தேர்தல்களில் காங்கிரஸின் தொடர் வீழ்ச்சி

என்னடா இது இந்தத் திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என ஐயுறலாம். இயல்பே.

ஆனால் இருக்கிறது.

நாம் ஏற்கெனவே பல முறை கூறி வந்தது போல் ஏராளமான, எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள், அவருடைய கட்டளைக்குத் தலைவணங்கி தேசிய இயக்கமான காங்கிரஸைத் தங்கள் மார்பிலும் தோளிலும் குழந்தையைப் போல் தூக்கி வளர்த்தார்கள். மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நின்ற திராவிய இயக்கத்தின் மாயைத் தோற்றத்துக்கு ஈடு கொடுத்து நின்றது, சிவாஜி ரசிகர்கள் பங்கு பெற்ற காங்கிரஸ் இயக்கம் தான். நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் 67லேயே காங்கிரஸ் தற்போதைய கேவலமான நிலையை அடைந்திருக்கும். தான் உயிருடன் இருந்தவரை தேசியத்தைத் தமிழ்நாட்டில் நீர்த்துப் போகாமல் காத்தது நடிகர் திலகம் மட்டும் தான். அது காங்கிரஸானாலும் சரி, தன்னுடைய சொந்த இயக்கமானாலும் சரி, தன்னைச் சார்ந்த எந்த இயக்கமானாலும் சரி, தன்னுடைய தேசிய மனப்பான்மையினையும் கொள்கையினையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இது ஊரறிந்த உண்மை.

ஆனால் இன்று சில பத்திரிகைகள் காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தோல்விகளைப் பற்றி எழுதும் போது சௌகரியமாக மறைத்து விட்டு எழுதுகின்றன. நேற்று கூட ஒரு நாளிதழில் இந்த தோல்வியைப் பற்றி எழுதும் போது ஏதேதோ காரணங்களைத் தேடிப் பிடித்து கற்பனைக் கதையைப் போல் எழுதியுள்ளது.

நாம் பல முறை கூறி வந்தது போல்

சிவாஜி ரசிகர்களின் சாபம் இருக்கும் வரை தமிழ் நாட்டில் காங்கிரஸ் தேறாது. அப்படி காங்கிரஸ் தலை தூக்க வேண்டுமென்றால், அதற்கு சிவாஜி ரசிகர்கள் மனது வைத்தால் தான் முடியும்.

சிவாஜி ரசிகர்கள் மனது வைப்பார்களா. மாட்டார்கள்.

அதற்கும் மீறி அவர்களுடைய ஆதரவு காங்கிரஸ் விரும்பினால்

அதற்கு அவர்கள் விலை தரவேண்டியதிருக்கும். சும்மா வருவதில்லை சிவாஜி ரசிகனின் ஆதரவு, அதுவும் காங்கிரஸுக்கு..

அந்த விலை என்ன

காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...

இது குறைந்த பட்ச விலை...

இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது

சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..