-
27th November 2011, 03:21 AM
#1241
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
காவிய விமர்சனம் : தென்னகம் : 1969

பக்தியுடன்,
பம்மலார்.
-
27th November 2011 03:21 AM
# ADS
Circuit advertisement
-
27th November 2011, 04:28 AM
#1242
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
SARADA madam's review about SIVANDHA MANN is 100 percent correct and true. sridhar wanted to give this movie TECHINALLY A CLASS APART From OTHER movies and he HAS ACHIEVED IT also. regarding fixing mekala theatre in purasawalkam, the theatre management wanted to screen this movie very much in their theatre and requested chitralaya specically and true it was first NT movie accepted by the theares and hence the banner NAMNADU was not accepted -screened in saravan theatres. my vague rememberence.
Dear Ramajayam Sir,
You are cent percent right ! Makkal Thilagam's NAM NAADU got released at 'Saravana' theatre in Purasawaalkam Area. Here is the historical evidence for it from the November 1969 issue of "Pesum Padam':

SIVANDHA MANN ran for a total of 468 days, celebrating 100 days in all the four theatres [New Globe(145), Agasthya(117), Mekala(103), Noorjehan(103)] it got released at Chennai.
On the other hand, NAM NAADU ran for a total 392 days, celebrating 100 days in 3 out of the 4 theatres [Chitra(105), Sri Krishna(105), Saravana(105), Srinivasa(77)] it got released at Chennai.
What a graceful competition between the two contemporaries !
Nadigar Thilagam & Makkal Thilagam : Distributor's Delight !
Warm Wishes & Regards,
Pammalar.
-
27th November 2011, 04:44 AM
#1243
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Jeev
Dear Pammalar,
பாகப்பிரிவினை இலங்கையில் ஓடிய விபரம் தரமுடியுமா?
நன்றி
Jeev
டியர் ஜீவ் சார்,
கலைக்குரிசிலின் "பாகப்பிரிவினை", இலங்கையில் உள்ள கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 27th November 2011 at 04:48 AM.
pammalar
-
27th November 2011, 05:03 AM
#1244
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
அண்ணன் ஒரு கோயில்
[10.11.1977 - 10.11.2011] : 35வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
சிறப்புப் புகைப்படம்

தொடரும்....
பக்தியுடன்,
பம்மலார்.
-
27th November 2011, 06:18 AM
#1245
Junior Member
Junior Hubber
Kingsley Theatre - Colombo
Dear Pammalar,
Thanks for the information.
கொழும்பு KINGSLEY திரையில் 100 நாட்களுக்கு ஓடிய இன்னொரு சிவாஜி படம் ஜெனரல் சக்கரவர்த்தி (104). GC யாழ்ப்பாணம் ராஜாவில் 115 நாட்கள் ஓடியது.
Jeev
-
27th November 2011, 08:24 AM
#1246
Senior Member
Diamond Hubber
'பாதுகாப்பு' 42-ஆவது குதூகல ஆண்டுத் துவக்கம்.
'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970

இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
எங்கள் ஊரான கடலூரில்தான் 'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதுதான் அந்த விசேஷம். இப்போது சொல்லுங்கள்.. இந்தப்படம் எனக்கு, ஏன் கடலூரையும், அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நெருக்கமான படம்தானே!
கடலூர் ஓல்ட் டவுன் அதாவது CUDDALORE O.T என்று குறிப்பிடுவார்கள். (கடலூர் துறைமுகம் என்றும் கூறுவார்கள்) கடல், ஆறுகள் சூழ்ந்த பகுதிகள் அதிகம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடம். மீன்பிடித் தொழிலை நம்பித்தான் இன்றளவும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. உப்பனாறு, கடிலம்,பெண்ணையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலுடன் சங்கமிக்கும் காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆற்றுப் பகுதிகளில்தான் பாதுகாப்பு ஷூட்டிங் நடைபெற்றது.
கடலூர் துறைமுக உப்பனாற்றுப் பகுதி.

'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான சீன்கள் படகில் நடப்பது போல் வருவதினால் படப்பிடிப்பு கடலூர் துறைமுகம் பகுதிகளில் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
1970-ன் ஆரம்பத்தில் ஷூட்டிங் நடந்ததாக நினைவு. என் தாயார் தினமும் ஷூட்டிங் பார்க்க என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். என் தாயார் நடிகர் திலகத்தின் தீவிர பக்தை. எனவே சந்தோஷத்திற்குக் கேட்கணுமா?...
அப்போதெல்லாம் ஷூட்டிங் பார்ப்பது என்றால் சொர்க்கத்தையே நேரில் காண்பது போல...கடல் அலைகளை விட மக்கள் தலைகள் அதிகம். அதுவும் 'நடிப்புலகச் சக்கரவர்த்தி' ஷூட்டிங் என்றால்?... சொல்லணுமா..நடிகர் திலகத்தை காணும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.
தெய்வத்தை தரிசிப்பது போல நடிகர்திலகத்தைப் பார்த்து மயங்கியது கூட்டம். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக படப்பிடிப்பில் கலந்து கொண்டது என் பிஞ்சு நெஞ்சில் ஆழமான ஆணிவேராக வேரூன்றிப் பதிந்துவிட்டது. அவர்மேல் பாசமான வெறி வர என்னுள் முதல் தளம் அமைத்துக் கொடுத்தது 'பாதுகாப்பு' பட ஷூட்டிங் தான்.
நடிகர் திலகம் படகோட்டுபவராக ( படகை விட சற்றுப் பெரிதான தோணி) நடித்ததால் பெரும்பாலும் படகுகளில் ஷூட்டிங் இருக்கும். உப்பனாற்றில்தான் நிறைய ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் சமயங்களைத் தவிர பிற சமயங்களில் கைலியையே கட்டிக் கொண்டு கொஞ்சமும் பந்தா இல்லாமல் படகில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நடிகர் திலகம். தனியாக அவருக்கென்று ஒரு படகு. ஒரு படகோட்டி...(வண்ண ஓடக்காரன் அல்ல. கார்த்திக் சாருக்கு நன்றி!)...சாதாரண ஒரு படகோட்டி. (கொடுத்து வைத்த படகோட்டி.) படகில் சரியான வசதிகள் கூடக் கிடையாது. தன்னுடைய ஷூட்டிங் நடைபெறாத சமயங்களில் நடிகர் திலகம் படகிலேயே கண்ணயர்ந்து உறங்கி ஓய்வெடுக்க, படகு ஆற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். ரசிகர்களின் அன்புத் தொல்லையை சமாளிக்க இப்படி ஒரு வழியை படகோட்டிதான் கூறினாராம். இருகரை மருகிலும் ஜனத்திரள் நடிகர் திலகத்தின் முகத்தை அருகில் பார்த்துவிடத் துடிக்கும். நடிகர் திலகமும் அவ்வப்போது படகோட்டியிடம் கரை ஓரமாக படகை ஓட்டச் சொல்லி கரை ஓரமாகவே படகில் நின்று (படகு மெதுவாக ஓடியபடியே இருக்கும்) அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கையை அன்புடன் அவருடய ஸ்டைலில் அசைத்து சைகை செய்தபடியே வலம் வருவார்.
நடிகர் திலகம் படப்பிடிப்பில் ஒட்டுவதாக வரும் CU 221 எண் தோணி.

CU 221 எண் தோணியை செலுத்துகிறார் நடிகர் திலகம்.

தோணியின் பாய்மரத்தை ஏற்றுகின்றார் நடிகர் திலகம்.(உடன் மேஜர் மற்றும் நம்பியார்)

உடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நம்பியார் அவர்கள்,மேஜர் சுந்தரராஜன் அவர்கள், இயக்குனர் பீம்சிங் அவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்கள். மேஜர் அவர்களின் கையில் எப்போதும் நீள் சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருக்கும்.
மீனவர்கள் அன்புடன் தரும் மீன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் நடிகர் திலகம். இறால் என்றால்அவருக்கு மிகவும் உயிர் என்பதால் மீனவர் தலைவர் திரு குப்புராஜ் அவர்கள் இறாலை பதமாக வறுத்து ஒரு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்துவிடுவாராம். நடிகர் திலகம் அதை ருசித்து சுவைத்து சாபிடுவாராம். (பின்னாட்களில் 'பாதுகாப்பு' எண்ண அலைகளில் மூழ்கும் போது திரு.குப்புராஜ் அவர்கள் பாதுகாப்பு பற்றிய பழைய நினைவுகள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்).
'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்ற அற்புதமான பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூண்டியாங்குப்பம் என்ற இயற்கை சூழல் நிறைந்த ஊரில் நடந்தது. ஒரு கைலி, மற்றும் ஒரு வெள்ளை பனியனுடன் நடிகர் திலகம் ஷாட்டுக்கு ரெடி. தன்னுடைய தோணியில் இருந்தவாறே அருகில் ஒரு சிறு படகில் புது திருமணத் தம்பதிகள் வரும்போது அவர்களைப் பார்த்து ஜெயலலிதாவை நினைத்து கனவு காணுவதாக சீன். அந்த புதுமணத் தம்பதிகளாக தன்னையும் ஜெயலலிதா அவர்களையும் கற்பனை செய்து அதே படகில் வருவதாக அந்தக் கனவுக் காட்சி. (அந்தக் குறிப்பிட்ட சீனைக் கூட நிழற்படமாகப் பதிவிட்டுள்ளேன்). இந்தக் காட்சியை ஆற்றின் அக்கரையில் எடுக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
புதுமணத் தம்பதிகளாக நடித்த எக்ஸ்ட்ரா நடிகர்கள்.

கனவுக் காட்சியில் நடிகர்திலகமும், ஜெயலலிதாவும்.

இக்கரையில் படகில் நடிகர் திலகமும்,ஜெயலிதாவும் ஏறி அமர படகு அக்கரைக்கு செல்ல ஆரம்பித்தது. இக்கரையில் இருந்த மக்கள் ஷூட்டிங் இங்குதான் நடக்கும் என்று மனக்கோட்டை கட்டியிருக்க, திடீரென்று படகு அக்கரை செல்ல, ஏமாற்றமடைந்த இளைஞர் பலர் (நீச்சல் தெரிந்தவர் நீச்சல் தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..) 'சொடேல் சொடேல்' என ஆற்றில் குதித்து அக்கரைக்கு நீந்த ஆரம்பிக்க ஒரே ஆனந்தக் களேபரம் தான்.
என்னுடைய தந்தை ஊர்க்காவல் படையில் இருந்ததனால் எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஊர்க்காவலர் படை யூனிபார்ம் அப்படியே போலீஸ் உடை போலவே இருக்கும் . போலீசுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களுக்கும் உண்டு. அந்த வசதியால் என் தந்தையுடன் வெகு ஈஸியாக நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகின் அருகில் சென்று நின்று கொள்ள முடிந்தது. நான் சிறுவனானதால் சடாலென எதிர்பாராத விதமாக என்னையும் நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகில் தூக்கி ஏற்றிவிட்டு, தானும் அப்படகில் ஏறிக்கொண்டார் என் தந்தை. (போலீஸ் பந்தோபஸ்து என்ற சாக்கில்.) படகில் படப்பிடிப்புக் குழுவினர் சிலரும், ஜெயலலிதா அவர்களும், சில காவல்துறையினர் மட்டும் இருக்க நடிகர் திலகத்தின் அருகில் நான். முதன் முதலாக நடிகர் திலகத்தை மிக அருகில் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் கைலியோடு படு காஷுவலாக அமர்ந்திருந்தார் நடிகர் திலகம். அவ்வளவாக அறியாத சிறு வயது எனக்கு. பின்னாளில் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறார் என்பது அறியாமல் அவரை விழுங்கி விடுவது போலப் பேந்தப் பேந்தப் பார்க்கிறேன் நான். நடிகர் திலகமும் என்னை உற்று நோக்கி ஒரு சிறு புன்னகை புரிகிறார்.(என்ன ஒரு கொடுப்பினை). என் தந்தை வாழ்நாட்களில் எனக்குச் செய்த பேருதவி இதுதான் என்று சொல்லுவேன்.( பின்னர் பல நாட்களில் வாரம் ஒருமுறை என 'அன்னை இல்லம்' சென்று அவரை தரிசித்து 'ஷொட்டும்' வாங்கியிருக்கிறேன். திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.(அவரிடம் திட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!) நினைத்தாலே கண்ணீர்ப் பிரவாகமெடுக்கிறது.
ஷூட்டிங் நடைபெற்ற பூண்டியாங்குப்பம் ஆற்றுப் பகுதி

அக்கரையில் சில காட்சிகள் எடுத்து முடிக்க அன்று மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. ஒரு மணிக்கெல்லாம் ஜெயலலிதா அவர்களின் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்தவுடன் அவர் தனியாக ஒரு படகில் இக்கரை வந்து சேர்ந்து மதியம் லஞ்ச்சுக்காக காரில் பாண்டிச்சேரி புறப்பட்டுப் போய் விட்டார். நடிகர் திலகம் நடித்த காட்சிகள் முடிந்து அவர் தனியாக ஒரு படகில் இக்கரை திரும்புகையில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. அக்கரையில் இருந்து இக்கரை வந்து சேர ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகும். காற்று அச்சமயம் பலமாக வீச, நடிகர் திலகம் வந்த சிறு படகின் பாய்மரம் கிழிந்து விட்டது. படகோட்டி சாதுரியமாக படகை ஓட்டி வந்தார். கிழிந்து போன அந்த பாய்மரம் செப்பனிட தேவையான செலவுக்கான தொகையை நடிகர் திலகமே படகோட்டியிடம் கொடுத்து உதவியது பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.
படகில் நின்று ஷூட்டிங் பார்க்க வந்த மக்களைப் பார்த்தவாறே நடிகர் திலகம் தன் வயிற்றைத் தடவி 'பசி' என்று சைகையால் அப்பாவித்தனமாகக் காண்பிக்க ,ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த கலர் சோடாவுடன் ஆற்றுக்குள் குதித்து நீந்திச் சென்று நடிகர் திலகத்திடம் கொடுக்க அவரும் அதை தேவாமிர்தம் போல வாங்கிக் குடிக்க, அந்த ரசிகரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைக் காண வேண்டுமே! ..... செம ஜாலியாய் இருந்தது.
நடிகர் திலகம் தனது ஆத்ம நண்பரான காங்கிரஸ் முன்னாள் கடலூர் எம்.பி. திரு.முத்துக் குமரன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஷூட்டிங் நடந்த பூண்டியாங்குப்பம் என்ற கிராமம் சற்றேறக்குறைய கடலூரிலிருந்து இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். ஷூட்டிங் முடித்து மாலையில் திரும்பும் போது ரோடின் ஓரத்தில் ஒரு ஆயா மசால் வடை சுட்டுக் கொண்டு வியாபாரம் செய்தார்களாம். காரில் வரும்போது அந்த மசால் வடை வாசத்தில் மயங்கி காரை நிறுத்தச் சொல்லி காரில் அமர்ந்தபடியே மசால் வடையை வாங்கி வரச் சொல்லுவாராம் நடிகர் திலகம். வங்கியில் பணி புரிந்து ஒய்வு பெற்ற நடிகர் திலகத்தின் அன்புக்குப் பாத்திரமான கடலூர் 'பேங்க் மோகன்' என்ற இனிய நண்பர்தான் வடையை வாங்கி வந்து கொடுப்பாராம். நடிகர் திலகமும் காரிலேயே தினமும் வடையை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே வருவாராம். ('பேங்க்' மோகன் அடிக்கடி இன்று பார்த்தாலும் கூட "நான் நடிகர் திலகத்திற்கு மசால் வடை வாங்கிக் கொடுத்தவனாக்கும்"...என்று பெருமையுடன் ஜம்பம் அடித்துக் கொண்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்).
ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர்திலகமே காரை விட்டு இறங்கி நேராகவே அந்த ஆயாவிடம் சென்று மசால் வடை கட்டி கொடுக்கச் சொன்னாராம். அந்த ஆயாவும் சரியாகக் கண் தெரியாததால் தன்னிடம் வடை வாங்குவது உலகப் புகழ் பெற்ற நடிகர் என்று தெரியாமல் வடையைக் கட்டிக் கொடுத்தார்களாம். பின் நடிகர் திலகம் அந்தப் பாட்டியிடம் "பாட்டி! என்ன யாருன்னு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க, பாட்டி "சரியாகத் தெரியலயேயப்பா" என்று கூற, அதற்கு நம் நடிகர் திலகம் நம் கார்த்திக் அவர்கள் கூறுவது போல குறும்பாக,"பாட்டி என்ன நல்லாப் பாரு! என்ன நல்லாப் பாரு!" என்று திருவிளையாடல் பாணியிலேயே சொல்ல பாட்டி சற்று யோசித்துவிட்டு உடனே புரிந்து கொண்டு, "தம்பி! நீ சிவாசிகணேசன் தானே! என்று கூறி நடிகர் திலகத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களாம். பின் மசால் வடைருசியைப் பற்றி அந்தப் பாட்டியிடம் பாராட்டிவிட்டு மீதம் இருந்த அத்தனை மசால்வடைகளையும் பார்சல் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பாட்டிக்கு ஒரு கணிசமான தொகையைத் தந்து மனமகிழ்ந்தாராம் நடிகர் திலகம்.
அதனால் தான் 'பாதுகாப்பு' படம் எங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாயிற்று. இன்னும் சொல்லப் போனால் கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும் அப்படத்தின் ஷூட்டிங்கால் தலைவரின் கோட்டையாயின என்று கூடச் சொல்லலாம். குறிப்பாக ஷூட்டிங் பார்க்க வந்த கிராமங்களின் மக்கள் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசி மகிழ்ந்தனர்.
குறிப்பாக ராமாபுரம் என்ற ஒரு கிராமமே தலைவர் புகழ் பாடும் கிராமமாயிற்று. அந்த கிராமத்தில் தான் என் தந்தையார் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தார்). ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடிகர் திலகம் தான் வேட்டை ஆடி பாடம் செய்த புலியுடன் நின்று ஸ்லிம்மாக காட்சி தரும் அந்த அற்புத புகைப்படம் கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும் இன்றளவிலும் கூட.
இன்று 'பாதுகாப்பு' வெளியாகி 41 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இப்போதுதான் அப்படத்தின் ஷூட்டிங் பார்த்தது போல அவ்வளவு பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நடிகர் திலகத்தின் தீவிர பக்தனாக என்னைப் பெருமையுடன் உலா வர வைத்த பாதுகாப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. 'பாதுகாப்பு' என்னைப் பொறுத்தவரயில் மிகச் சிறந்தபடம் என்றுதான் கூறுவேன். மிகவும் வித்தியாசமான முறையில் சிறந்த கதைக் கருவோடு எடுக்கப் பட்ட அற்புதமான இந்தப் படம் வழக்கம் போல வெகுஜன ரசனைக் குறைவால் சராசரிக்கும் கீழே தள்ளப் பட்டது வேதனைக்குரியது. மேலும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெறாமல் போனாலும், ஒரு சராசரி அளவிற்குக் கூட வெற்றி அடையவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும் எப்போதும் எங்கள் ஊர் மக்களின் அடிமனதில் இருந்து வலித்துக் கொண்டே தான் இருக்கும்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th November 2011 at 11:20 AM.
-
27th November 2011, 08:56 AM
#1247
Senior Member
Diamond Hubber
-
27th November 2011, 01:49 PM
#1248
வாசுதேவன் சார்,
இதுவரை பல பல அற்புத பதிவுகளை தந்திருக்கிறீர்கள். ஆனால் பாதுகாப்பு படப்பிடிப்பு 41 வருடங்களுக்கு முன்பு நடைப்பெற்றதை ஏதோ இப்போது நடைப்பெற்றுக்கொண்டிருப்பது போல் இன்னும் சொல்லப்போனால் ஒரு நேரலை ஒளிப்பரப்பு போல் தாங்கள் எழுதியிருக்கும் விதம் அருமை. இந்த பதிவு தங்கள் பதிவுகளிலே மிக சிறப்பான பதிவாக இடம் பெறுகிறது. இது போன்ற இன்னும் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்
-
27th November 2011, 02:51 PM
#1249
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார்,
பாதுகாப்பு வெளியீட்டு தினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள 'பாதுகாப்பு' திரைப்படத்தின் ஷூட்டிங் பற்றிய நினைவலைகள் மிக மிக அருமை. நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில், நாங்களே அங்கு நேரில் இருந்து கண்முன்னே கண்டு களித்தது போல இருந்தது.
முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு அருமையான கடற்கரை மற்றும் உப்பங்கழிகளின் காட்சிகள் நமது தமிழ்நாட்டில், அதுவும் கடலூருக்கருகில் படமாக்கப்பட்டிருக்கும்போது, படம் பார்த்தபோது அவை பெரும்பாலும் கேரளத்தில் எடுக்கப்பட்டவையோ என்று நினைத்து விட்டேன். தவறு என்மீது அல்ல. பலமுறை காணக்கிடைக்காததால் வந்த குளறுபடி. (கடலூர் ஓ.டி.யின் சரியான பெயர் 'திருப்பாதிரிப்புலியூர்' என்று நினைக்கிறேன். சரியா?. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதையாக மாற்றப்பட வெகு நாட்கள் எடுத்துக்கொண்டதால், சில ஆண்டுகள் இப்பாதையில் தொடர் வண்டி ஓட்டமில்லாமல் இப்போதுதான் ஓடத்துவங்கியுள்ளது).
படம் ரொம்ப பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. பல ஆண்டுகளுக்குப்பின் இயக்குனர் பீம்சிங்கும் நடிகர்திலகமும் இணைந்து உருவாக்கும் படம் என்பதும், ஏராளமான நட்சத்திரக்கூட்டம் நிறைந்திருந்ததும் அதற்குக்காரணமாக இருந்திருக்கலாம். நடிகர்திலகம், ஜெயலலிதா, மேஜர், நம்பியார், நாகேஷ், சந்திரபாபு, பாலையா, ஏ.கருணாநிதி, காந்திமதி உள்பட இன்னும் ஏராளமான பேர். ரொம்பவே எதிர்பார்த்து ஏமாற வைத்தது 'பீம்சிங் - நடிகர்திலகம்' என்ற கூட்டணிதான். இவ்விருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் என்றதும் ரசிகர்களின் மனம் அறுபதுகளின் துவக்கத்தில் வந்த படங்களை எண்ணி சஞ்சரிக்கத்துவங்கி விட்டது. ஆனால் கதையோ வேறு.
முழுக்க முழுக்க ஜெயலலிதா படமாகிப்போய், நடிகர்திலகத்தின் ரோல் ஒரு கெஸ்ட் ரோல் போல ஆகிப்போனது. படகில் ஏற வந்த ஜெயலலிதாவிடம் 'ஏம்மா, காப்பாத்துங்க... காப்பாத்துங்கன்னு ஓடி வந்தியே அப்படி என்னம்மா கஷ்ட்டம் உனக்கு?' என்று கேட்கும் மேஜர், நம்பியார் ஆகியோரிடம் ஆளுக்கொரு கதை சொல்வது போல, நடிகர்திலகத்திடமும் ஒரு கதை சொல்கிறார். அவ்வளவுதான். ஒவ்வொரு கதையிலும் ஒரு கற்பழிப்புக்காட்சி, தவிர ஒரு கதையில் கொலையும் கூட நடக்கிறது. பீம்சிங்கின் தரத்துக்கேற்ற கதையாக அமையவில்லை. கடைசியில் கோர்ட்டில் நிஜக்கதையை சொல்லும்போது அதிலும் ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை. நமக்கே ஆத்திரம் ஏற்படுகிறது. இதற்கிடையே நடிகர்திலகம் ஜெயலலிதா காதல் கனவு காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக தெரிந்தன.
நம்பியார்தான் நிஜமான வில்லனோ என்று நினைத்தால், அவரையும் டம்மியாக்கி விட்டு, மேஜர சுந்தர்ராஜன்தான் பிரதான வில்லன் என்று காட்டினர். கதை ரொம்பச்சின்னது. தன் அக்காவைக் கற்பழித்து அவள் சாவுக்குக் காரணமாக இருந்த மேஜரை ஜெயலலிதா பழிவாங்கும் கதை. அவ்வளவுதான்.
பாதுகாப்பு படத்தில் மனதில் நிலைத்து நின்றது அதன் சூப்பரான ஒளிப்பதிவுதான். கடற்கரைப்பகுதி வெளிப்புறக் காட்சிகளின் அழகோடு. படகு வீட்டின் உள்ளேயும் அருமையாக கேமராவை விளையாட விட்டிருந்தனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் படகுக்குள் இறங்கும்போது நாமும் இறங்குகிறோம். படகில் இருக்கும் அப்பா மேஜரும், மகன்கள் நம்பியார் மற்றும் நடிகர்திலகமும் தங்களுக்குள் முறைவைத்து சமையல் அறையில் சமையல் செய்யும் காட்சிகள் அருமை. நடிகர்திலகம் சோறு வடிப்பதும், அவர் போனபின் நம்பியார் வந்து அம்மியில் மசாலா அரைத்து மீன் பொறிப்பதும் சுவாரஸ்யமாக இருந்தன. அப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக சமைக்க வரும்போதுதான் ஆளுக்கொரு பொய்க்கதையை அவிழ்த்து விடுவார் ஜெயலலிதா.
ஏற்கெனவே 28 நாட்களுக்கு முன் எங்கிருந்தோ வந்தாள் (3 தியேட்டர்), சொர்க்கம் (4 தியேட்டர்) படங்கள் வந்து சென்னையில் ஏழு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தபோது 'பாதுகாப்பு' படமும் நான்கு தியேட்டர்களில் (வெலிங்டன், ஸ்ரீ கிருஷ்ணா, மகாலட்சுமி, கிருஷ்ணவேணி) ரிலீஸானது. நான் ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் பார்த்தேன். நடிகர்திலகம் எப்பவாவது மட்டுமே வந்து போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இரண்டாவது கதையில் வரும் சந்திரபாபுவின் 'தூக்குத்தூக்கி' நாடகம் ரொம்ப நீளமாக அமைந்து ரசிகர்களை சோதித்தது. பொங்கலன்று 'இரு துருவம்' வருவதற்குள்ளாகவே பல தியேட்டர்களில் இப்படம் எடுக்கப்பட்டு விட்டது.
பிற்பாடு இப்படம் மறு வெளியீடுகளுக்கு அவ்வளவாக வரவில்லையென்று நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கும் முன் ஜெயா டிவியில் இப்படம் ஒளிபரப்பியபோது ஆவலுடன் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் பிரிண்ட் அறுதப்பழசு. ஏகப்பட்ட வெட்டுக்கள். போதாக்குறைக்கு கலர் ரொம்பவே வெளுத்துப்போய் ஒரே சிவப்பாக கேவா கலர்ப்படம் போல தோற்றமளித்தது. அதனால் பார்க்க மனமின்றி சேனலை மாற்றினேன். (ஒரிஜினலாக படம் அருமையான ஈஸ்ட்மென் கலர். இப்படத்தின் சிறப்பம்சமே ஒளிப்பதிவுதான்).
மெல்லிசை மன்னரும் தன் பங்குக்கு ஏமாற்றினார். 'முத்து மணி நாகம்மா', 'நம்பள்-கி-பியாரீ மஜா பண்ணலாமா', 'ஒருநாள் நினைத்த காரியம் நடக்கும்' போன்ற பாடல்கள் மட்டுமே நினைவில் உள்ளன. ஆனால் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.
தீபாவளி வெளியீடுகள் இரண்டும் பந்தயக்குதிரைகள் போல ஓடிக்கொண்டிருக்க, அவற்றுக்குப்பின் வெளியாகி அவற்றுக்கு முன் சுருண்டுகொண்டு விட்டது பாதுகாப்பு. கதையும் ஒரு நல்ல கதையாக இருந்து, நடிகர்திலகத்தின் பாத்திரமும் சற்று ஸ்ட்ராங்கானதாக அமைந்திருந்தால், பட்ட பாட்டுக்கு பலன் கிடைத்திருக்கும்.
இருப்பினும் நீங்கள் அளித்துள்ள ஷூட்டிங் விவரங்களைப்படிக்கும்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் இளமைக்கால நினைவலைகளில் நாங்களும் மூழ்கினோம். நாம் நேரில் ஷூட்டிங் பார்த்த படம் சரியாக ஓடவில்லையே என்று உங்கள் மனம் வருத்தப்பட்டபோதும், படம் பார்த்தபின் படத்தின் ரிஸல்ட்டில் சமாதானமாகியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் சுவாரஸ்யக்கட்டுரையின் இடையிடையே இணைத்திருந்த நிழற்ப்படங்கள் அருமை. அதுபோலவே படத்தின் ஸ்டில்களும் நன்றாக உள்ளன. சுவையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
-
27th November 2011, 03:27 PM
#1250
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
நான் கடலூரில் பிறக்க வில்லையே என்ற ஏக்கத்தை உண்டாக்கி விட்டது உங்கள் பதிவு. அதிலும் என் அபிமான படமான பாதுகாப்பு தங்கள் உள்ளத்திலும் அதே அளவு இடம் பெற்றது பெரு மகிழ்வு. நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பு கதைக்குத் தேவையான அளவு அமைக்கப் பட்டது. பீம்சிங் அவர்கள் நடிகர் திலகத்திடம் மூலக்கதையைப் பற்றிக் கூறிவிட்டு அதில் சில மாற்றங்கள் செய்து நடிகர் திலகத்தின் பாத்திரம் படம் முழுவதும் வரும்படி திரைக்கதை அமைக்கப் போவதாகக் கூறினாராம். ஆனால் நடிகர் திலகமோ, கதையில் எந்த மாற்றம் செய்தாலும் அதன் ஒரிஜினாலிட்டி பாதிக்கும். எதையும் மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம். அப்படியும் ரசிகர்களுக்காக ஒரு நாள் பாடல் உருவாக்கப் பட்டது. நான் முன்பொரு முறை கூறியது போல் நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதல் பாகம் கலை, இரண்டாம் பாகம் தலை, மூன்றாம் பாகம் விலை .. (வாழ்நாள் முழுதும் கலைக்காகவே வாழ்ந்தார் என்பது மறுக்க முடியாது உண்மை). இரண்டாம் பாகம் தலை என்பது ரசிகர்களுக்காக, மூன்றாம் பாகம் விலை என்பது அவருடைய வாழ்க்கைக்காக.. என்று ஒரு வகையில் அனுமானிக்கலாம். இந்த மூன்றாம் பாகத்தில் தான் அவர் தனக்காகவும் தன் குடும்பத்துக்காவும் கவனம் செலுத்தத் துவங்கினார் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
அப்படி அந்த இரண்டாம் கட்டத்தில் வெளிவந்த படங்கள் தான் இன்றளவும் அவருடைய மாபெரும் சேனை உருவாகக் காரணமாயிருந்தன. அப்படிப் பட்ட பட வரிசையில் இடம் பெறும் நோக்கத்தில் தான் அந்த பாடல் காட்சி புனையப் பட்டது. மிக ஸ்டைலாக அந்தப் பாடலில் வருவார் நடிகர் திலகம். சந்திரபாபுவுக்கும் பாடல் உண்டு. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அதிகமாக ஹிட்டாகாவிட்டாலும் ஒரு நாள் பாடல் அழியாப் புகழ் பெற்றது. அதே போல் வரச் சொல்லடி பாடலும் மிகப் பிரபலமானது.
இருந்தாலும் சீர்காழியின் குரலில் ஒலித்த ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம் பிள்ளை பாடல் மிக மிகச் சிறந்த பாடலாகும். பாடலைக் கேட்கும் போது அந்த நதியோர சூழ்நிலையைக் கண்முன்னே கொண்டு வந்து விடும். குறிப்பாக ஹம்மிங்.. சீர்காழியின் மென்மையான ஹம்மிங் மிகவும் அபூர்வமான ஒன்று. அது இந்தப் படத்தின் சிறப்பம்சம்.
பாடல்களை விட பின்னணி இசையில் இப்படத்தில் மெல்லிசைமன்னர் அட்டகாசமாக வெளுத்து வாங்கியிருப்பார். ஜெயலலிதா ஒவ்வொருவரிடம் கதை சொல்லும் போதும் அந்த சூழ்நிலைக்கேற்ற இசையைத் தந்திருப்பார்.
தோல்விப் படமாக இருந்தாலும் தரத்தில் சற்றும் குறையாத படமாகும் பாதுகாப்பு. பல ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த நாள் பாதிப்பு இப்படத்தில் இருக்கும். இரண்டும் ஜப்பானிய படமான ரோஷமானின் பாதிப்பில் வந்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இப்படத்தை வெலிங்கடனில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் ஒரு நாள் பாடலும் மீண்டும் மீண்டும் இப்படத்தைப் பார்க்கத் தூண்டின. குறைந்தது ஆறு அல்லது ஏழு முறை பார்த்திருப்பேன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks