Page 216 of 404 FirstFirst ... 116166206214215216217218226266316 ... LastLast
Results 2,151 to 2,160 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2151
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை டால்பி சவுண்ட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (பிப்.21) சென்னையில் நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சியில் கர்ணன் படத்திற்கு இசையமைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பாடல் பாடிய பி.சுசீலா, பாட்கர் பி.பி.சீனிவாஸ், படத்தின் இயக்குநர் பந்துலு சார்பாக அவருடைய குடும்பத்தார். படத்தில் நடித்த நடிகர்கள் சண்முகசுந்தரம், மாஸ்ட்டர் ஸ்ரீதர், வி.எஸ்.ராகவன் இயக்குநர் குகுநாதன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கர்ணன் படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் பேசிய கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில், “லண்டன் நாட்டில் ஒரு இடத்தில் உலகத்தில் உள்ள பிரபலமானவர்கள் அனைவருக்கும் மெழுகு சிலை இருக்கிறது. நம்ம ஊரு அமிதாப் பச்சானுக்கு கூட இருக்கிறது. அவர் நல்லவர்தான். நான் என்ன சொல்றனே, அந்த இடத்தில நம்ம சிவாஜி கணேசனுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். அதற்காக நம்ம தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் யாராவது முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு என்ன செலவு ஆகிறதோ அதற்குண்டான செலவில் நான் ரூ.1 லட்சத்தை கொடுக்கிறேன்.” என்றார்.
    அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சேரன், “அமிதாப் பச்சனுக்கு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு ஒரு முகம் தான், ஒரு பாவனை தான். ஆனால், சிவாஜி சாருக்கு பல முகம், பல பாவனைகள். சிலை செய்பவர்கூட அவருடைய பாவனையை சரியாக செய்ய முடியாது அதனால்தான் அவருக்கு இதுவரை சிலை வைக்க வில்லை.
    சிவாஜி சார் கலைக்காகவே வாழ்ந்த ஒரு சிறந்த நடிகர். அதனால்தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. வாழ்க்கையில் நடிக்க தெரியாத நடிகர் அவர். போலியாக பேச தெரியாதவர், அதனால்தான் அவர் அரசியலுக்கு வந்தபோது அவரை தஞ்சாவூரில் தோற்கடித்தீர்கள் நீங்கள். நான் ஒன்றை இங்கு கேட்கிறேன். ரீமேக் என்ற பெயரில் பில்லா, மாப்பிள்ளை என்று எந்த எந்த படத்தையோ மீண்டும் எடுக்கிறீர்களே, சிவாஜி சார் நடித்த ஒரு படத்தை ரீமேக் செய்து பாருங்களே பார்க்கலாம். அது முடியாது எந்த நடிகராலும், சிவாஜி போன்று நடிக்க முடியாது.
    அதேபோல நான் இங்கே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிவாஜி சார் படத்தலைப்புகளை பிற படங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவது ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.” என்று ஆவேசமாகப் பேசினார்.
    கர்ணன் படத்தின் உலக உரிமையை ராஜ் தொலைக்காட்சியிடம் இருந்து பெற்று திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாந்தி சொக்கலிங்கம் மறு உருவாக்கம் செய்து வெளியிடுகிறார்.
    from http://www.a2ztamilnadu.com/tamilnew...ld-ban-cheran/

    இந்நிகழ்ச்சியினைப் பற்றித் தமிழில் வெளியிட்டுள்ள மற்ற சில இணைய தளங்கள்...


    http://video.maalaimalar.com/Maalaim...F%E0%AF%81.vid VIDEO


    http://chennaionline.com/tamil/cinem...GORYNAME=TFILM


    http://tamil.oneindia.in/movies/hero...s-aid0136.html


    http://www.tamilstar.com/tamil/news-...-02-122613.htm


    http://www.thuruvam.com/2012/02/php_6490.html


    http://www.a2ztamilnadu.com/tamilnew...ld-ban-cheran/

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2152
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    cheran speech at karnan trailor lunch

    http://www.galatta.com/tamil/video-p...an/1_r7txk3h4/

  4. #2153
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இன்று காலையில் நடைபெற்ற கர்ணன் trailer வெளியீடு விழாவைப் பற்றி இணைய தளங்கள் மூலமாகவும் ராகவேந்தர் சாரின் பதிவு மூலமாகவும் இங்கே அனைவரும் அறிந்திருப்பீர்கள். நானும் விழாவிற்கு சென்றிருந்தேன்.

    முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் வந்த கூட்டம். நிச்சயமாக இத்தனை பேர் வருவார்கள் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு வேலை நாளின் காலை வேலையில் சத்யம் திரையரங்கம் நிறைந்து வழிந்தது என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.

    பல விஷயங்கள் இணையதளங்களில் வந்து விட்டன. அவர்கள் சொல்லாத விஷயங்கள் சிலவற்றை இங்கே சொல்ல வேண்டும். சேரன் மேடையில் இரண்டு நாற்காலிகளை மட்டும் சற்றே முன்னால் இழுத்து போட்டு அவை காலியாகவே இருக்க வேண்டும் காரணம் அவற்றில் நடிகர் திலகமும் பந்துலுவும் வந்து அமரப் போகிறார்கள் என்று சொல்லி செய்தது ரொம்பவே நெகிழ்சியாக இருந்தது. சேரனின் பேச்சு பற்றி நிறைய வந்து விட்டது. ஆனால் சேரன் உண்மையிலே ஒரு தீவிர நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதை சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமே அதிக பரிச்சயமான, 60-களிலும் 70-களிலும் சிவாஜி மன்ற நிகழ்சிகளில் ஒலிப்பரப்பட்ட சிங்க தமிழனடா எங்கள் அண்ணனடா என்ற பாடலை பாடியதன் மூலம் நிரூபித்தார். சிவாஜியின் அரசியல் பற்றி பேசும்போது அவர் உணர்ச்சி பிழம்பாகவே [அவருக்கு பொய் தெரியாது பித்தாலாட்டம் தெரியாது, ஏமாற்ற தெரியாது] மாறிப் போக மகேந்திரன் அவரை சாந்தப்படுத்தினார்.

    மாஸ்டர் ஸ்ரீதர் அன்று நடிகர் திலகத்துடன் நடித்த காட்சியை [அரசவையில் பேசுவது] அப்படியே நடித்துக் காட்டி அப்ளாஸ் அள்ளிக் கொண்டு போனார். பந்துலுவின் மகன் ரவிஷங்கர் உள்ளத்தில் நல்ல உள்ளம் பற்றி சொல்லும்போது என்.டி.ஆர். நடந்து போகும் ஒரு காட்சியைப் பற்றி கீழே நூற்றுக்கணக்கான ஆட்கள் இறந்து கிடப்பதும், தேர்கள் தலைக் குப்பற கிடப்பதையும் குறிப்பிட்டு அந்த காட்சி மாட்டும் நான்கு நாட்கள் எடுக்கப்பட்டது என்பதை பகிர்ந்து கொண்டார். அந்த காட்சியில் இந்திய ராணுவத்தினரையும் பயன்படுத்திக் கொண்டதையும் அவர் சொன்னார்.

    ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ் நடிகர் திலகத்தின் படங்கள் இது போல் மெருக்கேற்றி சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும். அதற்க்கான முயற்சிகளை நான் செய்கிறேன் என்றார். கலைப்புலி சேகரன் தான் ஒரு விநியோகஸ்தராக நடிகர் திலகத்தின் படங்கள் மூலமாக லாபம் அடைந்ததை பெருமையோடு ஒப்புக் கொண்டார். கமலா தியேட்டர் சிதம்பரம் மறைந்த சத்ய சாய்பாபா நடிகர் திலகத்தை நடக்க வைத்து ரசித்ததை சொன்னதற்குதான் விழாவிலே அதிகமான கைதட்டல். இந்த முயற்சிக்கு பிறகு நடிகர் திலகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு இது போன்ற மெருகேற்றலுக்கு தங்களால் ஆன அனைத்து உதவியும் செய்வதாக ராம்குமார் உறுதி கூறினார். கண்ணுக்கு குலமேது பாடலின் சில வரிகளை சுசீலா அம்மா அவர்கள் அப்படியே பாட மொத்த அரங்கமும் கைதட்டி மகிழ்ந்தது.

    இரவும் நிலவும் வளரட்டுமே, கண்கள் எங்கே, கண்ணுக்கு குலமேது மற்றும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்கள் முழுமையாக திரையிடப்பட்டன. தவிர படத்தின் சில காட்சிகளும் திரையிடப்பட்டன.

    சுருக்கமாக சொன்னால் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.இப்படிபட்ட ஒரு முயற்சி எடுத்த சொக்கலிங்கம் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். அவருக்கு உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

  5. #2154
    Senior Member Seasoned Hubber BM's Avatar
    Join Date
    Jul 2007
    Posts
    1,232
    Post Thanks / Like
    Trailer launch video:






  6. #2155
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  7. #2156
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  8. #2157
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    கர்ணன் Trailor வெளியீட்டு விழாவை நேரடியாகக் காண இயலாதவர்களுக்கு, விழாத் தொகுப்பை அருமையாக அளித்த திரு.ராகவேந்திரன், திரு.முரளி மற்றும் You Toube இணைப்பாக அளித்த திரு.BM மற்றும் திரு.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பல்லாயிரம் நன்றிகள். இந்த சீரிய முயற்சியில் ஈடுபட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2158
    Newbie Hubber
    Join Date
    Jun 2009
    Location
    MALAYSIA
    Posts
    2
    Post Thanks / Like
    No One Can Act Like Shivaji Sir... My Fav Of His Performance is Puthuya Paravai Climax... Fantastic Acting. Mindblowing
    I'M BACK!!!

  10. #2159
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Dr. Cheran

    Director Cheran speech has reflected every NT fans feelings. Thanks Cheran sir for expressing every NT fans inner voice, hats off you sir.

    Cheers,
    Sathish

  11. #2160
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    director cheran speech has reflected every nt fans feelings. Thanks cheran sir for expressing every nt fans inner voice, hats off you sir.

    Cheers,
    sathish
    A very big thanks to cheran sir for reflecting NT fan's innervoice and manakumaralgal'
    small request kindly take care of your health also. GOD BLESS YOU.
    Last edited by Subramaniam Ramajayam; 22nd February 2012 at 08:34 PM. Reason: TYPING ERROR

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •