டியர் பம்மலார் மற்றும் ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டும் அற்புதமான பாடல்களைப் பதிவிட்டு அசத்த ஆரம்பித்து விட்டீர்கள்.
நாடகத் துறையிலிருந்து வந்த ஒரு கலைஞன், எப்படி திரைப்படம் என்கின்ற visual ஊடகத்திர்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டார் என்பதற்கு அவரின் அத்தனை பாடல்களுமே சாட்சி. உண்மையைச் சொல்லப் போனால், அவரது முதல் படத்திலேயே, தன்னை அவர் முழுவதுமாக மாற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். "கா... கா..." பாடல் - ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடுவதாய் இருந்தாலும், ஒரு moving உடல் மொழியில் செய்திருப்பார்; "தேசம், ஞானம், கல்வி" பாடல் கேட்கவே வேண்டாம்; "நெஞ்சு பொறுக்குதில்லையே", பொருமல் என்னும் உணர்வை, மிகவும் subtle -ஆக வெளிப்படுத்தியிருப்பார்; "புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு" பாடலில், அவரது நடையை அப்போதே ஆரம்பித்திருப்பார்.
அப்போது, எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எழுபதுகளின் ஆரம்பத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள, கமலா திரை அரங்கத்தில், ஞாயிறு காலை மட்டும் நண்பகல் காட்சி திரையிடுவார்கள். (காலை பத்து மணிக்குத் துவங்கி இரண்டு மணிக்குள் முடிந்து விடும்). இதில், எப்போதும், பழைய படங்களைத் தான் திரையிடுவார்கள். கமலாவில், முதல் படமாக, அன்னை வேளாங்கண்ணியும், இரண்டாவதாக, ஞான ஒளியும் திரையிடப்பட்டு, இரண்டுமே, பெரிய வெற்றி பெற்றன. குறிப்பாக, ஞான ஓளி, மிகப் பெரிய வெற்றி. அந்தக் காலத்தில், விருகம்பாக்கம் என்ற புறநகர் பகுதியில் - ஒரு மாதிரி கிராமம் என்றும் சொல்லலாம் (இன்று கதையே வேறு.) - எங்களைப் போன்ற அதுவும் நடிகர் திலகம் பக்தர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது கமலா திரை அரங்கத்தின் வரவு. ஏனென்றால், புதிய படங்கள், குறைந்தது நூறு நாட்கள் கழித்துதான் பெட்டி மாறி, புற நகருக்கு வரும். இல்லையென்றால், சாந்திக்கு செல்ல வேண்டும். ஞான ஒளிக்குப் பின், நிறைய புதிய படங்கள் - குறிப்பாக, டாக்டர் சிவா போன்ற படங்களை முதல் நாள் ஒப்பனிங் ஷோவே பார்த்து விட்டோம்! கமலா திரைஅரங்க உரிமையாளர் திரு வி.என். சிதம்பரம் வேறு நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். அன்பே ஆருயிரே, ரோஜாவின் ராஜா, கிரஹப்ரவேசம் உட்பட பல படங்கள் கமலாவிலும் வெளியானது.
அப்படி ஒருநாள், ஞாயிற்றுக்கிழமையன்று, நடிகர் திலகம் தன் விழிகளால் மொழி பேசி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தைப் பார்த்தேன். அதில் வனங்களில் சுற்றித் திரிந்து வளரும் "டார்ஜான்" பாத்திரத்தில் படத்தின் முற்பாதியில் நடித்திருப்பார். இடைவேளைக்கு மேல் தான், நடிகர் திலகம் பேச ஆரம்பிப்பார். அதுவும், ஒரு பாடலில் தான். "இக லோகமே இனிதாகுமே" என்று - பி. லீலா என்று நினைக்கிறேன். ஜமுனாவுக்கு பாடியிருப்பார். அந்தப் பாடலுக்கு முன் வரை, நடிகர் திலகம் பேசக்கூட மாட்டார். ஆனாலும், ஜமுனாவுக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டு, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பிப்பார். இந்தப் பாடல், ஆரம்பித்து, இரண்டாவது சரணம் என்று நினைவு. "வானவர் காணாத வன ராணியே" என்று ஆரம்பித்து, நடிகர் திலகம், திரு. டி.எம்.எஸ். அவர்களில் அற்புதமான குரல் வளத்தில், பாட ஆரம்பிக்கும் போது, திரை அரங்கம் அலறியது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கப்புறம், இன்று வரை இந்தப் படத்தையும், பாடலையும், பார்த்ததில்லை. இருப்பினும், அந்த நினைவு, என் மனதை விட்டு அகலவில்லை. Such was the impact NT created with that song among the audience, which is unparallelled even today!
The songs you are going to post, will surely, show to the entire world the way a Stage Artiste, adapted and evolved himself to Visual Media - started enjoying himself and made the entire people enjoy his performance throughout his career. It's a lesson to all budding Artistes forever, to see his performances and grow their careers.
அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks