-
26th February 2011, 07:39 PM
#1241
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி,
நீங்கள் குறிப்பிட்டது சரியே. பத்மினி 1961 மத்தியில் டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறியவர், மீண்டும் 1965-ல் தான் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்தார். முதல் படமாக 'சித்தி' 1966 பொங்கலுக்கு ரிலீஸானது.
1961-ல் 'புனர் ஜென்மம்' படத்துக்குப்பின் மீண்டும்
1967-ல் 'பேசும் தெய்வம்' படத்தில்தான்
நடிகர்திலகத்துடன் பத்மினி ஜோடி சேர்ந்தார்.
இடைப்பட்ட நாட்களில் கோலோச்சியவர்கள் சரோஜாதேவியும், தேவிகாவும்தான் என்றாலும், சரோஜாதேவி மக்கள் திலகத்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்ததால், நம்மவர்களால் 'நம்மவர்' என்று உரிமையோடு கொண்டாடப்பட்டவர் தேவிகாதான். (அதையும் முறியடிக்க 'ஆனந்த'மாக ஏற்றப்பட்ட 'ஜோதி', அந்த ஒரு படத்தோடு அணைந்துவிட்டது தெரிந்ததே).
-
26th February 2011 07:39 PM
# ADS
Circuit advertisement
-
27th February 2011, 03:58 AM
#1242
Senior Member
Veteran Hubber

Originally Posted by
parthasarathy
இருவர் உள்ளம் வந்த புதிதிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளிலும், பல இடங்களில் ஏற்படுத்திய அலை மலைக்க வைப்பதாகும். இது பெண் மனம் என்ற பெரிய வாசகர் கூட்டத்தைக் கொண்ட "லக்ஷ்மி என்ற புனைப்பெயரைக் கொண்டு கதைகள் எழுதி வந்த "திரிபுரசுந்தரி" அவர்களது நாவலாகும். இது நாடகமாகவும், நடிகர் திலகம் மற்றும் பத்மினி அவர்களால் நடிக்கப் பட்டதாகக் கூறுவார். இது படமாக எடுக்கப்படும்போது, பத்மினி திருமணம் புரிந்துகொண்டு அமெரிக்கா சென்று விட்டதால், ஒரு வேளை அவர்களால் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த விவரங்கள், பம்மலார் மற்றும் முரளி அவர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
டியர் பார்த்தசாரதி சார்,
'லக்ஷ்மி'யின் "பெண் மனம்", 2.6.1946 தேதியிட்ட 'ஆனந்த விகடன்' வார இதழில் தொடங்கி, தொடர்கதையாக வாராவாரம் பல்லாயிரணக்கான வாசகர்களை ஈர்த்த கதை(நாவல்). பின்னர் சென்னை திருமயிலையிலுள்ள 'பூங்கொடி பதிப்பக'த்தாரால் இதே பெயரில் புத்தக வடிவிலும் கொண்டு வரப்பட்டது. "பெண் மனம்" நாவல் விகடனில் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், நமது சிவாஜி அவர்கள் சக்தி நாடக சபாவில் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார். கலைக்குரிசில் அவர்கள் 10.8.1946 அன்று சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அதன் பின், 1950-ம் ஆண்டின் மத்திய பகுதி வரை - அதாவது 'பராசக்தி'யின் கதாநாயகனாக நடிக்கச் செல்லும் வரை - சக்தி நாடக சபாவில் ராஜபார்ட், ஸ்திரிபார்ட், கள்ளபார்ட் எனப் பல வேடங்களில் பற்பல நாடகங்களில் நடித்து அசத்தினார். ஆனால் அந்நாடகங்களில், "பெண் மனம்" என்ற பெயரிலோ அல்லது "இருவர் உள்ளம்" என்ற பெயரிலோ அவர் நடித்தாரா என்றால் எனக்குத் தெரிந்த வரை இல்லை. எனினும், ஜனவரி 1969 'பொம்மை' மாத இதழின் கேள்வி-பதில் பகுதியில், 'சிவாஜி அவர்கள் "பெண் மனம்" போன்ற பல ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறார்' என ஒரு அபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. (உங்களுக்காக அதையே 'கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது!' நெடுந்தொடர் தொகுப்பில் அடுத்த கேள்வி-பதிலாக - அடுத்த பதிவாக - பதிவிடுகிறேன்). வானொலி நாடகங்களில் அவர் நடித்திருக்கிறாரென்றால் அது சக்தி நாடக சபாவில் இருந்த காலகட்டத்தில்(1946-1950) தான் இருக்கும். அப்படியானால், விகடனில் வெளிவந்த லக்ஷ்மியின் "பெண் மனம்" நாவலும், இந்தப் "பெண் மனம்" ரேடியோ நாடகமும் ஒன்றாக (அதே கதையாக) இருக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அதே காலகட்டத்தில் நடனமாமணிகளாக திகழ்ந்து வந்த லலிதா-பத்மினி-ராகினியில் நடுவரான பத்மினி இதில் நடித்தாரா என்று தெரியவில்லை. 1952-ல், திரையுலகில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த காலத்தில், தனது நாடக உலக நண்பர்களை வாழ வைப்பதற்காக, 'சிவாஜி நாடக மன்றம்' தொடங்கினார் நமது செம்மல். இந்நாடக மன்றம் முழுமூச்சில் நடைபெற்று வந்த - 1952-ம் ஆண்டு முதற்கொண்ட 1974-ம் ஆண்டு வரையிலான - காலகட்டத்தில், இந்நாடக மன்றத்தின் சார்பில், "பெண் மனம்" என்ற பெயரிலோ அல்லது "இருவர் உள்ளம்" என்ற பெயரிலோ நாடகம் நடைபெறவில்லை. இது குறித்து மேலும் தகவல்களைத் திரட்டி அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.
"பெண் மனம்", எல்.வி.பிரசாத் அவர்களின் தயாரிப்பு-இயக்கத்தில், நடிகர் திலகம்-அபிநய சரஸ்வதி இணையில், "இருவர் உள்ளம்" திரைக்காவியமாக 29.3.1963 அன்று வெளியானது. முதல் வெளியீட்டில் இக்காவியம் 100 நாள் பெருவெற்றி என்றால் மறுவெளியீடுகளில் இக்கருப்பு-வெள்ளைக் காவியம் வரலாறு காணாத வெற்றி.
அன்புடன்,
பம்மலார்.
-
27th February 2011, 04:09 AM
#1243
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 179
கே: சிவாஜி கணேசன் ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறாரா? (அ.செல்வகுமாரவேல், குப்பநத்தம்)
ப: "பெண் மனம்" போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.
(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1969)
அன்புடன்,
பம்மலார்.
-
27th February 2011, 04:57 AM
#1244
Senior Member
Veteran Hubber

Originally Posted by
saradhaa_sn
1961-ல் 'புனர் ஜென்மம்' படத்துக்குப்பின் மீண்டும்
1967-ல் 'பேசும் தெய்வம்' படத்தில்தான்
நடிகர்திலகத்துடன் பத்மினி ஜோடி சேர்ந்தார்.
சகோதரி சாரதா,
1961-ம் ஆண்டில் "புனர்ஜென்மம்" திரைப்படத்திற்குப் பின் வெளிவந்த "ஸ்ரீ வள்ளி(1961)", "செந்தாமரை(1962)", "நான் வணங்கும் தெய்வம்(1963)" ஆகிய திரைப்படங்களிலும் நடிகர் திலகத்துக்கு ஜோடி நாட்டியப் பேரொளியே. இம்மூன்று திரைப்படங்களுமே நீண்டகால தயாரிப்புகள். இதற்குப் பின் அவரது இரண்டாவது இன்னிங்ஸில் சிங்கத்தமிழனின் படத்தில் அவர் பங்கு பெற்ற முதல் படம் சிவாஜி அவர்கள் கௌரவ வேடத்தில் நடித்த "தாயே உனக்காக" திரைப்படம். இதில் பத்மினியும் கௌரவ வேடத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து "சரஸ்வதி சபத"த்தில் 'பார்வதி'யானார் பத்மினி. பின்னர் 1967-ல் கலைதெய்வத்துடன் "பேசும் தெய்வ"த்தில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்த பத்மினி "பாலாடை", "திருவருட்செல்வர்", முரளி சாரின் மனம் கவர்ந்த "இரு மலர்கள்" [முரளி சாருக்கு மட்டுமா, நம் எல்லோர் மனத்தையும் கூட ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்த காவியமாயிற்றே!], "திருமால் பெருமை", "தில்லானா மோகனாம்பாள்"................................. எனப் பல படங்களில் இணைந்து மீண்டும் சாதனை புரிந்தார்.
[வெளியான தேதி : புனர்ஜென்மம் - 21.4.1961, ஸ்ரீ வள்ளி - 1.7.1961, செந்தாமரை - 14.9.1962, நான் வணங்கும் தெய்வம் - 12.4.1963 (சென்னையில் மட்டும் 27.4.1963), தாயே உனக்காக - 26.8.1966, சரஸ்வதி சபதம் - 3.9.1966, பேசும் தெய்வம் - 14.4.1967]
அன்புடன்,
பம்மலார்.
-
27th February 2011, 11:32 AM
#1245
Senior Member
Veteran Hubber
டியர் பம்மலார்,
விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட செந்தாமரை, நான் வணங்கும் தெய்வம் இரண்டும் லேட் ரிலீஸ் ஆக இருக்கலாம். (அப்போது அப்படி பல படங்கள் தாமதித்து வந்தன சித்தூர் ராணி பத்மினி, வளர்பிறை ஆகியனவும் தாமத வெளியீடுகள் என நினைக்கிறேன்). ஆனால் பத்மினி 1961-ல் திருமணம் செய்துகொண்டு போனபின், 65 வரை திரைப்படங்களில் நடிக்கவில்லை.
அவரது திருமணம் முடிந்த மறுநாள் தினத்தந்தியில், முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, குருவாயூரில் நடந்த அவரது திருமண நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. (அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லாததாலும், வானொலிச்செய்திகளில் இப்படிப்பட்ட செய்திகள் இடம்பெறும் வழக்கமில்லையாதலாலும், செய்தித்தாள்களே மக்களின் ஒரே மீடியா).
அந்தச்செய்தி இடம்பெற்றிருந்த 'தினத்தந்தி' நாளிதழின் அதே முதல் பக்கத்தில் கீழே இடப்பக்க மூலையில் 'பாவமன்னிப்பு 11-வது வாரம்' விளம்பரமும், வலது பக்க மூலையில் 'ரிசர்வ் செய்யப்படுகிறது பாசமலர்' விளம்பரமும் இடம் பெற்றிருந்தன.
(அந்த தினத்தந்தி முதல் பக்கம் எனது கணிணியில் உள்ளது. ஆனால் இங்கு எப்படி அப்லோட் செய்வது என்பது தெரியவில்லை. Insert image பகுதியில் முயற்சித்தேன். முடியவில்லை). But, it has been published in my Blog.
'தாயே உன்க்காக' படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவத்தோற்றம் என்பதால் என் நினைவுக்கு வரவில்லை. சரஸ்வதி சபதத்தில் 'பத்மினியும் இருந்தார்', ஆனால் ஜோடி சேரவில்லை. மீண்டும் பழையபடி முழுவீச்சில் ஜோடி சேர்ந்தது 'பேசும் தெய்வத்'தில்தான்.
சரஸ்வதி சபதம் ஒரு வித்தியாசமான படம். நடிகர்திலகமும் இருந்தார், ஜெமினி கணேசனும் இருந்தார். இவர்கள் இருவருக்கும் அதிகப்படங்களில் ஜோடியாக நடித்த சாவித்திரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா ஆகியோரும் இருந்தனர். ஆனால் அவர்களில் யாருமே இவர்களுக்கு ஜோடியாக அமையாமல் இருவருமே தனியே நின்றனர். இன்னொரு வேடிக்கை. அதில் வந்த கடவுளர்களுக்கு மட்டுமே ஜோடி உண்டு. மானிடப்பாத்திரங்களாக வந்த வித்யாபதி, செல்வாம்பிகை, வீரமல்லன் யாருக்குமே ஜோடி கிடையாது.
பத்மினியின் திருமணத்துக்கு முதல்நாள் நடந்த ஒரு சம்பவம் மனதை நெகிழ வைக்கக்கூடியது. அப்போது அவர், மேடைகளில் தன் தங்கை ராகினியுடன் சேர்ந்து 'ஸ்ரீ ராமச்சந்திரா கல்யாணம்' என்ற நாட்டிய நாடகம் நடத்தி வந்தார். ராகினி ராமனாகவும், பத்மினி சீதையாகவும் நடித்தனர். நாளை மறுநாள் விடிகாலை குருவாயூரில் பத்மினியின் திருமணம் என்ற நிலையில், இரவு பத்து மணிக்கு கடைசி நாட்டிய நாடகம் முடிந்தது. (மறுநாள் காலை அனைவரும் கேரளா செல்லவிருக்கின்றனர்). கடைசி நாட்டிய நாடகம் முடிந்து அரங்கத்தின் உட்புறம் ஒப்பனையைக் கலைத்துக்கொண்டிருந்தபோது, ராமச்ச்ந்திரனாக நடித்த ராகினி, தன் அக்காவிடம், "சேச்சி, எல்லாம் முடிஞ்சிடுச்சு. உனக்குன்னு ஒரு ராமச்சந்திரன் வரப்போறார். இனி இந்த ராமச்சந்தினுடைய தயவு உனக்குத் தேவையில்லை" என்று எதார்த்தமாகச்சொல்ல, சட்டென்று திரும்பி தங்கையைப்பார்த்த பத்மினியின் கண்களில் எப்படித்தான் திடீரென அவ்வளவு கண்ணீர் பெருகியதோ தெரியவில்லை. அக்காவின் கண்களில் கண்ணீரைப்பார்த்த ராகினியும் உணர்ச்சி வசப்பட, ஓடிவந்த பத்மினி தங்கையைக் கட்டிக்கொண்டு அழுதாரென்றல் அப்படி ஒரு அழுகை, உடனிருந்தவர்கள் நெகிழ்ந்துபோய் அவர்களிருவரையும் தனியே விட்டு விட்டு வெளியேறிவிட்டனர். (ராகினி மறைந்தபோது 'ஆனந்த விகடன்' வார இதழிலில் வெளியான, 'என்னுள் கலந்துவிட்ட ராகினி' கட்டுரையில் பத்மினி).
Last edited by saradhaa_sn; 27th February 2011 at 01:17 PM.
-
27th February 2011, 07:37 PM
#1246
Senior Member
Veteran Hubber

Originally Posted by
saradhaa_sn
அவரது(பத்மினி) திருமணம் முடிந்த மறுநாள் தினத்தந்தியில், முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, குருவாயூரில் நடந்த அவரது திருமண நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. (அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லாததாலும், வானொலிச்செய்திகளில் இப்படிப்பட்ட செய்திகள் இடம்பெறும் வழக்கமில்லையாதலாலும், செய்தித்தாள்களே மக்களின் ஒரே மீடியா).
அந்தச்செய்தி இடம்பெற்றிருந்த 'தினத்தந்தி' நாளிதழின் அதே முதல் பக்கத்தில் கீழே இடப்பக்க மூலையில் 'பாவமன்னிப்பு 11-வது வாரம்' விளம்பரமும், வலது பக்க மூலையில் 'ரிசர்வ் செய்யப்படுகிறது பாசமலர்' விளம்பரமும் இடம் பெற்றிருந்தன.
(அந்த தினத்தந்தி முதல் பக்கம் எனது கணிணியில் உள்ளது. ஆனால் இங்கு எப்படி அப்லோட் செய்வது என்பது தெரியவில்லை. Insert image பகுதியில் முயற்சித்தேன். முடியவில்லை). But, it has been published in my Blog.
சகோதரி சாரதா,
தங்களின் அசத்தல் தகவல்களுக்கும், (தங்களது வலைப்பூவில் உள்ள) அபூர்வமான 'தினத்தந்தி'யின் முதல் பக்க பொக்கிஷத்திற்கும் எனது பொன்னான நன்றிகள் !
தாங்கள் வெளியிட்டுள்ள 'தினத்தந்தி', 25.5.1961 தேதியிட்ட நாளிதழாக இருக்க வேண்டும். ஏனெனில், 16.3.1961 வெளியான "பாவமன்னிப்பு" 11வது வாரமாக ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், 27.5.1961 "பாசமலர்" ரிலீஸ்.
இந்த கிடைத்தற்கரிய 'தினத்தந்தி' நாளிதழின் முதல் பக்கத்தை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
மீண்டும் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 27th February 2011 at 07:57 PM.
pammalar
-
27th February 2011, 08:15 PM
#1247
Senior Member
Veteran Hubber
நடிப்புக்கோட்டை கட்டிய நடிப்புலக சக்கரவர்த்திக்கு, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், விரைவில் சிலை திறப்பு விழா !
உச்சி பிள்ளையார் ஊரில் கலைப்பிள்ளையார் புகழ் பாடும் பதாகைகள் காட்சியளிக்கத் தொடங்கி விட்டன !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
27th February 2011, 11:08 PM
#1248
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 180
கே: தமிழ்நாட்டில் துப்பறியும் படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதில்லையே, ஏன்? (என்.ஆர்.பாலசுப்ரமணியன், திருப்பூர்)
ப: "அந்த நாள்" தான் - அது இன்னும் வரவில்லை என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1961)
அன்புடன்,
பம்மலார்.
-
28th February 2011, 11:28 PM
#1249
அன்புள்ள பார்த்தசாரதி,
நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். சில நாள் வெளியூர் சுற்றுப்பயணம் சென்றிருந்ததால் உடனே பங்கு கொள்ள முடியவில்லை. சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அலசியது என்றாலும் கூட அதை செம்மையாக செய்திருந்தீர்கள். மேலும் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்கள் எழுதியவற்றில் ஒரு சில திருத்தங்கள் மட்டும்.
பாசமலர் ஒரிஜினலா என்று ஒரு கேள்விகுறி எழுப்பியிருந்தீர்கள். அது அக்மார்க் ஒரிஜினல். மூலக்கதை கொட்டாரக்கரா என்பதனால் உங்களுக்கு அந்த சந்தேகம் வந்திருக்கலாம். அவர் அந்த கதையை சொல்வதற்காக வெகுநாட்கள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தாராம். ஆனால் வி.சி.எஸ். அவர்களை சந்திக்க முடியவில்லை. மோகன் ஆர்ட்ஸ் மோகன்தான் அவரை வி.சி.எஸ்.ஸிடம் அழைத்து சென்றார். பிறகு நடந்தது சரித்திரம். இதே கொட்டாரக்கரா மாற்று முகாமிற்கும் 1963-ல் ஒரு கதை கொடுத்தார்[பரிசு].
அது போல ஓடயில் நின்னு படத்திற்கு சத்யன் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது நடிகர் திலகம் போலவே சத்யன் அவர்களுக்கும் ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்பட்டதில்லை.
1971-ம் வருட தேசிய விருதிற்கு பாபு பங்கெடுக்கவில்லை. காரணம் அது ரீமேக் படம். சவாலே சமாளி படம்தான் விருதிற்கு அனுப்பப்பட்டது. அந்த "மாணிக்கத்தை" விட வேறு ஒரு நடிப்பு சிறந்தது என்று விருது கொடுத்தார்கள். 1967 முதல் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்ததை டெல்லியிலும் அரேங்கேற்றினார்கள்.
மற்றப்படி மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.
அன்புடன்
இருவர் உள்ளம் பற்றிய செய்திகள் சுவை.
-
1st March 2011, 04:21 AM
#1250
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 181
கே: பெரியார் கொள்கைகளை கடைபிடித்து வரும் சத்யராஜ், பெரியார் வேடத்தில் நடிப்பதே சரியாகும். ஆன்மீகவாதியான சிவாஜி அந்த வேடத்தில் நடித்திருந்தால் சரியாக இருந்திருக்குமா? (ஈ.சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்)
ப: 'நாடகமோ, சினிமாவோ...அங்கே ரசிக்கப்பட வேண்டியது ஒரு கலைஞனின் நடிப்புத் திறமை தானே தவிர அந்தரங்க வாழ்க்கையல்ல...' என்று சென்ற இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்களே, நீங்கள் அதைப் படிக்கவில்லையா?!
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 அக்டோபர் 2006)
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks