-
4th April 2012, 09:17 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
பேசும் படம் (டிசம்பர் 1976) இதழின் அண்ணலின் அனுபவம் பேசுகிறது...எட்டு பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
'சோமனதுடி' படத்தை பார்த்துவிட்டு அப்படத்தில் நடித்த வாசுதேவராவ் அவர்களை பாராட்டுவது...
விமர்சனங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படும் குறைந்த அனுபவம் தனக்கில்லை என்று அனுபவத்தில் முதிர்ச்சியுடன் கூறியுள்ளது...
தனக்காக மட்டுமல்லாமல் நண்பர்களின் நல்வாழ்விற்காகவும் படங்களில் நடித்துக் கொடுத்தது...
என நடிகர் திலகத்தின் சத்திய வார்த்தைகள் சங்கமிக்கும் கட்டுரைக் கடலாய் எட்டு பக்கங்களும் சிந்தை கவர்கின்றன. (பேட்டிக் கட்டுரைக்கு மத்தியில் நடிகர் திலகம் பற்பல போஸ்களில் நெஞ்சை அள்ளுகிறார்)
கட்டுரையின் முன்னோட்டமாக நடிகர் திலகத்தைப் பற்றிய பேசும் படத்தின் கருத்து அழகு என்றால் அந்த 'ரோஜாவின் ராஜா' நிழற்படம் அதைவிட அழகு.
சூப்பரான கிடைத்தற்கரிய கட்டுரையை பதிவு செய்து இன்புறச் செய்ததற்கு இனிய நன்றிகள் சார். இது போன்ற வரலாற்று ஆவணங்களால் மீண்டும் புத்தம் புது பொலிவுடன் வழக்கம் போல் வெற்றிநடை போடுகிறது நமது திரி.
அன்புடன்
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 4th April 2012 at 09:26 AM.
-
4th April 2012 09:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks