-
12th March 2012, 01:01 PM
#11
Senior Member
Regular Hubber

Originally Posted by
Murali Srinivas
கர்ணன் சென்னையில் மட்டும் ஐந்து தியேட்டர்களில் வெளியாகிறது என்றால் என்றுமே நடிகர் திலகத்தின் புகழ் பாடும் எங்கள் மதுரையிலும் ஐந்து அரங்குகளில் வெளியாகிறது. அண்ணாமலை, மாப்பிளை விநாயகர், சரஸ்வதி, கணேஷ் மற்றும் மணி இம்பாலா என்ற ஐந்து அரங்குகளே அவை. நெல்லையில் ராம் முத்துராம் [புதிய அரங்குகள்?], நாகர்கோவிலில் வசந்தம்(?), தென்காசி பத்மம், கோவில்பட்டி - aks ஆகிய அரங்குகளில் ரிலீஸ். கோவை -கவிதா, கே.ஜி. காம்ப்ளெக்ஸ் மற்றும் ஒரு அரங்கு [சென்னை சத்யம் சினிமாஸ் நடத்தும் அரங்கு என்று கேள்விபடுகிறோம்] என்று தெரிகிறது. சேலம் நகரில் இரண்டு அரங்குகள் மற்றும் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் ஆத்தூர் போன்ற நகரங்களில் வெளியாகிறது. திருச்சி மாவட்டத்து அரங்குகள் பற்றி உறுதியாக தெரியவில்லை என்றாலும் திருச்சி நகரில் ரம்பா -ஊர்வசி வளாகத்திலும் மற்றும் ஒரு அரங்கிலும் வெளியாகும் என தெரிகிறது. மொத்தமாக ஒரு 60 முதல் 70 அரங்குகள் வரை வெளியாகலாம் ஓரிரண்டு நாட்களில் முழு லிஸ்டும் கிடைக்கப் பெற்றதும் இங்கே வெளியிடப்படும்.
அன்புடன்
சென்னை - 5
மதுரை - 5
தமிழகம் முழுவதும் - 60௦ முதல் 70 பிரிண்ட்கள் .
படத்தின் முதல் வெளியீட்டின் போது திரையிடப்பட்ட பிரிண்ட்களை விட மறு வெளியீட்டில் அதிக பிரின்ட்களில் வெளியிடப்படுவது இதுவே தமிழகத்தில் முதல் முறை என்று நினைக்கிறேன்.
நடிகர் திலகத்தின் சாதனை பட்டியலில் மற்றுமொரு "முதன் முதலாக...." சேர்த்துக் கொள்ளலாம்.
-
12th March 2012 01:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks