28.8.1994 தினமணி கதிர் இதழில் வெளிவந்த வாழ்வியல் திலகத்தின் வெளிப்படையான பேட்டி (தமிழன் என்கிற தாழ்வு மனப்பான்ம) கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த மனம் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பட்ட பாடு அந்தப் பேட்டியில் மிக நன்றாகப் புரிகிறது. உலக சாதனைகளை சர்வ சாதாரணமாகச் செய்துவிட்டு 'நான் அப்படி ஒன்றும் சாதித்து விட வில்லை' என்று கூறும் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை வேறு யாருக்காவது வருமா என்பது கேள்விக்குறியே!
மிக அற்புதமான கட்டுரையை அட்டகாசமாகக் கொடுத்ததற்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐந்து பக்கங்களும் படித்து முடித்தபின் நடிகர் திலகத்துடன் நேரிடையாக அளவளாவிய உணர்வு ஏற்பட்டதற்கு தங்களுக்கும், கதிருக்கும் நன்றி கூறத்தான் வேண்டும்.
'மாணவர் சக்தி' இளைஞர் இதழில் வெளிவந்த கட்டுரையும் நெஞ்சை அள்ளுகிறது. அதற்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்
Last edited by vasudevan31355; 3rd April 2012 at 06:54 PM.
financial chronIcle இல் வெளிவந்த the reincarnation of karnan கட்டுரையை பதிப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். அதே போல மாலை மலரின் கட்டுரையும் அருமை. கர்ணனின் சாதனைகள் வெளி வராத இதழ்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சாத்தூரில் பங்குனிப் பொங்கல் கோலாகல பேனர்கள் சூப்பர். 'பாரத்' தியேட்டரில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகளை கண் முன் நிறுத்தும் நிழற்படங்களுக்கான லிங்க்கிற்கும் நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்
Last edited by vasudevan31355; 6th April 2012 at 08:16 PM.
Bookmarks