Results 1 to 10 of 287

Thread: pala suvaik kavithaikaL.

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    From Thirumangkai Azvaar:

    2034:
    பாயிரும் பரவை தன்னுள்
    பருவரை திரித்து, வானோர்க்
    காயிருந் தமுதங் கொண்ட
    அப்பனை எம்பி ரானை,
    வேயிருஞ்சோலை சூழ்ந்து
    விரிகதி ரிரிய நின்ற,
    மாயிருஞ்சோலை மேய
    மைந்தனை வணங்கி னேனே. 3


    அருஞ்சொற்பொருள்:

    இரு(ம்)் = பெரிய. பாய் = படுக்கும் பாய். பரவை = பெருங்கடல். பருவரை = பெரிய மலை. திரித்து = சுருட்டி.

    வேயிருஞ் சோலை = பெரிய மூங்கிற் சோலை. வேய் = மூங்கில்.

    விரிகதிர் இரிய : கதிரவன் மறையும்படியாக.

    மாயிருஞ் சோலை = இருண்ட பெரிய சோலை. மேய = மேவிய.
    Last edited by bis_mala; 19th April 2011 at 05:58 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பாயிரும் பரவை:

    முன் இடுகையில் வரும் சில தொடர்கள்:

    பாயிரும் பரவை:
    பாய் - விரிந்து பரந்த என்னும் பொருளும் உடையது. விரிந்து பரந்து காணப்படும் பெருங்கடல் எனினுமாம்.

    இரும்பரவை தன்னுள் பருவரை பாய்திரித்து: பெரிய மலையுடன் பெருங்கடலைப் பாயாய் ஆக்கிச் சுருட்டி என்றும் பொருள்.

    இயற்கையில் ஏற்படும் பேரிடர் மாற்றங்களைப் பின்கருத்தாகக் கொண்டே தொன்மங்கள் இங்ஙனம் வரணனையாகக் கூறின.

    பரு = பரிய (பெரிய). வரை = மலை. பரு, பெரு என்பன நுண்பொருள் வேறுபாடுடைய சொற்கள்.

    கடல் பாயாய்ச் சுருட்டப்படுவது இட்டுக்கட்டிச் சொல்லப்படுவதன்று. இயற்கைப் பேரிடரில் விளையும் பெருமாற்றங்களையே அவ்வாறு கூறினர்.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #3
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    "இன்னா வைகல் வாரா முன்னே ......"

    கடல் உடுத்த நிலம் அல்லது கடல் உடுத்த நிலமடந்தை என்பது தமிழ்ப் புலவர்கள் இயற்கையை வியந்து பாடுங்கால் வருந் தொடர்கள்.

    சுந்தரனார் தம் பாடலில் " நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்று பாடுகின்றார் அல்லரோ?

    புறம் ௩௯௩-லும் இந்த அழகிய தொடர் வருகின்றது.

    "இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்" என்று தொடங்குகிறது அப்பாடல்.

    நிலம்தான் கடலைத் தனக்கு உடைபோல் உடுத்திக் கொண்டுள்ளது என்பார் புலவர்.

    பலர் என்று சொல்லவருமிடத்தில் "இடுதிரை மணலிலும் பலர்" என்கிறார். மணலை எண்ண முடியாது அன்றோ?

    சாவா மனிதன் எங்குள்ளான்? " வீயாது உடம்போடு நின்ற உயிரும் இல்லை" என்கிறார். அவதார புருடர்களும் மறைந்துவிடுகின்றனர், அந்தோ!

    "இன்னா வைகல் வாரா முன்னே
    செய் நீ முன்னிய வினையே!"

    மரணம் எனும் துன்பம் வருமுன், நன்மையைச் செய்துவிடு என்கிறது புறநானூறு.

    அதுவே தமிழன் பண்பாடு ஆகும்.


    "363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
    பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
    திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
    இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
    உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
    தாமே ஆண்ட ஏமம் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
    காடுபதி யாகப் போகித், தத்தம்
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
    அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
    உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
    கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.
    வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
    உப்பிலாஅ அவிப் புழுக்கல்
    கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
    இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
    நிலங்கல னாக, இலங்குபலி மிசையும்
    இன்னா வைகல் வாரா முன்னே,
    செய்ந்நீ முன்னிய வினையே,
    முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.


    வைகல் = நாள்.
    Last edited by bis_mala; 1st June 2011 at 07:24 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #4
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    சீவக சிந்தாமணி

    இப்போது சீவக சிந்தாமணிச் செய்யுளொன்றைப் படித்து மனம்
    மகிழ்வோம்.

    கோடிக் கோடும் கூம்புயர் நாவாய் நெடுமாடம்
    கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாரும்
    கோடித் தானைக் கொற்றவற் காணபான் இழைமின்னக்
    கோடிச் செம்பொற் கொம்பரின் முன் முன்தொழுவாரும்
    2321.

    இது காட்சி வரணனை ஆகும். மாடம் புனையப்பெறுதலையும்
    மன்னன் வணங்கப்படுதலையும் வரணிக்கிறது,
    Last edited by bis_mala; 8th June 2011 at 07:42 PM. Reason: supply title
    B.I. Sivamaalaa (Ms)

  6. #5
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Ref: above post dated:8th June 2011, 02:00 PM

    மேற்படிப் பாடலின் பொருளைச் சற்று நுணுகி ஆராய்வோம்.

    கோள் = கோள்களால் ; திக்கு = திசை அறிந்து; ஓடும் = செலுத்தப்-
    படுகின்ற; கூம்புயர் = உயர்ந்த பாய்மரங்களையுடைய; நாவாய் =
    மரக்கலம் (கப்பல்); நெடுமாடம் = நெடிய மாடிகளையுடைய
    கட்டிடங்கள்; கோடிப் பட்டில் = புதிய பட்டுத் துணிகளால்;
    கொள்கொடி கூடப் புனைவாரும் =கொள்ளும்படியாக கொடிகள்
    சேரப் புனைவாரும்;
    கோடித் தானை = எண்ணற்ற மறவர்கள் பணியாற்றும் சேனையை
    உடைய; கொற்றவற் காண்பான் = மன்னர்பிரானைக்
    காண்பதற்கு் ; இழை மின்ன = தம் உடைகளும் அவற்றின்மேல்
    பதித்திருப்பவையும் ஒளிவீச; கோடி = வளைந்து; செம்பொன்
    கொம்பரின் = செம்பொன்னால் ஆன கொம்பு போலும்;
    முன் = திருமுன்பு; முன்= முந்திக்கொண்டு; தொழுவாரும் =
    வணங்குவாரும் என்றவாறு.

    குறிப்பு :-

    கொள்ளும்படியாக எனில், நிறைவும் அழகும் அவண் அமையு-
    ம் படியாக என்க. "வாளி கொள்ளுமளவு தண்ணீர் பிடி"
    என்ற வழக்கு நோக்கின், கொள்ளுதல் - உள் நிறைதல் என்ப-
    தறியலாம். "கொள்கலன்" என்ற சொல்லமைப்பும் காணவும்.

    கொம்பர் = கொம்பு, மரக்கொம்பு.
    Last edited by bis_mala; 16th June 2011 at 09:25 PM.
    B.I. Sivamaalaa (Ms)

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •