நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி பல்வேறு மன்றங்களின் சார்பில் அமைக்கப்பட்ட சுவரொட்டிகளையும் பேனர்களையும் சிரமம் பாராது தொகுத்து இங்கே பதிப்பித்து, நமது திரியின் சார்பிலும் நினைவஞ்சலியை நிறைவேற்றியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி.
மற்றும் பல்வேறு இடங்களிலும் பல்வேறு விதங்களிலும் அவரது நினைவஞ்சலியை சுவரொட்டிகள், பேனர்கள் வாயிலாகவும், அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வாயிலாகவும், மற்றும் தங்கள் தனிப்பட்ட வலைப்பூக்களில் அவரைப்பற்றிய நினைவஞ்சலி கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகவும், சில தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகள் வாயிலாகவும் நடிகர்திலகத்தின் நினைவுநாளை மனமுருகி நினைவு கூர்ந்தமைக்கு மேலும் மேலும் நன்றிகள்.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள்... அதை மெய்ப்பிக்கும் வகையில் இறந்து 10 ஆண்டுகள் கழிந்த பின்னும் அரங்குகளில் நிரம்பி வழியும் கூட்டங்களே நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு ஒரு பக்கம் கட்டியம் கூறி வருகின்ற வேளையில், அரங்கிற்கு வர இயலாமல் இல்லத்திலேயே மீண்டும் மீண்டும் நினைவு கூறும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர் நினைவிலேயே வாழும் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள், மற்றொரு பக்கம் நடிகர் திலகத்தின் ஒளிப்பேழைகள், குறுந்தகடுகள், நெடுந்தகடுகளுக்கு மிகப் பெரும் வரவேற்பைக் கொடுத்து அதிலும் அவரே நம்பர் 1 என்று நிரூபித்துக் கொண்டுள்ளனர். எத்தனை நிறுவனங்கள் நடிகர் திலகத்தின் பட விற்பனையை மூடி மறைத்தாலும் அவர்களுடைய மனசாட்சி நிச்சயம் அவர்களை உறுத்தும். அதே சமயம் நடிகர் திலகத்தின் எந்தப் படமானாலும் - அது வெற்றியடைந்ததானாலும் சரி, தோல்வியடைந்ததானாலும் சரி, தயங்காமல் ஒளி வடிவில் காட்சிக்கு வெளியிடும் நிறுவனங்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகும். அவ்வகையில் புதிய சாதனையாக, ஒரே சமயத்தில் ஒரே நடிகரின் ஐந்து படங்களை ஒளித்தகடாக வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த வகையிலும் அசைக்க முடியாத சாதனையாளராக நடிகர் திலகத்தின் புகழ் ஓங்குவதை எண்ணும் போது பெருமையாக மட்டுமல்ல, அவர் படத்திற்கு பெருத்த ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றியும் கூற வேண்டியது நமது கடமையாகிறது. இதோ ஒரே நிறுவனம் வெளியிட்டுள்ள ஐந்து படங்கள் -
இல்லற ஜோதி
பாரம்பரியம்
நெஞ்சங்கள்
திருப்பம்
மிகுந்த ஆவலை எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் விஸ்வரூபம்
இவற்றை வெளியிட்ட நிறுவனத்திற்கு நமது உளமார்ந்த நன்றிகள்
தொடரும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இப்பதிவுகளை நான் இடும் நேரத்தில், இத்தகடுகளை அடியேன் வாங்கிய விற்பனைக் கூடமான avm sound zone நிறுவனத்திலிருந்து முரளி சார் அழைத்துக் கூறியது - இன்று மதியம் வந்த ஒளித்தகடுகள் எந்த வித தகவலும் இன்னும் பரிமாற்றப்படாத குறுகிய காலகட்டத்தில் மேற்கூறிய அனைத்துப் படங்களும் விறுவிறுப்பான விற்பனையை கண்டு கொண்டுள்ளன, குறிப்பாக விஸ்வரூபம் படத்தின் அனைத்துப் பிரதிகளும் விற்று விட்டன, மேலும் பிரதிகள் இரவுக்குள் எதிர்பார்க்கப் படுகின்றன என்ற தகவல்களைக் கூறியுள்ளார்.
"only nadigar thilagam can do this.."
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளை முன்னிட்டு, இதயராஜா சிவாஜி பித்தர்கள் சார்பில், சென்னை சாந்தி திரையரங்கில், 21.7.2011 வியாழனன்று மாலை 5:30 மணியளவில், சிவாஜி பெருமானுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், நைவேத்யம், மஹாதீபாராதனை மிக விமரிசையாக நடந்தேறியது. நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதமாக அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. திரைப்பட விநியோகஸ்தர்கள் 'திவ்யா பிலிம்ஸ்' திரு.சொக்கலிங்கம், 'அர்ச்சனா பிலிம்ஸ்' திரு.முரளி ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். பெருந்திரளான ரசிகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்பாலே அண்ணனை ஆராதித்த நிகழ்வுகளை அன்போடு நம்மிடம் பகிர்ந்து கொண்ட பம்மலாருக்கு அன்பு கொண்ட நெஞ்சோடு நன்றியைக் கூறுவோம்.அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்கேற்ப 58 ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும் மாறாத அன்புடன் வரவேற்பைக் காணும் அன்பு திரைக்காவியத்தின் நினைவுகளை விளம்பர நிழற் படங்களில் தந்தமைக்கு நன்றிகள்...
கலக்கல் பம்மலாரே...
தங்களுடைய பதிவுகளை எண்ண எண்ண இன்பமே வாழ்விலே என்னாளும்...
இசை டி.ஆர்.பாப்பா, குரல் ஏ.எம்.ராஜா, ஜிக்கி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
'அன்பு' பட வெளியீட்டு நினைவையொட்டி நீங்கள் தந்துள்ள விளம்பர அணிவகுப்பு எப்போதும்போல அட்டகாசம். உங்கள் விளம்பர வரிசையைப்பார்க்கும்போதுதான் 'ஓ.. இன்றைக்கு இப்படம் ர்லீஸான தினம் அல்லவா?' என்ற எண்ணம் வருகிறது.
தங்கள் சிரத்தையும் சிரமங்களும் மலைக்க வைக்கின்றன. எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த நீங்கள் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.
இன்னும் எவ்வளவு படங்களின் அணிவகுப்பு வரவிருக்கிறது என்று அன்போடு காத்திருக்கிறோம்.
புத்தம்புது நூறு ரூபாய் நோட்டை வாங்கி உன் கையெழுத்திட்டு தந்தாய். இன்றைக்கும் என்வீட்டு வரவேற்பறையில் எவர்சில்வர் பிரேமிட்ட கண்ணாடிபேழையில் நீ கையொப்பமிட்ட 'அந்த கோடி ரூபாய்' ஜொலிக்கிறது.
சகோதரி சாரதா,
நடிகர் திலகத்தின் நினைவு நாள் குறித்த தங்களது பதிவு உருக்கத்துடன் கூடிய உணர்வுபூர்வமான பதிவு.
கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்க முடியாத நமது கோடீஸ்வரன் வழங்கிய அந்தக் கோடானுகோடி மதிப்புள்ள அன்புப்பரிசை நிழற்படமாக இங்கே நமது திரியில் எல்லோரும் கண்டு களித்து உணர்ச்சிப் பெருக்கில் நீந்தும் வண்ணம் பதிவிட வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Bookmarks