-
22nd February 2011, 07:16 PM
#1211
Senior Member
Veteran Hubber

Originally Posted by
NOV
idharkkidaiyil (1973) veliyaana innoru thiraipadam Thalai Prasavam. adhil thaan mudhal mudhalil MSV isaiyil Malaysia Vasudevan paadinaar.
paadal: maalyittu poomudiththa manamagalaaga, vidhi mounamaaga pOgudhammaa oorvalamaaga.
டியர் நௌ சார்,
தகவலுக்கு நன்றி!
ஒரு மேடைக் கச்சேரியில், மலேசியாவின் பாட்டுக்குரலை கேட்டு அசந்த மெல்லிசை மாமன்னர், அவருக்கு அளித்த முதல் வாய்ப்பு "பாரத விலாஸ்". அதற்குப் பின்னர் "தலைப்பிரசவம்". முத்துராமன்-லக்ஷ்மி-பிரமீளா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படம் 1973-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. தாங்கள் குறிப்பிட்ட 'மாலையிட்டு பூ முடித்த மணமகளாக.....' பாடலை, கவிஞர் அவினாசி மணி இயற்றித் தர, எம்.எஸ்.வியின் இசையில், ஸோலோவாகப் பாடினார் மலேசியா வாசுதேவன்.
வாசுவுக்கு "தலைப்பிரசவ"த்தில் தனியாக தலைப்பாடல்.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd February 2011 07:16 PM
# ADS
Circuit advertisement
-
22nd February 2011, 11:18 PM
#1212
Senior Member
Veteran Hubber
இன்று 22.2.2011 இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை 'வசந்த்' டீவியில் ஒளிபரப்பான 'ஒய்.ஜி. மகேந்திராவின் பார்வையில்' நிகழ்ச்சியில் ஒய்ஜி கூறியதிலிருந்து: [செவ்வாய்தோறும் (இரவு 7:30 முதல் 8:00 வரை) இந்நிகழ்ச்சி 'வசந்த்'தில் ஒளிபரப்பாகிறது, இந்நிகழ்ச்சியின் Research & Script : நமது ராகவேந்திரன் சார்]
"சிவாஜி சார் செய்த Variety - அதாவது விதவிதமான கதாபாத்திரங்கள் - இந்திய அளவில் வேறு யாருமே செய்தது கிடையாது. இது என்னுடைய தாழ்மையான கருத்து. எனது இந்த கருத்து-கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம்." என்று கூறினார்.
தவறே அல்ல, You are 'n' percent right YG. இந்திய அளவிலென்ன, உலக அளவிலேயே அவர் செய்த அளவுக்கு, எல்லாவிதமான ரோல்களையும் எந்த ஒரு நடிகரும் செய்ததில்லை என்பது ஆணித்தரமான உண்மை. இதை, எனக்குத் தெரிந்த வரை, திரு.ஏ.வி.மெய்யப்பன் அவர்களும், திரு.சோ ராமசாமி அவர்களும் பல தருணங்களில் கூறியுள்ளார்கள்.
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நமது நடிகர் திலகத்தை மிஞ்சிய நடிகர் இல்லை என்பதே எனது தாரக மந்திரம், ஆணித்தரமான அபிப்பிராயம்.
Sivaji V.C. Ganesan : THE GREATEST ACTOR OF THE UNIVERSE
அது மட்டுமா, திரைப்படங்களின் வெற்றி சதவீதத்திலும், Box-Office சாதனைகளிலும் கூட, எமது அறிவுக்கு எட்டிய வரை, உலக அளவில் அவரை நெருங்குபவர் இல்லை.
47 ஆண்டுகளில் (1952-1999), 306 திரைப்படங்களில் [கௌரவ வேட படங்களையும் சேர்த்து], 120 நூறு நாள் படங்களை [இவற்றில் 22 வெள்ளிவிழாப் படங்கள்], மிகப் பெரிய திரையரங்குகளில் ரெகுலர் காட்சிகளில் [தீப்பெட்டி சைஸ் திரையரங்குகளில் நடைபெறவே நடைபெறாத பகல் காட்சி-காலைக்காட்சிகளில் அல்ல], அளித்த ஒரே கதாநாயக நடிகர்-ஹீரோ சிங்கத்தமிழன் சிவாஜி மட்டுமே!
[100 நாள் படங்கள் என்றால் 100 நாட்களும் அதற்கு மேலும் வெற்றிகரமாக ஓடியவை என்று கொள்ள வேண்டும்]
[வெள்ளிவிழாப் படங்கள் என்றால் 175 நாட்களும் அதற்கு மேலும் வெற்றிகரமாக ஓடியவை என்று கொள்ள வேண்டும்]
Nadigar Thilagam is always the incomparable, undisputed & uncrowned KING & EMPEROR OF BOX-OFFICE.
இந்திய நடிகர்களில், உலக அளவில் விருதுகளை-கௌரவங்களை அதிகம் பெற்றவரும் நமது நடிகர் திலகமே!
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
சிவாஜி ரசிகன் என்று சொல்லடா! சிங்கநடை போட்டுச் செல்லடா!
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
23rd February 2011, 03:01 AM
#1213
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா,
மனமார்ந்த பாராட்டுக்கும், அபூர்வ தகவல்களுக்கும் அன்பான நன்றிகள் !

Originally Posted by
saradhaa_sn
ஒப்பீடு செய்துபார்க்கும் வண்ணம் இந்தி 'ஓ மேரி ராஜா' பாடலையும், தமிழ் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலையும் ஒளிவடிவில் ஒரே பதிவில் தந்திருப்பது அருமை அல்ல அட்டகாசம். பலருக்கு பல உண்மைகளை உணர்த்தியிருக்கும்.
True! True! True! Extremely True!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd February 2011, 10:13 AM
#1214
Senior Member
Senior Hubber
டியர் ராகவேந்தர் சார்,
நன்றிகள் பல. நடிகர் திலகம் என்ற அட்சய பாத்திரத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கத் தலைப்படுகின்ற முயற்சிதான் இந்த பதிவு. நீங்கள் சொன்னது போல் பல ரீமேக் படங்களை எடுத்துக் கொண்டு அலசலாம். இருந்தாலும்,சிறந்த பத்து படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், நீங்கள் சொன்ன கோஷிஷ், சச்சா ஜூடா, Shaukeen போன்ற படங்களில் நடிகர் திலகம் நடித்திருந்தால் அவைகளின் தலையெழுத்தே இன்னும் பிரமாதமாக மாறியிருக்கும். இதில், Shaukeen படம் ஷூட்டிங் கூட ஆரம்பித்து விட்டிருந்தார்கள். ஹிந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடித்த பாத்திரத்தில்தான் யார் என்பது நினைவில்லை.
இந்த ஆய்வின் இன்னொரும் கோணமும் மீதம் இருக்கிறது. அதற்குப் பின்னர், தங்களுடைய மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
Parthasarathy
-
23rd February 2011, 11:53 AM
#1215
Senior Member
Devoted Hubber
Basu Chattarjee இயக்கத்தில் வெளியான ஹிந்தி Shaukeen தமிழில் நடிகர் திலகம் , vkr , பூர்ணம் விஸ்வநாதன், சுரேஷ், ராதா நடிக்க, கலாகேந்திர நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. குமுதத்தில், நடிகர் திலகம் , vkr , பூர்ணம் விஸ்வநாதன் முவரும் சேர்ந்து நின்ற புகைப்படம் வெளியானது. ஹிந்தியில் வெற்றி அடைத்த படம். என்ன காரணம் என்று தெரியவில்லை. படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
-
23rd February 2011, 02:54 PM
#1216
Senior Member
Devoted Hubber
திரு. பார்த்தசாரதி,
உங்களுடைய நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களை பற்றி ஆய்வு அருமை. பிறமொழிகளில் வந்த படங்களை நடிகர் திலகம் தமிழில் நடித்த படங்கள் ஏராளம். ஒரு சில படங்களை தவிர , எல்லாமே வெற்றி படங்களே. உதாரணம் பாலாஜி தயாரித்த படங்கள். உனக்காக நான் தவிர மற்ற படங்கள் வெற்றியே. பாலாஜியை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களில் நடிகர் திலகம் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான். உதாரணம் , வசந்த மளிகை, திரிசூலம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில்.
பிற மொழிகளில் வெளி வந்து தோல்வி அடைந்த படங்களை யாரும் முன் வந்து தயாரிப்பதில்லை. ஆனால் நம் நடிகர் திலகம் மட்டுமே பிற மொழி தோல்வி படத்தையும் தமிழில் வெற்றி அடைய செய்தார். உதாரணம், அண்ணன் ஒரு கோவில், அவன் தான் மனிதன். கன்னடத்தில் சுமாராக ஓடிய கஸ்தூரி நிவஸா என்ற படத்தை , தமிழில் அவன் தான் மனிதனாக வந்து வெற்றி பெற்றது . ( ATM நடிகர் திலகத்தின் 175 படம் , அதனால் ஓடியது என்று சிலர் சொல்லல்லாம்).
ஆனால் கன்னடத்தில் பெரிய தோல்வி அடைந்த படமான தேவர கண்ணு என்ற படத்தை தமிழில், அண்ணன் ஒரு கோவில் படத்தை தன் சொந்த தயாரிப்பு கம்பெனி முலம் தயாரித்து வெற்றி அடைந்தார். ஆனால் 250 படமும் கன்னடம் முலம். தோல்வி அடைந்தது. காரணம், நடிகர் திலகத்தின் 250 படம், பெரிய எதிர்பார்ப்பு (200 படத்தை போல - இதுவும் கன்னடம் முலம்) பிரபுவிற்கு முக்கியத்தும் , வலுவான கதை இல்லை.
நடிகர் திலகம் நடித்து தமிழில் வெளி வந்த படங்கள், பிற மொழிகளில் தயாரித்து வெளியான படங்கள் தமிழை போல் வெற்றி பெறவில்லை. (பல படங்கள் தோல்வி அடைந்தன).
தமிழில் - பிற மொழிகளில் வந்து தோல்வி
vietnam veedu , கெளரவம், - கன்னடம்
சவாலே சமாளி - கன்னடம், தெலுங்கு, ஹிந்தி
தெய்வ மகன் - (முலம் ஹிந்தி ?) - கன்னடம், தெலுங்கு
பட்டிகாட பட்டணமா - தெலுங்கு ( கன்னடத்தில் வெற்றி)
நவராத்திரி - தெலுங்கு, ஹிந்தி
பாசமலர் (முலம் மலையாளம் ?) - தெலுங்கு, ஹிந்தி
ராஜா (முலம் ஹிந்தி) - கன்னடம் (கல்லடி படும் என்று பயந்து 100 நாள் ஒட்டினார்கள்)
தியாகம் - தமிழில் சில்வர் ஜூப்ளி (தெலுகில் சுமார் வெற்றி)
எங்க ஊர் ராஜா - தெலுங்கு
-
23rd February 2011, 03:35 PM
#1217
Senior Member
Senior Hubber

Originally Posted by
abkhlabhi
திரு. பார்த்தசாரதி,
உங்களுடைய நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களை பற்றி ஆய்வு அருமை. பிறமொழிகளில் வந்த படங்களை நடிகர் திலகம் தமிழில் நடித்த படங்கள் ஏராளம். ஒரு சில படங்களை தவிர , எல்லாமே வெற்றி படங்களே. உதாரணம் பாலாஜி தயாரித்த படங்கள். உனக்காக நான் தவிர மற்ற படங்கள் வெற்றியே. பாலாஜியை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களில் நடிகர் திலகம் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான். உதாரணம் , வசந்த மளிகை, திரிசூலம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில்.
பிற மொழிகளில் வெளி வந்து தோல்வி அடைந்த படங்களை யாரும் முன் வந்து தயாரிப்பதில்லை. ஆனால் நம் நடிகர் திலகம் மட்டுமே பிற மொழி தோல்வி படத்தையும் தமிழில் வெற்றி அடைய செய்தார். உதாரணம், அண்ணன் ஒரு கோவில், அவன் தான் மனிதன். கன்னடத்தில் சுமாராக ஓடிய கஸ்தூரி நிவஸா என்ற படத்தை , தமிழில் அவன் தான் மனிதனாக வந்து வெற்றி பெற்றது . ( ATM நடிகர் திலகத்தின் 175 படம் , அதனால் ஓடியது என்று சிலர் சொல்லல்லாம்).
ஆனால் கன்னடத்தில் பெரிய தோல்வி அடைந்த படமான தேவர கண்ணு என்ற படத்தை தமிழில், அண்ணன் ஒரு கோவில் படத்தை தன் சொந்த தயாரிப்பு கம்பெனி முலம் தயாரித்து வெற்றி அடைந்தார். ஆனால் 250 படமும் கன்னடம் முலம். தோல்வி அடைந்தது. காரணம், நடிகர் திலகத்தின் 250 படம், பெரிய எதிர்பார்ப்பு (200 படத்தை போல - இதுவும் கன்னடம் முலம்) பிரபுவிற்கு முக்கியத்தும் , வலுவான கதை இல்லை.
நடிகர் திலகம் நடித்து தமிழில் வெளி வந்த படங்கள், பிற மொழிகளில் தயாரித்து வெளியான படங்கள் தமிழை போல் வெற்றி பெறவில்லை. (பல படங்கள் தோல்வி அடைந்தன).
தமிழில் - பிற மொழிகளில் வந்து தோல்வி
vietnam veedu , கெளரவம், - கன்னடம்
சவாலே சமாளி - கன்னடம், தெலுங்கு, ஹிந்தி
தெய்வ மகன் - (முலம் ஹிந்தி ?) - கன்னடம், தெலுங்கு
பட்டிகாட பட்டணமா - தெலுங்கு ( கன்னடத்தில் வெற்றி)
நவராத்திரி - தெலுங்கு, ஹிந்தி
பாசமலர் (முலம் மலையாளம் ?) - தெலுங்கு, ஹிந்தி
ராஜா (முலம் ஹிந்தி) - கன்னடம் (கல்லடி படும் என்று பயந்து 100 நாள் ஒட்டினார்கள்)
தியாகம் - தமிழில் சில்வர் ஜூப்ளி (தெலுகில் சுமார் வெற்றி)
எங்க ஊர் ராஜா - தெலுங்கு
நன்றி. நீங்கள் சொன்ன தகவல்கள் ஏறக்குறைய எல்லாமே உண்மைதான். என் ஆய்வு இன்னும் முடியவில்லை. சிறிது பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
23rd February 2011, 04:58 PM
#1218
Senior Member
Senior Hubber
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும் (தொடர்ச்சி):-
நீதி:- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!
எங்கள் தங்க ராஜா:- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.
அவன் தான் மனிதன்:- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.
பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.
அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.
நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட
நிலைமை இப்படி இருக்க, எப்படி நடிகர் திலகத்தின் சாதனைகளை ஒரு பத்து படங்களுக்குள் அடக்கி விட முடியும்?
அன்புடன்,
பார்த்தசாரதி
-
23rd February 2011, 05:09 PM
#1219
Senior Member
Senior Hubber
டியர் Abhkhlaabhi (தங்களது பெயர்?),
நடிகர் திலகத்தின் படங்கள் - மற்ற மொழிகளில் என்றொரு பதிவை இந்த வாரக் கடைசியில் இடலாம் என்று இருக்கிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
24th February 2011, 04:43 AM
#1220
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் கைவண்ணத்தில் வந்துள்ள 'நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்' கட்டுரையின் இரு பகுதிகளுமே அருமையிலும் அருமை.
பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!
குறிப்பாக பெருவாரியான அவரது ரீமேக்குகள் தாங்கள் வகுத்துள்ள மூன்றாவது வகையில் ரசிகர் படங்களாக வந்தாலும், அதிலும் அவர் முதல் இரண்டு வகை படங்களை விரும்பும் நபர்களை கண்டு கொள்ளாமல் விட்டதில்லை. "தங்கை"யில் 'தண்ணீரிலே தாமரைப்பூ' உருக்கத்தின் உச்சம். "என் தம்பி"யில் 'முத்து நகையே' பாடலில் 'காலழகு பார்த்தால்...' என டி.எம்.எஸ். நிறுத்த, அந்த நிறுத்தத்தில் நம்மோடு நமது இதயமும் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தி, அண்ணலின் அன்புமுகம் இன்பத்திலிருந்து துன்பத்திற்கு சென்று துடிப்பதை கண்டு கனக்க, ஒரு நான்கு நிமிடப் பாடலில், ஒரு நொடிப் பொழுதில் ஊனையும், உயிரையும் உருக்கி விடுவார் நமது ஆருயிர் அண்ணன். ஒரிஜினல்களைப் போலவே தங்கை(1967)யும், என் தம்பி(1968)யும் சிறந்த வெற்றிப்படங்கள். "தங்கை" 11 வாரங்களும், "என் தம்பி" 12 வாரங்களும் வெற்றிகரமாக ஓடியது. ஷிஃப்டிங் முறையில் இரு படங்களுமே 100 நாட்களைக் கண்டது.
ரசிகர்களின் மனதைத் திருடிய "திருடன்(1969)", நாகேஸ்வரராவ்-ஜெயலலிதா நடித்த "அதிருஷ்டவந்துலு(1968)" தெலுங்கு படத்தின் தமிழ்ப்பதிப்பு. இப்படம் முழுமையுமே ஸ்டைல்களும், ஆங்காங்கே உருக்கமான கட்டங்களும்[குறிப்பாக காலண்டரில் காட்சி தரும் முருகனிடம் உருகும் காட்சி] நிரம்பி வழியும். 'தென்னகம்' என்ற மாற்றுமுகாம் ஏடு, இப்படத்திற்கு எழுதிய விமர்சனத்தின் சில வரிகள் பசுமையாக நினைவுக்கு வருகிறது. "இந்தப் படத்தின் கதை என்னவோ 'டப்பா' கதை தான். ஆனால் அதையும் சிவாஜி தன் அருமையான நடிப்பால் பொன்னாக மின்னச் செய்திருக்கிறார்." என்று எழுதியிருந்தது. திருடன் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியையும், அயல்நாட்டில்(இலங்கையில் 100 நாள்) அமோக வெற்றியையும் பெற்றான்.
நடிகர் திலகம் மிக மிக அழகாக காட்சியளித்த பத்து படங்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் "எங்க மாமா(1970)"வுக்கு முதலிடமும் கிடைக்கும். அவர் நடித்த எல்லா படங்களிலுமே அவர் கொள்ளை அழகு தான் என்பது வேறு விஷயம். "எங்க மாமா"வில் அத்துணை Smartஆக, Cuteஆக, Crispஆக 'சிக்'கென்று இருப்பார் நமது பேரழகன். ஆர்ப்பாட்டமான ரோல்களை அதிகம் செய்யும் ஷம்மி கபூரே "பிரம்மச்சாரி(1968)"யில் அம்சமாக அடக்கி வாசித்த போது, நம்மவரைப் பற்றி சொல்லவும் வேண்டுமா - ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்தியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, "எங்க மாமா"வை நான் தங்களது முதல் வகைப்படங்களில் தான் சேர்ப்பேன். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் "எங்க மாமா"வும் ஒன்று என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. அதிமேதாவிகளாகத் தங்களை நினைத்து கொள்ளும் சில அறிவிலிகள், "மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்(1970)", "எங்க மாமா"வுடன் தான் வந்தது. மாட்டுக்கார வேலன் பெற்ற அபார வெற்றியை எங்க மாமா பெறவில்லையே, படம் சரியாகப் போகவில்லையே" என "எங்க மாமா"வை ஒரு தோல்விப்பட ரேஞ்சுக்கு பேசுவர். எங்க மாமாவும், மாட்டுக்கார வேலனும் ஒரே பொங்கல் தினத்தில் [14.1.1970] தான் வெளியானது. வெள்ளிவிழாப்படமான "மாட்டுக்கார வேலன்" பெற்ற இமாலய வெற்றியை "எங்க மாமா" பெறவில்லை என்பது உண்மை. எனினும், "எங்க மாமா" நல்லதொரு வெற்றியைக் குவித்த படமே.
"எங்க மாமா" சென்னையில் வெளியான 4 திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து சிறந்த வெற்றியைப் பெற்றது. [வெலிங்டன்(58), மஹாராணி(58), ராக்ஸி(58), லிபர்ட்டி(51)]. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கத்தில் [2593 இருக்கைகள்] 51 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. திருச்சி சென்ட்ரலில் 58 வெற்றி நாட்கள். சேலத்தில் ஓரே சமயத்தில் 2 திரையரங்குகளில் வெளியாகி ஓரியண்டலில் 79 நாட்களும், SRV அரங்கில் 16 நாட்களும், ஆக மொத்தம் 95 நாட்களும் ஓடி சூப்பர்ஹிட். சேலத்தில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. கோவை கர்னாடிக்கில் 51 வெற்றி நாட்கள், நெல்லை ரத்னாவில் அமோக ஆதரவுடன் 50 நாட்கள், இலங்கையில் 77 நாட்கள் என ஓடி நல்ல வெற்றி பெற்றது. "எங்க மாமா" சிறிய ஊர்களிலும் 4 வாரங்கள் முதல் 6 வாரங்கள் வரை ஓடி வெற்றிப்படமாகவே திகழ்ந்தது. மறுவெளியீடுகளிலும் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. "எங்க மாமா" வெளியான போது 1969 தீபாவளி வெளியீடான "சிவந்த மண்" இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. "எங்க மாமா" வெளியான அடுத்த மாதத்திலேயே "விளையாட்டுப் பிள்ளை" வெளியானது. அப்போதும் "சிவந்த மண்" இமாலய வெற்றியை அடைந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில் 1970 தமிழ்ப் புத்தாண்டையொட்டி நமது நடிகர் திலகத்தின் சொந்தத் தயாரிப்பான "வியட்நாம் வீடு" வெளியானது. இப்பேர்ப்பட்ட - நடிகர் திலகத்தின் படங்களே நடிகர் தில்கத்தின் படங்களுக்கு வில்லனாக வரும் - போட்டியில், "எங்க மாமா" நல்ல வெற்றிப்படமாக திகழ்ந்ததே சிறந்த விஷயம். அதே சமயம், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" இமாலய வெற்றி கண்டு வெள்ளிவிழா ஓடியதற்கு ஒரு சிறந்த காரணமும் உண்டு. 1969 தீபாவளி வெளியீடான "நம் நாடு" சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் "மாட்டுக்கார வேலன்" வந்தது. "மாட்டுக்கார வேல"னுக்குப் பின் 4 மாதங்கள் கழித்து தான் மக்கள் திலகத்தின் அடுத்த படமான "என் அண்ணன்" [வெளியான தேதி : 21.5.1970] வெளிவந்தது. எனவே, "மாட்டுக்கார வேலன்" தொய்வின்றி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது. மக்கள் திலகத்தையோ அவரது சாதனைகளையோ குறைத்துக் கூறுவதாகக் கருத வேண்டாம். தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நிகழ்த்தியிருக்கும் அபரிமிதமான சாதனைகளை வேறு எவரும் நிகழ்த்தியதில்லை, நிகழ்த்தப்போவதுமில்லை. நடிகர் திலகமும், மக்கள் திலகமும் தமிழ்த் திரையுலகின் இரு கண்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
நடிகர் திலகத்தின் எல்லையில்லா நடிப்பின் சிறப்புகளுக்கு கட்டியம் கூறும் இன்னொரு படம் "எங்கிருந்தோ வந்தாள்(1970)". நடிகர் திலகமும், கலைச்செல்வியும் போட்டி போட்டுக் கொண்டு வெளுத்து கட்டியிருப்பார்கள். ஜெயலலிதா அவர்கள் எப்பொழுதும் எந்த ஒரு நேர்காணலிலும்
திரையுலகில் தான் பணியாற்றிய படங்களில் மிகச் சிறந்த படமாக இந்தப் படத்தைப் பற்றித் தான் கூறுவார். அவர் சிறந்த நடிகையாக 'பிலிம்ஃபேர்' விருதெல்லாம் வாங்கிய படமாயிற்றே. தாங்கள் வகுத்துள்ள இரண்டாவது வகையில் இப்படத்தினை சேர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். மூன்றாவது வகையில் சேர்ப்பதற்கு இதன் கூடவே வெளியான "சொர்க்கம்" ரெடியாக இருக்கிறது. 1970 தீபாவளி வெளியீடுகளாக வந்த [ஓரே தினத்தில் (29.10.1970) வெளியான] இந்த இரு படங்களும் 100 நாள் சூப்பர்ஹிட் படங்கள். ஒரே தினத்தில் இரண்டு படங்களை வெளியிட்டு, அந்த இரு படங்களையும் சூப்பர்ஹிட்டாக்கி, 100 நாள் விழாக் கொண்டாட வைக்கும் சாதனையை நமது சாதனைச் சக்கரவர்த்தியைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் செய்ய முடியும். 1970-ல் "எங்கிருந்தோ வந்தாள்", "சொர்க்கம்" திரைப்படங்களின் மூலம் இதனை இரண்டாவது முறையாக செய்து காட்டினார் நமது சாதனைத் திலகம். ஏற்கனவே, இச்சாதனையை முதல் முறையாக 1967-ல் தீபாவளி வெளியீடுகளாக ஒரே தினத்தில் [1.11.1967], "ஊட்டி வரை உறவு" , "இரு மலர்கள்" திரைப்படங்களை வெளியிட்டு நிகழ்த்திக் காட்டினார். இந்த இரு படங்களுமே சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடி 100 நாள் விழாக் கொண்டாடியவை.
"எங்கிருந்தோ வந்தாள்" குறித்து இன்னொரு அபூர்வ தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கடந்த வருடம்(2010) ஜனவரி மாத இறுதியில் ஒரு இனிய மாலை வேளையில் சென்னை சாந்தி திரையரங்கிற்கு சென்றிருந்த போது, எதேச்சையாக சாந்தி திரையரங்க நிர்வாகி-மேலாளர் மாப்பிள்ளை திரு.வேணுகோபால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. எப்பொழுதும் நன்றாகப் பேசும் அவர், அன்றும் அதே போல் நன்றாக உரையாடி சில அரிய தகவல்களைக் கூறினார். அதில் ஒன்று "எங்கிருந்தோ வந்தாள்" படம் பற்றியது. அதை அவர் கூறியவாறே தருகிறேன்:
"இங்கே 'சாந்தி'யில் "எங்கிருந்தோ வந்தாள்" ஓடிக் கொண்டிருந்த சமயம், ஹிந்தி நடிகர் சஞ்சீவ் குமார் சென்னை வந்திருந்தார். சஞ்சீவ் குமார் சிவாஜியின் மிகப் பெரிய ரசிகர். அது மட்டுமல்ல, சிவாஜியை தனது குருநாதராக வரித்துக் கொண்டவர். ஹிந்தி ஒரிஜினலான "கிலோனா(1970)"வின் ஹீரோ. அவர் சென்னை வந்த அன்று, 'சாந்தி'யில் "கிலோனா"வின் தமிழ்ப்பதிப்பான "எங்கிருந்தோ வந்தாள்" வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து, மாலைக் காட்சி இங்கே படம் பார்க்க வந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்று அதன் பின்னர் இருக்கைகளுக்கு அழைத்து சென்று அமர வைத்தேன். நானும் அவர்களுடன் அமர்ந்து இன்னொரு முறை படம் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் வரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சஞ்சீவ் குமார், படம் தொடங்கியதும் யாருடனும் எதுவும் பேசாமல், மிகுந்த ஆர்வத்துடன் கவனமாக படத்தைப் பார்த்து அதனூடே ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். இடைவேளை வந்தது. சஞ்சீவ் குமார் யாருடனும் எதுவும் பேசவில்லை. இறுக்கமாகக் காணப்பட்டார். இருக்கையை விட்டு வெளியே எழுந்து செல்லவும் இல்லை. இடைவேளை முடிந்து படம் தொடர்ந்தது. சில மணித்துளிகள் தான் ஆகியிருக்கும். சஞ்சீவ் குமார் இருக்கையை விட்டு எழுந்து என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அவருடன் வந்தவர்கள் மட்டும் இன்னும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். என் கையைப் பற்றிக் கொண்ட சஞ்சீவ் குமார் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். படம் தொடங்கியதிலிருந்து அது வரை எதுவும் பேசாமலிருந்த அவர், என்னிடம் தனது மௌனத்தைக் கலைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். 'Saab, I feel very much guilty. Whatever Shivaji saab has done in this film, in that, I have not done even 10 percent. I did the original & I am the hero in it. But after watching this film, I certainly feel Shivaji saab is the real hero and this film is the original. Once again I feel really guilty & Sorry Sir, I am leaving' எனக் கூறி திரையரங்கை விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்."
இது திரு.வேணுகோபால் அவர்களின் வாக்குமூலம். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!
தொடர்ச்சி அடுத்த பதிவில்...
Bookmarks