பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும், தொலைபேசியிலும் அளித்த என் இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. பாலகிருஷ்ணன், திரு.பிரபு குமரேஷ், மற்றும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கான ரசிக இதயங்களின் நட்பை எனக்களித்த விண்ணிலிருந்து எனை வாழ்த்தும் கலை தெய்வம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த நேரத்தில் என்னுடைய சில உணர்வுகளை இத்திரியில் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
சிறு வயது முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த எனக்கு, வேலையில் சேர சென்னை வந்தபோது நடிகர்திலகத்தை நேரில் சந்திப்பேன் என்றுகூட நினைத்தது கிடையாது. ஆனால் கடவுள் சித்தம் - அவரிடமே வேலைக்கு சேரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய கட்சி அலுவலகப் பொறுப்பாளாராக பணியாற்றும்போதும், அவர் அரசியலைவிட்டு விலகிய பிறகு சிறிது காலம் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியபோதும், அந்த மகானுடன் பழகியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்.
பொக்கிஷப் பதிவுகளை அள்ளி வழங்கும் ரசிக மாமணிகள் உள்ள இத்திரியில் - என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வரும் மூன்றை இணைப்பாக இங்கு அளித்துள்ளேன்.
1 ) 1985 ஆம் ஆண்டு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அட்டையை திரு. தளபதி சண்முகம் அவர்களிடம் இருந்து பெற்றது.
http://4.bp.blogspot.com/-s-hX7Rq-Eg...ber1983-84.jpg
2 ) நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://2.bp.blogspot.com/-KAq83Scyby...ngCardofNT.jpg
3 ) 25 - 08 - 1988 அன்று நாளை எனக்கு பிறந்த நாள் என்று சொன்னபோது, தன்னுடைய புகைப்படத்தில் கையெழுத்திட்டு, வாழ்த்து தெரிவித்து, எனக்கு அளித்த புகைப்படம் இது.
http://2.bp.blogspot.com/-kXLn4eObpD...க்
நட்பு கலந்த நன்றியுடன்,




Bookmarks