-
15th February 2012, 08:42 AM
#11
Senior Member
Devoted Hubber
நாம் விசாரித்த வரையில் ‘கோச்சடையான்’ படத்தின் அவுட்லைன் இது தான்.
மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வரும் ‘கோச்சடையான்’ என்னும் மன்னன், எதிர்பாராத விதமாக நண்பர்களின் சூழ்ச்சி காரணமாக நாட்டை பறி கொடுக்கவேண்டியதாகிவிடுகிறது. பட்டத்து ராணியை பிரிந்து நிராயுதபாணியாக விடப்படும் ‘கோச்சடையான்’, எதிர்பாராமல் கிடைக்கும் நண்பன் (சரத்) ஒருவனின் உதவியோடு, பகைவர்களின் சூழ்சிகளை திட்டமிட்டு வென்று மீண்டும் நாட்டை கைப்பற்றுவதே ‘கோச்சடையான்’ கதையின் கரு. படத்தில் வில்லனாக அசத்தப்போவது நாசர். தவிர ஜாக்கி ஷராப்புக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் உண்டு. இந்த கருவிற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காட்சியமைப்புக்கள் படத்தை வித்தியாசப்புடித்தி காண்பிக்கும். படம் ஹிஸ்டாரிகல் சப்ஜெக்ட் என்றாலும், படத்தில் பாத்திரங்கள் அணியும் காஸ்ட்யூம்கள் முதல் பயன்படுத்தும் ஆயுதங்கள் வரை அனைத்தும் புதுமையாக இருக்கும். படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் வித்தியாசமாக அமைக்க பீட்டர் ஹெயின்ஸ் திட்டமிட்டு வருகிறார். சரித்திர கதைகளுக்கே உரித்தான பிரத்யேக சண்டைக்காட்சிகள் படத்தில் உண்டு.
படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு பரம சிவ பக்தராக வருகிறார். ருத்திராட்சமும், பாசிமனியும் படத்தில் இவரது அடையாளங்கள் என்பது இதுவரை வெளியிடப்பட்ட இரண்டு ஸ்டில்களை பார்த்தாலே புரிந்திருக்கும்.
Know something about everything and go deeper in one thing
-
15th February 2012 08:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks