-
23rd April 2011, 08:50 PM
#11
Senior Member
Seasoned Hubber
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 6
இந்த நாடு நன்றாய் இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தில் தன் கொள்கையை இந்த நாட்டுப் பற்றை அடிப்படையாக வைத்து, சுய நலம் பாராமல், வணிக நோக்கம் பாராமல், சுய பெருமை பாடாமல், தேசப் பற்றையும் இறையாண்மையையும் தன் படங்களிலும் பாடல்களிலும் பறை சாற்றியவர் நடிகர் திலகம். இதை அடிப்படையாகக் கொண்டு நமது அடுத்த கொள்கைப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. படுத்துக் கொண்டே நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்பாடல் சாட்சி. இப்பாடல் முடிவில் கண்களில் நீர் வரவில்லை என்றால் அவர் தன் தேச பக்தியை இன்னும் தீவிரமாக உணர வேண்டும் என்பதே பொருளாகும். இடம் பெறும் பாடல் லீலா அவர்கள் பாடி ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாரதியார் பாடல். வ.உ.சி. யாக வாழும் நடிகர் திலகம் நடித்த கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்று, சற்று அபூர்வமாக ஒலிக்கக் கூடிய பாடல் இது. மரணப் படுக்கையில் இருந்தும் கூட என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்கிற வரியின் போது தன்னுடைய கைகளை விலங்குடைத்து விடுவிபபதாக செய்து, விடுதலையை எண்ணி புன்னகை பூக்கும் காட்சியில் இந்த உலகத்தில் இதற்கு மேல் கண்களால் தேச பக்தியைக் கூறக்கூடிய நடிகர் வேறு யாரேனும் உண்டா என்கிற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கும் அந்தக் காட்சி....
இதோ நீங்களும் உணருங்கள்
பாடல் காட்சியில் இடம் பெற்ற கலைஞர்கள்
ருக்மணி, டி.எஸ்.துரைராஜ் மற்றும் பலர்.
அன்புடன்
பம்மலார்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 24th April 2011 at 08:45 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2011 08:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks