அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி. 'யாம் பெற்ற இன்பம்' என்று தன்னடக்கத்தோடு ஒரே வரியில் நீங்கள் முடித்துக்கொண்டாலும் உங்கள் சேவை மகத்தானது.

ஒருபடம் 100 நாட்களைக்கடந்து ஓடியது என்பதற்கு செய்தித்தாள் விளமபரங்களைப்போல் ஆதாரங்கள் வேறில்லை.

முன்பு நமது முரளி சீனிவாஸ் அவர்கள் நடிகர்திலகத்தின் சாதனைகளைத் தொடராக எழுதியபோது, 'சும்மா இஷ்ட்டத்துக்கு அளக்கிறீர்களே இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா' என்று சிலர் கேள்வியெழுப்பினார்கள். அந்த கேலிகளை முறியடிக்கத்தான் இப்போது திகட்ட திகட்ட ஆதாரங்களை வழங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இம்மாதம் (ஜூலை) 3-ம் தேதி துவங்கி, இதுவரை எத்தனை படங்களின் '100-வது நாள்' விளம்பரங்கள், அவை ஓடிய தியேட்டர் பெயர்களுடன் அணிவகுத்து வந்து விட்டன....

சவாலே சமாளி
தெய்வ மகன்
சிவந்த மண்
எங்கள் தங்க ராஜா
கை கொடுத்த தெய்வம்
கௌரவம்
அந்தமான் காதலி
தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல் (வெள்ளி விழா)

இவற்றோடு கூடவே அன்பு, துளிவிஷம், குழந்தைகள் கண்ட குடியரசு, தேனும் பாலும், திருவருட்செல்வர், தர்மம் எங்கே போன்ற படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள். ரொம்ப ரொம்ப அற்புதம்.