-
10th September 2011, 09:04 PM
#1601
Senior Member
Veteran Hubber
டியர் முரளி சார்,
பாராட்டுக்கு நன்றி !
திறனாய்வுத் திலகமான தாங்கள் வழங்கிய "பாலும் பழமும்" மிக அருமை ! சுவைக்கு கேட்கவும் வேண்டுமோ !
தங்கள் பதிவின் முடிவில் தாங்கள் எழுதியிருக்கும் இரண்டு வரிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதனை அனைவரும் மீண்டும் ஒரு முறை அல்லது பல முறை ஆழ்ந்து வாசிப்பதற்காக தங்களின் அனுமதியோடு மீண்டும் பதிவிடுகிறேன்:
"தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை."
அன்புடன்,
பம்மலார்.
-
10th September 2011 09:04 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2011, 09:22 PM
#1602
Junior Member
Senior Hubber
After taking palum pazamum let us get ready to welcome our evergreen hero millianaire GOPAL at port of madras
-
10th September 2011, 10:22 PM
#1603
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
After taking palum pazamum let us get ready to welcome our evergreen hero millianaire GOPAL at port of madras
Sure Sir, it is our duty & honour. Here comes the welcome note with two eye-catching romantic stills:
-
10th September 2011, 10:26 PM
#1604
Senior Member
Veteran Hubber
திரைவானில் என்றென்றும் புதுப்பொலிவோடு பறந்து கொண்டிருக்கும்
புதுமைச் சித்தரின் "புதிய பறவை" நமது திரியில் சிறகுவிரிக்க வருகிறது...

-
11th September 2011, 12:15 AM
#1605
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
உயர்ந்த பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி !
Dear Mr.kumareshanprabhu,
I will mail you a set of NT Stills in a day or two.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி ! தங்களின் கூற்று 100% நியாயமானது.
அன்புடன்,
பம்மலார்.
-
11th September 2011, 03:11 AM
#1606
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா,
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! தங்களைப் போன்றவர்கள் வழங்கும் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. அடுத்தடுத்த ஆவணப்பதிவுகளை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்திற்கு வித்திடுகிறது. உரமிட்ட பயிராக உள்ளத்தில் உவகை பெருக்கெடுக்கிறது. மிச்சம் வைக்காமல் பாராட்டும் தங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு மீண்டும் எனது இதயபூர்வமான நன்றிகள் !
இனி தங்கள் மனதுக்கு மிகமிக நெருக்கமான 'பேசும் படம்' நவம்பர் 1961 இதழுக்கு வருகிறேன். பல 'பேசும் பட' இதழ்கள் போல இந்த இதழும் என்னிடம் பத்திரமாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன. [இரு சிறுதிருத்தங்கள் : "மருதநாட்டு வீரன்" ஸ்பெஷல் ஸ்டில்ஸ் என்பது "சித்தூர் ராணி பத்மினி" மற்றும் "குலமகள் ராதை" ஸ்பெஷல் ஸ்டில்ஸ் என்று இருக்க வேண்டும், 'கேள்வி-பதில்' பகுதியில் வந்துள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் 'வெட்டுங்கள்! வெட்டுங்கள்!!' பகுதியில் இடம்பெற்றுள்ளது]. மேலும், நடனத்தாரகை நடிகை பத்மினி பிரியதர்சினியின் சிங்கப்பூர் பயணக் கட்டுரையும் இந்த இதழுக்கு மெருகூட்டுகிறது. இந்த இதழில் உள்ள இனிய அம்சங்களை பரிமாறிக் கொள்ள வைத்த தங்களுக்கு எனது பசுமையான நன்றிகள் !
Old is Gold என்பது பழமொழி !
Old is much more than Gold என்பது புதுமொழி !
என்றும் அன்புடன்,
தங்களின் அன்புத்தம்பி,
பம்மலார்.
-
11th September 2011, 03:42 AM
#1607
Senior Member
Veteran Hubber
தேசியகவியாக தேசிய திலகம்

"சிந்துநதியின்மிசை நிலவினிலே"
காவியம் : கை கொடுத்த தெய்வம்(1964)
இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர்கள் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன், கானக்குயில் எல்.ஆர்.ஈஸ்வரி, பாடகர் ஜே.வி.ராகவுலு மற்றும் குழுவினர்
இன்று 11.9.2011 மகாகவி பாரதியாரின் 90வது நினைவு தினம்.
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Last edited by pammalar; 11th September 2011 at 08:56 AM.
pammalar
-
11th September 2011, 07:46 AM
#1608
Senior Member
Diamond Hubber
-
11th September 2011, 07:49 AM
#1609
Senior Member
Diamond Hubber
-
11th September 2011, 07:52 AM
#1610
Senior Member
Diamond Hubber
Bookmarks