாயா ? ஒரு பிரிவினருக்கு மட்டும் எப்படி இறந்தாலும் லட்சங்கள் என்றால் மற்ற அதே இன மக்களின் நிலை என்ன.? சமதர்மசமுதாயம் வளர்ந்திட வேண்டும் என சுந்தரபாண்டியன் மன்னன் பாடிவிட்டு சென்றாரே ! ஏன் நமக்கு உரைக்கவில்லை.உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே என்றாரே நமது மக்கள் திலகம்.சுயநலம்,பதவி சுகம் ஒன்றே என செயல்படுவது ஒரு சாமான்ய மக்கள் நிலையை புறக்கணிப்பது என்று தானே அர்த்தம்....nmi...
-
28th February 2021, 03:21 PM
#2027
Junior Member
Diamond Hubber
அழ வைத்த எம்.ஜி.ஆர்!?
-----------------------------------
சிரித்து வாழ வேண்டும் என்று ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்ணிய எம்.ஜி.ஆர்--ஒருவரை,,,அதுவும்
இந்தியத் தேர்தல் கமிஷனரை ஒரு முறைக்கு இரு முறையாக அழ வைத்திருக்கிறார்?
இது என்ன கலாட்டா என்கிறீர்களா?
சரி,,பதிவுக்குள் நுழையும் முன்பு அது தொடர்பான வேறொரு நிகழ்வையும்,,அது நிகழ்ந்த விதம் சரியானதா என்பதையும் பார்ப்போம்!
எம்.ஜி.ஆருக்குப் பின் ஜானகி எம்.ஜி.ஆரையும் கவிழ்த்து--நீயா--நானா போட்டியில் இரட்டை இலையை முடக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ராஜீவ் காந்தி என்பதை அறிவோம்.
எந்த அணிக்குத் தம் ஆதரவு என்றுக் கடைசி வரைக்கும் கூறாமல்--கடைசி தருணத்தில்--
ஒன்று பட்ட அ.தி.மு.கவுக்குத் தான்,,தம் ஆதரவு என்று இரட்டை இலை முடக்கப்பட முக்கியக் காரணி ஆனார்.
நம் கருத்து என்னவென்றால்--
எம்.ஜி.ஆர் மீது அவ்வளவுப் பாசம் வைத்திருந்ததாக சொல்லிக் கொண்ட ராஜீவ்,,
இரட்டை இலை சம்பந்தமாக,,திருமதி ஜானகி அம்மையாரிடமேப் பேசியிருந்திருக்கலாம்.
கட்சியில் ஜெ வுக்குத் தான் அதிக செல்வாக்கு இருக்கிறது. நீங்கள்,,கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்து கொண்டு,,கட்சியின் தலைமையை ஜெவிடம் ஒப்படையுங்கள். --
இப்படி அன்றைய சூழலைப் பக்குவமாக ஜானகி எம்.ஜி.ஆரிடமே ராஜீவ் விளக்கியிருந்தால்--
அம்மையாரும் அதைக் கேட்டிருப்பார்.
இரட்டை இலை முடக்கம் என்ற அப வாதமும் நேர்ந்திருக்காது.
எம்.ஜி.ஆர்,,ராஜீவிடம் கொண்டிருந்த அளவிலாப் பாசத்துக்கும் அர்த்தம் இருந்திருக்கும்!
இரட்டைப் புறாவில் நின்று,,தோற்ற பிறகு,,,
ஜெவிடம் இருந்த செல்வாக்கை உணர்ந்து பெருந்தன்மையாகக் கட்சியை விட்டுக் கொடுத்த ஜானகி அம்மையார்,,பிரதமர் ராஜீவே சொல்லும்போது மறுத்திருப்பாரா என்ன?
எப்படியோ-- அது நடந்து முடிந்துவிட்ட ஒன்று.
இப்படி நடந்திருந்தால்--அப்படிச் செய்திருந்தால் என--
யூகங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தால்--உலகின்--
இயக்கம் நடக்குமா? மயக்கம் தெளியுமா??
மீண்டும் இரட்டை இலை யை ஒன்றுபட்ட உள்ளங்களோடு ஜானகி அம்மையாரும்,,ஜெவும் தேர்தல் அலுவலகத்தில் அன்றைய தினம் பெறுகிறார்கள்.
தேர்தல் அதிகாரி--பெரி சாஸ்திரி,,இவர்களிடம் சின்னத்தை ஒப்படைக்கும்போது,,தன்னையும் மீறி அழுது விடுகிறார்?
அப்போது அவர் இப்படி சொல்கிறார்--
தேர்தல் அதிகாரியான நான்,,இந்தியாவின் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் தான். ஆனாலும்--
இந்த இரட்டை இலையை முடக்கும் துர்பாக்கியம் எனக்குக் கிடைத்த அன்று,,துன்பத்தில் அழுதேன்>
கருணை பார்த்தால் கசாப்புக் கடை நடத்த முடியுமா என்று என்ன தான் என்னை த் தேற்றிக் கொள்ள முயன்றாலும் இயலவில்லை.
கன் ஸோல் செய்து கொண்டாலும்--
என் ஸோல் --[soul]--ஆறவில்லை??
எனக்கு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில்--
அதே இரட்டை இலைக்கு மீண்டும் உயிர்க் கொடுக்கும் பணியை நானே செய்ய நேர்ந்த அதிர்ஷ்டத்தை எண்ணி இன்று சந்தோஷத்தில் அழுகிறேன்??
எல்லாத்துக்கும் காரணம்--
எம்.ஜி.ஆர் என்னும் அந்தப் பெர்சனாலிடி தான் காரணம்!!
என்ன தோழமைகளே??
எத்தனையோ நூறு அரசியல் கட்சிகள் அனுதினமும் இந்தியாவில் பிறக்கின்றன. இறக்கின்றன!
இது போல் சம்பவம் எங்கேனும் நடந்திருக்கிறதா? இனி நடக்கத்தான் போகிறதா???.........vtr
-
28th February 2021, 03:25 PM
#2028
Junior Member
Diamond Hubber
1963 ல் புரட்சி நடிகருக்கு மொத்தம் 9 படங்கள் வெளியானது. அதில் 4 படங்கள் 100 நாட்கள் ஓடினாலும். R.R.பிக்சர்ஸின் பெரிய இடத்துப் பெண் வசூலில் சாதனை செய்து பிளாக்பஸ்டர் படமானது. சுமார் 25 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
50 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டது. அய்யனுக்கு 1963 ல் சுமார் 10 படங்கள் வந்தாலும் "இருவர் உள்ள"த்தையும் "அன்னை இல்லத்தை"யும் தவிர வேறு படங்கள் எதையும் 100 நாட்கள் ஓட்டவில்லை. அதுவும் அந்த ஆண்டின் சூப்பர் பிளாப் "சித்தூர் ராணி பத்மினி" "அறிவாளி" "கல்யாணியின் கணவன்" என்ற மூன்று பட அதிபர்களை கட்டம் கட்டினார்.
R.R பிக்சர்ஸ் நிறுவனம் சராசரியாக ஆண்டுக்கு ஒரு படம் தலைவரை வைத்து எடுத்து விடுவார்கள். முன்னால் அய்யனை வைத்து "காத்தவராயன்" போன்ற படங்களை எடுத்து சூடு பட்டுக் கொண்டதால் பின்னாளில் "பறக்கும் பாவை" வரை தொடர்ந்து தலைவரை வைத்து படமெடுத்து நல்ல நிலைக்கு வந்தார்கள். அதன்பின் தடம் மாறி புதியவர்களையும், அய்யனையும் வைத்து படமெடுத்து கையை சுட்டுக் கொண்டார்கள். எல்லாம் இழந்த பின் மீண்டும் தலைவரை வைத்து ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் புரட்சி பித்தன் என்ற பெயரில் தயாராகும் படத்துக்கு இயக்குநர் பொறுப்பை ஏற்றும் படம் வளராமல் நின்று போனது. அதற்குள் தலைவர் முதல்வர் ஆகிவிட்ட படியால் அவர்கள் ஆசை நிராசையாகி விட்டது.
T.R. ராமண்ணா, நல்ல தொழில் நுட்பம் தெரிந்தவர். நல்ல இயக்குநர். அவரது திறமையை சீர் தூக்கி பார்த்து கிராமிய படமான "மாட்டுக்கார வேலனை" இயக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார் தலைவர். ஆனால் TRRamanna
அதை ஏற்க மறுத்து விட்டார். அய்யனிடம் சென்று அலங்கோலமாகி விட்டார். "என்னை போல் ஒருவனை" கிடப்பில் போட்டதால் TRR ஓய்ந்து விட்டார்.
"பெரிய இடத்துப் பெண்ணை" ஒரு சிறந்த கிராமிய மணமும் பட்டணத்து வாசனையும் கலந்து எடுத்து மிகப்பெரிய வெற்றிப் படமாக்கினார். கருத்தாழமிக்க வசனங்கள் பாடல்கள் என்று காட்சிக்கு காட்சி ஜனரஞ்சகமாக படமாக்கியிருந்தார்.
'அன்று வந்ததும் அதே நிலா' பாடலுக்கு மகிழ்ச்சி பொங்காத மனமேது. வித்தியாசமான நடன அசைவுகள் கொடுத்து திரையரங்கத்தையே கட்டிப் போட்டிருந்தார். அவர் நடக்கும் அந்த நடையை எந்த நடிகனும் எளிதில் நடந்து விட முடியாது. 'பாரப்பா பழனியப்பா' பாடலுக்கு கிராமத்து மக்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது காண கண் கோடி வேண்டும்.
'கண்ணென்ன கண்ணென்ன கலங்குது' பாடலுக்கு தலைவரின் குறும்பான ஆட்டத்தில் தியேட்டரே அதிரும்.
எம்ஜிஆரும் சரோஜாதேவியும் குளத்தங்கரையில் பேசும் வசனம் அந்தக் காலத்தில் அனைவரும் அதை பார்த்து பேசிப் பழகினர். 'கட்டோடு குழலாட ஆட' பாடலுக்கு ஜோதி லட்சுமியும் மணிமாலாவும் ஆடும் காட்சியும் தலைவர் இடையில் புகுந்து பாடும் காட்சியும் இன்னமும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற இன்னொரு பாடல் கிடைக்குமா?
இதே போன்ற பாடலை கொடுக்க நினைத்த அய்யன் 'வள்ளி மயில் மான் குட்டி'
என்ற பாடலை போட்டு கிராமிய பாடல் காட்சிகளை வெறுக்க வைத்து விட்டார். 'அவனுக்கென்ன தூங்கி விட்டான்' அற்புதமான தத்துவப்பாடல். அதுவும் சிலம்பு சண்டை போட்டியில் தலைவருக்கு மயக்க மருந்து கலக்கி கொடுத்த நாகேஷ் மட்டும் அந்தக் காட்சியில் தியேட் டருக்கு வந்திருந்தால் என்ன ஆகியிருப்பார் என்று சொல்ல முடியாது.
சென்னை சித்ரா கிரவுன் மகாலட்சுமியில் வெளியாகி சித்ரா கிரவுனில் 100 நாட்களை கொண்டாடியது. B C சென்டரில் வசூலில் பிரளயத்தை உண்டாக்கியது. மறுவெளியீடுகளிலும் மனதை பறி கொடுத்தனர். நெல்லை பார்வதியில் வெளியாகி 70 நாட்கள் ஓடியது.
தூத்துக்குடி சார்லஸில் 53 நாட்களை கடந்து (தங்கப் பதக்கம் 41 நாட்கள் ஓடியதை எண்ணி) எள்ளி நகையாடியது..........KSR..........
-
1st March 2021, 01:40 PM
#2029
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல்
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
ஆசியோடு நண்பர்கள்
அனைவருக்கும் இனிய
திங்கட்கிழமை காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் பற்றிய என்னுடைய இந்த அலசல் தொடரில் இன்று மலைக்கள்ளன் என்ற மாபெரும் வெற்றி பெற்ற பிறகு கூண்டுக்கிளி என்ற ஒரு தோல்வி படத்திற்கு பிறகு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான தலைவர் நடித்த
33 வது படமான குலேபகாவலி திரைப்படம் பற்றி காண்போம்...
குலேபகாவலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இயக்கம்
டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பு
டி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
இசை
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு
புரட்சி தலைவர்
சந்திரபாபு
ஏ. கருணாநிதி
கே. ஏ. தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
ராஜசுலோச்சனா
ஜி. வரலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடு
சூலை 29, 1955
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுகின்றனர். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக்க வழி செய்வார்.
சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குனர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் சுவாரசியமான விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
பூவை கொண்டு வர போய் அதனால் ஏற்படும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்
முடிவில் பூவை கொண்டுவந்து தந்தையின் கண்பார்வையை சரி செய்வது தான் கதை..
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...skt.........
-
1st March 2021, 01:41 PM
#2030
Junior Member
Diamond Hubber
'அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி' பாடல்..." அலிபாபாவும் நாற்பது திருடர்களும்"...இதுவும் எனக்கு மிகவும் பிடித்த விருப்பமான பாடல். சிந்தை தன்னைக் கவர்ந்து கொண்ட சீதக்காதியே திராட்சை போல இனிக்க பேசும் ஜீவஜோதியே சிங்கார ரூப மாறனே என் வாழ்வின் பாதியே.. இந்த வரிகளை நன்கு கவனிக்கவும். செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி மரைக்காயர். மறைந்த பிறகும் மறையாமல் இன்றும் நம்பியவர்களை வாழ வைத்துக் நிற்பவர் எம்ஜிஆர். அந்த வள்ளல் குணம் தான் என்னை கவர்ந்து கொண்டது என்றும், எம்ஜிஆரின் பேச்சில் எப்போதும் இனிமையும் தெள்ளமுதாய், தென்றல் மணம் வீசும் தமிழ் மணம் கமழும், மலர்களோடு இணைந்த, திராட்சைப்பழம் போன்ற சுவையும், வாசனையும் இருக்கும். என் உயிருக்குள் ஒளி ஆனவர். இதனை, திராட்சை போல இனிக்க பேசும் ஜீவஜோதி யே என்றும், சிங்கார உருவம் கொண்ட மாறன், உலகின் தலைசிறந்த முதல் ஆணழகன் எம்ஜிஆர். இதனை, சிங்கார ரூப மாறனே என் வாழ்வின் பாதியே என்றும் பானுமதி வர்ணித்து, வண்ண முகில் ஓடு இணைந்த வானிலா பாடுவதுபோல் பாடி, நடித்திருப்பார். இந்த வரிகள் எம்ஜிஆருக்கு மட்டுமே பொருந்தும் வேறு யாருக்கும் பொருந்தாது. இந்தப் படம் 1954, 55 இல் எடுக்கும்போது எழுதப்பட்டது, பாடப்பட்டது, இன்றும், என்றும் எம்ஜிஆருக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள். சீதக்காதி வள்ளல் எம்ஜிஆர் வாழ்க!........mnr...
Bookmarks