Page 123 of 197 FirstFirst ... 2373113121122123124125133173 ... LastLast
Results 1,221 to 1,230 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1221
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    வருகிறார்.....

    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1222
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தங்கள் அன்புக்கும், வாழ்த்துதல்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    தூக்குத்தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், தாயே உனக்காக போன்ற அற்புதப் படைப்புகளின் முதல் வெளியீட்டு விளம்பரங்களை வெளியிட்டு தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து விட்டீர்கள். சுவைகளுக்குக் கேட்க வேண்டுமா? அனைத்தும் முக்கனிகளின் சாராய் இனித்தன. விருந்துக்கு நன்றி. அடுத்த விருந்தான நம் தவப் புதல்வனுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.

  4. #1223
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தூக்கு தூக்கி 58 -ஆவது ஜெயந்தி.




    அருணா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக மன்னனின் 18- ஆவது படமாக வந்து வெற்றிக்கொடி நாட்டிய படம். நம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எங்கும் தெருக் கூத்தாகவும், நாடகமாகவும் வெற்றி உலா வந்து, பின் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பால் வீர உலா வந்தது.

    இப்படத்தில் பாலையா, T.N.சிவதாணு, 'யதார்த்தம்' பொன்னுசாமிப் பிள்ளை, 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன், லலிதா, பத்மினி, ராகினி, C.K.சரஸ்வதி, M.S.S.பாக்கியம் என்று மாபெரும் நட்சத்திரக் கூட்டம்.

    சுந்தரபுரி இளவரசன் சுந்தராங்கதன் நாட்டின் பொருளாதார வழிகளைப் பெருக்க தன் தந்தையாகிய மன்னரின் ஆணைக்கேற்ப நாட்டைச் சுற்றி வரும் வேளையில், ஓலைச் சுவடிகளை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் மத்தியில் உரையாடநேருகிறது.

    கொண்டு வந்தால் தந்தை...
    கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...
    சீர் கொண்டு வந்தால் சகோதரி...
    கொலையும் செய்வாள் பத்தினி...
    உயிர் காப்பான் தோழன்...

    என்று முன்னோடிகள் ஓலைச்வடிகளில் அனுபவங்களால் எழுதி வைத்த குறிப்புகளைத் தவறென்று ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் நடுவே ஆணித்தரமாக வாதாடுகிறான் சுந்தராங்கன். அந்தக் கருத்துக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதாகவும் சவால் விடுகிறான்.

    அதற்காக அவன் சந்தித்த சோதனைகள், துரோகங்கள்,வேதனைகள் ஏராளம்.

    பொருள் கொண்டு செல்லாததால் தந்தையால் வெறுக்கப் பட்டு, அவராலேயே நாடு கடத்தப் படுகிறான் சுந்தராங்கன். ஆனால் தாயின் அன்பு என்றும் சாஸ்வதம் என்பதை உணருகிறான். சீர் கொண்டு செல்லாததால் தன் தங்கையால் வெறுக்கப் பட்டு வேதனையுறுகிறான். தன் மனைவியே தனக்கு நம்பிக்கை மோசம் செய்வதை நேரிடையாகக் காண்கிறான். கொலைக் குற்றம் சாட்டப் படுகிறான். தன் மனைவியாலும், அவளின் கள்ளக் காதலனாலும் தன் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் தன் உயிர்த் தோழனால் காப்பாற்றப் படுகிறான். நாட்டை விட்டே வெளியேறி வேற்று நாட்டு அரண்மனையில் தூக்குத் தூககியாய் வேடம் புனைந்து, அங்கு இளவரசிகளின் அன்புக்குப் பாத்திரமாகி, அரண்மனையில் பல சோதனைகளைக் கடந்து தான் குற்றவாளி அல்ல என்று நிரூபணம் செய்து, முன்னோர்கள் சொன்ன தத்துவங்கள் பொய்த்துப் போவது இல்லை என்பதனையும் தன் அனுபவங்களால் உணருகிறான்.

    இளவரசன் சுந்தராங்கதானாக நம் நடிகர் திலகம். கேட்க வேண்டுமா..பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக அந்த பரத நாட்டியக் காட்சிகள்.. ஏறாத மலைதனிலே, அபாய அறிவிப்பு,பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி பாடல்களுக்கு அவர் நடனமாடுவது காலாகாலத்திற்கும் ரசிக்க வைக்கக் கூடியது. வழக்கம் போல வீறு கொண்ட வசனங்கள்...பலதரப் பட்ட முகபாவங்கள்..பாவனைகள்..இந்தப் படத்தின் மூலம் மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகர் திலகம்.

    வசனங்களை ஏ.டி.கே மற்றும் V.N.சம்பந்தம் அவர்கள் இணைந்து எழுத, சங்கீத விற்பன்னர் ஜி.ராமநாதன் அவர்கள் எக்காலங்களிலேயும் ரசிக்க வைக்கும் ஜனரஞ்சகப் பாடல்களுக்கு இசை அமைக்க, டி.எம்.எஸ், M.L.வசந்தகுமாரி, P.லீலா, A.P.கோமளா போன்ற ஜாம்பவான்கள் பின்னணி பாட, அற்புதமான பொழுது போக்குப் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் R.M.கிருஷ்ணசாமி அவர்கள்.

    நடிகர் திலகத்திற்கு முதன் முதலாக திரு.T.M.S. அவர்கள் பின்னணிப் பாடல்கள் பாடிய பெருமை இந்தப் படத்தையே சாரும்.

    வெங்கட்ராமன் என்ற நகைச்சுவை நடிகர் தன் அபார நகைச்சுவை நடிப்பால் இந்தப் படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரிலேயே 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன் என்று பெரும் பெயர் பெற்றார் என்பது இன்னொரு சிறப்பு.

    பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகம்..

    A. மருதகாசி அவர்கள் இயற்றிய

    இன்பநிலை காண ஏன் இன்னும் தாமதம்....
    கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த...
    சுந்தரி சௌந்தரி....

    திரு.உடுமலை நாராயணகவி அவர்கள் இயற்றிய

    பியாரி நம்பள் மேலே...
    பெண்களை நம்பாதே..கண்களே..பெண்களை நம்பாதே...
    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...

    திரு.தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இயற்றிய

    அபாய அறிவிப்பு ...அய்யா!.. அபாய அறிவிப்பு...
    ஏறாத மலைதனிலே....வெகு ஜோரான கௌதாரி ரெண்டு...

    போன்ற காலத்தை வென்ற கானங்கள் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.

    மொத்தத்தில் அததனை பேர் மனதையும் கொள்ளை கொண்டு போகிறான் 'தூக்கு தூக்கி'.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ.. ஒரே ஒரு சோறு.. ஒலி-ஒளி வடிவில்...




    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 27th August 2011 at 07:18 PM.

  5. #1224
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள் பம்மலாரின் கைவண்ணத்தில் உண்மையிலேயே அற்புதம்தான். திரு.வாசுதேவன் அவர்களின் ஒலி, ஒளி காட்சி இணைப்பு வேறு. கேட்கவேண்டுமா சுவைக்கு? நன்றிகள் கோடி. தவப்புதல்வனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #1225
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தை பெற்றெடுத்த தெய்வத்தாய் ராஜாத்தி அம்மையார் மற்றும் நடிகர்திலகத்தின் போர்வாள் சசிகுமார் ஆகியோரது மறைவு குறித்த வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு கண்ணீரை வரவைத்து விட்டது.இந்த அற்புத தகவல்களை பதிவேற்றிய பம்மல் சாருக்கும் அதன் தொடர்ச்சியாக ஒலி ஒளி காட்சிகளை அளித்த வாசுதேவன் சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    திரு குமரேசன் சார்,
    புதிய பறவை வெளியீடு குறித்த லேட்டஸ்ட் தகவல் ஏதேனும் உண்டா?

    A part of an interview by raghavendra rajkumar,second son of late actor rajkumar to radio mirchi which was published in the times of india,bangalore edition dated 23-8-11:
    Which actor did he admire the most?
    He greatly admired the legendary tamil actor SIVAJI GANESAN.He used to travel in local buses and watch sivajiganesan"s movies in theatres.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #1226
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

    அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்களில், தூக்குத்தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம் மற்றும் தவப்புதல்வன் திரைச் சித்திரங்களின் போட்டோ வடிவங்களைப் பதிவிட்டு வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள்.

    அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

    இமைப் பொழுதும் சோராவண்ணம், தாங்களும் வழக்கம் போல் மின்னல் வேகத்தில், தூக்குத்தூக்கி திரைக்காவியத்தினை அலசி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள்.

    நன்றியுடன்,

    இரா. பார்த்தசாரதி

  8. #1227
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நான் சில நாட்களுக்கு முன்னர் இட்ட ஒரு பதிவில், இந்த 1954-ஆம் வருடத்தின் சிறப்பினைக் குறிப்பிட்டிருந்தது போல், மேற்கூறிய படங்கள் அல்லாமல், மனோகரா, எதிர்பாராதது மற்றும் அந்த நாள், படங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

    தூக்குத்தூக்கி படத்தினைப் பற்றிய கூடுதல் தகவல்; நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்து தான். அந்த வருடத்தில் வெளி வந்த மற்ற படங்களிலும் அவர் அதியற்புதமாக நடித்திருந்தாலும், சினிமா ரசிகர்கள் சங்கத்தின் மூலமாக அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருது அவருக்கு தூக்குத்தூக்கி படத்திற்குத் தான் வழங்கப்பட்டது - ஆல் ரவுண்டு பெர்பார்மன்சுக்காக.

    படத்தின் ஆரம்பத்தில், ஒரு விதமான நடிப்பு, ஒவ்வொரு பழமொழியையும் ஆராயும் போது, ஒரு விதமான நடிப்பு, பாலைய்யாவிடம் வேலைக்காரனாக நடிக்கும் போது ஒரு விதமான நடிப்பு, (புடவே... புடவே... பாடல் காட்சி அபாரமாக இருக்கும்!), பெண்களை நம்பாதே பாடல் ஆரம்பித்து, கடைசியில், அரசு தர்பாரில், ராஜ துரோகத்திற்காக நிறுத்தப்படும் வரை, அதகளப்படுத்தும் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை/அசடு போல் பாத்திரத்தில் வரும் நடிப்பு. கடைசியில், தர்பாரில், தன்னுடைய மனைவியே தன்னுடைய கள்ளக்காதலுக்காக தன்னைக் கொல்லத் துணிந்து விட்டதை சபையில் சொல்லி அவமானம் மற்றும் ஆத்திரத்துடன் மடை திறந்த வெள்ளமென எரிமலையாய் வெடிக்கும் போது காட்டும் நடிப்பு - "மாசுண்டாள் உம் பெண்" என்று துவங்கி "தெய்வம் பொறுக்குமா உங்கள் திருக்கூத்தை?" என்று முடிக்கும் போது திரையரங்குகளில் எழும் கைத்தட்டல் இன்னும் அடங்கவில்லை.

    இந்த ஆல் ரவுண்டு பெர்பார்மன்சுக்குத் தான் அவருக்குச் சிறந்த நடிகர் விருது சரியாகத் தரப்பட்டது.

    மேற்கூறிய இரண்டு படங்களும் ஜனரஞ்சகமாகவும் அதே சமயம் தரமான படங்களாகவும் அமைய, கூண்டுக் கிளி மற்றும் அந்த நாள் படங்களில் unconventional பாத்திரங்களை ஏற்று நடித்தார் (ஒன்றில் நண்பனுக்கே துரோகம் இன்னொன்று தேச துரோகம்!).

    அது மட்டுமா?, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் நகைச்சுவை கலந்த துணைக் கதாபாத்திரத்திலும், எதிர்பாராதது படத்தில், காதலில் தோல்வி அடைந்து அவர் தன்னுடைய தந்தைக்கே இரண்டாம் தாரமானதைத் தாங்கும் (கடைசியில், அவரை அடையத் துடித்தாலும்) பாத்திரத்திலும், துளி விஷம் படத்தில் வில்லனாகவும், இல்லற ஜோதியில் எழுத்தாளனாகவும் (திருமணம் ஆனபின்னும் வேறொரு பெண்ணை நாடி கடைசியில், மனம் திருந்தி மனைவியிடமே வருவார்), நடித்தார்.

    இத்தனை இளம் வயதில், நடிக்க வந்த மூன்றாவது வருடத்திலேயே (1952 - ஆம் வருடக்கடைசியில் தான் பராசக்தி வெளிவந்தது என்பதால், இரண்டாவது வருடம் என்றும் சொல்லலாம்!) இத்தனை கனமான, ஜனரஞ்சகமான, மற்றும் நகைச்சுவை கலந்த பாத்திரங்களில் நடிப்பதற்கு, எத்தனை நம்பிக்கையும், அனுபவமும், மெச்சூரிட்டியும் வேண்டும்? அவர் மனிதப் பிறவி தானா? இல்லையில்லை, தெய்வம் நடிப்பதற்கென்றே சிருஷ்டித்த தெய்வக் கலைஞன் - தெய்வ மகன்!

    அந்த வருடத்தில் வெளி வந்த நடிகர் திலகத்தின் அத்தனை படங்களிலும், தூக்குத்தூக்கி மற்றும் மனோகரா வசூல் சாதனையே புரிந்தன. அதில்லாமல், மேற்கூறிய வித்தியாசமான நடிப்புச் சாதனையை நெருங்கக்கூட முடியுமா வேறு ஒரு நடிகனால் எத்தனை வருடங்கள் ஆனாலும்?

    மாற்று முகாமில் வெளி வந்த ஒரே ஒரு படம் மட்டும் வசூல் சாதனை புரிந்ததை இன்றளவும் ஊதிப் பெரிதாக்குபவர்கள், ஒரே வருடத்தில், இரண்டு ப்ளாக் பஸ்டர்களைத் தந்ததை (மனோகரா, தூக்குத்தூக்கி) ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்?

    "தெய்வம் பொறுக்குமா இவர்களின் திருக்கூத்தை?"

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 25th August 2011 at 01:34 PM.

  9. #1228
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Tyagam in Madurai Ram theatre

    Guys,

    Meetings you all from Madurai, hot news at Ram theatre NT's super duper hit Tyagam from today.

    Cheers,
    Sathsih

  10. #1229
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    தங்கள் அன்புக்கு என் பணிவான நன்றி!

    'தூக்கு தூக்கி' படத்தைப் பற்றியும், நடிகர் திலகத்தின் அபார நடிப்புத் திறமையையும் அற்புதமாக வர்ணித்துள்ளீர்கள். சூப்பர். உங்களுக்கு ஏற்பட்ட அதே ஆதங்கம் தான் எனக்கும் ஏற்பட்டது. தூக்கு தூக்கி ஓரளவு தான் வெற்றி பெற்றது என்ற மாயை உங்கள் கட்டுரையைப் படித்தால் உடைபட்டுப் போகும். அந்தப் படத்தின் வெற்றி பற்றிய விளம்பரங்களை அன்பு பம்மலார் அவர்கள் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

    அந்த அற்புதக் கலைஞனின் அபார வெற்றிகளை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மூடி மறைத்து ஆனந்தப் படக்கூடிய ஒரு கூட்டம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி செய்வதில் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் தான் என்ன என்று எவ்வளவோ யோசித்தும் எனக்குப் புரியவில்லை. தெரியவில்லை.சரி. விடுங்கள்.. போற்றுவார் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் சிங்கத் தமிழனின் வெற்றிகளை யாரும் மறைத்து விட முடியாது... மறுத்து விடவும் முடியாது.

    தூக்கு தூக்கி படத்திற்கு இன்னொரு சிறப்பு உண்டு. தமிழகத்தில் நாம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் போது இரவு தூங்காமல் கண் விழிப்பதற்காக எல்லா தியேட்டர்களிலும் நடுநிசிக் காட்சி என்ற ஒரு காட்சியை இரவு ஒரு மணிக்கு திரையிடுவார்கள். அந்த நடுநிசிக் காட்சிகளில் அதிகம் திரையிடப் பட்ட படம் அநேகமாக தூக்கு தூக்கியாகத்தான் இருக்கும்.அப்படி பலமுறை கடலூரில் நண்பர்களோடு தூக்கு தூக்கிக்கு சென்று, அளப்பரை செய்து, நடு இரவுகளில் ரசித்துப் பார்த்துவிட்டு அதிகாலைகளில் வீடு போய் சேர்ந்தது பசுமையாக நினைவில் நிற்கிறது. நன்றி!

    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்
    Last edited by vasudevan31355; 25th August 2011 at 02:59 PM.

  11. #1230
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    BLAST FROM THE PAST - RANDOR GUY - THE HINDU
    Thookku Thookki 1954

    Sivaji Ganesan, T. S. Balaiah, Lalitha, Padmini, Ragini, P. B. Rangachari, C. K. Saraswathi, M.S.S. Bhagyam and T. N. Sivathanu

    Great success Thookku Thookki

    Thookku Thookki was a popular folk tale and stage play. It was brought to the screen in 1935 by the famous Madurai-based Rayal Talkie Distributors with the movie pioneer R. Prakash directing it and handling the camera.

    Noted star of that era C.V.V. Panthulu played the title role with K. T. Rukmini in the female lead. K. N. Kamalam and ‘Clown' Sundaram formed part of the cast. R. M. Krishnaswami (RMK), a young, talented camera assistant, was working with Prakash. This film was embedded in his mind. He turned producer in the 1950s with his Aruna Films and made his directorial debut with Rajambal. He took up Thookku Thookki as his next production, which turned out to be the biggest success of his career.

    The tale was all about five maxims — 1. A father cares only for the riches earned by his son; 2. Only a mother stands by the son through thick and thin; 3. A sister values her brother only for the gifts he brings her; 4. A wife should never be relied on for she will even murder her husband; and 5. A friend in need is always a friend indeed. A prince (Sivaji Ganesan) listens to the maxims in a religious discourse and sets out to prove them wrong. He undergoes several adventures and finds more than a grain of truth in the maxims.

    Sivaji as the hero came up with a fine performance, while T.S. Balaiah in the role of a North Indian Seth was superb. The scenes featuring Balaiah speaking Sowcarpet Tamil with his mistress (Lalitha, the hero's wife) were great.

    What elevated this film to great success was its scintillating music composed by G. Ramanathan. The lyrics were by A. Marudhakasi, Thanjai Ramaiah Das and Udumalai Narayana Kavi.

    An interesting back story about the song composing… Udumalai Narayana Kavi based in Coimbatore reached Madras by the Blue Mountain Express on the morning of the day scheduled for the song composing and recording. He was to leave by the same train from Central Station around eight in the night. In less than 12 hours, Narayana Kavi wrote five of the eight songs, which were composed immediately by G. Ramanathan, rehearsed by T. M. Soundararajan and others. An amazing feat of creativity, it vouches for the musical genius of G. Ramanathan, the poetic talent of Narayana Kavi and the captivating singing of TMS.

    Many of the songs rendered by Soundararajan became popular and it was this film that laid the foundation for his glorious career. Female singers M. L. Vasanthakumari, M. S. Rajeswari, P. Leela and A. P. Komala also contributed to the richness of the music. Noted singer and actor V. N. Sundaram lent his voice to one of the songs along with TMS and others.


    Remembered for: the impressive performance of Sivaji Ganesan and the songs rendered by TMS.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •