அன்புள்ள பார்த்தசாரதி,
தங்கள் திரைப்பட ஆய்வுகள் ஒவ்வொன்றும், நடிகர்திலகத்தின் ரசிகர்களால் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சொல்லுமளவுக்கு நாளுக்கு நாள், படத்துக்குப்படம், காட்சிக்குக்காட்சி மெருகேறி வருகிறது. 'ஞான ஒளி'க்காவியத்தில், எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலேயே மலைப்பைத் தருகிறது. ஸ்ரீகாந்தும் சாரதாவும் தனித்திருக்கும் வேளையில் சாரதா பாடும் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடலின் இடையிசையின்போது, மழையில் நனைந்துகொண்டே நடிகர்திலகமும் மேஜரும் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்க, ஓரிடத்தில் நடிகர்திலகம் கால் வழுக்கி விழப்போகும் சமயம், மேஜர் கைகொடுத்துத் தூக்கிவிடும் காட்சி, பிற்பாடு வரப்போகும் ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கான அச்சாரம் என்பது படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் தெரியும்.
(மெல்லிசை மன்னர் தந்த 'மணமேடை' பாடலை முறியடிக்க அதுபோன்ற இன்னொரு பாடல் இன்னும் வரவில்லை. காரணம், அப்பாடலின் மெட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் இசைக்கப்படும் ஒரு வித வித்தியாசமான மெட்டைத் தழுவியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான மெட்டு என்பதில் சந்தேகமில்லை).
அதுபோல, நடிகர்திலகம் மற்றும் விஜயநிர்மலா டூயட்டான 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பையாலஜி என எல்லாமே கச்சிதம். வீட்டுக்கூரையின் மேல், வைக்கோல் குவியலில், ஏணியில், பிரம்புக்கூடையில் என்று எல்லா இடத்திலும் அருமையோ அருமை. நான் பலமுறை சொன்ன விஷயத்தை மீண்டும் சொல்கிறேன்... இந்த ஜோடி இன்னும் பல படங்களில் தொடர்ந்திருக்க வேண்டும்.
டியர் மம்மலார்,
நீங்கள் குறிப்பிட்ட சக்கரவர்த்திகளின் வரிசையில், நண்டு வளைக்குள் ஓடி ஒளிவது, பின்னர் மீண்டும் கிளைமாக்ஸில் நண்டு மீண்டும் வெளியே வருவது போன்ற இடங்களில் இயக்குனர் மாதவனும் தன் முத்திரைகளைப் பதித்திருந்தார்.
(அவன்தான் மனிதன் மறு வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி)




Bookmarks