Quote Originally Posted by pavalamani pragasam
அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.
மேலும், தீங்கு/அனியாயம் செய்து அதிலிருந்து தப்பித்துக் கொள்பவர்களுக்கு இதை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லகூடும்.
அதாவது, என்றாவது ஒரு நாள், செய்த தவறுக்கு உகந்த கூலி கிடைக்கும் என்றும் சொல்லலாம். எனது கருத்து.