-
23rd April 2011, 03:40 PM
#11
Senior Member
Veteran Hubber
சென்ற வாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் பங்குபெற்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
(திரு ஏ.ஜெகன்னாதன், இயக்குனர் ப.நீலகண்டனின் உதவி இயக்குனராக இருந்தபோது ஏராளமான எம்.ஜி.ஆர்.படங்களுக்கு பணியாற்றியவர். இதயக்கனி படத்தின் இயக்குனர் மற்றும் பிற்காலத்தில் சத்யா மூவீஸின் ஆஸ்தான இயக்குனர்).
"நான் சிவாஜி சாரை வைத்து இயக்கிய ஒரே படம் 'வெள்ளை ரோஜா'. அப்படத்தின் தயாரிப்பாளர்களான பிலிம்கோ நிறுவனத்தினர் முதலில் சிவாஜி சாரை புக் பண்ணிவிட்டு என்னிடம் வந்து படத்தை இயக்க வேண்டுமென்று கேட்டார்கள். சிவாஜி சாரை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். அதன்பின்னர் தயாரிப்பாளர்களுக்கு புதிய சந்தேகம் வந்துள்ளது. 'இவர் எம்.ஜி.ஆர்.டைரக்டராச்சே, இவரைப்போட்டால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா' என்ற ஐயம் ஏற்பட்டதால், பிலிம்கோ உரிமையாளர் காதர் மற்றும் சிலருடன் எனக்குத்தெரியாமல் சிவாஜிசாரைப்போய்ப்பார்த்து, 'வெள்ளை ரோஜா படத்துக்கு டைரக்டராக ஏ.ஜென்னாதனைப் போட்டிருக்கிறோம். நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க, நீங்க சொல்ற வேற் டைரக்டரைப் போட்டுடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு சிவாஜி சார் சிரித்துக்கொண்டே “அவர் எங்க அண்ணனையே டைரக்ட் பண்ணியவராச்சே. என்னை டைரக்ட் பண்ண மாட்டாரா என்ன?. அதெல்லாம் மாற்ற வேண்டாம். அவரே இருக்கட்டும்” என்று சொல்லியனுப்பி விட்டார். இச்சம்பவம் நடந்தபோது நான் இல்லை. ஆனால் சிவாஜி சார் சொன்ன விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்.
படப்பிடிப்பின்போது நான் வைக்கும் சில ஷாட்களை மனதாரப் பாராட்டுவார். போலீஸ் ஆபீஸராக வரும் அவர் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் நான் அவரது கண்ணுக்கு மட்டும் பக்கவாட்டில் குளோஸ்-அப் ஷாட் வைத்ததை பலமாக முதுகில் தட்டிப்பாராட்டினார். அமைதியான பாதிரியாராகவும், ஆக்ரோஷமான போலீஸ் ஆபீஸராகவும் இருவேறுபட்ட நடிப்பை அற்புதமாகத் தந்திருந்தார்.
சிவாஜி சாரைப்போன்ற அற்புத நடிகர் Never Before and Never After.
சிவாஜி சாரை வைத்து நான் இயக்கிய 'வெள்ளை ரோஜா' படமும், ரஜினி சாரை வைத்து இயக்கிய 'தங்க மகன்' படமும் ஒரே தீபாவளியன்று வெளிவந்தன. அந்த தீபாவளிக்கு வேறு எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தபோதிலும், இவ்விரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. மீண்டும் அதுபோன்ற ஒரு பொற்காலத்துக்காக காத்திருக்கிறேன்".
(Thank you A.Jagannathan sir)
-
23rd April 2011 03:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks