வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒரு புது உதயம் கண்ட நடிகர் திலகத்தின் படங்களுக்கு வெளியீட்டு நாள் சிறப்பு விளம்பரங்கள் மற்றும் செய்திகளை இங்கே பதிவேற்றுவதற்காக சுவாமிக்கும் ராகவேந்தர் சாருக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தால் அது நாள்தோறும் நடந்துக் கொண்டேயிருக்கும். காரணம் அத்தனை தகவல்கள் அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்றன. சுவாமியோடும் ராகவேந்தர் சாரோடும் பேசும்போது கிடைக்கும் சில தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். வருட முடிவில் மொத்தமாக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம்.

இதையும் மீறி இன்று சுவாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் அவர் இங்கே பதிவேற்றியுள்ள மதுரை மணி அய்யரின் இங்கிலீஷ் நோட்ஸ் சுட்டிக்காக. ஒரு திரைப்பட நடிகன் பற்றிய அல்லது அவன் திரைப்படங்களைப் பற்றிய விவாத திரியில் மதுரை மணி அய்யர் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெறுவது என்பதே நடிகர் திலகம் திரியில் மட்டுமே நடக்க கூடிய ஒன்று. அந்த வகையிலும் இந்த திரியின் பெருமை கூடுகிறது.

சாரதா, சற்று வேலை பளு. அதுவும் தவிர நமது திரியில் பெய்யும் விளம்பர மழையில் ரசனையாக நனைந்துக் கொண்டிருந்தேன்.

இப்போது விற்பனையில் உள்ள குமுதம் ரிப்போர்டர் இதழில் நடிகர் திலகத்தின் 10 -வது நினைவு நாளை முன்னிட்டு ஒரு கட்டுரை. அதில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சிலர், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் நாஞ்சில் ஜோ. பெயரை பார்த்தவுடன் ஒரு சின்ன ஆர்வம் தோன்ற யார் என்று பார்த்தால் அவர் குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராம். அப்போது நிச்சயமாக நமது ஜோவிற்கும் அவருக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இருக்காது என்று புரிந்து போனது.

குருசுவாமி சார், இம்முறை உங்கள் அனுபவ பகிர்வு உறுதியாக இடம் பெறும் என நம்புகிறேன்.

அன்புடன்

சிக்கலாருக்கு பின்னால் சிவனடியார்களையும் அந்த தென்னாடுடைய சிவனையுமே பலரும் எதிர்பார்த்து காத்திருப்பது புரிகிறது. இதற்கு இடையே ஒரு சின்ன சர்ப்ரைஸ் --- !