Results 1 to 10 of 555

Thread: THIRUKKURALH

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    செந்தண்மை

    "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுகலான்."

    எவ்வுயிர்க்கும் எங்ஙனம் செந்தண்மை பூண்டு நடப்பது? இதற்குப் பதில்: உயிர்க்கொலை செய்யாமல் ஒழுகினால், அதுவே "செந்தண்மை".அங்ஙனம் நடந்தோரை அறவோராகிய அந்தணர் என்றார்.
    கபிலர் முதலான சங்கப் புலவர்கள், கொல்லாமை , புலால் உண்ணாமை ஆகிய நோன்புகள் மேற்கொண்டொழுகினர் என்று தெரிகிறது. கோயிலைப் பார்த்துக்கொண்டவர்களும் பிறரும் இதிலடங்குவர். அப்போது *அகமணமுறை இருந்திருந்தால் ஐயரையும் இது உள்ளடக்கும்: கொல்லாமை போற்றிய காரணத்தால்.!
    அகமணம் புரியும் முறை இருந்ததற்கான ஆதாரம் ? ஆய்விற்குரியது.**

    notes:

    *அகமணமுறை - endogamy
    ( =Marriage within a particular group in accordance with custom or law. Fertilization resulting from pollination among flowers of the same plant. Reproduction by the fusion of gametes of similar ancestry )


    **
    Gonzalo Alvarez and his colleagues at the University of Santiago de Compostela in Spain calculated what is called the inbreeding coefficient for each individual across 16 generations indicating the likelihood that an individual would receive two identical genes at a given position on a chromosome because of the relatedness of their parents, increasing considerably down through the generations, almost as high as would be expected for the offspring of an incestuous marriage (parent-child or brother-sister
    See G Alvarez (. Research on Inbreeding.)

    அகவாழ்வினை நமக்குப் படம்பிடித்துக்காட்டும் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களும் திருக்குறளும் காதல் மணமுறையையே போற்றியதாகத் தெரிகிறது. இத்தகைய சமூக (குமுகாயச்) சூழலில், இன்று சாதிப்பெயர்களாய் உள்ளவை அன்று வெறும் தொழிலடிப்படைப் பெயர்கள் மட்டுமே என்று கொள்ளவேண்டும்.
    Last edited by bis_mala; 30th June 2011 at 09:32 AM. Reason: add note
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •