-
16th May 2011, 02:56 AM
#11
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகம் பற்றி திரு.என்.ரங்கசாமி
[புதுவையில் 11.2.2006 சனிக்கிழமையன்று புதுவை அரசு சார்பில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வெண்கலத் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி அவர்களின் பெருமுயற்சியின் பலனாக அவரது அரசு நிர்மாணித்த சிலையினை திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய சிறப்புரையிலிருந்து சில வரிகள்]
"பெருந்தலைவர் காமராஜர் மீது அதிக பற்றுக் கொண்டவர் சிவாஜி கணேசன். பெருந்தலைவர், சிவாஜியைத் தவிர வேறு யார் பிறந்தநாளுக்கும் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது கிடையாது. பெருந்தலைவரோடு சிவாஜி இணைந்து அரசியல் மற்றும் தேர்தல் பணியாற்றியதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நான் பதவியேற்ற முதல் நாளிலேயே சிவாஜி மன்றத்திலிருந்து வந்தவன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். கலைத்தாயின் தலைமகன் சிவாஜி. ஒரு தாய்க்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தாலும் முதல் குழந்தைக்குத்தான் அவள் பெரிதும் மகிழ்வாள். அதனால் தான் சிவாஜியை கலைத்தாயின் தலைமகன் என்கிறோம். நடிகர் திலகம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். இந்திய நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் அவர். நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவருக்கு சிலை அமைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு சிலை வைப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை."
மூன்றாவது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்க இருக்கும் நடிகர் திலகத்தின் நல்லிதயம் திரு.என்.ரங்கசாமி அவர்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
-
16th May 2011 02:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks