Page 134 of 199 FirstFirst ... 3484124132133134135136144184 ... LastLast
Results 1,331 to 1,340 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1331
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    டியர் பார்த்தசாரதி,

    நடிகர்திலகத்தின் காவியப்படங்கள் பலவும், வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட விதம் பற்றியும், அப்போது நடந்த நிகழ்வுகள் பற்றியுமான தங்களின் விரிவான பதிவு அருமை. பலருக்கும் இதுவரை தெரிந்திராத பல புதிய விஷயங்கள்.

    எனவே முரளியண்ணா சொன்னது போல, இங்கு சிலர் பெயரைக்குறிப்பிட்டு, அவர்கள் போல எழுத முடியாது என்று சொல்லியிருக்கும் உங்களின் கூற்றை வன்மையாக மறுக்கிறேன். உங்களின் பதிவுகளும் விவரங்களும் யாருடைய பங்களிப்புக்கும் குறைந்ததல்ல. இங்கு பதிவிடும் எல்லோருமே சிறந்த பங்களிப்பாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    நடிகர்திலகத்தின் படங்கள் வேற்று மொழியில் எடுக்கப்படும்போது, அவற்றில் அவருடைய பாத்திரங்களை ஏற்கும் கதாநாயகர்கள் முதலில் சொல்லும் ஒரே விஷயம், 'என்னுடைய லெவலுக்கு நான் பண்றேன். தயவு செஞ்சு அவருடைய பெர்பார்மென்ஸோடு ஒப்பிடாதீர்கள். அப்படி ஒப்பிட்டால் நான் காணாமல் போயிடுவேன்' என்பதுதான். அந்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களிடம் பெரும் மரியாதையைப்பெற்றிருந்தார் நடிகர்திலகம்.

    ஒரு உதாரணம், கார்கில் போர் நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது அதில் பல இந்தி நடிகர்களும் கலந்துகொண்டனர். ஆட்டம் முடிந்ததும், அங்கே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முதல்வர் கலைஞர், அப்போதைய சென்னை மேயர் ஸ்டாலின், நமது நடிகர்திலகம் ஆகியோர் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப்பெற்றனர். அப்போது மேடைக்கு வந்த இந்தி நடிகர் 'அனுபம் கெர்' முதலில் மேயரிடம் கைகுலுக்கினார், அடுத்து நின்ற முதல்வரிடமும் கைகுலுக்கியவர் அவரையடுத்து நின்ற நடிகதிலகத்திடம் வந்ததும் சட்டென்று காலில் விழுந்து எழுந்தார். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கெல்லாம் மெய்சிலிர்த்துப்போனது.

    அந்த அளவுக்கு மற்ற மொழி கலைஞர்களிடமும் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவர் நமது அண்ணன். உங்கள் ஆய்ப்புப்பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
    நன்றி சாரதா மேடம் அவர்களே. என்னுடைய ரசிப்புத்தன்மையும் வர்ணனையும் வேண்டுமானால் குறைத்து மதிப்பிடாதபடி இருக்கலாம். ஆனால், புள்ளி விவரங்களை அளிப்பதிலும் அதற்கு முனைப்பு காட்டுவதிலும், நீங்கள் எங்கோ இருக்கிறீர்கள். உங்களைத் தொட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதற்குப் பெரிதும் உதவுவது, எனது நினைவுகள், சேகரித்த (பெரும்பாலும் மனதில்) தகவல்கள், என்னுடைய நண்பர்கள், எனது உறவினர்கள் (என்னுடைய நெருங்கிய உறவினர்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில் பணி புரிந்து கொண்டிருந்தனர். நானும் சில காலம் குமுதத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்.) இதற்கும் மேல், திரு ராகவேந்தர் சாரின் இணைய தளம் மற்றும் இந்தத் திரியில் பொதிந்து கிடக்கும் திரு பம்மலார், முரளி சார் மற்றும் நீங்கள் அளித்துள்ள விவரங்கள்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பார்த்த சாரதி,
    இனிமையான சாத்தி பாடலை நினைவூட்டியமைக்கு என் உளமார்ந்த நன்றி. ஹிந்தி திரையுலகில் இன்று வரை முகேஷின் பெயர் சொல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சலிக்காது, அலுக்காது. இந்தப் பாடலை கேட்டிராத, பார்த்திராத ரசிகர்களுக்காக இதோ அந்தப் பாடல். இரண்டாம் முறை இதே பாடல் சோகமாக ஒலிக்கும். நான் பேச நினைப்பதெல்லாம் இரண்டாம் முறை வருவதை நினைவூட்டும்.

    இதோ இரண்டு வடிவங்கள்





    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1333
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


    5. படித்தால் மட்டும் போதுமா (1962) / தேவர் (1966) - ஹிந்தி


    நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு.



    மீண்டுமொரு வெள்ளந்தியான கதாபாத்திரம். ஆனால், முந்தைய படங்களை விட வித்தியாசமானது. ஒரு விதமான முரட்டுத்தனமான, அப்பாவி வேடம். உலக விஷயங்கள் அறிந்த மனிதராக இருந்தாலும், படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்களைப் பற்றி அறிந்திராத அப்பாவி வேடம்.

    நடிகர் திலகம், காமா சோமா படங்களில் நடிக்கவே மாட்டார். ஒவ்வொரு படத்திலும், ஒரு பிரச்சினை, ஒரு முடிச்சு இருக்கும் – அதாவது – சமூகப் படங்கள் – அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் – அல்லது அந்தப் பிரச்சினையால் அவரது வாழ்க்கை எப்படி தடம் புரண்டு போகிறது – இப்படித் தான் இருக்கும். (adventure டைப் படங்களில் கூட அவரது சிரத்தை பிரமிப்பாக இருக்கும் (சிவந்த மண் போன்ற படங்கள்)


    இந்தப் படமும் அப்படித்தான். கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாலாஜி நடித்த அந்த அண்ணன் கதாபாத்திரத்தில் முதலில், ஜெமினி தான் நடித்திருக்க வேண்டியது. அது ஒரு விதமான எதிர்மறையான வில்லன் போன்ற கதாபாத்திரம் என்பதால், ஜெமினி நாசூக்காகக் கழன்று கொண்டார். பின்னர் அந்த வாய்ப்பு பாலாஜிக்குச் சென்றது. பாலாஜியும் நன்றாகவே செய்திருந்தார் – இந்தப் படம் பாலாஜிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து, அதன் பின் தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடிக்கவும் வழி வகுத்தது. பல இடங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

    இந்தப் படத்திலும் நடிகர் திலகத்திற்கு மிக நல்ல பாடல்கள் அமைந்து அத்தனையிலும், வித்தியாசமான நடிப்பை வழங்கி எல்லோரையும் திக்குமுக்காட வைத்தார். டைட்டில் ("ஓஹோஹோ மனிதர்களே") பாடலிலேயே அவரது ஆட்சி (ஸ்டைல் தான்!) ஆரம்பித்து விடும். அவர் குதிரை ஓட்டுவதில் பிரமாதமான தேர்ச்சி பெற்றவர் என்பதால், குதிரை ஒட்டிக் கொண்டே பாடும் ஸ்டைல் - அனாயாசமாக அமைந்திருக்கும். அடுத்து, "பொன்னொன்று கண்டேன்" - இது ஒரு காவிய அந்தஸ்து பெற்ற பாடல் என்றால் அது மிகையாகாது. இதில் "விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ" என்று சொல்லி ஒரு கையை தூக்கி செய்யும் அந்த ஸ்டைலுக்கு அரங்கமே அதிரும். அடுத்து, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்", பாடலில் அவரது ஸ்டைலும், எனர்ஜியும் அபாரமாக இருக்கும். இந்தப் பாடலில் தான், நடிகர் திலகம் அதிகபட்ச கைத்தட்டலையும் ஆர்ப்பரிப்பையும் திரையரங்கத்தில் பெறுவார் எனலாம்.

    அடுத்து, "நான் கவிஞனும் இல்லை" பாடலில் – இரண்டாவது சரணம் முடிந்தவுடன் – ஒரு மாதிரி தொகையறா போல் சில வரிகள் வரும் – “நான் அழுதால் சிரிக்கிறாள் – சிரித்தால் அழுகிறாள்" …. இப்படிப் போகும் – கடைசியில், “அழுவதா, சிரிப்பதா, தாயே … தாயே …” என்று முடித்து விட்டு – ஒரு மாதிரி கண் கலங்குவார். உடனேயே, ஒரு மாதிரி சமாளித்து விட்டு, இலேசாக ஒரு புன்னகையுடன், “நான் கவிஞனும் இல்லை” (நான் என்பதை ஒரு மாதிரி இழுத்து) என்று, மறுபடியும், அவருக்கேயுரிய தலையசைப்புடன் மறுபடியும் பாடி முடிப்பார். அரங்கமே மறுபடியும் அதிரும். இந்தப் பாடல் முடிந்தவுடன், ராஜ சுலோச்சனா நடிகர் திலகத்தை மோசமாக அவமானப் படுத்தி விடுவார். அவமானத்தால் கூனிக் குறுகி வெளியேறி, வீட்டிலுள்ள, குதிரை ஒட்டுபவரிடமிருந்து (திரு S.A. கண்ணன் அவர்கள்), மது பாட்டிலைப் பிடுங்கித் தானும் மதுவருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து, கோப வெறியில், ராஜ சுலோச்சனாவை சவுக்கால் வெளு வெளு வென்று வெளுத்து வாங்கி விடுவார்.

    பல ஆண்டுகளுக்கு முன்னால், தூர்தர்ஷனில், எப்போதோ ஒரு முறை தொகுத்து அளிக்கப் படும் மலரும் நினைவுகள் என்ற ஒரு நிகழ்ச்சியில், ராஜ சுலோச்சனா அவர்கள் ஒரு முறை அவரது மலரும் நினைவுகளை வழங்கும் போது, இந்தப் படத்தைப் பற்றிக் கூறினார். அப்போது, "இந்தக் காட்சியினை முதலில் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, காட்சி முடிந்தவுடன், அவரை பேட்டி கண்டு கொண்டிருந்தவரைப் பார்த்து, "இந்தக் காட்சி எப்படி" என்று கேட்டதற்கு, அவரோ "இவ்வளவு உக்கிரமாக நடிகர் திலகம் நடித்திருக்கிறாரே உங்களுக்கு எவ்வளவு அடி பட்டது?" என்று கேட்டார். அதற்கு ராஜ சுலோச்சனாவோ, "இந்தக் காட்சியில், ஒவ்வொரு முறையும், சவுக்கு என் மேல் வேகமாக உக்கிரமாகப் படுகிற மாதிரி தான் இருக்கும் . ஆனால், ஒவ்வொரு முறையும், சொல்லி வைத்ததுபோல், சவுக்கின் நுனி மட்டும் என் உடலில், மயிலிறகால் தடவுவது போல், மெதுவாக, என் உடலை வருடிவிட்டுத்தான் அந்த சவுக்கின் நுனி சென்றதே தவிர, ஒரு முறை கூட ஒரு அடியும் என் மேல் விழவில்லை; ஆனால், பார்ப்பவர் அனைவரையும் மிரள வைத்து அவர் மேல் ஒரு மாதிரி கோபத்தையும் வரவழைத்து விடும் நடிகர் திலகத்தின் ஆவேசமும் அந்தக் கைவீச்சும்" என்றாரே பார்க்கலாம். பேட்டி எடுத்தவரும் பார்த்த அனைவரும் சேர்ந்து மிரண்டு போனார்கள்.

    இந்தக் காட்சி முடிந்தவுடன், ராஜ சுலோச்சனா கோபித்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று விடுவார். நடிகர் திலகத்தின் மீது, ஒவ்வொருவரும், சாவித்திரி முதற்கொண்டு, அவரது அப்பா எஸ். வி. சஹஸ்ரநாமம் வரை (இவர் கடைசிக் காட்சியில் தான் நடிகர் திலகத்திடம் கனிவைக் காட்டுவார். அதுவரை வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பார்), அவரைக் கோபித்துக்கொள்ளுவார்கள். சாவித்திரியும் அவரை நீங்கள் போய் உங்களது மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்தால் தான் உங்களோடு நான் பேசுவேன், இல்லையென்றால், என்னை நீங்கள் பார்க்கவே வரவேண்டாம் என்று கூறி விடுவார். அண்ணி சாவித்திரியை தன் சொந்த அன்னைக்கும் மேலாக பாவிக்கும் சாவித்திரியிடமிருந்து வந்த வார்த்தைகள் நடிகர் திலகத்தை நிலைகுலைய வைத்து விடும். இருப்பினும், அவரது கட்டளைக்கிணங்க, ராஜ சுலோச்சனா வீட்டிற்குச் சென்று அவரிடம் அவருடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுவார். சிறிது நேரத்தில் அங்கு வரும் ராஜ சுலோச்சனாவின் தந்தை எஸ். வி. ரங்காராவ் (அவர் ஏற்கனவே நடிகர் திலகம் மீது கோபமாக இருப்பார்), நடிகர் திலகம் ராஜ சுலோச்சனாவிடம் கோபமாக பேசுவதைப் பார்த்து விட்டு (நடிகர் திலகம் ராஜ சுலோச்சனாவை ஒரு மாதிரி அடித்தே விடுவார்), தன் கையில் இருக்கும் கழியால் நடிகர் திலகத்தை நன்றாக அடித்து விடுவார். (ஒவ்வொரு நடிகர் திலகம் ரசிகனுக்கும் ரங்கா ராவிடம் அப்போது வரும் கோபம் சொல்லி முடியாது.) உடனே, நடிகர் திலகம் ஒரு மாதிரியான முரட்டு வேகத்துடன் (ஸ்டைலாகவும்தான்) எழுந்து, திருப்பி ரங்கா ராவை அடைப்பது போல் எழுந்து, அமைதியாக அவமானத்தோடு சென்று விடுவார். அவர் அடி வாங்கி எழுந்து கொள்ளும் போது காட்டுகிற வேகமும் அந்த ferocity -யும், அவ்வளவு உக்கிரமாகவும் graceful -ஆகவும் இருக்கும். ரங்கா ராவை அடி அடி என்று அடித்திருந்தால் கூட, அந்த effect கிடைத்திருக்காது. அது தான் நடிகர் திலகம். பக்கம் பக்கமாக வசனம் பேசி (அந்தந்த வார்த்தைகளுக்கேற்ற பாவத்தோடும்தான் (அழுத்தத்தோடு)) - அத்தனை உணர்வுகளையும் வெறும் பார்வையாலும், உடல் மொழியாலும் சிறு வார்த்தைகளாலும் உடல் அசைவுகளாலும் மட்டுமே கூடக் காட்டி விடுவார்.

    அதே கோபத்துடன் வெளியேறி அவரது வீட்டிற்குச் சென்று, இத்தனை குழப்பத்திற்கும் காரணம் அண்ணன் பாலாஜிதான் என்று தெரிந்தவுடன், துப்பாக்கியுடன் சென்று காட்டில் கோபத்தை வெளிப்படுத்தும் விதம், பாலாஜியுடன் நடக்கும் வாக்குவாதம், சாவித்திரி வந்து சேர்ந்து கொள்ளும்போது ஏற்படும் குழப்பம், பாலாஜிக்கு நேரும் அசம்பாவிதமான மரணம் இவை யாவும், அற்புதமாக கோர்வையாக எடுக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சிகளில் ஆரம்பித்து, பாலாஜிக்கு மரணம் நேர்ந்து கடைசியில், பிரமை பிடித்த நிலையில் சாவித்திரி (அற்புதமான நடிப்பு) கோர்ட்டுக்கு வந்து, கூண்டில் ஏறி, நடிகர் திலகத்தை விடுவித்து, அவரும், முத்துராமனும் (மிக அழகாக செய்திருப்பார்) அவர்தம் குடும்பத்தாரும் காரில் விடைபெற, நடிகர் திலகம், ராஜ சுலோச்சனா, ரங்கா ராவ், சஹஸ்ரநாமம், கண்ணாம்பா, எம்.வி. ராஜம்மா, எம். ஆர். ராதா (இவரைப் பற்றி தனியாக நிறைய எழுத வேண்டும்), ஏ. கருணாநிதி, போன்றவர்கள் அவர்களை வழியனுப்பும் வரை, எந்தத் திரையரங்கிலாவது , ஒரே ஒரு மனிதரையாவது, பேச, ஏன், அசைய வைத்திருப்பார்களா?

    கூட்டு முயற்சி பற்றி வேண்டியமட்டும் உலகத்தில் எல்லோரும் பேசித் தீர்த்தாகி விட்டது. சினிமாவைப் பொறுத்தவரை, அதுவும், குறிப்பாக, தமிழ் சினிமாவில், நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் – TMS – பி. சுசீலா - கூட்டணி தமிழ் மக்களுக்கு அருளிய செல்வங்களில் இருந்தவை தானே கூட்டு முயற்சிக்கான இலக்கணங்கள்!.

    இந்தப் படங்களில் மட்டுமல்லாமல், நடிகர் திலகம் பங்கு பெற்ற அனைத்து படங்களிலும், எங்காவது, தான் சிவாஜி என்று நினைத்துக் கொண்டு நடித்திருப்பாரா?. அந்தந்தப் படங்களின் கதாபாத்திரங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தானே வாழ்ந்தார். படித்தால் மட்டும் போதுமாவும், அப்படிப்பட்ட படங்களில், மகத்தான படம்.

    இந்தப் படம் ஹிந்தியில் “தேவர்” (மச்சினன்) என்ற பெயரில் 1966 -இல் வெளிவந்தது. தர்மேந்திரா நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தையும், தேவன் வர்மா என்ற நடிகர் பாலாஜியின் பாத்திரத்தையும் ஏற்று நடித்தனர். ஹிந்தியிலும், ஓரளவு நன்றாகவே ஓடியது என்றாலும், நடிகர் திலகத்தின் வீச்சின் நிழலைக்கூட தர்மேந்திராவால் தொட முடியவில்லை.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  5. #1334
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர்.

    இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபசட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

    பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில் தான் தோல் வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.

    திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது? வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.

    அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.

    ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

    மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

    இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    மாலை மலர் இன்றைய இதழில் வெளிவந்துள்ள சந்திர சேகரின் மறுப்பறிக்கை பாராட்டத் தக்கது. இது தொடர்பாக அங்கே இடப்பட்டுள்ள என்னுடைய பதில் பதிவு

    நண்பர் சந்திரசேகர் கூறியது முற்றிலும் சரி. நடிகர் திலகம் தோற்றது தேர்தலில் தானே தவிர, அரசியலில் அல்ல. ஆழமாக இறங்கி கருத்துக்களைக் கூறினால் பலரது மனம் புண்படும். நடிகர் திலகம் தனக்காக வாக்குக் கேட்க வில்லை. சத்யராஜின் தலைவரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது கட்சி சிதறக் கூடாது என்கிற எண்ணத்தில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாருக்கு உதவிக் கரம் நீட்டினார். அது மட்டுமல்லாமல் அதற்காக தான் காலம் காலமாய் உழைத்த காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டே விலகினார். தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கை அடிப்படையில் இன்னொரு இயக்கத்திற்காக தன் இயக்கத்தை விட்டு விலகி, ஆதரவுக்கரம் நீட்டிய ஒரே மனிதர் நடிகர் திலகம். அன்றைய கால கட்டத்தில் அலைஅலையாக நடிகர் திலகத்தை சந்தித்து தம்முடைய நன்றியை உணர்ச்சிப் பெருக்கால் கொட்டிய ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்களது மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். சத்யராஜாகட்டும் யாராகட்டும், தமிழக அரசியல் வரலாற்றினை முழுதும் தெரிந்து கொண்டு அதன் பிறகு நடிகர் திலகத்தின் அரசியலைப் பற்றிப் பேச வாருங்கள். அப்படி வரும் போது உங்களையறியாமலேயே உங்கள் உதடுகள் அந்த உயர்ந்த மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசும்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 16th March 2011 at 06:12 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1335
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நன்றி சந்திரசேகர் மற்றும் ராகவேந்தர்,

    தவறான செய்தி வெளியானதும் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளீர்கள்.

    ஒருமுறை கல்கண்டு பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் திரு. தமிழ்வாணன் அளித்த பதிலை இங்கு சத்யராஜுக்கு சொல்வது பொருந்தும்...

    கேள்வி: "கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும், காங்கிரஸுக்காக சிவாஜி பிரச்சாரம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்..?"

    தமிழ்வாணன் பதில்: "கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரின் பிரச்சாரம் சுயநலம் சார்ந்தது. அதாவது அவர்கள் கட்சி வெற்றியடைந்தால் அவர்கள்தான் முதலமைச்சராக ஆவார்கள். (இது இன்றைய ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்). ஆனால் சிவாஜியின் பிரச்சாரம் பொதுநலம் சார்ந்தது. அவர் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் கட்சி அத்தனை தொகுதிகளிலும் வெற்றியடைந்தாலும், அவருக்கு எந்த பதவியும் கிடைக்காது. அவர் பாட்டுக்கு தன் நடிப்புத் தொழிலைப் பார்க்கப் போய்விடுவார்".

  7. #1336
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சத்யராஜ் போன்றவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் பேசுவது அழகல்ல ..அண்ணா , காமராஜர் , ஜெயலலிதா கூட தேர்தலில் தோற்றவர்கள் தான் ..நடிகர் திலகம் ஒரு தேர்தலில் தோற்றதினாலும் , ராதாரவி , ராமராஜன் ,ஜே.கே.ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற்றதாலும் ராமராஜன் , ராதாரவி , ரித்தீஷுக்கெல்லாம் நடிகர் திலகத்தை விட மக்கள் செல்வாக்கு அதிகம் என சத்தியராஜ் நினைத்தால் அவரைப்போல முட்டாள் வேறு யாருமில்லை.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #1337
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    சத்யராஜ் போன்றவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் பேசுவது அழகல்ல ..அண்ணா , காமராஜர் , ஜெயலலிதா கூட தேர்தலில் தோற்றவர்கள் தான் ..நடிகர் திலகம் ஒரு தேர்தலில் தோற்றதினாலும் , ராதாரவி , ராமராஜன் ,ஜே.கே.ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற்றதாலும் ராமராஜன் , ராதாரவி , ரித்தீஷுக்கெல்லாம் நடிகர் திலகத்தை விட மக்கள் செல்வாக்கு அதிகம் என சத்தியராஜ் நினைத்தால் அவரைப்போல முட்டாள் வேறு யாருமில்லை.
    Sathyaraj must have been under water to have made such an idiotic statement.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  9. #1338
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு சாரதி,

    நேற்றே ஒன்றைக் குறிப்பிட நினைத்தேன். ஆனால் ரஹீம் எனை தடுத்தாட்கொண்டதால் எழுத விட்டுப் போய்விட்டது. பாகப்பிரிவினை மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. 1976 -77 காலக்கட்டத்தில் பீம்சிங் அவர்கள் இயக்கத்திலே கமல்-ஸ்ரீதேவி நடிக்க நிறகுடம் என்ற பெயரில் வெளிவந்தது. படம் ஒரு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது என்று கேள்வி. கமலைப் பொறுத்தவரை 16 வயதினிலே சப்பாணி பாத்திரத்தை செய்வதற்கு இந்தப் படம் [நிறகுடம்] ஒரு பயிற்சி களமாக அமைந்தது என்று சொல்லலாம்.

    பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா பற்றிய பதிவுகள் வெகு சுவாரஸ்யம். தொடருங்கள்.

    Quote Originally Posted by saradhaa_sn View Post

    டியர் முரளி,

    பாவமன்னிப்பு திரைக்காவியம் பற்றிய உங்கள் பதிவு, பம்மலாரின் நீண்ட பதிவுக்கான முன்னுரை போல சிறப்பாக அமைந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புக்களைத் தாங்கி வந்த அப்படத்தை, தமிழக மக்கள் மாபெரும் வெற்றிப்படமாகவும் ஆக்கி மேலும் சிறப்பு சேர்த்தனர். ஒரே ஆண்டில் பாவமன்னிப்பு, பாசமலர் என்ற வெள்ளிவிழாக்காவியங்களையும், பாலும் பழமும் என்ற 20 வாரங்கள் படத்தையும் ஆதரித்த தமிழ் ரசிகப்பெருமக்கள், அந்த ஆண்டு தீபாவளிக்கு எங்கே போனார்கள்?. (1061 தீபாவளியை நான் மறக்க விரும்புகிறேன்).
    சாரதா,

    நீங்கள் குறிப்பிட்டது உண்மைதான். நான் ஒரு முன்னுரையாகத்தான் எழுதினேன். சுவாமி, பாவமன்னிப்பு 51 என்பதை இங்கே பதிவிட்ட பிறகு நீங்கள் எல்லோரும் படித்தீர்கள். ஆனால் அது உருவாகும் போதே அதன் மணம் என் நாசியை தாக்க, விருந்து தயாராகும் போதே சமையலறையில் சென்று ருசி பார்ப்பது போல இந்த பதிவின் பதத்தை சோதித்து பார்த்தவன் நான். ஆகவேதான் என் முன்னுரை மூலமாக அதை கோடிட்டு காண்பித்தேன்.

    சுவாமி,

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நீங்கள் எனக்களித்த சாம்பிள்களே இதன் தரத்தை பறை சாற்றி விட்டன. ஆனாலும் கூட மொத்த தகவல்களையும் முழுமையாக படித்த போது உண்மையிலே பிரமாதமான விருந்து என்றே சொல்ல வேண்டும்.

    ரஹீம் 51 வழங்கி விட்டீர்கள். இனி ராஜசேகர் 51-ம்,Dr. ரவி 51-ம் உங்களிடமிருந்து எதிர்பார்பார்கள். அதனை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்

  10. #1339
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like

    one of my favourite Sivaji songs from padithaal mattum podhumaa.
    Last edited by jaiganes; 17th March 2011 at 12:32 AM. Reason: additional text
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  11. #1340
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்களது லக்ஷ்மிகரமான பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! 0.001 சதவீதம் என்ன, அனைத்தையுமே தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்! "பாவமன்னிப்பு" முதல் வெளியீட்டு விளம்பரங்களை வழங்கியமைக்கு கூடுதல் நன்றிகள்!

    டியர் பார்த்தசாரதி சார், தங்களின் பாராட்டுக்கு நன்றி!

    டியர் செந்தில் சார், பாராட்டுக்கு நன்றி!

    சகோதரி சாரதா,

    எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உயர்வான நன்றிகள்! தங்களைப் போன்று இங்குள்ள அனைவரும் வழங்கும் பாராட்டுக்களே அடியேனுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து இது போன்ற பதிவுகளை இடுவதற்கு ஆதாரசுருதிகளாகத் திகழ்கின்றன.

    டியர் சந்திரசேகரன் சார், பாராட்டுக்கு நன்றி!

    டியர் முரளி சார்,

    பாராட்டுக்கு நன்றி! கப்பலோட்டிய தமிழன் 51ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இனி Ready, Steady, Go தான். [Go என்றால் இத்திரிக்கு வந்து பதிவிடுவது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.]
    இப்பதிவுகளை நல்ல முறையில் இடுவதற்கு இறையருளும், இதயதெய்வத்தின் ஆசிகளும், இங்குள்ள அனைவரது நல்வாழ்த்துக்களும் நிச்சயம் துணை நிற்கும்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •