-
31st March 2012, 02:19 PM
#2481
Senior Member
Seasoned Hubber
திரு. ராமஜெயம் சார் நன்றி.
-
31st March 2012 02:19 PM
# ADS
Circuit advertisement
-
31st March 2012, 02:19 PM
#2482
Senior Member
Seasoned Hubber
திரு.பாலகிருஷ்ணன் சார் தாங்கள் வழங்கிய கர்ணன் இணையதள இணைப்பு செய்திகளுக்கு நன்றி.
-
31st March 2012, 07:54 PM
#2483
Senior Member
Veteran Hubber
அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !!!
-
31st March 2012, 08:08 PM
#2484
Senior Member
Veteran Hubber
கலைப் பொக்கிஷம் கர்ணன் குறித்த
முப்பெரும் ஆவணப் பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : திராவிடன் : 14.1.1964

முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : The Hindu : 14.1.1964

100வது நாள் விளம்பரம் : தினமணி[மதுரை] : 22.4.1964

குறிப்பு:
1. தமிழ்த் திரையுலகின் முதல் முழுநீள ஈஸ்ட்மென் வண்ணத் திரைக்காவியமான "கர்ணன்", முதல் வெளியீட்டில், நான்கு அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம். சென்னையில் சாந்தி, பிரபாத், சயானி ஆகிய 3 திரையரங்குகளிலும் முறையே ஒவ்வொரு அரங்கிலும் 100 வெற்றி நாட்கள். 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரையம்பதியின் 'தங்கம்' திரையரங்கில் 108 நாட்கள் ஓடி அமோக வெற்றி. இப்படி தங்கத்தில் 100 நாட்களைக் கடந்த சாதனைச் சக்கரவர்த்தியின் மூன்றாவது காவியம் "கர்ணன்". இந்த மகத்தான சாதனையை ஏற்படுத்திய முதல் இரண்டு கலைக்குரிசிலின் காவியங்கள் : பராசக்தி(1952)[112 நாட்கள்], படிக்காத மேதை(1960)[116 நாட்கள்]. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களைக் கொடுத்த ஒரே உலக நடிகர், நமது நடிகர் திலகம் மட்டும்தான் !
2. இந்த இதிகாச காவியத்தின் முதல் வெளியீட்டு 100வது நாள் சென்னை விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் இடுகை செய்கிறேன்.
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 1st April 2012 at 02:00 AM.
pammalar
-
31st March 2012, 10:10 PM
#2485
Junior Member
Junior Hubber

Originally Posted by
pammalar
அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !!!
Welcome back Panmalar Sir! We missed you.
-
31st March 2012, 11:06 PM
#2486
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Jeev
Welcome back Panmalar Sir! We missed you.
Dear Jeev Sir,
Thank You So Much for your compliments !
Warm Wishes & Regards,
Pammalar.
-
31st March 2012, 11:23 PM
#2487
Junior Member
Seasoned Hubber
saw Mayabazar colour. Gud work by universal, touchstone picture. Heard That Veera Pandiya Kattabomman is 2 b re released next.
Movies 4 c F/wd NT 2 future generations
can b released like Karnan)
Wish I could C Navarathiri in Colour. Sivantha Mann in 3D,Uthamaputiran in colour.Pudiya Paravai in DTS, Thillana , Kapal Ottiya thamizan in colour, Sorgam, Bharata Vilas, Raja, Deiva Magan, Vasantha Maaligai, Thiruvilayadal, saraswathy sabatham, thiruaruthchelvar, Trisoolam,Gowravam, Thangapadakam,Ganaoli,Rajapart. Any patrons
-
31st March 2012, 11:32 PM
#2488
Senior Member
Veteran Hubber
"ராஜ ராஜ சோழ" சக்கரவர்த்தியின் 39வது ஜெயந்தி தினமான
இன்று [31.3.1973 - 31.3.2012] ஒரு ராஜ ராஜ பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : மாலை முரசு : 27.4.1973

பக்தியுடன்,
பம்மலார்.
-
31st March 2012, 11:44 PM
#2489
வருக வருக புத்துணர்வுடன் புது பொலிவுடன் வருகை தந்திருக்கும் சுவாமி அவர்களே வருக!
அள்ளிக் கொடுத்த கர்ணனுக்கே விளம்பரங்களை அள்ளிக் கொடுத்த வள்ளலே!
தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று நூறு நாட்கள் படங்களை கொடுத்த இந்திய சினிமாவின் ஒரே நடிகன் என்ற பெருமையை நடிகர் திலகத்திற்கு அளித்த எங்கள் மதுரையின் மாண்பை அன்றைய நாளில் வெளியான விளம்பரங்களின் மூலமாக உலகறிய செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இதே செய்தியை நான் இந்த திரியில் கடந்த ஆறு வருடமாக சொல்லி வந்தாலும் அதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரத்தை அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி.
நடிகர் திலகமும் தங்கம் திரையரங்கும் இணை பிரிக்க முடியாதவை. காரணம் இருவருமே தங்கள் முதல் அறிமுகத்தை ஒரே நாளில்தான் துவக்கினார்கள். ஆம், எப்படி 1952 அக்டோபர் 17 நடிகர் திலகத்தின் அறிமுக நாளாயிற்றோ, அதே நாளில்தான் தங்கம் அரங்கும் தன் அறிமுகத்தை பராசக்தி படத்துடன் துவக்கியது.
மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் கலக்கல்கள்!
அன்புடன்
இன்று மார்ச் 31 ராஜ ராஜ சோழனின் வெளியீட்டு தினம் என்பது தெரியாமலே ராஜ ராஜ சோழனைப் பற்றி தற்செயலாக சகல பதிவிட அதற்கு பொருத்தமாக அந்தப் படத்தின் ஒரு விளம்பரத்தை பதிவிட்ட உங்கள் timing sense-க்கு ஒரு சல்யூட்.
-
31st March 2012, 11:56 PM
#2490
Senior Member
Diamond Hubber


திரியின் நாயகரே வருக! வருக!
திகட்டாத இன்பம் தருக! தருக!
அன்பு பம்மலார் அவர்களே!
ஆவணத் திலகம் அவர்களே!
இன்முகம் காட்டி
ஈகைக் குணத்தோடு
உத்தமரைப் பற்றிய உண்மைகளை
ஊர் உலகம் அறியச் செய்து
எல்லோர் மனதிலும் குடிகொண்ட
ஏற்றம் கொண்ட அன்பராய்
ஐயங்கள் பல போக்கி
ஒருவரும் தனக்கு ஈடு இல்லையென
ஓராயிரம் ஆவணங்களை
ஒளவைப் பிராட்டி தமிழ் தந்தது போல தந்து
மறுபடியும் மனம் மகிழ வைக்க வந்திருக்கும்
திரித் தென்றலே! வருக! வருக!
அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks