-
22nd February 2012, 07:50 PM
#11
Senior Member
Diamond Hubber
from facebook....
"சங்கத்தில் பாடாத கவிதை...அங்கத்தில் யார் தந்தது"...இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மக்களை தனக்கு அடிமையாக்கி வைத்துள்ள இந்த அற்புத டியூனை, முதன் முதலாக ராஜா இசைத்து காட்டிய போது, தன்னுடய படத்திற்கு இந்த பாடல் வேண்டாம் என்று என்று நிராகரித்திருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ்.
“தூறல் நின்னு போச்சு” படத்தின் டூயட்-டிற்காக டிஸ்கஷன். இயக்குனர் பாக்யராஜூ, துணை இயக்குனர் பாண்டியராஜன், ராஜா என்று அனைவரும் ஆஜர். அப்போது வந்த டியூன்தான் “சங்கத்தில் பாடாத கவிதை”. ஆனால் இதை கேட்ட தருணத்திலயே தனக்கு இந்த பாடல் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் பாக்யராஜ்.
பாக்யராஜ் நிராகரித்ததை அடுத்து “அந்த பாடல் நன்றாக இருகிராது. அதையே நாம் பயன்படுத்தி கொள்ளலாம். வேண்டாம் என்று சொல்லாதீர்கள்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜன். ஆனால் “பாடல் நன்றாக இருப்பது உண்மைதான்..ஆனால் அது தூறல் நின்னு போச்சு.க்கு சரி பட்டு வராது” என்று ஒரேடியாக நிராகரித்திருக்கிறார் பாக்யராஜ்.
அந்த டியூனை மலையாள படத்தில் 84 – ம் வருடம் பாலுமஹேந்திரா பயன்படுத்தியதும், அதே வருடம் தமிழில் “ஆட்டோ ராஜாவில்” உபயோகபடுத்தியதும், பின் தெலுங்கில் பயன்படுத்தி, அந்த தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கிலும் இடம் பிடித்து, ஹிந்திக்கு போய் என்று இந்த டியூன் ஒரு “இந்தியா சுற்றியா வாலிபன்”.
“சங்கத்தில் பாடாத கவிதை”...(தமிழ்)
தும்பி வா தும்பகுடத்து...(மலையாளம்)
ஆகாசம் ஏனாடிதோ... (தெலுங்கு)
“நீர்வீழ்ச்சி சூடானதே” --- (ஆகாசம் ஏனாடிதோ ..பாட்டின் தமிழ் டப்பிங்)
கும் சும் கும்...(ஹிந்தி)
ஹிந்தியில் “பா”-படத்திற்கு முன்னதாகவே பிரபலமாக ஒரு படத்தில் பயன்படுத்த பட்டிருக்கிறது
-
22nd February 2012 07:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks