Page 13 of 15 FirstFirst ... 31112131415 LastLast
Results 121 to 130 of 150

Thread: iNayak kavi arangam

  1. #121
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    ..

    Quote Originally Posted by bis_mala
    However this kurangkuppidi bakthi, in the face of repeated rejections (which may take many or any form(s) ), is not anything peculiar to the historical devotees you are dwelling on.

    Somewhere along the line, we would know from you....

    ... why these two have been specially selected to be....

    .... your Heroes or "Paattudaith thalaivars".


    In fact, the Poetic version in Tamil.. only is my own Original composition
    The material existed in some other form somewhere else. You are merely versifying it. Good.

    Please note my SUBSEQUENT ADDITIONS, now made...

    ... Supplimentaries at the TAIL-END..

    Sudhaama


    .SHIFTED.

    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    poet who wrote for the downtrodden people....

    Quote Originally Posted by Sudhaama
    ..

    Quote Originally Posted by bis_mala
    However this kurangkuppidi bakthi, ...........................on.

    .........................................thalaivar s[/color][/b][/size]".

    Please note my SUBSEQUENT ADDITIONS, now made...

    ... Supplimentaries at the TAIL-END..

    Sudhaama

    .


    பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
    இறைவர்க்குத் தம்வாழ்வு சூடிய புவிவாணர்
    நிறைவரோ நானிலம் வாடிடும் நிலைகண்டே
    உறைவரே நெஞ்சமே உழைப்போர் துயர்விண்டு!

    Thanks.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #123
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    Quote Originally Posted by bis_mala
    பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
    பறையர்க்கு காவியம் பாடிய கவி-ராயர் யார்.? நந்தனாரா.?

    நந்தனாரின் சுய-வாக்காய் சைவத்-திருமுறைப் பாக்கள் உள்ளனவா.? அவற்றை இங்கு எடுத்துக்காட்ட வேண்டுகிறேன்.அன்பரே.!

    .திருப்பாணாழ்வார் தனது ஞான-வாக்காய் பாடியருளிய பாசுரங்களே "அமலனாதிப்பிரான்"எனப்படும்... தமிழ்-மறை பிரிவு 10 பாசுரங்கள் இதோ.



    திருப்பாணாழ்வார் பாடிய "அமலன் ஆதிப்பிரான்" பதிகம் .


    927
    அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
    விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,
    நிமலன் நின்மலன் நீதிவானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், திருக்
    கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (1)

    928
    உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
    நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
    கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
    அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

    929.
    மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
    சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
    அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
    உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (3)

    930
    சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
    உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
    மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,திருவயிற்று-
    உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

    931
    பாரமாய பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
    வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
    கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
    வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே. (5)

    932
    துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
    வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
    அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
    உண்ட கண்டம் கண்டீர் *அடியேனை உய்யக்கொண்டதே. (6)

    933
    கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
    மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
    ஐயனார், அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
    செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

    934
    பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
    அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
    கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
    பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே. (8)

    935.
    ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
    ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
    கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
    நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே. (9)

    936
    கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
    உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
    அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
    கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே. (10)



    இதே போல நந்தனாரின் பாடல்கள் யாவை எனத் தெரிவிப்பீரா அன்பரே. நன்றி.

    .அன்புடன் ... சுதாமா

    .

  5. #124
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    நேக்கு நீங்களே எல்லாம் சொல்லிமுடிங்கோ.

    Happy Deepavali to you and all at home.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #125
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    Shifted.

  7. #126
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Iyer yaar?

    Quote Originally Posted by Sudhama
    உரிதே அறிந்தோரைக் கேட்டுக்-கேட்டு எமக்கும் உண்டு நற்காலம் எனவே
    தரிசிக்க சிவனை ஐயர் ஒருவர் அறிவூட்ட கோயில் நாடினோம் பறையரே
    இவ்வரிய நல்வழியைக் காட்டிய பெருந்தகையான ஐயர் யார்? அவர்பற்றிச் சில வரிகள்......
    B.I. Sivamaalaa (Ms)

  8. #127
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: Iyer yaar?


    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by Sudhama
    உரிதே அறிந்தோரைக் கேட்டுக்-கேட்டு எமக்கும் உண்டு நற்காலம் எனவே
    தரிசிக்க சிவனை ஐயர் ஒருவர் அறிவூட்ட கோயில் நாடினோம் பறையரே
    இவ்வரிய நல்வழியைக் காட்டிய பெருந்தகையான ஐயர் யார்? அவர்பற்றிச் சில வரிகள்......
    யாரோ ஒருவர் தெரியாது.



    மந்தித் தாய்-நெறியே ...


    ...நந்தன் கண்ட சிறந்த வாழ்-நெறி.?




    [html:8fe965cff0]

    </a>

    [/html:8fe965cff0]


    [முன் குறிப்பு : அரும்-பத சொற்பொருள்… அடிக்கீழே காண்க]


    திருவருள் என்றால் என்ன என்றோ, நமக்கு மேம்பட்ட-வல்ல கடவுள்
    ஒருவன் மறைந்து-இருந்தே நம்மை ஆண்டு-காக்கிறான் திட்டம் இட்டே
    கருத்தே வாழ்க்கை என்றே அறியாத பாமரராய் வாழ்ந்து வளர்ந்தோமே
    பொருள் ஆயன் கைத்-தாம்பு எல்லை-வரம்பே வாழ்வு மாட்டு விலங்கே.!

    விலங்கு மிருகமாய் இடி, மின்னல் பயந்து ஒளிந்து, கட்டுப்பட்ட சங்கிலி
    விலங்கு வழுவா தற்குறைவு இழிவு-மனப்பான்மையரே தான் சிந்தியாது
    கலங்கு மனக்கவலை மீளாது நித்தம் கணமும் காலம் கடத்திய பறையர்
    துலங்கு கண் முன்னே சுடுகாடு வருவோர் பிறர் கண்டே உலகு புரிந்தேன்

    புரிந்தேன் என்னோடு சுடுகாடு-வாழ் மறையவன் யாவர்க்கும் பொதுவே
    சரித்திரம் நெற்றிக்-கண்ணன் தெரிந்து, புத்துணர்ச்சி பெற்றேன் நம்பிக்கை
    உரிதே அறிந்தோரைக் கேட்டுக்-கேட்டு எமக்கும் உண்டு நற்காலம் எனவே
    தரிசிக்க சிவனை ஐயர் ஒருவர் அறிவூட்ட கோயில் நாடினோம் பறையரே

    பறையனே சிறியேன் நந்தன் கோவில்-சாமி காணவொட்டா குறுக்கே மாடு
    மறைத்துக் கிடந்ததையே விலக்கி எமக்கு காட்சி தந்தான் ஆகா சிவ சிவா
    சிறை வாழ்க்கை விட்டே சிவலோகம் விடுதலை வேண்டி அழுது-புலம்ப
    இறைவன் தன் உயர்-சீலம் உலகோர்க்கு துலங்கச்செய்தான் நானே கருவி
    .
    கருவி நம்மைக் கடவுள் தன்னையும் தரணி வாழ்-நிலை அறியச்-செய்யும்
    கருத்தே புரிந்தேன் சிவ-பெருமான் கோயில் தரிசனத்தால் ஞானம் பெற்றே
    பொறுக்கவோ புவி-நரகு, முன்-பிறவி பாவ-புண்ணிய வினைக்-கடன் நீங்க
    திருத்தி நம்மை இறைவனின் மந்திக்-குட்டியாய் வாழ சுவர்க்கம் புவியே
    .
    புவிப்- பிறவி மாந்தராய் ஏன் பிறந்தோம்.? உத்தம-பிறவி எனத்-தக்கோமா.?
    தவிப்பதற்கோ தரணி வாழ்க்கை, மிருகம் போல் கிட்டியதே ஏற்றுக் கிடக்க
    தெவிட்டாத் தாழ்வோ.? என்னவர்-போல இதுவே பறையர்-கதி என மாய்ந்தே
    ரவி ஒளி போல தாயாய் கடவுள் துணை பயன்-கொண்டால் பயம் ஏனோ.?
    .
    பயம்-ஒன்றே மாபெரு பலவீனமே பலம்-மிக்க யானை சிங்கமும் அடிமை
    செயல் யாவும் பரமனால்-என அறிந்தே அவன் துணையை பயன் கொண்டே
    புயலையும் வென்று ஆளலாம், பயம் நீக்கி இறைவனையே முற்றும் நம்பி
    ஜயம் வெற்றி திண்ணம் மேலோங்க முயல், கிடவாதே புவி-இயல்பு என்றே

    இயல்பு சிவன் நந்தி வழி-மறித்து மறைத்து காத்துக்-கிடக்கும் வாகனன்
    செயல் கடமை, தலையிடாதே என்றார் ஊரார். என்-துதி புலம்பல் கேட்டு
    முயலாது ஐயன் தரிசனம் காணாது திரும்பிச் சென்றேனா சிறியனேனே
    இயற்கை அழிவு, கேடு-வாழ்க்கை ஒடிந்து வாளா-கிடக்க சிறை மிருகமோ.?
    .
    சிறையிலும் சீர்-மிகு சிம்மாசன மன்னனாய் ஆளலாம் பரமன் துணையால்
    இறை துணை-இன்றி ஆவது ஏது எவரும் எது சிறிது மா-பெரிது எனினும்
    மறையவன் துணையோடு ஆகாதது ஏதும்-இல்லை சிறியோமே ஆயினும்
    நிறை-வாழ்வு சுவர்க்கம் மோட்சம் கொள்ளலாம் இறை தாயைக் கட்டியே

    கட்டியே தன்னைச்-சற்றும் இடை-விடா இறுக்கம் நழுவா அகலாது-ஒட்டி
    குட்டி வாழ்-நெறி கடைப்பிடி நோக்கம் தாயைப்-புரிந்து சிசு பங்கே அதிகம்
    சுட்டே தீ, ஊசி-குத்தி, கத்தி அறுக்கினும் மருத்துவனை முற்றும் நம்பியே
    விட்டே அகலாது, வைத்தியம் சொல் பின்பற்றும் நோயாளி மாந்தர் நாமே

    மாந்தர் நாம் இறைவனின் துணை-பெற இயலும் ஒரே அரி பிறவி புவி
    வேந்தராய் வாழப்-பிறந்தோம் நம் நல்வாழ்வு உயர்வு நம் கையிலே என
    கோந்தாய் இறைவனை ஒட்டி அகலா கைப்பிடி-நழுவா மந்தித் தாய்-நெறி
    ஏந்து-தாய் ஒத்துழைத்து அதிக சிசு-பொறுப்பே நந்த-மாந்தன் வாழ்-சிறப்பே

    சிறந்தே வாழ்ந்து-ஓங்கவே படைத்தான் பார் பரமன் நம்மை உன்னத தலை
    சிறந்த முழுமை ஆறறிவு மனிதனாய், பூவுலகில் கீழ்ப்பிறவி மூட மிருகம்
    மறந்தவை தன்னைத்-தானே தனது வலிமையையே தானே அறியா பேதை
    இறந்து-திரி நடை-பிணத்திற்கும் ஈசனுக்கும் இடைப்பிறவி புவி-இறைவராய்

    புவி-இறைவராய் நாமே புவி ஆண்டு இங்கேயே சுவர்க்கம் கண்டு ஓங்கி வாழ
    தெவிட்டா இருவகை இன்பமும் பேரின்பமும் கொள்ள-வல்ல ஒரே மா-பிறவி
    கவி-பாடினோம் கனிவுறு சொற்களால் நாம் இருவகை அடியராய் முன்னோடி
    தவியா அலகிலா விளையாட்டு நெறி குழம்பாதே சைவ-வைணவ கண்களே

    கண்களே உமக்கு இருவகை அறுபத்து-மூவர் நாயன்மார், பன்னிரு ஆழ்வார்
    விண்-உலகு சிவலோகம் வாழ் சிவனடியான் சிறியேன் பேரின்பன் நந்தனும்
    மண்வாழ் பாணர் மறை-இறையாய் திருமாலடியர் ஆழ்வாரும் பறை கேளீர்
    புண் தற்கொலை மன-நோயரே புரிவீர் சிவன் திருமாலை முப்பார்வையால்
    .
    .... தொடரும்.


    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>>>>>

    [அரும்-பதச் சொற்பொருள் :---

    கைத்-தாம்பு = கை-வசப்பட்ட கயிறு --- ஆயன் = மாடு மேய்க்கும் இடையர்]

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<<<


    ================================================== ====================

    .

  9. #128
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    good

    Quote Originally Posted by Sudhama
    மறையவன் துணையோடு ஆகாதது ஏதும்-இல்லை சிறியோமே ஆயினும்
    நிறை-வாழ்வு சுவர்க்கம் மோட்சம் கொள்ளலாம் இறை தாயைக் கட்டியே

    நன்று!
    B.I. Sivamaalaa (Ms)

  10. #129
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .

    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by Sudhama
    மறையவன் துணையோடு ஆகாதது ஏதும்-இல்லை சிறியோமே ஆயினும்
    நிறை-வாழ்வு சுவர்க்கம் மோட்சம் கொள்ளலாம் இறை தாயைக் கட்டியே

    நன்று!

    நன்றி



    பூனைத் தாய்-நெறியே ...


    ...பாணன் கண்ட சிறந்த வாழ்-நெறி.?





    [html:7f9a577fe3]


    [/html:7f9a577fe3]




    1. - நந்தனார்
    பார்வையால் காண-இயலா வான்-இறைவனை புவிக்-கோயிலில் பார்-நலமே
    நேர்-வழி காட்டினார் நல்லார் ஒரு வேதியர் ஸ்மார்த்தர் ஐயர் சைவர்-அல்லர்
    ஊர் கூடி வாழ்-துணை சமுதாயத்தில் ஒருவன் இறைவனே நம்-செயல் சாட்சி
    பார் கோவில்-இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ஏன் அறிந்தேன் நந்தனே

    2.
    நந்தன் நான் பெற்ற உபதேசத்து அளவு மட்டுமே கற்றேன் கேட்டுக் கேட்டு
    சொந்தம் உன்னது என்று உலகில் ஏதும் இல்லை நீயே இறைவன் உடைமை
    பந்தம் உறவு பெற்றார் உற்றார் கூடி ஓங்கி வாழவே நோக்கம் கொண்டு கூடி
    சிந்தனை இறைவன் மந்தித்- தாயை வலிந்து ஒட்டு நலம் ஆனந்தம் ஒன்றே

    3.
    ஒன்றே அறிவேன் பறையனேன் நந்தனின் குரு ஐயர் காட்டிய வாழ்-நெறி
    நன்றே நல்வழி இங்கும் அங்கும் எங்கும் ஓங்கி வாழ் திருவருள் வழி எது
    வென்றேன் என் விருப்பம் போல் முன்-விதியே மாற்றி தந்தையே தாய் கட்டி
    கொன்றே தீவினை நற்கதி பெற்றேன் சிவ-லோகம் பாணரே ஏன் அழைத்தீர்

    4. - திருப்பாணாழ்வார்
    அழைத்தேன் நந்தரே உம்மை புவி-அடியார்க்கு அடியேன் பறையன் பாணன்
    இழைக்க நம் இருவர் கடமை நாம் பெற்ற நற்பயன் வையம் பிறரும் பெற
    பிழைக்க ஏதோ செய்து முன்னேறாத பேதையும் நன்னோக்கரும் ஏமாறாது
    தழைத்தே ஓங்க உலகோர்க்கு இரு வழி அனுபவக்கல்வி ஊட்டவே நாம்

    5.
    நாம் இருவரும் நந்தன் பாணன் அடியேனும் தாழ்-பிறவி ஒரே குலத்தோர்
    தாம் பேரறிஞர் எனக்காட்ட சிலர் குறு நோக்கிலே பரமன் அரியா அரனா
    ஓம் துதிப் பொருள் திருமாலா, வைணவம் சைவம் என்று ஏதேதோ பேதம்
    போம் நற்கதி புவி-இன்ப நல்வழி மந்தி பூனைத் தாயா விடை முப்பார்வை

    6.
    முப்பார்வையால் இறைவன் சிந்தனை நோக்கினால் மாந்தர்காள் நம்மை
    முப்பார்வையால் ஆண்டு காக்கும் ஒரே பரமனின் இறை-நெறி துலங்கும்
    முப்பார்வையே மூன்றாம் பரிமாணம் காட்டுவது, ஒரே பொருளின் ஆழம்
    முப்பார்வையர் முக்கண்ணனை கமலக்-கண்ணனையும் புரிவீர் திரு-நீறே

    7.
    நீறு இரு பொருள்-தரு மூல வித்துச்-சொல் புவி-காண் சாம்பல் மண் எனவும்
    நீறு உறு அணியில்லா நெற்றி பாழ் என்றாளே ஔவை அதன் உட்-பொருள்
    ஆறு வழியே பரமன் ஒருவனே நாம் அறிந்த எவனோ அறியா யாவனோ
    ஓரும் ஆதி அந்தம் அவனே மண் நீர் தோற்றம், சாம்பல் புகை இறுதி நெறி

    8.
    நெறியே வையத்து உயிரினம் ஜடம் எதுவும் தோற்றம் மண் அல்லது நீரிலே
    அறிவீர் மனிதன், தங்கம் தாவரம், பயிர் எதுவாயினும் விதிவிலக்கு உளதோ.?
    தெரிந்தோம் யாவும் அடையும் இறுதி வடிவம் சாம்பல் அல்லது புகையே
    புரி ஒருவனே பரமன் அந்தம் சின்னம் சாம்பல்-புகை ஆதி நினை திருமண்-நீர்

    9.
    மண்-நீர் குழைத்த திருமண்ணே பரமனின் முதன்மை சின்னமாய் வைணவர்
    விண் விரைய சாம்பல்-புகை முதன்மை சுய-உணர்வூட்டவே சின்னம் சைவர்
    எண்ணம் கணமும் பரமன் நினைவு மறவா சுய உறுதி கொள் மனப்பக்குவமே
    வண்ணமே உடல்-அழகு இரு-வேறு அணி-அலங்கார விபூதி திருமண் காப்பே.

    10.
    காக்கும் இறைவா ஆதி-அந்தம் ஆன பரமனே உன் அடியனேன் உன் சின்னம்
    போக்கும் என் முன்வினை யாவும் தூய்மை புனிதம் உடல், மனம் ஆத்மா
    ஆக்கும் அடியார் நற்கதியே இருவகை பக்திச்சின்னம் பரமன் அடி-பணிந்தால்
    வாக்கு வேதப்-பொருள் அறிவீரே திருமால் ஒருவனே பரமன் பல்-உருவன்

    11.
    பல்லுருவன் ஒருவன் பாரோர் பல்வகை அவரவர் மனப்போக்குக்கு ஏற்பவே
    தொல்லுருவாய் கோயில் கொண்டான் ஆழ்வார்க்கு காட்சி தந்து உறைந்தான்
    பல்லுருவாய் பரமன் ஒருவனே அல்லா பரமபிதா சிவன், காளி, அனைய
    நல்லதே அவரவர் விதி வழி விழை இறைவர் பக்தி ஏற்றத்தாழ்வு இல்லை

    12.
    இல்லை எனக்குக் கவலை ஏதும் என் தந்தையே தாயாய் காக்கும் நெறியன்
    சொல்லை பெரியோர் கேட்டுக்கேட்டே அறிந்தேன் கற்றேன் வாழ்-கலையே
    நல்லான் பூனைத்தாய் நெறியாய் பல்வகையோர் அடியார் எம்மை அவரவர்
    தொல்லை போக்கிக் காப்பான் அவனே நாடி வந்து தாயின் பங்கே அதிகம்
    .
    .

  11. #130
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sudhaama
    .

    12.
    இல்லை எனக்குக் கவலை ஏதும் என் தந்தையே தாயாய் காக்கும் நெறியன்
    சொல்லை பெரியோர் கேட்டுக்கேட்டே அறிந்தேன் கற்றேன் வாழ்-கலையே
    நல்லான் பூனைத்தாய் நெறியாய் பல்வகையோர் அடியார் எம்மை அவரவர்
    தொல்லை போக்கிக் காப்பான் அவனே நாடி வந்து தாயின் பங்கே அதிகம்
    .
    .


    கவலைஒன் றில்லை நெஞ்சில்
    கடவுளைக் கடைந்து கண்டால்,
    தவலையுள்* தயிரை மத்தால்
    தவறாமல் ஆய்ச்சி போலே;
    துவளுறும் துன்ப வாழ்வில்
    துறக்கமே காணும் பாதை
    சவளறத் தந்த ஐயர்
    சாந்துணை ஏத்தத் தக்கார்.



    அன்றுள நந்தன் பாணன்
    ஆயவர் பேசிக் கொண்டார்
    நன்றிவை சொன்ன பாங்கு
    நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
    ஒன்றது தெய்வம்; மாலும்
    உயர்சிவ னாரும் என்ற
    தென்றிசை மேலோர் வாய்மை
    தெளிவுற நீவிர் சொன்னீர்.

    *or in a mudpot?
    B.I. Sivamaalaa (Ms)

Page 13 of 15 FirstFirst ... 31112131415 LastLast

Similar Threads

  1. Centenary of Udumalai Narayana Kavi
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 9
    Last Post: 27th April 2011, 09:51 AM
  2. KAVITHAI ARANGAM
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 38
    Last Post: 21st August 2010, 05:05 AM
  3. Kadal Arangam - IR - Velu Prabakaran
    By Vysar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 30th July 2009, 09:21 PM
  4. kavi(thai)yin seyalpAdu
    By V.Annasamy in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 20th June 2007, 01:39 PM
  5. kambanin kavi
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 21st February 2005, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •