திருச்செந்தூரில் தொடங்கும் விஜய் முருகதாஸ் படம்!
வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்துக்கு தலைப்பு தேர்வு செய்வதில் தற்போது பிஸியாக இருகிறார் முருகதாஸ். இந்தப்படத்தை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தனியொரு ஆளாக தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஹீரோயின் யார், வில்லன் யார் என்பதெல்லாம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமான முருகதாஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.
திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பையில் முடிவதுபோல திரைக்கதை அமைத்து இருக்கின்றாராம் முருகதாஸ். அதேநேரம் படத்தின் பெரும்பகுதி மும்பையில் நடைபெற இருக்கிறது என்கிறார்கள்.
இந்தப் படத்தில் நாயகன் கமல் போல நல்ல தாதாவாக விஜய் நடிக்க இருகிறார் என்ற சூடான தகவலைத் தருகிறார்கள் இயக்குனர் வட்டாரத்தில் இருந்து. கதைப்படி இரண்டு ஹீரோயின்கள் தேவை.
படத்தை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட இருபதால் ப்ரியங்கா சோப்ரா மற்றும் 180 படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் ஆகிய இரண்டு பேர் இப்போதைக்கு பரிசீலனையில் இருபதாகச் சொல்கிறார்கள். இம்மாத இறுதியில் முழுவிவரமும் அதிகார பூர்வமாக அறிவிக்க இருகிறாராம் எஸ்.ஏ.சி!
http://www.4tamilmedia.com/cinema/ci...11-14-06-45-19
Nayagan maathiri kadha nallathaan irukkum, but still it is old wine...
hope ARM will not make any mistakes as he done previously... will expect a good entertainer...
ARM ungale naange mala pole nambirukkom, emmathiraathinge plsssssssssss
Bookmarks