-
24th October 2011, 07:56 AM
#621
Senior Member
Seasoned Hubber
Thillana Mohanammal
Friends,
Thillana Mohanammal is going to be shown at Russian International Film festivel refer the Dinamalar link http://www.dinamalar.com/Supplementa...id=7550&ncat=2. More than 40 years old movies which is gonig to be shown with new Indian movies which clearly prove that NT movie will be watched by fans for another 100 years.
It also proves that in front of quality of NT movies, time pass movies won't stand for long time.
Cheers,
Sathish
-
24th October 2011 07:56 AM
# ADS
Circuit advertisement
-
24th October 2011, 09:10 AM
#622
Senior Member
Diamond Hubber
வருகிறார் தமிழ்த் திரையுலகின் 'தேவர்'

அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 24th October 2011 at 09:17 AM.
-
24th October 2011, 09:20 AM
#623
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
பராசக்தி பண்டரிபாயின் பண்பான வார்த்தைகளில் பாராட்டுக்கள் எந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் மேல் அவர் மரியாதை வைத்திருந்தார் என்பதைப் பறை சாற்றுகின்றன. தங்களின் பதிவுகளில் தீராத ஐயங்கள் தீர்கின்றன. தெளியாத கருத்துக்கள் தெளிகின்றன.
பாராட்டுக்கள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th October 2011, 09:21 AM
#624
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மேலான பதிவுகளில் இடம் பெறும் ஸ்டில்கள் புதுமையானவையாகவும் இதுவரை காணாததாகவும் உள்ளன. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th October 2011, 09:27 AM
#625
Senior Member
Diamond Hubber
-
24th October 2011, 09:35 AM
#626
Senior Member
Seasoned Hubber
தேர்தல்களில் காங்கிரஸின் தொடர் வீழ்ச்சி
என்னடா இது இந்தத் திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என ஐயுறலாம். இயல்பே.
ஆனால் இருக்கிறது.
நாம் ஏற்கெனவே பல முறை கூறி வந்தது போல் ஏராளமான, எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள், அவருடைய கட்டளைக்குத் தலைவணங்கி தேசிய இயக்கமான காங்கிரஸைத் தங்கள் மார்பிலும் தோளிலும் குழந்தையைப் போல் தூக்கி வளர்த்தார்கள். மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நின்ற திராவிய இயக்கத்தின் மாயைத் தோற்றத்துக்கு ஈடு கொடுத்து நின்றது, சிவாஜி ரசிகர்கள் பங்கு பெற்ற காங்கிரஸ் இயக்கம் தான். நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் 67லேயே காங்கிரஸ் தற்போதைய கேவலமான நிலையை அடைந்திருக்கும். தான் உயிருடன் இருந்தவரை தேசியத்தைத் தமிழ்நாட்டில் நீர்த்துப் போகாமல் காத்தது நடிகர் திலகம் மட்டும் தான். அது காங்கிரஸானாலும் சரி, தன்னுடைய சொந்த இயக்கமானாலும் சரி, தன்னைச் சார்ந்த எந்த இயக்கமானாலும் சரி, தன்னுடைய தேசிய மனப்பான்மையினையும் கொள்கையினையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இது ஊரறிந்த உண்மை.
ஆனால் இன்று சில பத்திரிகைகள் காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தோல்விகளைப் பற்றி எழுதும் போது சௌகரியமாக மறைத்து விட்டு எழுதுகின்றன. நேற்று கூட ஒரு நாளிதழில் இந்த தோல்வியைப் பற்றி எழுதும் போது ஏதேதோ காரணங்களைத் தேடிப் பிடித்து கற்பனைக் கதையைப் போல் எழுதியுள்ளது.
நாம் பல முறை கூறி வந்தது போல்
சிவாஜி ரசிகர்களின் சாபம் இருக்கும் வரை தமிழ் நாட்டில் காங்கிரஸ் தேறாது. அப்படி காங்கிரஸ் தலை தூக்க வேண்டுமென்றால், அதற்கு சிவாஜி ரசிகர்கள் மனது வைத்தால் தான் முடியும்.
சிவாஜி ரசிகர்கள் மனது வைப்பார்களா. மாட்டார்கள்.
அதற்கும் மீறி அவர்களுடைய ஆதரவு காங்கிரஸ் விரும்பினால்
அதற்கு அவர்கள் விலை தரவேண்டியதிருக்கும். சும்மா வருவதில்லை சிவாஜி ரசிகனின் ஆதரவு, அதுவும் காங்கிரஸுக்கு..
அந்த விலை என்ன
காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...
இது குறைந்த பட்ச விலை...
இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது
சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th October 2011, 10:28 AM
#627
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பான வாழ்த்துக்கு மனம்நிறைந்த என் பணிவான நன்றிகள். தங்களைப் போன்ற ரசிக சிகரங்களின் வாழ்த்துக்களும், நம் அருமைத் தலைவரின் ஆசிகளும் உள்ளவரை எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...
இது குறைந்த பட்ச விலை...
இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது
சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..
சத்தியமான உண்மை. ஆனால் எவ்வளவு உரைத்தாலும்.காங்கிரஸ்காரர்களுக்கு செவிடன் காதில்.........தான். மேடை ஏறிப் பேசும்போது ஆறு போலப் பேச்சு. கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு... உண்மையான தலைவருக்கு துரோகம் நினைத்ததற்கு அவர்களாகவே இறங்கிக் கெஞ்சிக் கேட்டாலும் நாம் மனமிரங்கவே கூடாது என்பதுதான் சரியானதாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. படுத்திய பாட்டிற்கு பட்டே தீர வேண்டும். வினை விதைத்தவர்கள் பலனை அனுபவித்தே தீர வேண்டும். சிவாஜி அவர்கள் தான் காங்கிரஸ் காங்கிரஸ்தான் சிவாஜி என்பதை உளப்பூர்வமாக அறிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏதோ தங்களால்தான் காங்கிரசே தழைத்தோங்கி வளர்ந்தது வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற செய்நன்றி கொன்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும் வரையில் வெற்றி என்ற கனியின் சுவையை அவர்கள் ருசிக்கவோ,அனுபவிக்கவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 24th October 2011 at 10:58 AM.
-
24th October 2011, 11:00 AM
#628
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
"பராசக்தி" பற்றி திரு.ஏவிஎம் அவர்களின் அமுதசுரபி ஆவணம் உண்மைகளின் உரைகல்லாய் திகழ்கிறது.
'வம்ச விளக்கு' பொம்மை முதல் வெளியீட்டு விளம்பரம் அசத்துகிறது.
'சபாஷ் மீனா' பத்திரிகை விளம்பரங்கள் சபாஷ் போட வைக்கின்றன..
நடிகர் திலகம் குறித்து அவரது முதல் கதாநாயகி பண்டரிபாய் தினத்தந்தியில் அளித்துள்ள பேட்டி அருமை. '
சபாஷ்மீனா' கலர் ஸ்டில் சூப்பர்.
ஸ்டைலிஷ் ரஜினிகாந்தும்,தேவர் அய்யாவும் திவ்ய தரிசனம் தருகிறார்கள். கண்களில் ஒற்றிக்கொள்ளக் கூடிய அருமையான புகைப் படங்கள்.
"கோடீஸ்வரன்" தணிக்கையான தேதி : 11.11.1955, தணிக்கை சான்றிதழ் எண் : 14004
"கள்வனின் காதலி" தணிக்கையான தேதி அதே 11.11.1955 ஆனால் தணிக்கை சான்றிதழ் எண் : 14005
எனவே, தணிக்கை சான்றிதழ் எண்களின் அடிப்படையில் 24வது காவியம் "கோடீஸ்வரன்", 25வது காவியம் "கள்வனின் காதலி"
என்று ஆதாரபூர்வமாக நிருபித்து தனியொரு மனிதராக எல்லோருடைய சந்தேகங்களைத் தீர்த்துவைக்கும் செல்லமான எங்கள் ஆவணச் செல்வமே! வியப்பால் திக்கு முக்காடிப் போகிறது எங்கள் அனைவரது உள்ளங்களும். வாழ்த்துக்களும் நன்றிகளும்.
வியப்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 24th October 2011 at 11:19 AM.
-
24th October 2011, 11:46 AM
#629
Senior Member
Diamond Hubber
உலக சினிமா அரங்கின் ஒட்டுமொத்த கெளரவம் எங்கள் அன்பு நடிகர் திலகத்தின் 'கெளரவம்']

அன்புடன்,
வாசுதேவன்.
-
24th October 2011, 12:17 PM
#630
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தேர்தல்களில் காங்கிரஸின் தொடர் வீழ்ச்சி
என்னடா இது இந்தத் திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என ஐயுறலாம். இயல்பே.
ஆனால் இருக்கிறது.
நாம் ஏற்கெனவே பல முறை கூறி வந்தது போல் ஏராளமான, எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள், அவருடைய கட்டளைக்குத் தலைவணங்கி தேசிய இயக்கமான காங்கிரஸைத் தங்கள் மார்பிலும் தோளிலும் குழந்தையைப் போல் தூக்கி வளர்த்தார்கள். மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நின்ற திராவிய இயக்கத்தின் மாயைத் தோற்றத்துக்கு ஈடு கொடுத்து நின்றது, சிவாஜி ரசிகர்கள் பங்கு பெற்ற காங்கிரஸ் இயக்கம் தான். நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் 67லேயே காங்கிரஸ் தற்போதைய கேவலமான நிலையை அடைந்திருக்கும். தான் உயிருடன் இருந்தவரை தேசியத்தைத் தமிழ்நாட்டில் நீர்த்துப் போகாமல் காத்தது நடிகர் திலகம் மட்டும் தான். அது காங்கிரஸானாலும் சரி, தன்னுடைய சொந்த இயக்கமானாலும் சரி, தன்னைச் சார்ந்த எந்த இயக்கமானாலும் சரி, தன்னுடைய தேசிய மனப்பான்மையினையும் கொள்கையினையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இது ஊரறிந்த உண்மை.
ஆனால் இன்று சில பத்திரிகைகள் காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தோல்விகளைப் பற்றி எழுதும் போது சௌகரியமாக மறைத்து விட்டு எழுதுகின்றன. நேற்று கூட ஒரு நாளிதழில் இந்த தோல்வியைப் பற்றி எழுதும் போது ஏதேதோ காரணங்களைத் தேடிப் பிடித்து கற்பனைக் கதையைப் போல் எழுதியுள்ளது.
நாம் பல முறை கூறி வந்தது போல்
சிவாஜி ரசிகர்களின் சாபம் இருக்கும் வரை தமிழ் நாட்டில் காங்கிரஸ் தேறாது. அப்படி காங்கிரஸ் தலை தூக்க வேண்டுமென்றால், அதற்கு சிவாஜி ரசிகர்கள் மனது வைத்தால் தான் முடியும்.
சிவாஜி ரசிகர்கள் மனது வைப்பார்களா. மாட்டார்கள்.
அதற்கும் மீறி அவர்களுடைய ஆதரவு காங்கிரஸ் விரும்பினால்
அதற்கு அவர்கள் விலை தரவேண்டியதிருக்கும். சும்மா வருவதில்லை சிவாஜி ரசிகனின் ஆதரவு, அதுவும் காங்கிரஸுக்கு..
அந்த விலை என்ன
காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...
இது குறைந்த பட்ச விலை...
இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது
சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..
டியர் ராகவேந்தர் சார்,
தங்கள் கருத்து 100 க்கு 100 உண்மை, நடிகர்திலகம் இருந்தவரை அவர் புகழை, உழைப்பை, அவர்தம் தொண்டர்களை நன்றாக பயன்படுத்திய காங்கிரஸ் அவருக்கு அந்தகாலத்திலேயும் சரி, இப்போதும் சரி ஒரு உண்மையான அங்கீகாரத்தை தரவில்லை என்பது கசப்பான உண்மை.
Last edited by J.Radhakrishnan; 25th October 2011 at 11:31 AM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks